பகுதி 2: http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31370-2-6

jayalalitha old photos

எம்ஜிஆர் தன்னுடைய சத்துணவுத் திட்டத்தை மக்களிடையே எடுத்து செல்ல ஒரு பிரபலமான முகம் தேவைப்பட்டது. எம்ஜிஆரின் அழைப்பின் பேரில் ஜெயலலிதா அஇதிமுகவில் சேர்ந்தார். ஜெயலலிதா கவர்ச்சியாகவும், அறிவார்ந்தவரகவும், இயற்கையான தலைவராகவும் இருந்தார். அவருடைய ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசும் திறமை அவரை டெல்லி வரை அழைத்து சென்றது.  எம்ஜிஆரின் கட்டளையை ஏற்று நடந்தார். ஆனால் எம்ஜிஆரை சுற்றி இருந்தவர்கள் ஜெயலலிதாவை அச்சுறுத்தலுடன் பார்த்தார்கள், எப்படியாவது கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று நினைத்தார்கள். டிசம்பர் 24, 1987 எம்ஜிஆர் இறந்த போது அவருடைய உடல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. விடாப்பிடியாக எம்ஜிஆரின் தலைக்குபின்னல் உட்காந்து கொண்டார் ஆனால் அவருடைய மனைவி ஜானகி கால் பகுதியில்தான் உட்கார்ந்து இருந்தார். கேமராவால் அவரின் முகத்தை தவிர்க்க முடியவில்லை. காரணம் அவருடைய மனைவி ஜானகியின் முகத்தைவிட இவரது முகம் சோகமாக இருந்தது. ஊர்வலம் புறப்பட்டு துப்பாக்கி முழங்க இருக்கும் நேரத்தில் ஜெயலலிதாவை ஜானகியின் மருமகன் தரையில் தள்ளி விடுகிறார். இந்த சம்பவம் நேரடி தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக அவர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தனது எதிரிகளுடன் போராடினார்.  ஒவ்வொரு அவமானமும் அவரை பட்டை தீட்டும் கல்லாக மாற்றியது. 1991-ல் முதலமைச்சராக பதவி ஏற்றார்.  

எம்ஜிஆர் தன்னுடைய அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை அறிவித்து இருந்தார். ஒரு நடிகையாக பெண்ணாக சமூகத்தில வாழ்வது மிகபெரிய சவாலாக இருந்தது. அதற்காக அவர் தன்னையே அற்பணிக்க வேண்டி இருந்தது. அவருடைய முதல் ஆட்சிகாலத்தில் புடவையில் கட்சி கொடியை வடிவமைத்து உங்கள் சகோதரிக்கு வாக்களியுங்கள் என்று கேட்பார். இரண்டாவது ஆட்சி காலத்தில் நகைகள் அணிவதை தவிர்த்தார். அதற்க்கு பிறகுதான் அவர் அம்மா என்று அழைக்கப்பட்டார். ஒரு கடுமையான முடிவில்லா போராட்டத்திற்கு பிறகு அவருடைய எல்லா திட்டத்திற்கும் அம்மா என்று பெயர் வைத்தார்.

ஜெயலலிதாவின் சர்வதிகார ஆட்சி முறை நேரடியாக எம்ஜிஆரிடம் இருந்துவந்தது. யாரும் தன்னை நேரடியாக அணுகமுடியதவராக மாறினார். தன்னுடைய சர்வதிகாரப் போக்கை எதிர்த்து கேள்வி கேட்டவர் மீது  அமில வீச்சு நடந்தது. தனக்கும் அமில வீச்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்தார். அவரை எதிர்த்து பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் மீது அவதூறு வழக்குகள் பாய்ந்தன. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவுடன் தன்னுடைய விசுவாசியான ஓ.பன்னீர்செல்வம் என்பவரை முதலமைச்சராக்கினார். ஆனால் அவர் கடைசிவரை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார மறுத்துவிட்டார். மாநிலத்தின் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த போது அந்த பெட்டியில் அம்மாவின் படம் இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகத்தில் அவரது கட்சியில் உள்ள ஆண்கள் அவருக்கு கட்டுப்பட்டு இருப்பது மிகுந்த ஆச்சிர்யமாக இருக்கிறது என்கிறார் திமுகவை சேர்ந்த அருள்மொழி. 

தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்று. மக்களுக்கான சேவை, சிறந்த நகரம், பொருளாதார வளர்ச்சி, கார் உற்பத்தி போன்றவற்றில் முதல் மாநிலமாக இருந்தது.  இந்தியாவின் டெட்ராயிட் என பெயர் பெற்றது. 

2006 தேர்தலில் ஜெயலலிதா கண்டிப்பாக ஜெயிப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பாக கருணாநிதி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக டிவி கொடுப்போம் என்றார். ஓட்டுக்கு இலவசம் என்பதை தொடங்கிவைத்த பெருமையை பெற்றார். 2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றபின் விலை இல்லா மடிக்கணி, சேலை, அரிசி, ஆடு, மாடு, சைக்கிள் மற்றும் அவரது முகம் பதித்த அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், பிறந்த குழந்தை நல பரிசு பெட்டகம் போன்றவை மிகுந்த வரவேற்ப்பை பெற்றன.    

admk cadres

ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை தன்மீது விழவேண்டுமானால் அதற்க்கான சிறந்தவழி தன்னைத்தானே வருத்திக்கொல்வது. பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி, 2013-ம் ஆண்டு 11 லிட்டர் மனித ரத்தத்தைச் சேகரித்து ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்தார். ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டார். உயிருக்கு உலை வைக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று கடிதம் எழுதி தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.        

அதிமுகவின் அரசியல் நிச்சயதார்த்தம் என்பது உடல் நிச்சயதார்த்தம் போன்றது. திரையில் அவர்களின் நடிப்பை பார்த்துவிட்டு  இரத்த சொந்தங்களாக பார்க்கிறர்கள்.  எம்.ஆர் ராதா, எம்.ஜி.ஆர் அவர்களை சுட்டதும், அவரது ரசிகர்கள் இரத்த தானம் செய்ய மாநிலம் முழுவதும் வரிசையில் நின்றனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர், என் இரத்தத்தின் இரத்தம் என்று பேசினார்.    

இவர்கள் எதற்க்காக தீக்குளித்தார்கள் என்பதை நிச்சயமாக விளக்க முடியாது. ஆனால் கட்சியின் அலுவலர்கள் இந்த விஷயங்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்று உறுதியாக கூறமுடியும். பணத்தை பயன்படுத்தி மக்களின் உணர்ச்சி பயன்படுத்தி இது போன்ற விஷயங்களை செய்தார்கள். தற்கொலைகளை ஊக்குவிக்கும் விதமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை இழப்பீடாக கொடுத்தார்கள். இறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தினார்கள். கட்சிக்காரர்களுக்கு இது பெருமையாக இருந்தது. 

சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு நாளன்று ஆயிரக்கணக்கான மக்கள், ரசிகர்கள், ஜெயலலிதா வீட்டிற்கு வெளியே அம்மா வாழ்க, புரட்சித்தலைவி அம்மா வாழ்க என்று முழக்கங்களை எழுப்பியபடி காத்திருந்தனர். கூட்டத்தில் நடனம் மற்றும் பட்டாசு என கலை கட்டியது. சிறிது நேரத்தில் தீர்ப்பும் வந்தது. எல்லா குற்றச்சாட்டுகளிலும் இருந்த அம்மா விடுவிக்கப்பட்டார் என்று. உணர்ச்சி புன்னகை எல்லாம் அலையில்  அடித்துச் செல்லப்பட்டது. பெருங்கோபம் அடங்கியது. சிறிது நேரத்திற்கு பின், மழை தொடங்கியது.

- தங்க.சத்தியமூர்த்தி