independence day

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்ற நாளாக அறிவித்து, 70 ஆண்டுகளாக இந்த விழாச் சடங்கினை வெற்றிகரமாக மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன. இந்தியா உண்மையில் விடுதலை பெற்றதா? பலர் உழைப்பால், தியாகத்தால், அர்ப்பணிப்பால் போராடிப் பெற்ற விடுதலையை இன்றைய ஆட்சியாளர்கள் முழுமையாக மீண்டும் அந்நிய சக்திகளுக்கு அடகு வைக்க விடா முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனரா? என்ற வினாக்கள் அரசியல் ஆய்வு அரங்குகளில் இன்று எழுப்பப்பட்டு வருகின்றன. வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால் சில பாடங்களை நாம் பெற முடியும்.

இந்திய நாடு 70ம் ஆண்டு சுதந்திரதினம் கொண்டாடுகின்றதாம் இவை அரசின் ஒரு பண்டிகையாக்கபட்டு நாடே கோலாகளமாக எல்லா முன்னனி நிறுவனங்களும் இதை முன்நிறுத்தி பல்லாயிரம் கோடி வியாபாரம் செய்துகொள்வதும், அரசின் எல்லா ஏற்பாடும் முதன்மைபடுத்தி நடந்து கொள்வதும், இந்த அரசு என்பது யாருக்கானது என்ற கேள்வி எழுகின்றது, “கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று இருக்கும் ஒரு நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேலை சோற்றுக்கே வக்கற்று இருக்கும் ஒரு நாட்டில், ஏழையாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக ஐந்து வயதுகூட பூர்த்தியாகமல் இறந்துபோகும் 72.7% குழந்தைகள் இருக்கும் ஒரு நாட்டில், அடுத்த வேலை சாப்பாட்டிற்க்கே உத்திரவாதம் இல்லா நிலையில் சுதந்திரதினம் கொண்டாடப்படுவது என்பது அவமானகரமான செயலாகும்”. நாட்டில் நடைபெரும் செய்திகளின் அடிப்படையில் சற்று அலசுவோம்:-

“சமூகத்தை ஆளும் கருத்துக்கள் எல்லாம் ஆளும்வர்க்கத்தின் கருத்துக்கள்” என்பார் மார்க்ஸ்.

ஒருவன் ஏழையாகப் பிறந்தாலும் தன்னுடைய கடின முயற்சியால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற சொத்தை வாதம் திரும்பத் திரும்ப ஓதப்படுகின்றது.

முதலாளித்துவ சிந்தனையால் இன்றைய தனியார் மயம், தாராள மய போக்கில் மூழ்கிவுள்ள சமூதாயம், தினம் தினம் கீழ்(கடை)நிலையை நோக்கி ஓடி கொண்டிறிக்கின்றது.

இந்தியாவில் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி 1 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம் பேர் சேரிகளில் வசிக்கின்றார்கள். அதுமட்டும் அல்ல 10 லட்சத்து 90 ஆயிரம் பேர் வீடுகளே இல்லாமல் உள்ளனர். 25 ஆப்ரிக்க நாடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு எந்தவகையிலும் குறைவில்லாத 44 கோடி பேர் இந்தியாவின் 8 மாநிலங்களில் உள்ளனர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. ஆனால் இது எல்லாம் இந்திய கார்ப்ரேட் ஊடகங்களுக்கும் அவர்களால் சரியான வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளுக்கு வெறும் புள்ளி விவரங்கள்தான். அவர்களைப் பொருத்தவரை இது எல்லாம் இந்தியாவின் சாபக்கேடுகள். உழைப்பதற்குத் தயாராக இல்லாத சோம்பேறிகள் தான் எப்போதும் ஏழைகளாக உள்ளனர்.

இந்திய அரசு என்பது, “மக்கள் எனும் பெரும்பாண்மையை ஒதுக்கி, அடுத்தவர்களின் வாழ்க்கையை சுரண்டி பிழைக்கும் முதலாளிகளின் ஏவலர்களாக ஏகாதியபத்தியத்தின் கைபிள்ளையாக, சிறுபாண்மையினரின் நலன் காக்க பெரும்பாண்மையை ஒடுக்கும் கேடுகெட்ட நிலையை,” என்னவென்று சொல்ல.

ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனத்தின் எஃகு ஆலைக்காக சந்தால் பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதிகளை அழித்து 5,000 ஏக்கரில் சி.பொ.மண்டலம் நிறுவப்படவுள்ளன- இதனை எதிர்க்கும் வாழ்விழ்ந்த மக்களை மாவோயிஸ்டுகள் வேட்டையின் பெயரால் அப்பாவி மக்கள் கொன்றுகுவிக்க படுகின்றனர். இப்படி பல நிகழ்வுகள் தினம்...

ஒருபுறும் மாட்டுகறி ஏற்றுமதிக்கு அரசே முன் நின்று செயல்படுதல் மறுபுறம் ஏழை மக்கள் இறந்த மாட்டை தொட்டாலும் கொலைபுரியபடுதல், மதம் சாதியை முன் நிலைபடுத்தி மக்களை பிளவுபடுத்தி அவர்களின் உண்மையான எதிரியை காப்பாற்றி, அடிப்படையான பிரச்சினைகளை திசை திருப்பி அரசின் அடிமைகள் மட்டுமே வாழும் தகுதியை முன் நிலைபடுத்தும் இந்த அரசு, சுதந்திரம் என்ற பெயரில் அடிமைகளை வளர்த்தெடுக்கும் தன்மையானது மக்கள் சுதந்திரத்தை பறித்தெடுக்கும் செயலே!!! ஆம் அன்று கொலைகாரன் மோடி மக்கள் முன் பெரிய மாற்றக முதலாளித்துவ ஊடகங்கள் ஊதிபெரிக்கின, அப்பொழுது மோடியோ அல்லது ஊடகங்களின் கட்டவிழ்த்த பொய்மையை உண்மையென தேர்ந்தெடுத்த மக்கள் இந்த பொய்யர்கள் ஏகாதியபத்தியம் மற்றும் தரகு முதலாளிகளின் நலனுக்காக விலை போனதை இன்று அறியலாம்.

புதிய காலனிய கொள்கையில் செயல்படும் இந்த அரசானது நாட்டையே ஏகாத்தியபத்தியத்திற்க்கு (உலக முதலாளிகலுக்கு) விற்க்க துணிந்துவிட்ட பின் நாடு இவர்களின் கையில் இல்லை, உலக கொலைக்கார அமெரிக்கவின் ஏவலனாக செயல்படும் இந்திய அரசின் வேளாண்துறை மீதான வரலாற்றை காணலாம்;

1970-80 ஆண்டுகளில் சராசரியாக ஓராண்டில் வேளாண் உற்பத்தி நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.8 விழுக்காட்டு அளவில் உயர்ந்து காணப்பட்டது. மக்கள் தொகைப் பெருக்கம், உணவுத் தேவையைப் பன்மடங்கு அதிகரிக்கும். இதற்குரிய நீர்ப்பாசனத் திட்டங்கள், ஊரக வளர்ச்சித் திட்டங்களில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. இதற்குரிய சரியான கொள்கைத் திட்டம் மத்திய அரசிடம் இன்றும் இல்லை என்பதையும் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஸ்டேன் போர்டு பல்கலைக் கழகத்தில் (Stanford University) வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் (The Stunted Structural Transformation of the Indian Economy by Hans P.Binswanger- Mkhize, EPW, June 29, 2013), “வேளாண் உற்பத்தி வளர்ச்சியின் வேகம் குறைந்து வருகிறது, தேவையான தொழில்நுட்பம் இத்துறைகளுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர வருமானம் பெருகவில்லை. மேலும், ஊர்ப்புற-நகர்ப்புற உணவு நுகர்வு பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. எனவே, வேளாண் துறையைப் பாதுகாக்கும் முற்போக்கான திட்டமும், அதனைத் திறம்பட நடைமுறைப்படுத்தும் ஆளுமையும் தேவை” என இந்த ஆய்வுக் கட்டுரையில் வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆனால் ஆளும் கும்பல் கடந்த 25 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படும் புதிய பொருளாதாரக் கொள்கை மோசமான தோல்வியைச் சந்தித்து வருகிறது. மேலும், வட அமெரிக்க நாடுகள், அய்ரோப்பிய நாடுகள் கடும் நிதிச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இந் நிலையில் அந்நிய நாட்டு மூலதனத்தை இந்தியாவிற்குத் தேவையான துறைகளில் யார் வழங்குவார்கள்? எரிகிற வீட்டில் எண்ணெய் வார்ப்பது போல, அந்நிய முதலீட்டைப் பெறுவதற்குப், பல சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது, உள்நாட்டு முதலாளிகளில் ஒரு சிலரை வளர்ப்பதற்காக மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொடுக்கிறது. நாட்டின் இயற்கைவளங்களைக் குத்தகை விடுவதில், விதிகள் பின்பற்றப்படுவதில்லை. இப்படி நாடே கொள்ளைகாரர்களின் கூடமாக மாறியுள்ளபோது ஒரு சிலருக்கான இந்த அரசையும் இந்த நாட்டையும் யாருக்கானது என்ற வரையரையில்:

இப்படியாக ஒரு சிலரின் தேவைக்காக மொத்த நாட்டின் செல்வங்களை வாரி வழங்குவதும் மறுபுறம் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதும் என்னவென்று அழைப்பது. இந்த நாட்டின் சுதந்திரம் என்பது பல்லாயிரம் மக்களை கொன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள மோடி என்ற மனித தன்மை அற்ற ஒரு பாசிஸ்ட்டை தேர்ந்தெடுத்த மக்களை முதலாளித்துவ ஊடக்ங்கள் மற்றும் பொய்மைக்காக உருவாக்கபட்ட electronic media எவ்வாறு ஏமாற்றியது என்பதை மக்கள் இன்று அரிவர், இன்றோ அமெரிக்காவின் நேரடி தலையீட்டைக் காணும்போது இந்தியா சுதந்திர நாடு என்பதே கேலிக்கூத்தாகி உள்ளது.

எது எப்படி என்றாலும் இந்த சுதந்திரதின கொண்டாட்டமென்பது மக்களுக்கானது அல்ல என்பது தெளிவு... ஆம் இதனை பகத்சிங் மொழியில் புரட்சியின் வழிதோன்றல்களலான தியாகிகளின் பாதையானது, பரந்துபட்ட ஏழை, எளிய, பாமர மக்களின் நலனை உயர்த்தி பிடிக்கும் பொதுநலம் சார்ந்த அரசு மட்டுமே... இந்த பாராளுமன்றம் என்பது தரகு முதலாளிகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும், நிலவுடைமையாளர்களுக்கும் சேவை செய்வதற்கானதே. ஆகையால் இந்த சுதந்திர தினம் என்பது புதிய காலனியால் (அமெரிக்க ஏகாத்திபத்திய) பயனடையும் தரகு முதலாளிகள், நில உடைமையாளர்கள், பெரும் பணக்காரர்களுக்கானதே, இங்கே பஞ்சபராரிகளான ஏழை எளிய மக்களுக்கானதன்று, இந்த அரசு எந்திரம் நொறுக்கப்பட்டு, ”மக்கள் ஜனநாயகம்” மலர்ந்தால் அதாவது ”புதிய ஜனநாயக புரட்சியால்” மட்டுமே விடிவு காண முடியும். அதுவே மக்களுக்கான “சுதந்திர தினமாகும்”.

- சி.பி.செங்கதிர்