Nitin Gadkari Tamizhisai BJP Manifesto

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் மிக முக்கியமானது தேர்தல் அறிக்கை. மக்களின் அதிகப்படியான அபிலாசைகளை எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கின்றதோ எந்தக்கட்சி அதை கண்டிப்பாக செய்துதருவேன் என உத்திரவாதம் அளிக்கின்றதோ அந்தக் கட்சிக்கு நம்பிக்கை இருந்தால் மக்கள் வாக்களிப்பார்கள். அப்படி தமிழக தேர்தல் களத்தில் பல கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர் என பல கட்சிகள் தாம் ஆட்சிக்கு வந்தால் இந்தத் தமிழக மக்களுக்கு என்னென்ன நலத்திட்டங்களைச் செய்துதருவேன் என தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கின்றன.

 அதே போல தமிழக பாரதிய ஜனதாவும் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. ‘எல்லோரும் சிரித்தார்கள் என்று பூனை பொடக்காலியில் போய் சிரித்ததாம்’ என்ற கதையாக தமிழக பாரதிய ஜனதா எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதால் தனக்கும் தேர்தல் அறிக்கையை வெளியிடும் அளவுக்கு திராணி உள்ளது என காட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

  போன 2011 சட்ட மன்ற தேர்தலில் 204 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிட்டது. போட்டி என்றால் சாதாரண போட்டி அல்ல கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு மிகப்பெரிய கட்சிகள் ஆதரவு கொடுத்தன. ஒன்று ஜனதா கட்சி (பல கோடி உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்சி நாட்டின் நலன் கருதி தற்போது பாரதிய ஜனதாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இதன் தலைவராக சு.சாமி இருந்தார்) இன்னொன்று ஜக்கிய ஜனதா தளம்.

 இப்படி கூட்டணி அமைத்து 2011 சட்ட சபை தேர்தலை சந்தித்த பாரதிய ஜனதா தான் போட்டியிட்ட 204 தொகுதிகளில் மொத்தம் 198 தொகுதிகளில் கட்டுத்தொகையை இழந்து காணாமல் போனது. இப்படி ஒரு கேவலமான தோல்வியை வேறு யாராவது சந்தித்து இருந்தார்கள் என்றால் நிச்சயம் தூக்கிமாட்டிக்கொண்டு செத்திருப்பார்கள் குறைந்தபட்சம் கட்சியையாவது கலைத்துவிட்டு ஏதாவது ஒரு நல்ல பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்திருப்பார்கள்.

  இவ்வளவு மோசமான நிலையில் சாகும் தருவாயில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா இருந்தாலும் கொஞ்சம் கூட அதன் பார்ப்பன திமிர் குறையவில்லை. எந்தக் காரணத்திற்காக தமிழக மக்கள் பாரதிய ஜனதாவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்களோ அதே காரணத்தை முன்வைத்தே தன்னுடைய தேர்தல் அறிக்கையை அது தயாரித்துள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பாரதிய ஜனதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் 1)மதமாற்ற தடைசட்டம் கொண்டுவரப்படுமாம், 2) சமச்சீர் கல்வி மாற்றியமைக்கப்பட்டு நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படுமாம், 3) 6-ம் வகுப்பு முதல் யோகா, தியானம் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுமாம், 4) கோவில் சொத்துக்கள் 8 மாதத்தில் மீட்கப்படுமாம், 5) இந்துக்கோவில்களை நிர்வகிக்க ஆன்றோர் சான்றோர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுமாம் 6) ஆன்மீக சுற்றுலா திட்டம் கொண்டுவரப்படுமாம் மேலும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கி வரும் தைத்திருநாளில் அதை கோலாகலமாக நடத்துவோம் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

 ஏற்கெனவே தமிழ்நாட்டில் பார்ப்பன ஜெயலலிதாவால் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்பட்டதும் பின்னால் அது பெரும் எதிர்ப்புக்கு ஆளாகி திரும்பப் பெறப்பட்டதும் வரலாறு. சாதியை ஒழிபேன், தீண்டாமையை ஒழிப்பேன் என்றெல்லாம் சொல்ல துப்பில்லாத பார்ப்பன பாரதிய ஜனதா மதமாற்ற தடைசட்டத்தை கொண்டுவருவேன் என சொல்வது அதன் பார்ப்பன திமிரையே காட்டுகின்றது. தான் எந்த கடவுளை வணங்கவேண்டும், எந்த மதத்தை கடைபிடிக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இங்கே ஒவ்வொருவனுக்கும் உள்ளது. நீ இந்துமதத்தில் சூத்திர பட்டத்தையும், சண்டாளன் பட்டத்தையும் ஏற்றுக்கொண்டு இங்கேயேதான் இருக்கவேண்டும் என கட்டாயப்படுத்தும் உரிமை எந்தப் பார்ப்பனர்களுக்கும் கிடையாது. குறிப்பாக சங்கராச்சாரியார், ஹெச். ராஜா, இல.கணேசன் போன்ற பார்ப்பனத் திமிர் பிடித்தவர்களுக்கும் அவர்களை நக்கிப்பிழைக்கும் மானங்கெட்ட சூத்திர தமிழசை செளந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களுக்கும் கிடையாது.

  6-ம் வகுப்பில் இருந்தே யோகா, தியானம் போன்றவற்றை சொல்லிக் கொடுப்பதன் மூலம் தன்மானமற்ற, சுயமரியாதையற்ற ஒரு பார்ப்பன அடிமைக் கூட்டத்தை உருவாக்க சதித்திட்டத்தை தீட்டியிருக்கின்றார்கள். மேலும் சமச்சீர் கல்வி முறையை மாற்றியமைக்கப் போகின்றார்களாம். மாற்றி அமைத்துவிட்டு பார்ப்பன வேத புராணாங்களை கற்றுத்தர போகின்றார்கள். மேலும் நவோதயா பள்ளிகளை கொண்டுவரப் போகின்றார்களாம். இந்த நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்படுகின்றது. எனவே இந்தியைத் தினிக்கும் தனது திட்டத்தை மறைமுகமாக சாதித்துக்கொள்ள பார்ப்பனிய மூளை நவோதயா பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றது.

 ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு புகழ்பெற்ற பார்ப்பன கோவிலுக்கும் தமிழக மக்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு எப்படி பார்ப்பன கடவுள்களை சாஷ்டாங்கமாக கீழே விழுந்து கும்பிடுவது என்று பயிற்சி அளித்து ஒவ்வொரு கோவிலிலும் தொந்தி சரிந்த பார்ப்பனன் தரும் நாத்தம் பிடித்த தீர்த்தத்தை நக்கவைத்து அடிமை ஆன்மீகத்தை கற்றுத்தரப் போகின்றார்கள்.

 கோவில் சொத்துக்களை மீட்கப்போகின்றார்களாம். எந்த கோவில் சொத்து என்று தெளிவாக சொல்லவில்லை. ஒருவேளை தில்லை கோவிலில் மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்துக் கோவிலுகுள்ளேயே பெண்களை வைத்து விபச்சாரம் செய்துவந்தார்களே அந்தப் பார்ப்பனர்களிடம் இருந்து கோவிலில் திருட்டப்போன சொத்துக்களை மீட்கப்போகின்றார்களா இல்லை பழனி கோவிலை பண்டாரங்கள் பிடியில் இருந்து வஞ்சகமாக பிடுங்கி இன்றுவரை கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்து அனுபவித்து வருகின்றார்களே அந்த திருட்டுப் பார்ப்பனர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யப்போகின்றார்களா என தெரியவில்லை.

 கோவில் சொத்துக்களை நிர்வகிக்க ஆன்றோர்கள் (பார்ப்பனர்கள்) சான்றோர்கள் (அவனை அண்டிப்பிழைக்கும் சூத்திரன்) அடங்கிய குழு அமைக்கப்படுமாம். ஏற்கெனவே அப்படித்தானே இருக்கின்றது!.

  தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றிபெற துப்பில்லாத இந்தக் கேவலமான நிலையிலேயே இப்படி ஒரு அயோக்கியத்தனமான தேர்தல் அறிக்கையை அதனால் கொண்டுவரமுடிகின்றது என்றால் ஒரு வேளை கொஞ்சம் செல்வாக்கு இருந்தால் என்ன செய்திருப்பார்கள். உச்சிக்குடுமி சாலையிலே புரள ஆட்டமாக ஆடியிருப்பார்கள் இந்தப் பார்ப்பன காலிகள். தமிழ்நாட்டிலே சாகும் தருவாயில் இருக்கும் இந்தப் பார்ப்பன பாரதிய ஜனதாவின் கடைசி மரண வாக்குமூலம் தான் அதன் தேர்தல் அறிக்கை. இப்பொழுதே அதன் தேர்தல் அறிக்கையில் இருந்து பிணவாடை வீச ஆரம்பித்துவிட்டது.

- செ.கார்கி