மணப்பெண்ணுக்கும் மணப்பையனுக்கும் கல்யாணம் நடக்கிறது. புரோகிதர் அரைகுறை ஆடையுடன் மார்பைத் திறந்து போட்டு ஷகிலா கணக்காக வந்து ஒரு பலகையில் அமர்ந்து தான் வீட்டுக்கு தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய சாமான்களை சரிபார்த்து முறைப்படுத்துவார். சுள்ளிகளைப் போட்டு கொளுத்தி நெருப்பு உண்டாக்கி எரியச் செய்கிறார். அந்த புகையில் அவர் தும்மலாம் இருமலாம். ஆனால் மறந்தும் மணப் பெண்ணோ பையனோ தும்மிவிடக்கூடாது. அபச்சாரம் அபச்சாரமாகிவிடும்.

சட்டை போடாமல் துறந்த நிலையில் செக்சியாக உட்கார்ந்து இருக்கும் புரோகிதருக்கே வேர்த்து விறுவிறுத்து கொட்டும்போது தலைமுதல் கால்வரை இறுக்கமாக உடையணிந்த பெண்ணுக்கும் பையனுக்கும் வேர்க்காதா?

அதன்பின்பு புரோகிதர் யாருக்குமே புரியாத தேவ பாடை(ஷை)யைக் கிளப்புவார்..

ஓமகுண்டாயண நமஹ..
நீ வீணாப்போகனும் நமஹ..
எனக்கு அடுத்த புள்ளை ஆம்பளைப் புள்ளையா பொறக்கனும் நமஹ..
எங்க வீட்டு பசுமாடு பெண் கன்னுகுட்டி போடனும் நமஹ..
கல்யாணம் முடிஞ்சதும் வரும்படி நிறைய வரனும் நமஹ..
பையனோட அப்பன் முழிக்கிற முழியே சரியில்ல நமஹ..
பெருமாளே.. ஏன் என்னை இப்டி சோதிக்கிறே நமஹ..
சாயங்காலம் சந்து முனியாண்டி கோழிபிரியாணி சாப்பிடனும் நமஹ..

அவர் என்ன சொல்கிறார் என்று யாருக்காவது தெரியுமா? அர்த்தமும் தெரியாது.. ஒரு மண்ணும் தெரியாது. அவர் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் பையனும் பெண்ணும் திரும்ப சொல்லியாக வேண்டும். அவர் தலையை ஆட்டச் சொன்னால் ஆட்ட வேண்டும். அரிசியைப் போடச் சொன்னால் போட வேண்டும். பூவைப் போடச் சொன்னால் போட வேண்டும்.. புரோகிதர் என்ன சொல்கிறார் என்று புரியாத மணமக்கள் அதை ஏன் சொல்ல வேண்டும்? அது உண்மையிலேயே இறைவனிடம் நாம் வேண்டும் உதவிகள் என்றால், என்னவென்றே அர்த்தம் தெரியாமல் இறைவனிடம் கேட்பதில் எந்த நியாயமும் இல்லை. அதனால் எந்த பயனும் விளையாது.

பெண்ணும் பையனும் தம் சிந்தையில் இறைவனை வேண்டி, 'இல்வாழ்க்கையில் ஈடுபடப்போகும் எமக்கு கடைசிவரை கூடவே வந்து எம் சக இன்ப துன்பங்களில் துணையிருந்து ஆசீர்வதியும்' என்று வேண்டிப் பாருங்கள். அதற்கு அந்த இறைவன் செவி சாய்க்கிறானா மாட்டானா என்று பார்ப்போம். அப்படியும் செவிசாய்க்காத அந்த இறைவன் நமக்கு தேவையே இல்லை!

இல்லறம் என்பது ஒவ்வொரு மனிதருடைய புனிதமான வாழ்க்கையின் ஆரம்பம். அந்த புனிதமான வாழ்க்கையை கடக்க நீண்ட காலம் அந்த பெண்ணும் பையனும் இணைந்து பயணம் செய்தாக வேண்டும். அந்தப் பயணத்தில் இன்பமும் இருக்கலாம், துன்பமும் இருக்கலாம். அவ்வாறு ஏற்படும் இடையூறுகளான இன்ப துன்பங்களைக் கடந்து சென்றுதான் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் தம்பதியர்.

இன்பத்தைக் கண்டு இறுமாப்புடன் இருக்காமலும் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமலும் இருக்க இருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான அறிவுரைகளை தமிழ் தெரிந்த அறிஞர்கள் சான்றோர் பெருமக்கள் தமிழில் வழங்கினால் மணமக்கள் பயன்பெறுவார்கள். அந்த பையனும் பெண்ணும் முதன்முதலில் அருகருகே சந்திப்பது திருமணம் என்ற பந்தத்தில்தான். அந்த நல்ல தருணத்தில் தெரியாத, புரியாத மொழியில் மந்திரம் சொல்லி புரோகிதர் மணமக்களை மிரட்டுவது நியாயமான செயலா? பள்ளி கல்லூரிகளில் தேர்வெழுத படிக்கும்போது பொருள் புரியாமலா மனப்பாடம் செய்கிறோம்? அவ்வாறு மனப்பாடம் செய்து எழுதினால் விளங்குமா?

தட்டினால் உலகமே வந்து கையில் இறங்கும் கணினியுகத்தில் வாழ்கிறோம் நாம். யாருக்கும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. யாரும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது. தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன வீரப்புலவர்கள் பிறந்த வீர மண் நம்முடையது. தமிழை நீசபாஷை எனப் பழித்து வடமொழியாம் சமஸ்கிருதத்தினை தேவ பாஷையாகச் சொல்லும் பார்ப்பனர்களை நம்மருகே அனுமதிக்கலாமா நாம்? அடுத்து விறட்ட வேண்டாம்?

திருமண அழைப்பிதழில்,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்று போட்டுவிட்டால் மட்டும் போதுமா? மந்திரங்கள் தமிழில் இருக்கக்கூடாதா? பெற்ற நம் தாய் தந்தையரோ, ஆன்றோரோ சான்றோரோ, அறிஞர் பெருமக்களோ திருமணத்துக்கு தமிழில் மந்திரங்கள் சொல்ல தகுதியற்றவரா? மந்திரங்கள் வேண்டாம் என்றாலும்.. தமிழில் அறிவுரைகள் சொல்ல தகுதியற்றவர்களா?

கேவலமான இழிமொழியான அந்த சமஸ்கிருதம் என்ற தேவபாடையே உயர்ந்தது என்று சொல்லும் பல மூளையற்ற பார்ப்பன ஜந்துக்களுக்கு பல நண்பர்கள் இன்னமும் காட்டமான பதிலை அளித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நீர், மீன், காகிதம் போன்றவை தமிழ் வார்த்தைகள் இல்லையாம்! அவை சமஸ்கிருதம் என்ற தேவ பாடையாம்! தமிழ் ஆர்வலர் பெரியவர் இராம.கி அவர்கள் நன்றாக இதுபற்றி விளக்கி இருக்கிறார்!

பக்தர்களுடன் தமிழில் பேசி, கையில் தட்டேந்தி பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தும் இவர்கள் தேவபாடையை சிறந்த மொழியென்பது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது! மகரநெடுங்குழை காதன் வந்துதான் இந்த ஆரிய ஜந்துக்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும்!!!

- விடாது கறுப்பு