"சுபோஜெயம்"
வசந்தி கூத்துனா
பள்ளிகூட வாத்தியார்ல  இருந்து
பல்லில்லாத ரங்கநாதன் தாத்தா வரை
ஏழு ஊரு தள்ளி ஆட்னாலும் போய்டுவாங்க
வசந்தி கொறத்தி வேசமும்
அவள கட்டிகினவன் கொறவன் வேசமும்  போட்டா
இப்ப ஒரு வருசமா கார்ல தான்
எந்த ஊருக்கும்  வசந்தி கம்பெனி போவுது
ரேட்டும்  அதிகமா ஆய்டுச்சி
செய்யார்ல கூத்து வச்சப்போ
கொட்டைய சுத்தி ஒரே ஆம்பளைங்க
ராத்திரி பதினோரு மணிக்கு மேல
வசந்தி மேக்கப் போட்டு டிரஸ் மாத்துரப்போ
'டேய் போங்கடா போங்கடான்னு'
அந்த ஊரு நாட்டாரு
எல்லாரையும் அனுப்பிட்டு தனியா நின்னுகிட்டார்
வசந்தி  மேடைக்கு வந்து ஆட்னதும்
அவ ஜாக்கெட்ல நூறு ரூபாய  ஊக்குல குத்திட்டு
கைய கொடுத்திட்டு சிரிச்சிட்டு வந்தா...
நாட்டாரு பையன்
பொரிஉருண்ட வாங்க ரெண்டு ரூபா கேட்டா
வசந்தி ஜாக்கெட்ட
வெறிச்சோடி பாக்கிறாரு  நாட்டாரு...

Pin It