மேகங்கள் தங்கள் ரகசியத்தை வைத்துக் கொள்வதில்லை !
அவைகள் சொல்கின்றன மலைகளிடம் -
மலைகள் அப்படியே சொல்கின்றன பூந்தோட்டங்களிடம் -
அவைகள்  டஃபோடைல்ஸ்  மலர்களிடம் !

அந்த வழியில் போகிற ஒரு பறவை, தற்செயலாக
எல்லாவற்றையும் மெல்லக் கேட்டு விடுகிறது.
நான் அந்தச் சிறு பறவைக்கு கையூட்டு கொடுத்தால்,
யார் அறிவார் அது பிறர்க்கு சொல்வதை ?

எப்படியும், நான் சொல்ல மாட்டேன், என நினைக்கிறேன்,
அதைத் தெரியாமல் இருப்பதும் நல்லது ;
கோடைக் காலம் ஒரு நிதர்சனமாய் இருந்திருந்தால்
பனிக் காலம் என்ன மாயம் செய்தது ?

ஆதலால் உங்கள் ரகசியத்தை வைத்திருங்கள், தந்தையே!
நான் மாட்டேன், என்னால் முடிந்தாலும்,
தெரிந்து கொள்ளுங்கள் சஃபைர் சகாக்கள் என்ன செய்கிறார்களென,
உங்கள் புதுமையான உலகில்!   

Sapphire fellows - சஃபைர் சகாக்கள்  
new-fashioned - புதுமையான

அமெரிக்கப் பெண் கவிஞர் எமிலி டிக்கின்சனின் (213 வது கவிதை) கவிதைத் தொகுப்பின் Part II - Nature என்ற பகுதியின் 16 வது பாடல். "THE SKIES can't keep their secret !

தமிழாக்கம்: வ.க.கன்னியப்பன் (doctorvkk @yahoo.com)