சமதர்மம் அளிக்கும் விடுதலை உணர்வைத்

தமதாய்க் கொள்ளும் மக்கள் யாவரும்

நிறைவென எண்ணி மயங்குவ தில்லை

முறையாய் முழுமை விடுதலை அளிக்கும்

பொதுமைச் சமூக வழியை நோக்குவர்

ஒதுங்கும் கயவர் சூழ்ச்சியி னாலே

வென்று விடுதலை உணர்வை அழிக்கையில்

ஒன்றாய் மீண்டும் சேர்ந்து போரிடல்

விடுதலை வேட்கை உடையவர் வழியாம்

(சோஷலிச அமைப்பு அளிக்கும் விடுதலை உணர்வைத் தங்களது சொந்த உணர்வாகக் கொள்ளும் மக்கள் எல்லோரும், (சோஷலிச அமைப்பே) போதும் என்று எண்ணி மனநிறைவு அடைவதில்லை. அவர்கள் முழுமையான விடுதலையை முறையாக அளிக்கும் பொதுவுடைமைச் சமூகத்தை (அதாவது கம்யூனிஸ்ட் சமூகத்தை) அமைக்கும் வழியை நோக்குவார்கள். சுரண்டல் சமூகமே வேண்டும் என நினைக்கும் கயவர்கள் சூழ்ச்சியினால் வென்று விடுதலை உணர்வை அழித்தால், மீண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து போரிடுதலே விடுதலை வேட்கை உடையவர்களின் வழியாகும்.)

- இராமியா

Pin It