அழியாது தமிழ்மீது கொளல்.
உயிர் காக்க முனைவதுபோல் - தமிழ்
மொழி காக்க முயல்.
தமிழ் கற்க பற்றுயரும் - அப்
பற்றுயர தமிழ் வளரும்.
தாழ்நிலம் நோக்கிடும் நீராய் - தாழ்ந்து
கிடக்கும் தமிழ் பாராய்.
பொருள் பலசேர்க்கின் பயனிலை - பயனாம்
தமிழ்ச்சொல் சில சேர்க்கின்.
தன் னிலை உணர் வாகுமாம்
தண்டமிழ் நிலை உணர்வது.
வற்றுமே பாலை வரின் நீராறு
அவ்வாறு வற்றாதே செந்தமிழாறு.
கார்முகில் இருள மயிலாடும் - மன
மாடுமே தமிழிசை கூடிவர.
மழை வேண்டும்போல் மக்கட்கு - தமிழ்
வேண்டு மாம் தமிழர்க்கு.
நிலக்கண் காக்கும் உரம்போல் - தாய்த்
தமிழ் காக்க பயன்படு.
காக்கைக்கும் பொன்குஞ்சாம் தன்குஞ்சு போல்
நம்மோரை இகழ்வது துற.
பன்மொழி கற்பின் பயனென் கொல்
தாய்மொழி கல்லா விடின்.
- - த.வெ.சு. அருள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.