google officeதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் Copyright ©️ விவகாரங்கள் என்பது சர்வசாதாரணம். ஒரு புதிய தொழில்நுட்பத்தை முதன் முதலில் யார் உருவாக்கினார்கள், அத் தொழில்நுட்பம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து, அவற்றை உரிமைக் கொண்டாடும் வகையில் Copyright செய்து வைத்துக் கொள்வார்கள்.

இன்னும் ஒருபடி மேலே சென்று வேறுவிதமாக சொல்லவேண்டுமானால் புதிதாக ஸ்டார்ட் டைப் செய்து வரும் நிறுவனங்களை, தங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அந்நிறுவனத்தை முழுவதுமாக கை அடக்கம் செய்து விடுவார்கள்.

ஆனால், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மென்பொருள் உருவாக்கத்தில் ஜாவா ஸ்கிரிப்ட் அனுமதி இல்லாமல் (without license) பயன்படுத்தப்பட்டது என ஆரக்கிள் நிறுவனம் குற்றம் சாட்டி (copyright violations) பத்தாண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றத்தை நாடியது ஆரக்கிள்.

2000 -ஆம் ஆண்டு தொடக்க காலகட்டத்தில் தான் ஆண்ட்ராய்டு திறன்பேசி தொழில்நுட்பம் குறித்து ஸ்டார்ட் அப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஆண்ட்ராய்டு (Android Inc) என்ற பெயரில் அழைக்கப்ட்ட ஒரு மென்பொருள் நிறுவனத்தை 2005ல் கூகுள் நிறுவனம் 50 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது என்பதே அதன் ஆண்ட்ராய்ட் வரலாறு.

தற்போது உலகின் பல திறன்பேசிகள் கூகுள் ஆண்ட்ராய்டு மென்பொருள் மூலமாக தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு மென்பொருள் தொழில்நுட்பத்தில் கூகுள் சரியான வழிமுறைகளை கையாண்டு இருக்கிறதா என்ற சந்தேகம் சிலிக்கான் பள்ளத்தாக்கில் எழுந்தது.

"கூகுளின் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் எங்களின் ஜாவா ஸ்கிரிப்ட் மூலமாக பல வரிகளை அப்படியே காப்பி செய்து புதிய மென்பொருளை உருவாக்கி விட்டார்கள்" என்று ஆரக்கிள் நிறுவனத்தினால் வழக்கு தொடரப்பட்டது.

முறையே இந்த வழக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு. கடந்த வாரம் வரையில் இதற்கான வாதம் விவாதங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

இரண்டு பெரிய நிறுவனங்களும் பல பில்லியன் டாலர் கணக்கில் வழக்கறிஞர்களை நியமித்து வழக்குகளை சந்தித்து வந்தார்கள். 'கூகுள் சரியான வழிமுறைகளை கையாளவில்லை' என ஆரக்கிள் நிறுவனம் கூறியது.

'ஜாவா ஸ்கிரிப்ட் என்பது பொதுவானது யார் வேண்டுமானாலும் அதை பயன்படுத்தி புதிய மென்பொருளை தயாரிக்கலாம்' என கூகுள் தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியில் ஏப்ரல் 5 2021 அன்று கூகுள் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

'ஆண்ட்ராய்டு மென்பொருள் தொழில்நுட்த்தில் குறைந்த அளவில் ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தப்பட்டது விதிமுறைகளுக்கு உட்பட்டது தான் இதற்காக கட்டணம் செலுத்த தேவையில்லை' என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சன் மைக்ரோ சிஸ்டம்:

ஜாவா ஸ்கிரிப்ட் -ன் காப்பிரைட் பிரச்சினை எப்போது தொடங்கியது என்றால் அது 2010ஆம் ஆண்டு ஆரக்கிள் நிறுவனம் சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தை வாங்கியதன் பிறகு தொடங்குகிறது.

(Fun fact - சன் (Sun) மைக்ரோ சிஸ்டம் இதன் குறியீட்டை (Logo) பரவலாக கணினியில் வேலை செய்திருப்பவர்கள் பார்த்திருக்க முடியும். இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ, கீழிருந்து மேல், எப்படி வாசித்தாலும் Sun என்ற பொருள்படும்படி அதை அமைத்திருப்பார்கள்.)

முதன்முதலில் ஜாவாஸ்கிரிப்ட் என்ற நிழல் மொழியை (Program language) சன் மைக்ரோ சிஸ்டம் தான் கண்டுபிடித்து புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இதில் சில பகுதிகள் Free version ஆக கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மென் பொருட்களை தயாரித்துக் கொள்ளலாம்.

அதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. பள்ளி கல்லூரிகளில் சொல்லித்தரப்படும் ஜாவா கோடிங்ஸ் அதற்கும் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், இன்னும் பல சிறப்பம்சம் கொண்ட Java version - களை நீங்கள் கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்த முடியாது.

அதற்காக சன் மைக்ரோ சிஸ்டத்திலிருந்து லைசென்ஸ் பெற வேண்டும். கூகுள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் மென்பொருள் ஜாவா ஸ்கிரிப்ட் - ல் உள்ள 11,000 Coding lines சிறப்பம்சங்களை லைசன்ஸ் பெறாமல் பயன்படுத்தி விட்டது என்பதே ஆரக்கிள் நிறுவனத்தின் வழக்கு ஆகும்.

இதற்கு இழப்பீடாக 1 பில்லியன் டாலர்கள் கூகுள் வழங்க வேண்டும் என்றது. 2010ல் ஒரு பில்லியன் டாலர் என்பது மிகப்பெரிய இழப்பீடு தொகை. தற்போது இழப்பீடு தொகையாக 9 பில்லியன் டாலர்கள் என தெரிவித்தது ஆரக்கிள்.

ஆரக்கிள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் மேற்கோள் காட்டிய உதாரணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. என்னவென்றால், ஹாரி பாட்டர் புத்தகத்தின் தொடரை எடுத்துக் கொண்டு அதில் வரும் முக்கிய வரிகளை வைத்து தலைப்புகளையும் அதில் வரும் கதாபாத்திரங்களையும் மாற்றி, ஒவ்வொரு பத்தியில் வரும் முதல் வகைகளை வைத்து ஒரு புதிய புத்தகத்தை படைப்பது போல் இருக்கிறது என்றார்கள்.

கூகுள் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு மென்பொருளை தற்போது வரை பல நிறுவனங்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதில் குறிப்பிடும் படியாக Samsung, HTC, இன்னும் பல சீன நிறுவனங்கள் இதை பயன்படுத்தி திறன்பேசிகள் தயாரிக்கிறார்கள். அதில் கூகுள் உதவி இல்லாமல் பயனாளிகள் நீங்கள் எதையும் செய்ய முடியாது. Search engine, App stores என எல்லாமே கூகுள் நிறுவனத்தால் கட்டுப்பாடு செய்யப்படும்.

கூகுளின் வாதம்:

ஆண்ட்ராய்டு மென்பொருள் உருவாக்கியதில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கோடிங் இருக்கிறது. இதில் 11,000 கோடிங் மட்டுமே ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்த பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் 0.4% அளவுதான் ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளது. மீதமுள்ள கோடிங் அனைத்தும் கூகுள் உருவாக்கிய 'Transformative coding' தான். copyright சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் அது ஒரு விதிமீறல் இல்லை என்றது.

நாங்கள் பயன்படுத்திய ஜாவா ஸ்கிரிப்ட் என்பது பீட்ஸாவில் உள்ள தக்காளி பசையை (Tomato sauce) போன்றது, பீட்ஸா ஒரு புதிய கண்டுபிடிப்பாக இருக்கலாம் ஆனால் தக்காளி பசையை அப்படி கூறமுடியாது. எங்களின் ஆண்ட்ராய்டு பீட்ஸா போன்றது அதில் ஆரக்கிளின் ஜாவா ஸ்கிரிப்ட் தக்காளி பசை அவ்வளவு தான் என்றது.

நீதிமன்ற தீர்ப்பு:

சன் மைக்ரோ சிஸ்டம் உருவாக்கிய ஜாவா நிரல்களின் அமைப்பு அனைத்தும் கணினி உற்பத்தியில் பெரிதும் உதவுகிறது. ஜாவா ஸ்கிரிப்ட் முக்கிய அம்சங்களே கணினி உற்பத்திக்கு தான் என்றாலும் முறையே லைசென்ஸ் பெறப்பட்டு பயன்படுத்த படுகிறது. கூகுள் நிறுவனம் எடுத்துக் கொண்ட ஜாவா ஸ்கிரிப்ட் ஒருவகை Open source ஆகும். அது எல்லோருக்கும் கிடைக்கப்பெறும் இலவச பகுதி ஆகும்.

இந்த தீர்ப்பு வந்ததில் ஆரக்கிள் தரப்பில் மிகவும் சோகமாக சூழல் காணப்படுகிறது. ஆரக்கிளின் தலைமை நிர்வாகி ஒருவரான Dorian Daley கூறியது, "கூகுள் எங்களின் ஜாவா ஸ்கிரிப்ட் பத்தாண்டுகளுக்கு முன்னர் எடுத்து புதிய ஒரு மென்பொருளை உருவாக்கி விட்டனர், இந்த நடத்தைதான் உலகெங்கிலும், அமெரிக்காவிலும் உள்ள ஒழுங்குமுறை அதிகாரிகள் கூகிளின் வணிக நடைமுறைகளை ஆராய்கின்றனர்." என்றார்.

நாளை ஆண்ட்ராய்டு மென்பொருளை அடிப்படையாக வைத்து வேறு ஒரு புதிய நிறுவனம் ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினால் மீண்டும் வழக்கு வரலாம். எல்லாம் சட்டத்திற்கு உட்பட்ட நடந்தால் நல்லது.

(நன்றி: https://www.npr.org/2021/04/05/984442325/supreme-court-hands-google-a-win-over-oracle-in-multibillion-dollar-case)

- பாண்டி

Pin It