தொல்காப்பியம் முதலெழுத்துக்கள் முப்பது என்றும், சார்பெழுத்துக்கள் மூன்று என்றும் வரையறை செய்கிறது. ‘மெய்யோ டியையினும் உயிரியல் திரியா’ என்று உயிர்மெய் எழுத்துக்களுக்கு அளவு மட்டும் கூறி அவற்றின் எண்ணிக்கையை உய்த்துணர வைக்கிறது. எனவே உயிர் 12 மெய் 18 சார்பு 3 உயிர்மெய் 216 என்ற வகையில் 249 எழுத்து வடிவங்களைத் தொல்காப்பியம் சுட்டி நிற்கிறது.


இக்காலத்தில் சார்பெழுத்துக்களில் ஒன்றான ஆய்தம் மட்டும் எழுத்தாகக் கொள்ளப்பட்டுத் தமிழ் எழுத்துக்கள் 247 எண்ணிக்கையினவாகும். எனவே ஆங்கிலம் முதலான மொழிகளைப்போல அல்லாமல் தமிழ் மிகுதியான எண்ணிக்கை கொண்டிருப்பது கணிப்பொறிக் காலத்திற்கு ஏற்றதன்று என்று வழக்காடித் தமிழ் எழுத்துக்களைச் சீரமைக்க வேண்டுமென்று எழுதியும் பேசியும் வருகின்றனர்.


சப்பான் தட்டச்சுப் பொறியில் 2863 எழுத்து வடிவங்கள் உள்ளமையும் தமிழ்த் தட்டச்சில் 66 எழுத்து வடிவங்களே உள்ளமையும் இங்குச் சுட்டத்தக்கது.


முதன்முதலில் 1930இல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் திரு. முருகப்பா ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டு வாசகர் கருத்தை வரவேற்றார்.

அன்றிலிருந்து இன்றுவரை எழுத்துச் சீர்திருத்த முயற்சியில் ஏற்பட்டுள்ள முதன்மைக் கட்டங்களாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.


1933 திசம்பர் 23, 24 நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழன்பர் மாநாட்டில் 15ஆவது தீர்மானமாக எழுத்துச் சீர்திருத்தத் தீர்மானம் நிறைவேறியது.


1933இல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் திரு. சு.சி. சுப்பையா ‘சிங்கப்பூர் முன்னேற்றம்’ இதழில் தொடர் கட்டுரை எழுதினார்.


1935 குடியரசு இதழில் பெரியார் எழுத்து என்று இப்போது கூறப்படும் திருந்திய வரிவடிவத்தைப் புகுத்தித் தொடர்ந்து குடியரசிலும் பின்னர் விடுதலையிலும் பயன்படுத்தினர். (அய், அவ், ணா, றா, னா, ணை, லை, ளை, னை, ணொ, றொ, னொ, ணோ, றோ, னோ).

1941 சனவரி 18, 19 நாள்களில் மதுரையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கிய மாநாட்டில்’ எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


1948 பிப்ரவரி 14, 15 நாள்களில் சென்னையில் நடைபெற்ற ‘அகிலத் தமிழர் மாநாட்டில்’ எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டது.

1950இல் திரு. அவினாசிலிங்கம் கல்வியமைச்சராக இருந்தபொழுது எழுத்துச் சீர்திருத்தக் குழுவை அமைத்தார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் நடந்த ஒவ்வொரு மாநாட்டிலும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றன.


1975 பிப்ரவரித் திங்களில் தமிழகப் புலவர் குழு உயிர்மெய் உகர ஊகாரம் உட்பட எழுத்துச் சீர்திருத்த ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றியது. (இப்பொழுது தமிழகப் புலவர் குழு சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. குழு உறுப்பினர்களில் எழுத்துச் சீரமைப்பை ஆதரிப்பவர்களும் உளர்).


திமுக தனது 1977ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கை யில் அறிஞர் கருத்தறிந்து எல்லோரும் ஏற்கும் வகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாக உறுதியளித்தது.


1978-79இல் பெரியார் நூற்றாண்டு விழாவை யட்டித் தமிழக அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரிவடிவத்தில் அய் அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.


1983இல் சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்றது. 1984 தைத் திங்கள் முதல் செயற்படுத்தியது.


இத்தகைய எழுத்துச் சீர்திருத்த முயற்சிகளின் விளைவாகப் பரிந்துரைக்கப்பட்ட வடிவ மாற்றங்கள் பல இருப்பினும் தமிழக அரசு மேலே குறித்தபடி பெரியாரின் நூற்றாண்டு விழாவையட்டி முதற்கண் 15 மாற்றங்களை ஏற்றது. பின்னர், எதிர்ப்புக் கிளம்பியதால் ஆணையிட்ட ஆறு திங்களுக்குள்ளாகவே அதனை 13 ஆகக் குறைத்துக் கொண்டது. அதனால் ஐ, ஒள மாறாது பிழைத்தன. அதன் பின்னரும் சீர்திருத்த முயற்சிகள் தலைதூக்கவே செய்தன.


1) உயிர்மெய்க்குப் பதிலாக ஆங்கிலம் போல மெய் உயிர் சேர்த்து எழுதுதல் (ம்அக்அன்-மகன்)

2) மெய்க்குப் புள்ளி வைக்காமல் அகர உயிர்மெய் வரிசைக்கு ஏதேனும் சேர்த்தல் (ம அ க அ ன)

3) இகர ஈகார ஒட்டுக் குறிகளை வெட்டித் தனியாக இடல் (   ,   )

4) உகர ஊகார உயிர்மெய்களை உடைத்து எழுத் தோடு பக்கக் குறி அல்லது ஒட்டுக்குறி சேர்த்தல். (      )

5) எகர ஏகார எழுத்துக்களுக்கு உயிர்மெய்க்குறி முன்னே வராமல் பின்னே வருமாறு அமைத்தல். (கª க«)

6) ஒகர ஓகார உயிர்மெய்களுக்கு மூன்று வடிவம் இல்லாமல் இரண்டாகச் செய்தல். எழுத்தின் வலப்பக்கம் ஏதேனும் அமைத்தல்.

7) ஐகார ஒளகார நிரலை எடுத்தெறிதல். ஒளகார

வரிசையில் மூன்றெழுத்துக்குப் பதிலாக இரண்டெழுத்து ஆக்குதல்.

8) உயிர் நெடில்களுக்குக் குறிலோடு கால் வாங்குதல். (அ, அ£, இ, இ£, உ, உ£, எ, எ£, ஒ, ஒ£)

9) உயிர் வரிசை எழுத்துக்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு அகரத்தை மட்டும் மூல எழுத்தாக வைத்துக்கொண்டு அதற்கு உயிர் மெய்க்கான குறியீடு களைச் சேர்த்தல். (அ, அ£, அ|, அ|, அ§, அ§, அ , அ , அ0, அ0 , அய், அவ்)

10) உயிர்மெய்க்கான குறியீடுகளை வரையறுத்துக் கொண்டு அவற்றையே உயிராகப் பயன்படுத்துதல்.

11) குறியீட்டுப் பரிந்துரைகள்

அ இ உ எ ஒ ஃ            -           6

க முதல் ன வரை         -           18

கு சு டு ணு து நு பு மு யு ரு

லு வு ழு ளு று னு        -           16

கூ சூ டூ பூ மூ யூ கு வூ ழு ளூ    -           10

« ª £ ¬ -           4

-           3

மொத்தம்              57

12) அ அ£ இ இ£ உ உ£ எ எ£ ஐ ஒ ஒ£ ஒற   -           6

க முதல் ன வரை         -           18

உயிர்க்குறியீடுகள்

£   ª   கு

எ « ¬    ரு        -           11

மெய்ப்புள்ளி   -           1

ஆய்தம்            -           1

மொத்தம்           37


மெய்யெழுத்துக்களுக்கு மேலாக வைக்கப்படும் புள்ளி வடிவைச் சுழியாக மாற்றி அவ்வெழுத்தின் மேலேயே சற்றுத் தள்ளி அமைத்து 17 குறியீடுகளை நீக்கியுள்ள நிலை களை மேலுள்ள குறியீட்டுப் பரிந்துரைகளில் காணலாம்.

இத்தகைய குறியீடுகளை ஏற்றுக் கொண்டால் ஏற்படும் எழுத்து மாற்றங்களைக் கீழே காணலாம்.

ம உ ர உ க அ ன        -           முருகன்

வ அ ந த ஆ ன           -           வந்தான்

அல  லய         -           இல்லை

அட| க்கட|      -           அடிக்கடி

அ. ர§  -           ஒரு

ச அ அ ட இ    -           சாடி

ச எ எ ட இ      -           சேடி

எ£ட§  -           ஏடு

த அ ம இ ழ     -           தமிழ்

அ£க§ம்           -           ஆகும்

அட்ன  ற§       -           என்று

அ ண மய ய ல ய        -           உண்மையிலேயே

ந றாண்ட கள க்க        -           நூறாண்டுகளுக்கு

கடெ§  -           கெடு

கடே§  -           கேடு

க  ட§   -           கோடு

அ£ட§ -           ஆடு

அ£ண்ட§         -           ஆண்டு

அ0 ட§            -           ஓடு

அ ட§  -           ஈடு

அ ட§  -           ஏடு

பிழய்   -           பிழை

வாழய் -           வாழை

சேலய் -           சேலை


முனைவர் வா.செ. குழந்தைசாமி தமிழில் உள்ள 247 ஒலி எழுத்துக்களுக்கு 33 முதல் 39 குறியீடுகளே போதும் என்ற கருத்தை முதற்கண் வலியுறுத்தினார்.


உயிர் எழுத்துக்கள்

அஆ....ஒ         -           11

உயிர்மெய் எழுத்துக்கள்         -           18

உயிர்க் குறியீடுகள்

-           8

ஆய்தம் ஃ        -           1

மெய்க்குறியீடு (  .  )   -           1

மொத்தம்         39

அவரே பின்னும் உயிர் நெடிலின் வடிவங்களை அ£, இ£, உ£, எ£, ஒ£ என்று கொண்டால் 33 குறியீடுகளே போதும் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கிறார்.


எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பலரால் சொல்லப் பட்ட கருத்துக்களே மேலே உள்ளவை.


உயிர்மெய் எழுத்துக்களை மெய் உயிர் என்று பிரித்தெழுதும் நிலையை மேற்கொண்டால் ஒவ்வொரு உயிர்மெய்க்கும் இரண்டு வடிவங்களை எழுத வேண்டி வரும். இதனால் இடப்பெருக்கம் மிகுதியாவதோடு மெய்யையும் உயிரையும் இரண்டிரண்டாக இணைத்து எழுத வேண்டி வரும். இல்லையேல் எழுத்துக்கூட்டிப் படிப்பதில் இடர்ப்பாடுகள் நேரும்.


காலந்தோறும் தமிழின் வரி வடிவம் மாறி வந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. அச்சுப் பொறிகள் வந்த பின்பே எழுத்து வடிவங்களின் அமைப்பில் ஒரு நிலைப்பாடு தோன்றியது. இந்த நிலைப்பாட்டைக் கட்டிக் காக்காமல் மனம் போன படியெல்லாம் திருத்த முற்படுவது அறிவுடைமையாகாது.


அகரத்தை மட்டும் மூல எழுத்தாக வைத்துக் கொண்டு அதற்குக் குறியீடுகளைச் சேர்த்து வழங்க முற்பட்டால் பண்டைக் கல்வெட்டுக்களை இன்று நாம் படிக்கப், படும்பாட்டை வருங்கால நம் வழியினர் படுவர்.


எழுத்துத் திருத்தம் வேண்டுவோர் ஒன்றை அறவே மறந்துவிட்டனர். என்னதான் கணிப்பொறி முதலான கருவித்தொகுதிகள் வந்தாலும் கையால் எழுதும் நிலை இருக்கவே செய்யும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இந்த அடிப்படையில் எழுத்துச் சீரமைப்பை அணுகுவது தான் நடுநிலையானதாக அமையும்.


பெரியாரின் எழுத்து மாற்றங்கள் எனப்படும் 13 எழுத்துக்கள் எழுதப்பட்ட நிலையை உற்று நோக்கினால் இந்த உண்மை புலப்படும்.

ணா, றா, னா, ணை, லை, ளை, னை ணொ, றொ, னொ, ணோ, றோ, னோ என்று எழுதுவது எளிதானதென்பதோடு மட்டுமன்றி இவ்வெழுத்துக்களின் ‘நிகழ் தகவால்’ இவ்வாறு எழுத நேரிட்டது என்பதையும் உணரவேண்டும். இவ்வெழுத்துக்களை எழுதுமுறையில் எழுந்ததோர் இடர்ப்பாட்டை நீக்கவே இத்தகைய மாற்றத்தை மேற்கொண்டனர்.


பாக்கு என்பதை அடிக்கடி எழுத வேண்டி யிருந்ததால் ‘பாசூ’ என்று கூட்டியெழுதும் வழக்கம் அண்மைக் காலம் வரை இருந்ததை உணர்ந்தால் இதற்கு விடை எளிதாகிவிடும். எனவே உயிர்மெய் ஆகார வரிசைக் குறியீடான காலைச் சேர்த்து (£) கா, பா என்று பிற எழுத்துக்களையெல்லாம் எழுதி வந்தவர்கள் ணா, றா, னா என்று மூன்றுக்கு மட்டும் எழுதாமல் ணா றா னா என்று எழுதிய நுட்பம் புலப்படும்.


இவ்வாறு உயிர்மெய்க் குறியீடுகளைப் பிரித் தெழுதும் முறை கல்வெட்டுக்களில் காணப்பட்ட ஒன்றுதான். இருப்பினும் இம்மாற்றங்களால் அச்சடிப்பில் கூடுதல் இடம் தேவைப்படுவதோடு சில குழப்பங்களும் நேரும். பிரித்தெழுதிய நிலையிலிருந்தே சேர்த்தெழுதும் வளர்ச்சிப் போக்கு நிகழ்ந்திருக்க வேண்டும்.


¬ - இந்த இரட்டைக் கொம்பு முன் இரண்டு கொம்பாக ªª என்று எழுதப்பட்டதையும் இங்குக் கருத வேண்டும். ªணெ, ªனெ, ªலெ - ணை, னை, லை ஆகிப் பின் தெளிவு கருதித்தான் இந்த ஐகாரக் குறியீடு ணை னை லை ளை என மேலே துதிக்கை போல வளைக்கப்பட்டது. ணை, னை என வரும் சுழி மிகையால் தடுமாற்றம் ஏற்படும் என்ற தெளிவே இதற்குக் காரணம் என்று முனைவர் வ.சுப. மாணிக்கனார் குறிப்பிடுகின்றார்.


ஐ, ஒள வை நீக்கி அய், அவ் வடிவ மாற்றத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு பின்னர் அவ்வாணையை நீக்கிக்கொண்டது.                      (தொடரும்)

Pin It