ஜக்கி வாசுதேவனை தெரியாதவர்கள் என்று தமிழ்நாட்டில் அனேகமாக யாரும் இன்று இருக்க முடியாது. அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இந்தக் கருமம் பிடித்தவனின் புகழ் பரப்பும் சுவரொட்டிகளைக் காணமுடியும். இந்தக் கேடிப்பயலுக்குச் சாமானிய மக்கள் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலதரப்பட்ட நபர்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இப்படி அதிகார வர்க்க பலமும், பணபலமும் பொருந்திய ஜக்கியின் மீது கொடுக்கப்படும் புகார்கள் ஆளும்வர்க்கத்தால் கண்டுகொள்ளப்படும் என்றா நினைக்கின்றீர்கள்?

jaggi vasudevகோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ் அவரது மனைவி சத்தியஜோதி ஆகியோர் தங்களது மகள்கள் இரண்டுபேரை ஈஷா யோகமையத்தினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தரக் கோரியும் கோவை ஆலந்தூர் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன்றவர்களிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் ஜக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலந்தூர் காவல் நிலையமும், மாவட்ட ஆட்சியரும் அந்தப் புகாரை கண்டுகொள்ளாமல் போனாதால் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் ஒரு மானங்கெட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தால் காவல்துறை சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் காவிமூளை நீதிபதிகளான எஸ். நாகமுத்து மற்றும் வி. பாரதிதாசன் ஆகியோர் ஈஷா யோகா மையத்தின் எடுபிடிகள் போன்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். அந்தத் தீர்ப்பில் “மாவட்ட முதன்மை நீதிபதிகள் தனது அறிக்கையில் அந்தப் பெண்கள் இருவரும் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாகவும், அவர்களை யாரும் சட்ட விரோதமாக அங்கு அடைத்து வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அந்த இரண்டு பெண்களையும் பெற்றோர் நேரில் சென்று பார்க்க எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவர்கள் எப்போது அங்கு செல்கிறார்கள் என்பதை முன்கூட்டியே ஈஷா யோகா மையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும். அது போல அந்தப் பெண்களை பெற்றோர் தவிர வேறு யாரும் சென்று பார்க்கக்கூடாது” என்றும் லதா, கிதா ஆகியோர் இருவரும் விரும்பி சன்னியாசம் பூண்டிருந்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்கள்.

இதற்குப் பெயர் தீர்ப்பாம்!. ஈஷா யோகா மையம் எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்த மாதிரி இருக்கின்றது. அந்தப் பெற்றோர்கள் தங்கள் மகள்களை கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது யாரோ முன்பின் தெரியாத நபருக்கு எதிராக அல்ல. அவர்கள் புகார் தெரிவிக்கும் ஜக்கிக்கு எதிராக கஞ்சா விற்ற வழக்கு, நில அபகரிப்பு வழக்கு, தன்னுடைய மனைவி விஜியைக் கொன்றதாக கொலை வழக்கு என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு பொறுக்கியின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது அந்தக் குற்றச்சாட்டை நீதி மன்றம் எப்படி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

லதா மற்றும் கீதா ஆகியோர்களின் பெற்றோர்களான காமராஜ், சத்தியஜோதி தம்பதிகள் முன்வைத்திருக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள் தங்கள் மகள்களை ஜக்கி ஏமாற்றி வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருக்கின்றார் என்பது மட்டும் அல்ல. தங்கள் பெண்களுக்குக் கருப்பை நீக்கம் செய்திருக்கின்றார்கள் என்பது போன்ற பயங்கரமான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து இருக்கின்றார்கள். நேர்மையான நீதிபதிகளாக இருந்திருந்தால் இந்த இரண்டு பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் சொன்னது உண்மையா பொய்யா என்பதை கண்டறிய உத்திரவிட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் துப்பில்லாமல் ஒரு குழுவை ஈஷா யோகா மையத்திற்கே அனுப்பி விசாரணை செய்யச் சொல்வது என்ன வகையான நீதி? எந்தச் சட்டத்தில் அப்படி செய்ய சொல்லி இருக்கின்றது?

இந்தப் பொறுக்கியின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தப் பொறுக்கி தப்பித்துக்கொண்டே இருக்கின்றான். பெரியாரின் அரசியல் வாரிசாக தன்னை அறிவித்துக்கொள்ளும் கருணாநிதியின் ஆட்சியில் தான் இந்தப் பொறுக்கி தனது கார்ப்ரேட் ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தை தமிழகத்தில் ஆழமாக நிலை நிறுத்திக்கொண்டான். பல ஏக்கர் காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்டிக்கொண்டான். இன்றுவரை கலைஞரோ அவரது குடும்பமோ ஈஷா யோகா மையத்திற்கு எதிராக கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை என்பதையும் இதனோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்..

தன்னை மதம் சாராத ஆன்மீகவாதி என்று இத்தனை நாட்களாக சொல்லிக்கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் கடைவிரித்து பணம் கறந்துவந்த இந்தப் பரதேசியின் உண்மை முகம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. ஈஷா யோகமையத்திற்கு விசாரணைக்காக சென்ற அதிகாரிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்திருக்கின்றான் பார்ப்பன பொறுக்கி எச். ராஜா. அவன் சரியாகவே ஈஷா யோகாவை அம்பலப்படுத்தி இருக்கின்றான். ஈஷா யோகா மையத்தின் மீதான குற்றச் சாட்டுகளுக்குப் பின் மதமாற்ற சக்திகள் உள்ளதாக தெரிவித்து இருக்கின்றான். ஈஷா யோகா மையம் இந்துக்களை வேறுமதம் நோக்கி செல்வதை தடுப்பதாகவும் அதனாலேயே அதன் மீது புகார்கள் தரப்படுவதாகவும் சொல்கின்றான் இந்தப் பார்ப்பன பொறுக்கி.

அப்படி என்றால் ஈஷா யோகா ஒரு இந்துமத அடிப்படைவாத அமைப்பு என்பது உறுதி ஆகின்றது. சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு இந்த நாய் இத்தனை நாட்களாக தன்னை மதம் சாராதவனாக விட்டுக்கொண்டிருந்த ரீலை பார்ப்பன பொறுக்கி எச்.ராஜாவே அறுத்துவிட்டிருக்கின்றான். அதற்காக அந்த பொறுக்கி பயலுக்கு நாம் நன்றிகளை சொல்ல வேண்டும்.

தங்களுக்கு ஒரு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பி நீதிமன்றத்திற்கு போன அந்தப் பெற்றோர்களுக்கு ஜக்கியின் நாக்குகளில் தீர்ப்பு சொல்லி தாங்கள் ஈஷா யோகாமையத்தின் கைக்கூலிகள் என்பதை நீதிபதிகள் நிரூபித்துவிட்டார்கள். தன்னுடைய குழந்தைகளை பார்க்க போகும்போது கூட இனி அவர்கள் முன்கூட்டியே ஈஷா யோகா மையத்திற்கு தெரிவித்துவிட்டுத்தான் போகவேண்டும். அப்போதுதான் அவர்கள் பெற்றோர்களிடம் எப்படி, என்ன பேசவேண்டும் என அவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக இருக்கும். இதற்குப் பெயர்தான் நீதி என்று இந்த நீதிபதிகள் நம்மை நம்பச் சொல்கின்றார்கள்.

இந்தச் சம்பவத்தை ஒட்டி கருத்து தெரிவித்து இருக்கும் ஈஷா யோகா மையம் “ ஈஷாவில் இருக்கும் பெண்துறவிகளை மட்டும் பழிப்பது பெண் உரிமையை நசுக்குவதோடு மட்டுமில்லாமல் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செய்யப்படும் செயல்களாகவே பார்க்க முடிகிறது” என கூறி இருக்கின்றது.

எவ்வளவு சாதூர்யமாக இந்தப் பிரச்சினையை பெண்ணுரிமை சார்ந்த பிரச்சினையாக மாற்றப் பார்க்கின்றான் இந்தப் பரதேசி என்று பாருங்கள். இந்தப் பெண்கள் சமூக சேவை செய்கின்றார்களாம். யோகா கற்றுக் கொடுக்கின்றேன் என்று சொல்லி கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் இந்த நாயிடம் அந்தப் பெண்கள் சமூக சேவை செய்யப் போகின்றார்களாம். ஆசிரமத்துக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களிடம் ஆங்கிலத்தில் பேசி அவர்களை மூளைசலவை செய்து அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு விடுவதற்கு பெயர் சமூக சேவையாம்!.

நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்த இந்தப் பெண்களை இன்று மொட்டை போட்டு காவி உடை அணிவித்து தான் நடத்தும் கார்ப்ரேட் ஆன்மீக சாம்ராஜ்ஜியத்துக்குச் சேவை செய்ய வைத்துள்ளான். தன்னுடைய மகள் ராதேவுக்கு கர்நாடகாவை சேர்ந்த பாடகர் சந்தீப் நாராயணை மணம் முடித்து அழகு பார்த்த அந்த பொறுக்கி அடுத்தவன் வீட்டு பிள்ளைகளுக்கு மொட்டை போட்டு காவி உடை அணிவித்து தீட்சை கொடுக்கின்றான். இந்தப் பொறுக்கியின் யோக்கியதை என்னவென்று தெரியாமல் பலபேர் இவனை கடவுளுக்கு நிகராக வைத்து வழிபடுகின்றார்கள்.

இவனைப் போன்ற பரதேசிகள் இந்த ஆளும் வர்க்கத்திற்கு எப்போதுமே தேவைப்படுகின்றார்கள். தங்கள் மீது மக்களுக்கு உள்ள எதிர்ப்பை மட்டுப்படுத்தவும், அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையின் மையமான காரணத்தை யோசிக்கவிடாமல் தடுக்கவும் இது போன்ற கார்ப்ரேட் சாமியார்கள் திட்டமிட்ட முறையில் ஆளும் வர்க்கத்தால் வளர்த்துவிடப் படுகின்றார்கள். அதனால் அரசே முன்வந்து இவன் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்பிக் கொண்டிருந்தால் நம்மால் இவனை ஒன்றும் செய்யமுடியாது. இவனுக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதன் வாயிலாகவே இவனையும் இவனைப் போன்ற கார்ப்ரேட் சாமியார்களையும் நாம் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்க முடியும்.

- செ.கார்கி