நடுச்சாம வேளை
அது மொட்டை மாடி
தணிந்த வானம்
கைக்கு எட்டும் நிலவு
குளிர்ந்த உடல்
முழுதும் ஓய்ந்த நகரத்தின்
அது ஒரு தேய்ந்த சாலை
காகிதம் மேய்ந்து களைப்பில்
ஓரிடம் அசை போடும் மாடுகள்
குளிர்மண் குழிக்கென ஓசையின்றி
மல்லுக்கட்டும் சில வேடிக்கை நாய்கள்
சோடியம் வெளிச்சத்தில் பேசிக் கிடக்கும்
ஒரு நாடோடிக் கூட்டத்தின் புரியா மொழி
தொலைவே இரவுத் தேநீர்க் கடையில்
தொடர்ந்து நம் இளையராஜா
உறங்கிக் கிடக்கிறது
ரசனையற்ற நகரம்!

- அருண் காந்தி(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)