கவிதையின் வடிவம் காலம் காலமாய் மாறியே வந்துள்ளது. புதிது புதிதாய்ப் பரிணாமத்தையும் பெற்றே வந்துள்ளது. வடிவமாறுதலே வளர்ச்சி எனவும் அணுமானிக்கப் படுகிறது. தொடக்கம் முதல் தற்காலம் வரையிலான கவிதை உருமாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமகிறது. இருபதாம் நூற்றாண்டிலேயே கவிதை என்னும் சொல் பயன்பாட்டுக்கு வந்தது. தொடக்கம் செய்யுளே. சங்க காலமே செய்யுளின் தொடக்கம். பாடல் எனவும் அழைக்கப்ட்டது. ஆசிரியம்,விருத்தம்,கலி,பரி என்று திட்டமிட்ட வடிவங்களில் செய்யுள்கள் இயற்றப்பட்டன. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்களாகும். அகமும் புறமும் என இருவகைப்பட்டது.

அறுகுணத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் ததுவா துவர்நில மூட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாசு யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுத லல்லது
படைமடம் படான்பிறர் படைமயக் குதிரை

இது புறநாநூற்றுப்பாடல். எழுதியவர் பரணர். இலக்கண அடிப்படையில் எழுதப்பட்டது. சங்ககால வடிவத்துக்கு சான்று. தொடர்ந்து நீதி இலக்கியம், காப்பியம், பக்தி இலக்கியம் என பற்பல வடிவங்களில் செய்யுள்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. சிற்றிலக்கயத்தின் காலம் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தாலும் இலக்கணத்துக்குட் பட்டு இருந்தாலும் வடிவங்கள் பலவாயிருந்தன. ஒரு வரி(ஆத்திச்சூடி), இரு வரி(திருக்குறள்), மூவரி (மூவடி) நாவரி (நாலடி) என ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு மாதிரி எழுதி இருந்தனர். இவை மரபு.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே கவிதையின் பயணத்தில், அதன் வடிவத்தில் மாறுதல் ஏற்பட்டது. ’கால வேகத்தில் மாறுதல் கவிதைக் துறையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் இது’ என்கிறார்’புதுக்கவிதைத் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில் வல்லிக்கண்ணன். யாப்புகளிலிருந்து கவிதை மீறியிருந்ததால் ‘யாப்பில்லாக் கவிதை’ என்றே அழைக்கப்பட்டது. வசன நடையில் இருந்தால் ‘வசனக் கவிதை’ என்றும் கூறப்பட்டு வந்தது. மகாகவி பாரதியோ ‘புதுக்கவிதை’ என்ற பெயரோட தன் கவிப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க
நவ கவிதை

என்பது கவிதையைப் பற்றிய கவிதையானாலும் பாரதி தந்த புதுவடிவமாக கவிதையைக் காண முடிகிறது. 1930களில் ந. பிச்சமூர்த்தியின் வரவால் வடிவம் சற்று மாறுபட்டது.

இருளின் மடல்கள் குவிந்தன
வானத்து ஜவந்திகள் மின்னின
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின
மேற்கே கடலலையின் ஓயாத மூச்சு
காலன் செய் சூளூhமத்தில் உடல் நெய்யாகும் காட்சி
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு
கட்டற்ற சிரிப்பு
காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம் என

அழகியலாக வடிவம் கொண்டிருந்தாலும் வசன கவிதையாகவே வகைப்படுத்தப்பட்டது. வசன கவிதையை விமாpசனம் செய்து க. நா. சு. எழுதிய ஒரு ‘வசன கவிதை’

எதுகையும் மோனையும்
வேண்டவே வேண்டாம்
சீரும் கீரும்
சுத்த சனியன்கள்
வெண்பாவும் கிண்பாவும்
விருத்தமும் திருத்தமும்
வேண்டாத தொல்லைகள்
மட மடவென்றும்
கட கட வென்றும்
மள மள வென்றும்
வசன கவிதை
எழுதித் தள்ளுவோம்
‘ததாஸ்து’

வசன கவிதை என்னும் தலைப்பிலேயே எழுதப்பட்ட வசன கவிதையானாலும் இதுவொரு வடிவமாகவே இருந்தது. 1959ம் ஆண்டு சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் தொடங்கிய பிறகே ‘புதுக்கவிதை’ என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது.

வேலிகட்டா வானத்தில்
வெள்ளிப்பயிர் வளர்க்க
தாலிகட்டிக் சக்தியினை
ஈர்ப்பென்ற நீர்பாய்ச்சிக்
காலமெல்லாம் காத்திருக்க
வைத்துவிட்டாய், வைத்துமென்ன?
ஊழியென்ற பட்சி அவள்
அமர்ந்திருக்கும் வேளையிலே
வேலிகட்டா வானத்தில்
வெள்ளி விதைகளெல்லாம்
அள்ளி விழுங்கும்வரை
நீர்பாய்ச்சி என்ன பயன்
வேர்முளைக்கக் காணாமே என

தரும சிவராமு எழுதியது புதுக்கவிதையில் குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதை வரலாற்ற்pல் ஒரு திருப்பு முனை ஏற்படுத்திய காலம் கட்டம் இது. 1970களில் கசடதபற,வானம்பாடி என்னும் இரு இதழ்கள் புதுக்கவிதைக்கு ஓர் உத்வேகத்தை, ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தின. இரண்டின் போக்கும் வேறு வேறானாலும் புதுக்கவிதையை முன்னெடுத்துச் சென்றது என்பது சுட்டத்தக்கது

இமயச் சிகரங்களின் வெண்புதர் புற்றுகளில்
சில்லென்று தலைநிமிர்ந்தும் பணிப்பாம்புகளில்
பிளவுண்ட நாலுனிகளின் விவக்ஷக்கடிகளால்
இந்த தேசத்தின் தேகம் நீலம் பாரித்துப்போன
ஒரு மயக்க இருள் தழுவிய முயக்க்ததில்
இந்த மண்ணின் ஆத்மா உறைந்துவிட்ட
ஒரு மரணநிழல் படிந்த முற்றத்தில்
விதவைத் தெருவின் புழுதியின் மேலே
வஞ்சிக்கப்பட்ட எம் பூமியின் மழலை
எப்படிப் படுத்திருக்கும்?
எப்படிப் படுத்திருக்கும்?

என்பது அக்னிபுத்திரனின் கவிதை. இந்நிலை நீடித்தது. புதியவர்கள் பலரை இலக்கிய உலகிற்கு கொண்டு வந்தது. புதுக்விதையே பின்னர் உள்ளடக்கத்தில் மாறுபட்டு பல புதிய புதிய வடிவங்களில் படைக்கப்பட்டு நவீPன கவிதை என பெயர் பெற்றது. நவீனத்துவம் தொடர்ந்து பின் நவீனத்துவமும் வந்தது. இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் புதுக்கவிதையின் பயணம் தொடர்கிறது என்பது அதன் ஆற்றலைக் காட்டுகிறது. இக்காலகட்டத்தொடந்து எழுதப்பட்ட கவிதைகள் சில நவீன கவிதை என அடையாளப்படுத்தப்பட்டன. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு புதுயுத்தியைக் கையாண்டிருந்தன.

க்ளினிக் வாசலில்
கடைசியைக் காக்கா
கொத்தக் கொத்த அண்ணாந்து
சாகக்கிடந்த அந்தக்
கழுதை
கயிறு கட்டி அவன்
ஆத்துக்கு
இழுத்துப்போகையில்
கண்ணுருட்டிய பரிதவிப்பை
எழுதவும்
க்ளினிக் வராண்டாவில்
எல்லை குறித்த
சிந்தனையைத் தூண்டி
தொப்புள் மறைத்துச்
சொருகிய அந்த
பேனாவைத் தொட்டு
எழுத தருவாளா
அந்த நர்ஸ்

என்பது கவி்ஞர் திருமேனி எழுதிய ஒரு நவீனக்கவிதை. இடம் பெற்ற இதழ் நவீன கவிதை 1.

இலக்கிய வகைகளில் கவிதைக்கே முதன்மையான இடம் எனினும் புதுக்கவிதைக்கு முன்னரே தோன்றியது உரைநடை. மரபுக்கவிதை ஆட்சிப் பெற்றிருந்த கால கட்டத்திலேயே உரைநடை இலக்கிய உலக்ததில் புகுந்து தன் இலக்கியப்பங்களிப்பைத் தொடர்ந்தது. 1950களில் உரைநடை வடிவத்தில் சிறுகதையே முன்பு படைக்கப்பட்டது. பின்பு நாவல் தொடர்ந்து கட்டுரைகளும் உரைநடை வகையில் உருவானது. முதல் சிறுகதை ஆசிரியர் சு. சதாசிவம் பிள்ளை. முதல் நாவலாசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. உரைநடைக்கும் வசனகவிதைக்கும் ஐம்பது ஆண்டுகள் வித்தியாசம். இன்று கவிதை உலகில் ஒரு புதுமை ஏற்பட்டுள்ளது. ஒரு புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. ’உரை நடைக்கவிதை’ என்னும் ஒரு புதிய கவிதை மரபு. ஒரு புதிய வடிவம் இலக்கிய உலகில் அறிமுகமாகி கவனிப்பைப் பெற்றுள்ளது.

அது கோடைக்காலம். வாதமரத்தின் கீழ்,இருவர் பேசியபடி,
இலைகளில் மாலைவேளை மறைந்து வருகிறது. இரவு, அவள்
வீட்டில் காத்திருக்கிறது. அவன் பார்க்கிறான். காலையில்
அந்தியைக் கரைத்தபடி அவள் பிரிந்து செல்கிறாள். அவன்
பிதற்றுகிறான். வாதமரத்தின் பழுத்த இலைகள உதிர்கின்றன.
அவன் இதயம் படபடக்கிறது. அவளின் நீண்ட நிழலைத் தீண்ட
பழுப்பு இலைகள் பரபரத்து ஓடுகின்றன. அதன் மேல் நரம்புகளாகி,
காமத்தில் அவன் வார்த்தைகள் பைத்தியம் பிடித்த படி ப்றக்கின்றன.

இந்த உரைநடைக்கவிதையின் தலைப்பு ‘காமத்துவ இலைகள்’. எழுதியவர் ராணி திலக் (புதிய பார்வை - 16- 31 டிசம்பர் 2004).

கவிஞர் ரிவஷியின் ஓர் உரைநடைக்கவிதை.

ஒரு நீண்ட நடைப்பணத்திலிருந்து அப்பொழுதுதான் மீண்டு
வந்திருந்தாள். பாpவோடு தலைகோதி வரவேற்று களைபாற்றத்
தெரியவிலலை அவனுக்கு. வருத்தம்தான் அவளுக்கு, என்றாலும்
அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதே நாளில்
வேறொருவருக்கு அவன் விருந்துபசரித்ததை அறிந்தும்
ஆத்திமடையவிலையென்றால் அவனைப் போலவே அவளும்
அசட்டை செய்வதர்கத்தானே ஆகிவிடும்? - என்று தர்க்கம்
செய்யும் மனதின் துக்க நீலம் பாய்த்து தொண்டக்குள் சிக்கி நிற்கும்
இறந்த காலம்.

இதற்கு தலைப்பில்லை (புதியபார்வை. அக் 1. 15. 2005)

மழை பொழிந்ததன் விளைவாய் குழல் விளக்கைச் சுற்றி மொய்க்கின்றன விதமாய் பூச்சிகள். உணவில் நீரில் வந்து விழுகினற்ன விசிறி சுழல. . தொலைக்காட்சித் திரையில் பிம்பம் மறைக்கின்றன. b’hய்ங் கென்று ரீங்கரித்து காதருகில் பாடுகின்றன அபஸ்வரங்களாய்... . எங்கே போனது? வழக்கமாய் வளைய வரும் வீட்டுப்பல்லி.
அய்யோ பூச்சிகள் பூச்சிகள்...
 பல்லிக்கும் பூச்சிக்கும்
 இடையில்
 கண்ணாடி ஜன்னல் என்னும் ஹைபுன் உரைடையில் தொடங்கி ஹைக்கூவில் முடியும் ஒரு வடிவமாக உள்ளது. உரைநடையே எனினும் இறுதியில் ஹைக்கூவே உச்சம். (நறுமுகை - அன்பதாவன்)

உரைநடைக்கவிதைகளை இயற்றி வருபவர்கள் ராணி திலக், ரிவஷி போன்ற ஓரிருவரே. இந்தக் கவிதைகளை வெளியிடுபவை புதியபார்வை, காலச்சுவடு போன்ற ஓரிரு சிற்றிதழ்களே. இவைகள் வடிவத்தில் உரைநடையாகவே உள்ளன. கவிதைக்கான பொருள் உள்ளது. ஆனால் கவிதையாக இல்லை. புதுக்கவிதையையே மரபுக்கவிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ’உரைவீச்சு’ என விமர்சிக்கின்றனர். இந்நிலையில் கவிதையே உரைடையாக உரைநடைக்கவிதை என வருவது பரிசீலனைக்குரியது. ஓரிருவர் தவிர, ஓரிரு சிற்றிதழ்கள் தவிர உரைநடைக் கவிதையைத் தொடராதது அதற்கு வரவேற்பில்லை எனக் காட்டுகிறது.

தார்த்தாரிப்
பரந்த
புல்
வெளியிலே
பல்
லாயிரம்
பெண்
பாpகள்
தொடர
நிமிர்ந்து
நடை
போட்ட
தொல்
காப்பியம்
பேசும்

என க. நா. சு. வும்

சனித்து விட்டது
மினியுகம், ஓழிந்தது
நனி பெரும் மனிதர் கொற்றம்
இனி
மினி மக்கள் காலம்
மணி தனை விட்டு
மினி தனைப் பாடு போற்று
குனி என் பேச்சைக் கேள் ஏ
னெனி லெனக்குத் தெரியும் நானொரு
மினி மேதை

என சி. மணியும்

கவிதை வடிவங்களில் சோதனை முயற்சிச் செய்தனர். ஆனால் சோதனை முயற்சிகள் தொடரவில்லை. உரைநடைக்கவிதை கவிதையில் ஒரு சோதனை முயற்சி என்றளவில் ஏற்றுக்கொள்ள முடிகிறதே தவிர தொடர்வதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. கவிதையில் சோதனை முயற்சி கவிதைக்கே சோதனையாகி விடக்கூடாது.

- பொன்.குமார்