ஒரு காலத்தில் கத்தோலிக்க திருச்சபை பாவமன்னிப்புச் சீட்டை விற்பனை செய்தது. நீங்கள் எந்தப் பாவத்தைச் செய்திருந்தாலும் பணம் கொடுத்துப் பாவமன்னிப்புச் சீட்டை வாங்கிவிட்டீர்கள் என்றால் உங்கள் பாவங்கள் நீங்கியதாக ஏற்றுக்கொள்ளப்படும். மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டி ஆடம்பரமாக வாழ்வதற்காக கத்தோலிக்க மதகுருக்கள் இந்த முறையைக் கடைபிடித்தார்கள். மக்களின் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தைக் கொள்ளையடிப்பது என்பது காலம் காலமாக மதவாதிகள் கடைபிடிக்கும் நடைமுறை.

 கிருஸ்தவத்தில் பாவமன்னிப்புச் சீட்டு என்றால் இந்து மதத்தில் ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு பரிகார பூசை உள்ளது. நீங்கள் எந்தப் பாவத்தை வேண்டும் என்றாலும் செய்துகொள்ளலாம். பார்ப்பன பூசாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் அவர் தன்னுடைய மந்திரங்கள் மூலம் நேரடியாக கடவுளிடம் பேசி அவரை சமாதானம் செய்து உங்களைப் பாவங்களில் இருந்து விடுவித்துவிடுவார். பாவமன்னிப்புச் சீட்டுகள் அங்கே ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் இங்கோ அது புதுப்புது அவதாரங்களை எடுத்துக்கொண்டே இருக்கின்றது. உழைக்காமலேயே தொந்தி வளர்க்கும் பார்ப்பன கூட்டம் தனது மேலாண்மையை எல்லா காலத்திலும் நிலைநிறுத்திக்கொள்ள இந்த மக்களை எழுந்துமேலே வர முடியாத அளவிற்கு முட்டாள்தனத்தில் முக்கிவைத்திருக்கின்றது.

gangajal

 மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி ஒரு அரசு பணம் ஈட்டுவது குற்றமில்லை என்று அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியன் எழுதி வைத்திருக்கின்றான். ஒரு அரசு எந்த வகையான வழிமுறைகளையும் பயன்படுத்தி மக்களிடம் இருந்து பணம் ஈட்டலாம் அது குற்றமாகாது என்பதுதான் பார்ப்பன சாணக்கியன் இந்த உலகிற்கு சொல்லிக்கொடுத்த பொருளாதாரம் பற்றிய பாலபாடம். மக்களை முதலில் நம்பவைக்க வேண்டும் பின்பு அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை பயமுறுத்தியோ, ஏமாற்றியோ பணம் பொருள் போன்றவற்றை அறுவடை செய்வேண்டும் இதுதான் பார்ப்பன நீதி.

 இந்தப் பார்ப்பன நீதியை நிலைநாட்டுவதையே தனது கடமையாக கொண்டு செயல்படும் மோடி அரசு தொடர்ச்சியாக பல திட்டங்களைத் தீட்டிவருகின்றது. பள்ளிகளில் சமஸ்கிருத்தைக் கட்டாயமாக்குவது, யோகாவை கட்டாயமாக்குவது, இந்தியை திணிப்பது, மாட்டுகறி அரசியல் என பல பார்ப்பன கருத்தியல்களை திட்டமிட்டே மேலிருந்து திணித்துக்கொண்டு இருக்கின்றது. அந்த வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து அதை விலை வைத்து இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் விற்பது.

 கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்ற பார்ப்பன மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது போன்ற திட்டங்களைத் தமிழகத்தில் உள்ள சில பார்ப்பன மாமா பத்திரிக்கைகள் செய்துள்ளன. இப்போதோ அதை இந்திய அரசே செய்கின்றது. தன்னாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரையோ, ஆரோக்கியமான உணவையோ, இருப்பதற்கு சொந்தமாக ஒரு வீட்டையோ கட்டிக்கொடுக்க துப்பில்லாத ஒரு மானங்கெட்ட அரசு, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து இந்திய மக்களுக்கு விற்கும் பார்ப்பன அடிவருடி வேலையைச் செய்துள்ளது.

 ரிஷிகேஷ், மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து எடுக்கப்படும் கங்கை நீரானது பட்டில்களில் அடைக்கப்பட்டு அஞ்சல் நிலையங்கள் வழியாக விற்கப்படும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கிவைத்துள்ளது. இதன் படி ரிஷ்கேஷ் நீர் 200 மி.லி ரூ 15க்கும் 500 மி.லி ரூ. 22 க்கும் கங்கோத்ரி நீர் 200 மி.லி ரூ 25க்கும் 500 மி.லி பாட்டில் ரூ. 35க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புனிதம் என்ற பெயரில் மாட்டு மூத்திரத்தைக்கூட இந்திய மக்களை குடிக்கவைத்து அழகு பார்த்த பாப்பனியம் இப்போது உலகிலேயே மிகவும் மாசடைந்த குடிப்பதற்குத் தகுதியில்லாத கங்கைநீரை காசாக்க கிளம்பி இருக்கின்றது. கங்கை நீரில் குரோமியம் 6 என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கிற்கு மேல் இருப்பதும் கங்கையில் குளித்தால் புற்றுநோய் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

 பல நாடுகளில் தடை செய்யப்பட்ட வேதி தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்கி இந்திய மக்களைக் கொல்ல பன்னாட்டு முதலாளிகளோடு ஒப்பந்தம் போட்ட மோடி அரசு சாக்கடை நீரான கங்கை நீரை புனிதமான நீர் என்று உங்கள் தலையில் கட்ட களம் இறங்கி உள்ளது. இந்தக் கருமத்தை வாங்கி குடித்தால் எல்லா பாவமும் போய்விடுமாம். அப்புறம் மோட்சம் எல்லாம் கிடைக்குமாம். 15 ரூபாய் செலவு செய்தால் பாவம் போய்விடும் என்றும் மோட்சம் கிடைக்கும் என்றும் மக்களை நம்பவைப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இந்த அரசு அறிவியலை வளர்க்கும் அரசா? இல்லை பார்ப்பன பயங்கரவாதிகளை நக்கிப்பிழைக்கும் அரசா? என்பதற்கு இதுவே ஒரு நல்ல சான்று.

 இனிமேல் நீங்கள் என்ன பாவம் வேண்டும் என்றாலும் செய்யலாம். மசூதியை இடிக்கலாம், முஸ்லீம்களைக் கொல்லலாம் ஏன் குண்டு கூட வைக்கலாம். ஒரு பாட்டில் கங்கா தீர்த்தம் வாங்கி நாக்கில் நக்கிக்கொண்டால் எல்லா பாவமும் போய்விடும். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதெல்லாம் பழங்கதை பாவத்தின் சம்பளம் கங்கா தீர்த்தம் என்பதுதான் இப்போது புதுக்கதை. மோடி இனி வெளிநாடு பயணம் செய்யும் போதெல்லாம் ஒரு பாட்டில் கங்கா தீர்த்தத்தைக் கையோடு கொண்டு சென்றாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 தமிழ்நாட்டில் இந்தக் கருமம்பிடித்த கங்கா தண்ணீரை 94 தலைமை தபால் நிலையங்களில் விற்க முடிவு செய்திருக்கின்றார்கள். முதல்கட்டமாக 9 தபால் நிலையங்களில் மட்டும் இது விற்கப்பட்டுள்ளது. விற்பனை தொடங்கிய 10 நிமிடத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது என அனைத்து பார்ப்பன, சூத்திர தமிழ்நாளேடுகளும் ஆச்சரியத்தில் குதிக்கின்றன. அனைத்து இடங்களிலும் சேர்த்தே மொத்தம் 270 பாட்டில்கள் தான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கேவலம் 270 பாட்டில்கள் விற்றதற்கே வேட்டி கழன்றது கூட தெரியாமல் வித்திருச்சி வித்திருச்சி என்று பஜகோவிந்தம் பாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 மோடி அரசு தபால் துறையைப் பார்ப்பன கருத்தியலை பரப்புவதற்கான மடமாக மாற்றிக்கொண்டு இருக்கின்றது. கங்கா தீர்த்தம் மட்டும் அல்லாமல் திருப்பதி லட்டும் தபால் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுமாம். இன்னும் கொஞ்ச நாளில் தபால் நிலையங்களில் காவிவேட்டி, உருத்திராச்ச மாலை, கமன்டலம் எல்லாம் விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாட்டையே காவிமயமாக்க துடித்துக்கொண்டு இருக்கும் பார்ப்பன பயங்கரவாதிகளிடம் இருந்து வேறு எதையும்  நாம் எதிர்ப்பார்க்க முடியாது. பார்ப்பனர்களுக்குப் புனிதமான கங்கை நீரை அனைத்து மக்களுக்குமான புனித நீராக காட்ட முயற்சிக்கும் இந்த கழிசடைகள் பொதுசிவில் சட்டம் கொண்டுவந்தால் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

 பல்வேறு மொழி, பண்பாடுகளையும் கடைபிடிக்கும் இந்திய மக்களை கேவலப்படுத்துவதே இந்தப் பார்ப்பன பயங்கரவாத அரசின் ஒரே நோக்கமாக இருந்துவருகின்றது. கங்கையிலே பார்ப்பனன் பேண்டுவைத்த மலமும் அவனது அழுகிப்போன பிணமும் கலந்து வரும் கங்கை நீரை சுயமரியாதை மண்ணின் மைந்தர்கள் வாங்கிக்குடிப்பதுக் கேவலத்திலும் கேவலமாகும். மானங்கெட்ட பார்ப்பன கூட்டம் வேண்டும் என்றால் அதை வாங்கிக் குடிக்கட்டும். குடித்துவிட்டுச் செத்துத்தொலையட்டும். நம்முடைய மானமுள்ள தமிழ்மக்கள் அதை வாங்கிக்குடித்து எந்த விதமான உடல் உபாதைகளுக்கும் ஆளாக கூடாது என்பதுதான் நமது விருப்பம்.

- செ.கார்கி