இது உழைப்பவர்களின் காலம்!

மக்களாட்சியை நோக்கி அணிவகுப்போம்!

புரட்சி தொடர்கிறது!

தில்லி வாழ்மக்களே,

 நாங்கள் மக்களாட்சி இயக்கத்தின் வேட்பாளர்கள் ஆவோம்.

 நாளுக்கு நாள் உழைப்பாளிகள் நாம் மேலும் ஏழைகளாகி வருகிறோம், நம்முடைய வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. நமது நாட்டிற்கு உணவை உற்பத்தி செய்யும் உழவர்கள் பசியோடு உறங்க வேண்டியிருக்கிறது. ஊசியிலிருந்து, ஆகாய விமானம் வரை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுடைய நிலைமைகள் மிகவும் மோசமானதாக இருக்கின்றன. நம்முடைய உழைப்பால் பயனடைந்த விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வச் செழிப்பு கொண்ட முதலாளிகள், உலக அளவில் இருக்கும் பணக்கார முதலாளிகளோடு போட்டிபோட்டு வருகின்றனர். அவர்கள் நம்முடைய உழைப்பைச் சுரண்டி, உழவர்களுடைய நிலத்தை அபகரித்து, மக்களுடைய சேமிப்புகளோடு ஊகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 சுரண்டல்காரர்களுடைய கட்சிகள் மக்கள் பெயரால் ஆட்சி நடத்துக் கொண்டு, அதே நேரத்தில் அவர்களுக்கு நிதியளிக்கும் முதலாளிகளுடைய நலன்களை கராராகப் பாதுகாத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை வாக்காளர்கள் மீது திணிக்கிறார்கள். அவர்கள் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக கருதுகிறார்கள்.

பொருளாதாரமும், அரசியல் அமைப்பும் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பு முழுவதுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். சுரண்டல்காரர்களுடைய ஆட்சியை மாற்றி மக்களாட்சியை நிறுவ வேண்டியத் தேவை இருக்கிறது.

நவீன சனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில், அரசியல் அதிகாரத்தை மீண்டும் திருத்தியமைக்க வேண்டிய மறுமலர்ச்சி நமக்கு அவசியமாகும். மக்கள் தங்களிடையிலிருந்து நல்லவர்களை முன்வைக்கவும், அவர்களைத் தேர்ந்தெடுக்கவும் கூடிய ஒரு அமைப்பை நாம் நிறுவ வேண்டியுள்ளது. சட்டங்களை உருவாக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுடைய வேலைப் பற்றி வாக்காளர்களிடம் முறையாக கணக்கை ஒப்படைக்கக் கூடியவர்களாகவும், எந்த நேரத்திலும் வாக்காளர்களால் திருப்பியழைக்கப்படக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த எல்லா உரிமைகளையும் மக்கள் செயல்படுத்துவதை உறுதி செய்ய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் குழுக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்க வேண்டும்.

நாட்டிலுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது - அது மக்களாட்சி, மக்களாட்சி!

பின்வருவனவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் நாங்கள்  உறுதியாக இருக்கிறோம் :

  • உணவும், அத்தியாவசிய பண்டங்களும் கட்டுப்படியான விலைகளில் கிடைப்பதை உறுதி செய்திட ஒரு பொது வினியாக அமைப்பு முறையை நிறுவ வேண்டும்.
  • மின்சாரம் பரிவர்த்தனை செய்யும் டாட்டா, ரிலையன்சு நிறுவனங்களை எவ்வித இழப்பீடும் வழங்காமல் தேசியமயமாக்கு
  • தண்ணீர் வழங்குதல் மற்றும் பிற அத்தியாவசிய பொதுச் சேவைகள் தனியார்மயப்படுத்துவதை நிறுத்து
  • எல்லா குடியிருப்புப் பகுதிகளையும் முறைப்படுத்தி, வசிப்பவர்கள் அனைவருக்கும் தேவையான எல்லா வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்
  • எல்லா குடிமக்களுக்கும் தரமான பொது சுகாதார மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்
  • குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ 15.000 க்கு உத்திரவாதம். ஒப்பந்தத் தொழிலாளர்களை நீக்குதல்
  • தொழிலாளர்கள் மதிப்போடு வாழ, எல்லா தொழிலாளர்களுக்கும் உறுதியான ஓய்வூதியம். விதி விலக்கின்றி, எல்லா தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுதல்
  • மகளிருக்கு உத்திரவாதமான பாதுகாப்பு
  • பாதுகாப்பான இடத்தைக் கொடுப்பதன் மூலம் சிறு கடை வியாபாரிகள், ஆடோ ஓட்டுனர்கள் ஆகியோர் மீதுள்ள ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுதல்.
  • “பொதுத் தேவை” என்ற பெயரில் கிராமப்புற நிலங்களை வன்முறையால் கையகப்படுத்துவதை நிறுத்து
  • உத்திரவாதமான தரமான கல்வியோடு, குடிநீர், கழிப்பறைகள், நூலகம், விளையாட்டு திடல், மனமகிழ் மன்றம் போன்ற உள்கட்டுமான வசதிகளோடு கூடிய அரசாங்க பள்ளிகளை ஒவ்வொரு மக்கள் வசிக்கும் பகுதியிலும் நிறுவு.
  • இளைஞர்களுடைய உடல்வளத்தையும், மனவளத்தையும் உறுதி செய்ய விளையாட்டு, கலை மற்றும் மனமகிழ் மன்றங்களை நிறுவு
  • வகுப்புவாத வன்முறையாலும், அரசு பயங்கவாதத்தாலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவான நீதி வழங்கு, குற்றவாளிகளைக் கடுமையாக தண்டித்திடு
  • 21 ஆம் நூற்றாண்டிற்கு பொறுத்தமானதாக இந்தியாவிற்கு ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க, ஒரு புதிய அரசியல் சட்ட நிர்ணய அவையைத் தேர்ந்தெடு

இந்தியாவின் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு – மக்களாட்சி, மக்களாட்சி

ஒடுக்குமுறைக்கும் அதர்மத்திற்கும் ஒரே தீர்வு – மக்களாட்சி, மக்களாட்சி

நாட்டை நடத்துவதை நம்முடைய கைகளில் எடுத்துக் கொள்வோம்

மக்கள் விரும்பும் மக்களாட்சியை நிறைவேற்றுவோம்

புரட்சியின் இந்த அறைகூவல் ஒரு பலமான சக்தியாகியுள்ளது

கையொப்பமிட்டுள்ளவர்கள் –

பிர்ஜு நாயக், ஓம் பிரகாஷ் குப்தா, தர்மேந்திர குமார் வர்மா, லோகேஷ் குமார் மற்றும் சந்தோஷ் குமார்

 மேற்கண்ட திட்டத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட அமைப்புகள் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கின்றன : இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி, சோசலிஸ்டு யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு), ஆல் இந்தியா ஒர்கர்ஸ் கவுன்சில், தில்லி ஷிரமிக் சங்கம், அமைதிக்கும் சனநாயகத்திற்குமான குழு – மணிப்பூர், முற்போக்கு மகளிர் சங்கம், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், இந்திய இளைஞர் ஒற்றுமை அவை

Pin It