1947 ம் ஆண்டு சிஐடி ரிப்போர்ட் வெளியிடும் அதிர்ச்சி தகவல்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தேசத்தந்தை காந்தியாரின் கொலையில் ஆர் எஸ் எஸ் ன் கைங்கர்யம் இருந்தது என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர் சங்கிகள் முகாம் ஆவேசம் அடைந்தது. தேசப்பற்றின் குறியீடு நாங்களே என அப்பாவி மக்களை ஏமாற்றி வரும் போக்கினை அம்பலப்படுத்தும் விதமாக காங்கிரஸ் துணைத்தலைவர் பேச்சு அமைந்துள்ளதை கண்டு ஆடிப்போன காவி முகாம் சாதாரண நபர்களைப்போல எண்ணி ராகுல் காந்தியை அச்சுறுத்த திட்டமிட்டது. அதன் விளைவாக ராகுலின் உரை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆர் எஸ் எஸ் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கில் ஆர் எஸ் எஸ் காரர்கள் தான் காந்தியடிகளை படுகொலை செய்தனர் என்ற பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் வாய் மொழி உத்தரவு பிறப்பித்தது.

gandhi dead body

ஆர் எஸ் எஸ் ன் குரலும் உச்சநீதிமன்றத்தின் குரலும் ஒரே தொனியில் ஒலித்ததை கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. தேசத்தின் தந்தை அகிம்சையின் ஆசான் உலகளாவிய அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்களின் அரசியல் வழிகாட்டியென சிலாகித்து பூரித்து புளகாங்கிதம் அடையும் காந்தியடிகளை படுகொலை செய்த உலகளாவிய சோக சம்பவத்தில் சர்ச்சைக்குரிய ஓர் அடிப்படை வாத அமைப்புக்கு 68 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் உச்ச பட்ச நீதித்துறை வழங்கியுள்ள ஆரோக்கியமான சான்றிதழ் நாடெங்கும் விவாத அலையை ஏற்படுத்தியுள்ளது.. விவாதம் தொடர்கிறது. கருத்து செறிவுள்ள வாதங்கள் நாடெங்கும் படர்கிறது. இதனிடையே தாம் சொன்னது சொன்னதுதான் இதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்ட வட்டமாக அறிவித்த ராகுல் காந்தியின் துணிச்சலை பாராட்டி ராகுல் ஏற்படுத்திய அலை எத்தகைய சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் பார்ப்போம்.

காலமெல்லாம் மதசார்பற்ற நல்லவர்கள் ஹிந்து சமய மற்றும் அனைத்து மத சான்றோர்களும் வினவிய இது போன்ற வினாக்களுக்கு மழுப்பலுடன் சொதப்பித்திரியும் புண்ணியவான்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் விதமாக அடுக்கடுக்கான ஆதாரங்கள் அம்பலமாக தொடங்கியுள்ளன.

கோல்வால்க்கர் காந்தியடிகளை கொலை செய்யவேண்டும் என ரகசிய கூட்டத்தில் பேசியுள்ளார். 1947 ன் சி ஐ டி ரிப்போர்ட் சொல்கிறது.. டெல்லி சி ஐ டி அறிக்கையின் படி 1947 டிசம்பர் 8 ம் தேதி ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்க்கர் காந்தியை அமைதியாக்கவேண்டும் என்று ஆர் எஸ் எஸ் காரர்கள் மட்டுமே கூடிய கூட்டத்தில் பேசியுள்ளார். (வாசகர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டல் 1992 டிசம்பர் 5ல் இதே ஆர் எஸ் எஸ் ன் பிரதம சீடரும் பாஜகவின் முக்கிய தலைவருமான முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பேசியது நினைவிருக்கிறதா ? அயோத்தியில் வசதியாக அமர்ந்து கொள்வதற்கு தரையை சமப்படுத்தி கொண்டு அமருங்கள் நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிகிறதா ? என கூடி இருந்த ஆயிரக்கணக்கான கரசேவகர்களின் மத்தியில் அவர் பேசினார். அதாவது பாப்ரி மஸ்ஜிதை இடித்து தரை மட்டமாக்கி விடுங்கள் என மறைமுகமாக வெறியூட்டினார். அவர் பேசியது இன்றும் யூ டியூபில் காண முடியும்.. அவரது வெறியூட்டும் பேச்சின் விளைவாக லிபர்ஹான் கமிஷன் சுட்டிக்காட்டிய 68 குற்றவாளிகள் பட்டியலில் வாஜ்பாய்க்கு இடம் அளிக்கப்பட்டு இருந்தது. )

கோல்வால்கரின் பேச்சில் இருந் த அதே மறை (?)பொருள் தான் நேற்று வாஜ்பாயின் பாப்ரி மஸ்ஜித் இடிப்பினை தூண்டிய விவகாரத்திலும் இருந்தது.. காந்தியாரை அமைதியாகவேண்டும் என்ற உத்திரவு ஒரு கை தேர்ந்த சினிமா வில்லன் பேசும் வசனம் போல் இருக்கிறதல்லவா ? டேய் அந்த கிழவன் சத்தத்தை நிப்பாட்டுங்களேண்டா ? என்ற தொனி உங்களுக்கு நினைவுக்கு வருகிறதல்லவா?

அதே மாதம் டிசம்பர் 1 ம் தேதி 50 ஆர் எஸ் எஸ் காரர்கள் மதுராவில் கூடி காந்தியடிகள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கொலை செய்வது குறித்து ரகசிய சதி ஆலோசனை நடத்தினர். லக்னோ சி ஐ டி ரிப்போர்ட் தெரிவித்த ஆதாரபூர்வ தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 8 ல் டெல்லி சி ஐ டி ரிப்போர்ட் உறுதிப்படுத்தபட்ட மற்றும் தங்களால் புலனாய்வு செய்யப்ப்பட்ட ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட குறிப்புகள் தற்போது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாமான்ய மக்களுக்கு காண கிடைக்காத ஆவணங்களை பொது வெளியில் வலை தளங்களில் வெளியிட்டு உண்மைகளை உரக்க சொன்ன கேட்ச் நியூஸ் வலை தளத்தினை ஒவ்வொரு இந்தியனும் நன்றியுடன் பாராட்ட கடமைப்பட்டுள்ளனர். அது இந்திய சமூகத்திற்கு வழங்கியுள்ள நன்கொடை யாம் இந்த சி ஐ குறிப்பின் அடிப்படையில் நாம் இந்த கட்டுரையை வடிவமைத்துள்ளோம்.

இது வரை பதில் அளிக்கப்படாமல் இருக்கும் இரண்டு முக்கிய கேள்விகளை இந்த ஆவணங்கள் எழுப்பி விடையளிக்கிறது. ஆர் எஸ் எஸ் காந்தியடிகளை கொலை செய்ய முயற்சித்ததா ? அச்சுறுத்தியதா ? ஆர் எஸ் எஸ் காரர்களால் அதை செய்ய முடியுமா ? காந்தியாரின் படுகொலையில் நேருவுக்கும் பட்டேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா ? முஸ்லிம்களை ஒழித்து கட்டவேண்டும். ஒரே ஒரு முஸ்லீம் கூட நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க கூடாது அவ்வாறு அவர்கள் இங்கேயே இருக்க விரும்பினால் என்ன செய்யவேண்டும் என அவர்கள் விதித்த படு பயங்கரநிபந்தனைகள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட மேலும் பல கேள்விகளுக்கு இந்த ஆவணங்கள் விடையளித்துள்ளது. இவை அனைத்துக்குமான ஆதாரங்கள் டெல்லி காவல்துறையின் ஆவண காப்பகத்தில் உள்ளன.

காந்தியடிகள் படுகொலை குறித்து திடுக்கிடும் தகவல்கள் முதலில் வெளியான முதல் கூட்டம் காந்தியடிகள் படுகொலை குறித்து திடுக்கிடும் தகவல்கள் முதலில் வெளியான முதல் கூட்டம் டெல்லி உயர் அதிகாரிகளுக்கு லக்னோ சி ஐ டி ஸ்பெஷல் பிராஞ் எஸ் பி.விகின்ஸ் கவனத்துடன் அனுப்பிய ரகசிய அறிக்கையில் கீழ் கண்டவாறு படம் பிடித்து காட்டுகிறது.

1947 டிசம்பர் 1 ம் தேதி உத்திரப்பிரதேசம் மதுராவில் உள்ள கோபார்த்தனில் அந்து லால் வைஸ் வீட்டில் அந்த ரகசிய கூட்டம் நடந்தது.இந்த சதி ஆலோசனை கூட்டத்திற்கு எடாவா, அலிகார், டெல்லி மற்றும் மதுராவில் இருந்து 50 ஆர் எஸ் எஸ் காரர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டெல்லி உயர் அதிகாரிகளுக்கு லக்னோ சி ஐ டி ஸ்பெஷல் பிராஞ்ச் எஸ் பி.விகின்ஸ் கவனத்துடன் அனுப்பிய ரகசிய அறிக்கையில் கீழ் கண்டவாறு படம் பிடித்து காட்டுகிறது.

1947 டிசம்பர் 1 ம் தேதி உத்திரப்பிரதேசம் மதுராவில் உள்ள கோபார்த்தனில் அந்து லால் வைஸ் வீட்டில் அந்த ரகசிய கூட்டம் நடந்தது.இந்த சதி ஆலோசனை கூட்டத்திற்கு எடாவா, அலிகார், டெல்லி மற்றும் மதுராவில் இருந்து 50 ஆர் எஸ் எஸ் காரர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக டிசம்பர் 8 ம் தேதி 1947 ல் கூட்டவேண்டும் அதில் நாடு முழுவதும் இருந்து ஆர் எஸ் எஸ் ன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள செய்யவேண்டும் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டது.

அதற்கு முன்னதாக கண்டிப்பான ரகசியங்கள் என்று வகைப்படுத்தப்பட்டு 1947 நவம்பர் 13 தேதியிட்டு அதி ரகசிய கோப்பு ஒன்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. 1947 நவம்பர் 24 ல் ஆர் எஸ் எஸ் காரர்கள் ஆயுதங்கள் திரட்டியதாக மற்றொரு சி ஐ டி குறிப்பிட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ன் ஆயுட்கால உறுப்பினர்கள் இருவர் அல்வார் பகுதிக்கு சென்று 150 துப்பாக்கிகள் வாங்கி அவர்களது தொண்டர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். வெடிகுண்டுகளை எப்படி பயன்டுத்துவது அதனை அவசர நேரத்தில் எப்படி பயன்படுத்துவது ? தமது சித்தாந்தத்திற்கு எதிரானவர்களுக்கு எதிராக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அறிவுரையும் (!) கொடுக்கப்பட்டதை சி ஐ டி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

1947 டிசம்பர் 8 ம் தேதி டெல்லியில் கூட்டப்பட்ட நாடு தழுவிய அந்த ரகசிய கூட்டத்தில் '' காங்கிரஸ் முன்னணி தலைவர்களை கொலை செய்யவேண்டும்.

சேவக் ரிப்போர்ட் என சங்கேத வார்த்தைகளுடன் குறிக்கப்பட்ட அந்த கோப்பில் காணப்பட்டதாவது 8-12-1947 ல் ரோஹடக் சாலையில் கூட்டப்பட்ட ரகசிய கூட்டத்தில் 2500 ஆர் எஸ் எஸ் ஊழியர்கள் பங்கேற்றனர். சில உடற்பயிற்சிகளுக்குப்பின்னர் சங்கின் குரு கோல்வால்க்கர் பேசினார். சங் கொள்கைகளை விளக்கி எதிர்வரும் காலங்களில் கடும் நெருக்கடிகளை சமாளிக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்கவேண்டும். எதிர்காலம் குறித்து ஒரு முழுமையான திட்டம் உங்கள் முன்னால் வைக்கப்படும். விளையாட்டுக்கான நேரம் முடிந்து விட்டது. இந்த அரசாங்கமோ சட்டமோ நம்மை வீரியமாக அணுகாது. நாம் சிவாஜி பாணியிலான கொரில்லா தாக்குதலுக்கு தயாராவோம். யார் நம் வழியில் குறுக்கிட்டாலும் அவர்களையும் முடிப்போம். அது நேரு அரசாக இருந்தாலும் வேறு யாருடைய அரசாக இருந்தாலும் சரியே. சங் வெல்லும்வரை நம் வேலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

முஸ்லிம்கள் பற்றி கோல்வால்க்கர்

golwalkarஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித அதிகாரமும் அவர்களுக்கு கிடையாது. அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறவேண்டியதுதான். மகாத்மா காந்தி முஸ்லிம்களை இந்தியாவிலே வைத்திருக்க விரும்புகிறார். அவர்களை இங்கேயே வைத்துக்கொள்ள விரும்பினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கம் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ஹிந்துக்கள் பொறுப்பாக மாட்டார்கள்.

மகாத்மா காந்தி நெடுங்காலம் முஸ்லிம்களை தவறாக வழிநடத்திக்கொண்டு இருக்க முடியாது நான் என்ன அர்த்தத்தில் சொல்கிறேன் என்றால் உடனடியாக அந்த மனிதன் சத்தமில்லாமல் ஆக்கப்படவேண்டும். இந்த செயல் நமது ஹிந்து பாரம்பரியத்திற்கு விரோதமானது அல்ல.

மதுரா ஸ்பெஷல் பிரான்ச் எஸ் பி எச்சரிக்கை செய்ததால் டெல்லி புலனாய்வுத்துறை டெல்லியில் நடந்த பிரமாண்ட ரகசிய கூட்டத்தை கண்காணிக்க முடிந்தது.

டெல்லி புலனாய்வுத்துறை ரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் முக்கிய அம்சங்கள் ;டெல்லி போலீசை நாங்கள் கண்காணித்து கொண்டு இருந்தனர்.. உள்ளூர் முஸ்லிம்களை தாக்க திட்டமிட்டு இருந்தனர். அது மட்டுமின்றி அவர்கள் தொடர்ந்து பெருமை அடித்துக்கொண்டு இருந்த விஷயம் என்னவெனில் தங்களிடம் எல்லாவிதமான ஆயுதங்களும் உள்ளன.

எப்போது கலவரம் வெடித்தாலும் நாங்கள் தயார். ஆனால் போலீஸ் எங்களை நோக்கி சுட மாட்டார்கள். காரணம் அவர்கள் ஹிந்துக்கள். அவர்கள் சுட தொடங்கினால் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். ஏராளமான ஹிந்துக்களை அவர்கள் சுட வேண்டியது வரலாம். என்று சற்று மமதையுடன் கூறிக்கொண்டு இருந்ததாக சி ஐ டி அறிக்கை குறிப்பிட்டது.

காவல்துறையை பொறுத்தவரை ஆர் எஸ் எஸ் அமைப்பினரை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. ஆர் எஸ் எஸ் ன் நடவடிக்கைகள் அனைத்தும் அரசுக்கு எதிரானவை. அவர்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சி ஐ டி ரிப்போர்ட்டில் மற்றுமோர் சுவாரஸ்ய தகவல்கள் என்னவெனில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர் எஸ் எஸ் வன்முறைகளை திட்டமிட்டு வன்முறை வெடித்து விட்டால் தங்களுக்குள் அடையாளம் காட்டிக்கொள்ள வெள்ளை கை குட்டைகளை மணிக்கட்டுகளில் கட்டிக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டு இருந்ததை அந்த ரிப்போர்ட் குறிப்பிடுகிறது.

ஸ்பெஷல் பிரான்ச் சி ஐ டி இன்ஸ்பெக்டர் கர்தார் சிங் குறிப்புகளின் படி ஆர் எஸ் எஸ் ன் ஆயுள்கால உறுப்பினர்களான பியாரிலால், மற்றும் ஹர்பன்ஸ் லால் இருவரும் சியால் கோட் ல் இருந்து டெல்லி வந்து மேற்கு பஞ்சாபி அகதிகளை ஹரித்வார் மற்றும் முசோரியில் ஒருங்கிணைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கர்தார் சிங் தனது மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் அங்கு ஆயுதம் தயாரிக்கத்தான் சென்று இருக்கவேண்டும். ஆனால் அதனை உறுதி படுத்த முடியவில்லை.

ஆர் எஸ் எஸ் காரர்கள் வைத்து இருந்த ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு எதிராக பிரயோகிக்க துடித்துக்கொண்டு இருந்தனர். 1948 பிப்ரவரி 6 ம் தேதி வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஓர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. காந்தியாரை கொல்வதற்காக கொலையாளி நாதுராம் கோட்ஸேக்கு ரிவால்வர் ஒன்று ஆர் எஸ் எஸ் தலைவரால் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டது.

மேற்குறிப்பிட்ட சி ஐ டி ரிப்போர்ட்களையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவலையும் குறிப்பிட்டு இந்த ரிப்போர்ட்டுகளில் பல உண்மைகள் இருப்பதாக படுகிறது. இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என அன்றைய உள்துறை அமைச்சரான பட்டேலிடம் பிரதமர் நேரு 1948 பிப்ரவரி 28 ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். பாபுஜி கொலை ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. ஆர் எஸ் எஸ் தலைமையின் விரிவான சதி திட்டத்தின் ஒரு பகுதி தான் அது என்று குறிப்பிட்டதோடு டெல்லி போலீசில் ஏராளமானவர்கள் ஆர் எஸ் எஸ் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரையும் ஒரே மாதியாக டீல் செய்ய முடியாது. என்று நேரு தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

. நாட்டின் பிரதமரே எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஆர் எஸ் எஸ் மீது பட்டேல் தனது துறையின் வாயிலாக நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும். ஆனால் படேல் தனது பதில் கடிதத்தில் ஆர் எஸ் எஸ் க்கு நற்சான்றிதழ் வழங்கினார். ஆர் எஸ் எஸ் காந்தி கொலையில் ஈடுபடவில்லை மதவெறி அமைப்பான ஹிந்து மஹாசபாதான் விநாயக் தாமோதர் சாவர்க்கர் தலைமையில் சதி திட்டம் தீட்டியது என்றார். (முதலில் இவ்வாறு சான்றிதழ் வழங்கினாலும் பின்னர் ஆர் எஸ் எஸ் ஐ தடை செய்து நாடாளுமன்றத்தில் பட்டேல் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு மிக்கது என்றாலும் வரலாற்றின் அனைத்து பக்கங்களும் அனைவருக்கும் தெரியவேண்டுமா ? இல்லையா ?)

ஆர் எஸ் எஸ் போன்ற ரகசிய அமைப்புகளின் உறுப்பினர்கள் குறித்த எந்த ஆவணங்களும் இல்லை. பதிவு செய்யப்படவும் இல்லை. அந்த அமைப்பு பற்றியோ அதன் தனிநபர்கள் பற்றியோ தகவல்கள் கிடைப்பது கடினம் என ஆரம்ப கட்டத்தில் பட்டேல் மலைத்ததும் மறுத்ததும் உண்மை.

இதுவரை உங்களுக்கு விவரிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் படி தேசத்தந்தை காந்தியடிகளுக்கு ஆர் எஸ் எஸ் ன் உயர் பீடங்களில் இருந்து கொலை மிரட்டல் வந்தது உண்மை. குறிப்பாக ஆர் எஸ் எஸ் சித்தாந்தவாதிகளின் குருவான கோல்வால்க்கரிடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் வந்தது உண்மை. காந்தியார் படுகொலை குறித்து 1947 டிசம்பர் 8ல் விரிவான சதி ஆலோசனை நடத்தப்பட்டது உண்மை.

உண்மைகள் இவ்வாறு இருக்க நாதுராம் கோட்ஸே அவனாக தான் காந்தியாரை கொலை செய்தான் அதற்கு ஆர் எஸ் எஸ் காரணமில்லை என்று எப்படி முடிவுக்கு வரமுடியும் ?

- அபூஸாலிஹ்