சிலநாட்களுக்கு முன்பு டிவி விவாதமொன்றில் தோழர் மதிமாறன் மற்றும் பாஜக நாராயணனுக்கும் இடையில் நடந்த விவாதம் தொடர்பாக தோழர் மதிமாறனை கண்டித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் எஸ்வி.சேகர் வீடியோ ஒன்றினை நேற்று பதிவு செய்துள்ளார்.அதில் சிலகேள்விகளையும் முன்வைத்துள்ளார்..

சுகந்திர இந்தியாவில் FIR பதிவு செய்யப்பட்ட ஒரு பார்ப்பனர் உள்ளாரா? என்று எஸ்.வி.சேகர் கேட்டுள்ளார்..

நீங்கள் சுகந்திர இந்தியாவில் என்று குறிப்பிட்டதால் நானும் சுகந்திரத்திற்கு பின்பு இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த மற்றும் தமிழகத்தை தலைகுனிய வைத்த இரண்டு நிகழ்வுகளை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்

சுதந்திர இந்தியாவையே அதிர வைத்த காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுதந்திர இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கோட்ஸேவும் நாராயண ஆப்தேவும் யாரென்பது உங்களுக்கு மறந்துவிட்டதா? இல்லை மறந்துவிட்டது போன்று நடிக்கிறீர்களா? குறைந்தது அதில் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட சாவர்க்கரையாவது யாரென்று உங்களுக்கும் ஞாபகம் இருக்கிறதா? ஞாபகம் இல்லையென்றால் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் வரலாற்றை கொஞ்சம் படியுங்கள்..

இரண்டாவது ஒட்டுமொத்த தமிழகமே ஒருவரின் செயலுக்காக இன்று தலைகுனிந்து நிற்கிறது.. சுதந்திர இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் போதே ஊழல்குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முதலமைச்சர் ஜெயலலிதா என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டிர்கள் என்று நினைக்கிறன்.. உண்மையில் மறந்திருந்தால் விரைவாக நல்ல மருத்துவரை அணுகவும்..

இரண்டாவது நாங்கள் 99 .9 மதிப்பெண்கள் பெற்றாலும் எங்கள் மாணவர்களுக்கு படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை..

உங்களின் ஆதங்கத்தையும் உங்கள் சுயசாதியின் மீதான பற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது..நீங்கள் சொல்வது உண்மையென்றால் கோவில்களில் இருக்கும் பார்பனர்களெல்லாம் எந்த பல்கலைகழகத்தில் 99.9 மதிப்பெண் பெற்று அங்கு இருக்கிறார்கள்...குறைந்தபட்சம் இதற்கான விளக்கத்தையாவது உங்களால் தரமுடியுமா?

சாதியை முன்னிலைப்படுத்தி இன்னமும் தமிழகத்தில் ஆணவப்படுகொலைகள் நடந்துவருகிறது.. நந்தினிகள் மண்ணுக்கு அடியிலும் கௌசல்யாகள் மண்ணுக்கு மேலேயும் நடைபிணங்களாக வாழ்ந்துவருகிறார்கள்..இதைப்பற்றி சராசரி மனிதனாக ஒருவார்த்தை பேசியதுண்டா? நீங்கள் எப்படி பேசுவீர்கள் உங்களுக்குத்தான் "சாதியும் மதமும் தாயும் தந்தையை போலவே"

உங்களிடம் நாங்கள் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது..ஏனென்றால் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கமே வரலாற்றை திரித்து பேசியும், மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டிம் அதன்முலம் அதிகாரத்திற்கு வந்தவர்கள்.. அவர்களின் வார்ப்பு நீங்கள் மட்டும் எப்படி இருப்பீர்கள்? இனியாவது வரலாற்றை தெரிந்தது கொண்டு பேசுங்கள்..

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்..நீங்கள் ஸ்டாலினிடம் மட்டுமல்ல விருப்பப்பட்டால் கலைஞரிடம் கூட இதைப்பற்றி பேசுங்கள்.. அதைப்பற்றி ஒருநாளும் தோழர்.மதிமாறன் கவலைப்பட போவதுமில்லை..அதற்கு அஞ்சி உங்களின் போலி முகத்திரையை கிழித்து மக்களுக்கு காண்பிக்காமல் விடப்போவதுமில்லை..ஏனென்றால் அவர் பெரியாரையும் அண்ணலையும் மூச்சாக சுவாதித்தவர்.. உங்களின் மிரட்டலுக்கு ஒருபோதும் அவர் அஞ்சமாட்டார்..

- மணிகண்டன் ராஜேந்திரன்

Pin It