Ram Rajya Rath Yatra

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் பிஜேபியின் பினாமி அரசு எந்தவிதத் தடையும் இன்றி, தமிழகத்தில் பார்ப்பன பாசிஸ்ட்டுகள் கொட்டம் அடிக்க இடமளித்து வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் பேரணிகளுக்கு தராளமாக அனுமதி வழங்குவதில் தொடங்கி தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களை வட இந்திய மாணவர்களுக்கு தாரைவார்க்க நீட்டை ஏற்றுக் கொண்டதுவரை இந்த மண்ணின் மக்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகத்தை இழைத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த 'ஸ்ரீராம தாஸ மிஷன் யூனிவர்சல் சொசைட்டி' என்ற அமைப்பு அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும், ராமராஜ்ஜியத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும், ராமாயணம் போன்ற வர்ணாசிரமத்தைப் போதிக்கும் ஆபாசக் குப்பைகளை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும், உலக இந்து தினம் உருவாக்கி கடைபிடிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திவரும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதித்து தன்னுடைய பார்ப்பன அடிமைத்தனத்தைக் காட்டியிருக்கின்றது.

தன்னுடைய பார்ப்பன அடிமைத்தனத்தின் உச்சமாக ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கிப் போராட முயன்ற திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களையும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களையும், இன்னும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் போன்றவர்களையும் கைது செய்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காவி பயங்கரவாதிகளுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் காலித்தனம் செய்ய மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார். கந்துவட்டிக் கொடுமையை தடுக்கச் சொல்லி இசக்கிமுத்து கொடுத்த மனுவை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டு சாகவிட்ட சந்தீப் நந்தூரி, காவி வானரங்களைப் பாதுகாக்க அவசர அவசரமாக மாவட்டம் முழுவதும் 144 போட்டிருப்பது, தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் பலர் காவி பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

உத்திரப் பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள கரசேவக்புரத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கிய இந்த ரத யாத்திரையை மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அனுமதித்தது போலவே கேரளாவை ஆளும் இடதுசாரி அரசும் அனுமதித்துள்ளது. மதவாதத்தை எதிர்ப்பதில் CPM-இன் நிலைபாடு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்யும் CPM, இன்னொரு பக்கம் அதன் செயல்பாடுகளை தனது மாநிலத்தில் அனுமதிப்பது மதவாத எதிர்ப்பில் CPM தனக்கு வரம்பிட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. சட்ட ரீதியாகவே CPM இந்த ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி ஒட்டுமொத்த காவி பயங்கரவாதிகளையும் சிறையில் அடைத்திருக்க முடியும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நீதி மன்றம் முடிவெடுப்பதற்கு முன்பே சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த நடத்தப்படும் ரத யாத்திரையை CPM மிக எளிதாக தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் எதன் பொருட்டு நடவடிக்கை எடுக்காமல் மிகப் பாதுகாப்போடு தமிழ்நாட்டிற்கு ரத யாத்திரையை CPM அனுப்பி வைத்தது என்பதன் காரணத்தை அவர்களே வெளிப்படையாகச் சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும்.

இந்த ரத யாத்திரையை ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மட்டுமே காவி பயங்கரவாதிகள் நடத்துவதாக நாம் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. அதையும் தாண்டி அவர்களுக்கான அரசியல் காரணங்கள் இருக்கின்றன. மோடியின் இந்த நான்காண்டு ஆட்சி ஒட்டுமொத்த இந்திய மக்களிடமும் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கின்றது. அனைத்துத் துறைகளிலும் நாட்டை சீரழிவை நோக்கி இட்டுச் சென்றிருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பிஜேபி அரசின் மீது இருக்கும் சொல்லொண்ணா கோபத்தை மடைமாற்றவும், தன்னுடைய ஓட்டு வங்கியை கணிசமாக உயர்த்திக் கொள்வதற்குமாகவுமே இந்த ரத யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் பிஜேபி கும்பலுக்கு அடித்தளமே இல்லாத கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எதாவது செய்து கும்பல் சேர்க்க முடியுமா என்று ஆழம் பார்ப்பதற்கும் அவர்களுக்கு இந்த ரத யாத்திரை பயன்படலாம்.

1990 வாக்கில் அத்வானி நடத்திய ரத யாத்திரை பாபர் மசூதி இடிப்பிற்கும், அதைத் தொடர்ந்து பிஜேபியின் எழுச்சிக்கும் வழிவகுத்தது போல நிச்சயமாக இப்போது நடத்தப்படும் ரதயாத்திரை பயன்படப் போவதில்லை. காட்சி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் வளர்ச்சியடையாத காலத்தில் பிஜேபியால் பொய்யையும், புளுகுகளையும் சொல்லி இல்லாத இந்துமதத்தின் பெயரால் கட்சி வளர்க்க முடிந்தது போல இப்போது செய்ய வாய்ப்பில்லை. ரத யாத்திரை நடத்தி கட்சியை வளர்ப்பது என்பதெல்லாம் காலவதியாகிப்போன யுத்திகள். அதுவும் ராமனை செருப்பாலே அடித்து, நெருப்பிட்டுக் கொளுத்தி அவனுக்கு மோட்சம் கொடுத்த மண்ணில் மீண்டும் அந்தச் சனாதன வர்ணாசிரம தமிழின துரோகியின் பெயரை சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டில் கட்சியைப் பலப்படுத்தலாம் என்று காவி பயங்கரவாதிகள் நினைத்தால், அந்த நினைப்பு தவிடு பொடியாகத்தான் போகும். இந்த மண்ணின் பரப்புகள் எங்கும் பெரியாரின் சிந்தனைகள் ஆலமரமாய் விழுதுகள் இறங்கி இறுகப்பற்றி இருக்கின்றது. இங்கே இராமனை வைத்தும் அரசியல் பிழைக்க முடியாது, அவன் அப்பனை வைத்தும் அரசியல் பிழைக்க முடியாது.

periyarists beat rama by chappal

எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் போன்ற இனத் துரோகிகளை கைக்குள் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் வேறூன்றி விடலாம் என்று பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டம் போட்டால் அதில் வண்டி வண்டியாய் மண்ணை அள்ளிப் போட பெரியாரின் பேரப்பிள்ளைகள் தயாராய் இருக்கின்றார்கள். வடக்கத்திய இந்துமதவெறிக் கும்பலை வெட்கம்கெட்ட முறையில் தமிழகத்தில் அனுமதித்தன் மூலம் வரலாற்றுப் பழியை, இழிவை இந்த பினாமி அரசு ஏற்றிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் விரோதிகளாய் மாறி இருக்கும் இந்த அரசு ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் போன்ற ரவுடிக் கும்பலுடன் தொடர்புகளைப் பேணுவது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

சட்டசபையில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவந்தது. பின்னர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சாலைமறியல் செய்து கைதாகி இருக்கின்றார்கள். திமுக நினைத்திருந்தால் இதைத் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய போராட்டமாக நடத்தி காவி பயங்கரவாதிகளை பின்வாங்க வைத்திருக்கலாம். ஆனால் அடையாளப் போராட்டமாகவே இதை முடித்துக் கொண்டனர். தமிழகத்தில் CPM மற்றும் CPI ஆகிய இரண்டு கட்சிகளும் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. நாம் தமிழர் கட்சி சீமான் கூட களத்தில் இறங்கி போராடிக் கொண்டு இருக்கின்றார். ஆளும் பிஜேபியின் பினாமியைத் தவிர்த்து ஒட்டுமொத்த தமிழகக் கட்சிகளும், இயக்கங்களும் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த களத்தில் இருக்கின்றார்கள். மதவெறி சக்திகளுக்கு எதிரான போரில் பெரியாரிய மண் எப்போதுமே முன்னிலையில் இருக்கும் என்பதை நம் தோழர்கள் அனைவரும் தீரத்துடன் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்கெனவே செருப்படி பட்டு அவமானப்பட்ட தமிழன துரோகி ராமனை தமிழ்நாட்டுக்கு மீண்டும் செருப்படி வாங்க அழைத்து வந்திருக்கின்றது பார்ப்பன இந்துமத வெறிக் கும்பல். மற்ற மாநிலங்களில் ராமனை கையெடுத்துக் கும்பிட்டால் தமிழ்நாட்டிலோ தமிழ்மக்கள் வழியெங்கும் காறி உமிழ்கின்றார்கள், செருப்பால் அடிக்கிறார்கள். தமிழர்களை குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் என்றும் அசிங்கப்படுத்திய ஆரிய கழிசடை ராமனை ராமேஸ்வரம் வரை 'தக்க மரியாதையுடன்' அழைத்துச் செல்ல வேண்டும். வழி எங்கும் வாழ்த்துகளை எதிர்பார்த்து வந்த வடக்கத்திய ஆரியக் கும்பலுக்கு செருப்பும், எச்சிலுமே வாழ்த்தாக கிடைக்க வேண்டும். எதிரி தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட்டான் என்று வருத்தப்படுவதை விட, எதிரி தமிழ்நாட்டிற்குள் வந்து வசமாக மாட்டிக் கொண்டான் என்று பார்க்க வேண்டும். பார்ப்பன இந்து மதவெறிக் கழிசடைகள் பயணம் செய்யும் ஒவ்வொரு அங்குலமும் அவர்களுக்கு ‘சிறப்பான’ வரவேற்பை நமது தோழர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகின்றோம். பெரியார் பிறந்த மண்ணில் ராமனுக்கு சவ ஊர்வலம் மட்டுமே நடத்த முடியும் என்பதை உறுதியாக நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல புரிய வைப்போம்.

- செ.கார்கி