தானா  :           எங்க, ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்.

தீனா    :           என்னப்பா ஒன்னுந் தெரியாதது போல பேசற. பெரிய மாநாட்ட முடிச்சிட்டு வந்திருக்கேன். என்னா கூட்டம். நீதான் பாக்கக் குடுத்து வைக்கல.

தானா  :           ஆமாமாம். பெரிய மாநாடு. தமிழன கொன்னுட்டுத் தமிழுக்கு மாநாடு. செம்மொழி மாநாடு. செம்மொழிக்கு என்ன செய்யப் போறீங்க.

தீனா    :           என்ன அப்பிடி கேட்டுட்ட. சிந்துவெளி நாகரிகம் திராவிடருடையதுன்னு முடிவுசெஞ்சிட்டோம். அங்கிருந்து தான் தமிழங்க தெக்க வந்தாங்கன்னுகூடப் பேசினாங்க.

தானா  :           அதானே கேட்டேன். சிந்துவெளியில எங்கப்பா திராவிடன் வந்தான்? தமிழன் தெலுங்கன் கன்னடன் மலையாளி கலந் தவந்தான் திராவிடன்னு சொல்லிக்கிட்டி ருந்தீங்க. இப்ப சிந்துவெளி வரையிலும் போயிடுச்சா?

தீனா    :           பூம்புகார தோண்டப்போறம். குமரிக் கண்டத்தத் தோண்டப் போறம். இது போதாதா?

தானா  :           இதையெல்லாம் தோண்டப்போறது எதுக்கு? பணத்துக்கா? இதெல்லாம் பழசுன்னா சிந்துவெளி இதுக்குப் பின்னாடி தானே வந்திருக்கணும்.

தீனா    :           இந்தியான்னா ஆரிய திராவிடப் போராட்டந்தான். நீ ஏன் கொழப்புற.

தானா  :           ஆரியம் திராவிடம் இல்ல; ஆரியம் தமிழம்தான். திராவிடமுன்னா அரை ஆரியம். தமிழ தமிழுன்னு சொல்லத் தெரி யாதவன் திராவிடன்னான். இப்பத்தான் புரியுது தமிழோட ஆரியங்கலந்ததுதான் திராவிடமுன்னு.

தீனா    :           நாமெல்லாம் ஒன்னுதானே. எதுக்குத் தனித்தனியா பிரிச்சிப் பேசுற.

தானா  :           நீ தமிழனா? நீ பேசறத பாத்தா அப்படி தெரியலையே.

தீனா    :           நானுந் தமிழன்தான். முந்நூறு நானூறு ஆண்டா நாங்க இங்கதான் இருக்கிறோம். தமிழத் தவிர வேற ஒன்னுந் தெரியாது. என்னப் போயி ஐயப்படுறியே.

தானா  :           அப்ப ஓந் தாய்மொழி என்னா? தெலுங்கா?

தீனா    :           நாமெல்லாம் ஒன்னுதானே. நான் நீன்னு பேசுற.

தானா  :           நான் நீ இல்லை. நான் தமிழன். நீ தெலுங்கன். உனக்குன்னு ஒரு மொழி இருக்குது. ஒன் வேலைய நீ பாரு, என் வேலைய நான் பாக்குறன்.

Pin It