உலகப் பொருளாதாரச் சரிவு, இன்று உலக மக்களிடையே பெருமளவில் வேலை இழப்பை யும், ஊதியக் குறைப் பையும் ஏற்படுத்தி, பெரும்பாலானவர்களை மனச்சோர்வு நோயில் தள்ளியுள்ளது. இந்தியாவிலும் தகவல் தொழில் நுட்பத் துறையிலும், கணினி மென்பொருள் துறையிலும் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, அத்துறை ஊழியர்களிடையே பெருமளவில் வேலையிழப்பையும், ஊதியக் குறைப்பையும் ஏற்படுத்தி, இங்கும் மனச்சோர்வு நோய் பரவ வழி வகுத்துள்ளது. இவ்வாறு இருபத்தியோராம் நூற்றாண்டின் மிக முக்கிய உலக மனநோயாக, மனச்சோர்வு நோய் மாறியுள்ள நிலையில், நாம் அந்நோய்க்குறித்து சுருக்கமாகவேனும் அறிந்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

மனச்சோர்வு நோயை உலகச் சுகாதார நிறுவனமும், அமெரிக்க மனநோய்க் கழகமும் மனநிலை மாற்ற நோயாக” (Mood Affective Disorder) வகைப்படுத்தியுள்ளன. நம் உள்ளத்தில் எழும் துன்ப உணர்ச்சி என்பது இயல்பானதுதான் என்றாலும், அது நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து நீடிக்கும் போதும் மற்றும் தீவிர மனக் கொந்தளிப்பை உருவாக்கும் போதும், அதை இயல்புக்கு மாறு பட்ட மனநிலை யாகக் கருதுகி றோம். இந்த மன நிலை மாறுபாட் டின் விளைவாக எழும் சிந்தனைகள், செயல்பாடுகள், நடத்தை முறைகள், உடல் இயக்கங்கள் மற்றும் கண் ணோட்டங்கள் ஆகியவை நோயாக வெளிப்படும் நிலையே மனச்சோர்வு நோயாகும்.

திடீரென வாழ்க்கையில் பெரும் இழப்பையும், சரிவையும் சந்தித்தவர்களை இந்நோய் எளிதில் தாக்குகிறது. இந்நோயால் தாக்கப் பட்டவர்களில் சிலர், இச்சரிவை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். இதைப்பற்றி அவர்கள் தங்க ளுக்கு நெருக்கமானவர்களிடம் கருத்துத் தெரிவிக்கின்றனர். சுற்றியிருப்பவர்கள் இதை அலட்சியமாக ஒதுக்குவதோ அல்லது கவனிக் காமல் புறக்கணிப்பதோ கூடாது. உடனே இது குறித்து அவர்களுக்கு உரிய ஆலோசனை கூறவோ அல்லது ஒரு தகுதி வாய்ந்த ஹோமியோபதி மருத்துவரிடம் அவரை அழைத்துச் செல்லவோ முயலவேண்டும். சில சமயங்களில் நோயாளர்கள் தங்கள் தற்கொலை எண்ணத்தைப்பற்றி வெளிப் படையாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்தலாம். அப்போதும் சுற்றி யிருப்பவர்கள் கவனமாகச் செயல்படவேண்டும்.

சில மனச்சோர்வு நோயாளர்கள் தங்கள் துயரங்களை மறக்க மது, அபினி, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை நாட முயற்சிக்கலாம். இம்முயற்சியை ஆரம்பத்திலேயே முறியடிக்க அவர் குடும்பத்தினரும், நண்பர்களும் உதவ வேண்டும். இந்நோய் தாக்கிய பிறகு, நோயாளர் கள் சமூகத்திலிருந்து ஒதுங்கியோ அல்லது ஒதுக்கப்பட்டோ தனிமைப்படலாம். இந்நிலை ஏற்படாமல் இருக்க அவர் உறவினர்களும், நண்பர்களும் தான் உதவவேண்டும்.

பொருளாதாரச் சூழல் நன்கு இருந்த போது, வாழ்வில் மகிழ்ச்சியும், வெற்றிக் களிப்பும் நிலவியது. இப்போது பொருளா தாரத்தில் சரிவு ஏற் பட்டு, வாழ்க்கையில் நம்பிக்கையின்மையும், துயரமும் நிலவுகிறது. இம்மாற்றம் தான் இந்நோய் ஏற்பட அடிப்படைக் காரணம் என்றாலும், கீழ்க்கண்ட காரணிகளின் சேர்க்கையும் இந்நோய் ஏற்பட தூண்டுகோலாய் விளங்குகின்றன.

இந்நோய் ஏற்பட ஒருவரது மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்கொலை முயற்சிகளின் பின்னணிக் கொண்ட குடும்பங் களில் பிறப்பவர்களை இந்நோய் எளிதில் பீடிக்கிறது. மனத்துயரங்களை தாங்கிக் கொள் ளும் பக்குவம் இல்லாத குடும்பங்களில் பிறப்பவர்களுக்கும் இந்நோய்த் தாக்கம் எளிதில் ஏற்படுகிறது.

தாங்கள் மிகவும் நேசித்து வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திடீரென்று தங்களை நிராகரிப்பது, அண்டை அயலவர்களிடம் தங்களுக்கிருந்த செல்வாக்கு திடீரெனச் சரிதல், தங்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை யை இனி தீர்க்கவே முடியாது என்ற தவறான, தன்னம்பிக்கையற்ற முடிவு, தாங்கள் இதுவரை வாழ்ந்து வந்த வசதியான சூழ்நிலை மாறி, தாங்கள் சந்தித்தறியாத புதிய வசதி குறைந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுதல் போன்றவை இந்நோயைத் தூண்டிவிடும் பிற காரணிகளாகும்

தாழ்வு மனப்பான்மையால் வாடும் இவர்களின் சிந்தனைப் போக்கு, எதிர்மறை எண்ணங்கள் கொண்டதாக மாறி, இவ் எதிர்மறை எண்ணப்போக்கு இவர்களை மேலும் மனச் சோர்வு நோயின் தீவிர நிலைக்கு இட்டுச் செல்கிறது.

மனப்பதட்டம் இருப்பவர்களை மனச் சோர்வு நோய் எளிதில் பற்றிக்கொள்ளும். இதே போல் அடிக்கடி போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களையும் மனச்சோர்வு நோய் தீவிரமாக பாதிக்கும்.

இந்நோயின் அறிகுறிகள் :-

மிக முக்கியமானது, சோகமான மன நிலை, இவர்களின் மன இயக்கத்திலும், உடல் இயக்கத்திலும் ஒருவித மந்தநிலை ஏற்படும். நினைவாற்றலில் குறைபாடு நிகழும். தாங்கள் மிகவும் மனம் தளர்ந்து, நொறுங்கிப்போய் இருப்பதாகக் கூறுவார்கள். இதை அவர்களது தோற்றமும் உறுதிச்செய்யும். உடலின் ஜீவகடிகாரம் பழுதுபடும். இதனால் இரவெல்லாம் நல்ல உறக்கம் வராது. காலையில் எழுந்துக் கொள்ளும் பொழுது மிகவும் கவலையோடும், களைப்போடும் தளர்ந்து இருப்பார்கள். சிலர் நாள் முழுவதும் தொடர்ந்து உறங்குவார்கள். தன் தோல்விக்குத் தானே காரணம் என்று தன்மீதே கழிவிரக்கம் கொள்ளுவார்கள். மனைவிக்கேற்ற கணவனாக, குழந்தைக்கேற்ற தந்தையாக, தன் வேலைக்கேற்ற திறமைப்படைத்தவனாக தான் இல்லை என்றத் தாழ்வு மனப்பான்மையால் வருந்துவார்கள்.

வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, தன் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பார்கள். எதிலும் அச்சமும், நம்பிக்கையின்மையும் கொண்டிருப்பார்கள். தங்களுடைய எதிர்காலம் இருள் சூழ்ந்து இருப்பதாக நம்புவார்கள். எதிலும் ஆர்வமின்றி இருப்பார்கள். யாருடனும் அதிகம் பேச மாட்டார்கள். கணவன்-மனைவி உறவில் கூட விரிசல் ஏற்படும். முகம் உணர்ச்சியற்று அல்லது கவலை சூழ்ந்துக் காணப்படும். எதிலும் கவனம் செலுத்தமுடியாது. எந்த விஷயத்திலும் ஒரு நல்ல முடிவெடுக்க முடியாது. சிலர் தங்கள் மனைவி, குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்துக் கொள்வார்கள். சிலர் திடீரென்று விபச்சாரிகளிடம் செல்வார்கள். இவர்களுக்கு சரியான பசியுணர்வு இருக்காது. இதனால் உடல் மெலிவார்கள். சிலருக்கு அதீத பசியுணர்வு ஏற்படும்.

இதனால் உடல் எடை கூடும். இவர்களுக்கு பாலுணர்வில் நாட்டம் இருக்காது. மலச்சிக்கலும் ஏற்படும். காரணமற்ற நெஞ்சுவலி, தலைவலி, வயிற்றுவலி, கழுத்துவலி, முதுகுவலி என பல உடல் உபாதைகளால் அவதிப்படுவார்கள். நோயின் பாதிப்பிற்கேற்ப பிறழ் நம்பிக்கைகளும், போலிக் கண்ணோட்டங் களும் ஏற்படும். தங்களின் அன்றாட வாழ்க்கையில் குளிப்பது. முகம் மழிப்பது, உடையணிவது, உண்பது போன்றவற்றிலும் குறைபாடு நிகழும். சிலர் திடீரென்று சில நாட்கள் அதீத மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பின் மீண்டும் துயரத்தில் மூழ்குவார்கள். சிலரிடம் பதட்டமும், பரபரப்பும் காணப்படும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் :

மனச்சோர்வு நோயின் காரணமாக மூளையிலுள்ள நரம்புத் திசுக்களில் சுரக்கும் செரடோனின், நார் அட்ரினலின், டோப்போமைன் ஆகிய நரம்பணுக் கடத்திகளின் சுரப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. இதே போல் உடலில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகளின் சுரப்பிலும் பாதிப்பு உண்டாகிறது. இதன் காரணமாக தற்கொலை எண்ணங்கள், வன்முறையில் ஈடுபாடு, துயர மனநிலை, பதட்டம், அச்சம் ஆகியவை தோன்றுகின்றன.

இந்நோய்க்கான உளவியல் சிகிச்சை முறைகள் :-

1. மனவழிச்சிகிச்சை மற்றும் மனநல  ஆலோசனைகள்.

2. சிந்தனைமுறை மாற்று சிகிச்சை

3. நடத்தை மாற்று சிகிச்சை

இந்நோய்க்கான மருத்துவ சிகிச்சை முறைகள் :-

1.அலோபதி சிகிச்சை :

இம்முறையில் மனச்சோர்வு எதிர்ப்பு (அய்ற்ண் - ஈங்ல்ழ்ங்ள்ள்ங்ய்ற்) மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இம்மருந்துகள் உடல்ரீதியில் பல பக்கவிளைவு களை ஏற்படுத்துகின்றன. வாய் உலர்தல், இதயத்துடிப்பு அதிகரித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், மலச்சிக்கல், குறை இரத்த அழுத்தம், பார்வை மங்குதல், தலைவலி, மயக்கம், தோலில் சினைப்புகள், அமைதியின்மை, உடல்நடுக்கம், அதிகமாக வியர்த்தல், உறக்க நேரம் குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

2.ஹோமியோ சிகிச்சை :

இம்முறையில் உளவியல் சிகிச்சையுடன், ஹோமியோ மருந்துகளும் அளிக்கப்படுகின்றன. ஹோமியோ மருந்துகள் பக்கவிளைவுகள் அற்றவை. ஹோமியோ மருந்துகள் உளவியல் ரீதியில் செயல்பட்டு விரைவான குணமடைவை நிகழ்த்துகின்றன.

மனச்சோர்வு நோயைக் குணப்படுத்தும் சில ஹோமியோ மருந்துகள் :-

(ஆர்சனிகம் ஆல்பம், ஆரம் மெட்டாலிகம், பிரையோனியா, கல்கேரியா கார்பானிகம், கல்கேரியா சல்பியூரிகம், கார்சினோசின், காஸ்டிகம், சிமிசிபிகா, ஃபெர்ரம் மெட்டாலிகம், ஹயாசியாமஸ், இக்னேஷியா, அயோடியம், காலி பாஸ்பாரிகம், லில்லியம் டிக்ரினம், நேட்ரம் கார்பானிகம், நேட்ரம் மூரியாடிகம், பிளாட்டினா, பல்சட்டில்லா, செபியா, ஸ்டாபிசாக்ரியா, தூஜா, வெராட்ரம் ஆல்பம் மற்றும் ஜிங்கம்)

-உ.அறிவாழி

Pin It