yogi upஇந்தியாவில் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவும், பசு வதையை தடுப்பதற்காகவும், அவற்றின் எண்ணிக்கையை உயர்த்தவும், "ராஷ்டிரிய காமதேனு ஆயோக்" என்னும் ஆணையத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு உருவாக்கியது. அதன் இயக்குனராக 'வல்லப கதிரியா' இருந்து வருகிறார்.

இந்த அமைப்பு மத்திய/மாநில அரசுகளின் பசு இனப்பெருக்கம், வளர்ப்பு, உயிர்வாயு குறித்து ஆய்வு செய்து வருகிறது.

தற்போது கால்நடைகளைக் கொண்டு குறிப்பாக கோமியம், மாட்டுச் சாணம் இவற்றை மூலதனமாகக் கொண்டு தொடங்கப்படும் தொழில்களுக்கு அரசு 60% முதலீடு செய்யும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாலிலிருந்து பெறப்படும் தயிர், மோர், வெண்ணெய், நெய் என மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைப் போல கோமியம், மாட்டுச் சாணம் போன்றவற்றைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட, உயிர் வேளாண்மைக்கு உதவும் வகையில், தொழில் முனைய விரும்புவோருக்கு மத்திய அரசு ரூ 500 கோடி ஒதுக்கி உள்ளது.

பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், தொழில்நுட்ப மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆய்வுகள் செய்யும்படி கதிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

பயிர் விளைச்சல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு புழுவை ஒழிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்... புளுகன்களையும்...

மோடியின் அடுத்த இலக்கு துறவிகள், சாமியார்களின் பீ... மூத்திர ஆராய்ச்சிகளாக இருக்கலாம். அதற்காக நிதி ஆயோக் போல ராஷ்ட்ரீய பிராமண ஆயோக்கும் வரலாம் என எதிர்பார்ப்போம்!

- தேனி மாறன்