கீற்று இணையதளத்தின் வளர்ச்சியில் படைப்பாளிகளுக்கு முக்கிய பங்குண்டு. கீற்றை ஆரோக்கியமான விவாதக்களமாகவும், சமகால இலக்கியம் மற்றும் அரசியலைப் புரிந்துகொள்வதற்கான தளமாகவும் மாற்றியதில் படைப்பாளிகளாகிய தங்களின் பங்கு அளப்பரியது. சமூகத்தில் மேலெழுந்து வரும் எந்தப் பிரச்சினை குறித்தும் ஆழத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அது குறித்து கீற்றில் தேடினால் குறைந்தது 30, 40 படைப்புகளாவது கிடைக்கும் என்றால் அந்தப் பெருமை, சமகாலப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் படைப்பாளிகளையே சேரும்.

கீற்று வாசகர் சந்திப்பின்போது, வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களில் ஒன்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

ஏற்கனவே வேறொரு தளத்தில் வெளியான படைப்பை, மறுபடியும் கீற்றில் பார்ப்பது பெரும்பாலானோர்க்கு சலிப்பைத் தருகிறது. எனவே நீங்கள் கீற்றிற்கு அனுப்பிய படைப்பை தயவு செய்து வேறு எந்த தளத்திற்கும் அனுப்ப வேண்டாம் அல்லது வேறு தளத்தில் வெளியான படைப்பை கீற்றிற்கு அனுப்ப வேண்டாம். படைப்பு நேர்மையைக் கருதி, இந்தக் கோரிக்கையை தங்கள் முன் வைக்கிறோம்.

Blog வைத்திருக்கும் படைப்பாளிகள், தங்களது படைப்பு கீற்றில் வெளியானதற்கு இரண்டு நாட்கள் கழித்து அதை blog-ல் வலையேற்றம் செய்யுமாறு வேண்டுகிறோம்.

தங்களது படைப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தர கீற்று தயாராக இருக்கிறது. கீற்று இணையதளத்திற்கான பங்களிப்பை தாங்கள் தொடர்ந்து அளிக்க வேண்டுகிறோம். தங்களது படைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் என்றும் பெருமை கொள்கிறோம்.