இந்தியக் குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரின் லால்சௌக் பகுதியில் தேசியக் கொடியேற்றுவோம் என்ற பாரதிய சனதா கட்சி அறிவித்தது. ஜனவரி 12ம் தேதி பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவினர் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீ நகருக்கு யாத்திரை மேற்கொள்வார்கள் என்றும், அதன் முடிவில் குடியரசு தினத்தன்று லால்சௌக்கில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்கள் என்றும் பா.ஜ.க. முன்னதாக அறிவித்திருந்தது.

இத்திட்டத்தை அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லால்சௌக்கில் தேசியக் கொடியேற்றும் திட்டத்தை பா.ஜ.க. ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போது இங்கு அமைதியை நிலைநாட்டும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர அதை சீர்குலைக்கும் எதையும் செய்யக் கூடாது என ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார். இந்தியாவின் ஒற்றுமையை காக்க வேண்டும் என்றால் காஷ்மீரில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. அதுதான் இன்றைய நிலைமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவத்தையடுத்து அங்குள்ள நிலைமையை ஆராய மத்திய அரசு பார்வையாளர்கள் சிலரை அனுப்பியுள்ளது. பத்திரிகையாளர் படோங்கர், ராதா குமார், எம்.எம்.அன்சாரி உள்பட ஐந்து பேர் காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளுக்குச் சென்று அம் மக்களின் குறைகளை அறிந்து வருகின்றனர். தற்போது இந்தக் குழுவினர் ஜம்முவில் தங்கியுள்ளனர்.

இதுகுறித்து பார்வையாளர் குழுவின் தலைவர் படோங்கர் நிருபர்களிடம் கூறும்போது நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்ற இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு என்று "இந்து இந்திய' வெறியோடு பேசுகிறார். இவர்களிடம் எப்படி நாம் நீதி, உண்மையை எதிர்பார்க்க முடியும். பாரதிய ஜனதா கட்சியை லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்க வேண்டும். காஷ்மீர் வன்முறை குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும், பா.ஜ.வின். தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று பா.ஜ.க.வின் தலைவர் போல் பேசுகிறார்கள் இந்தக் குழுவினர்.

காஷ்மீர் மக்கள் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இந்த மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என ஆவல் கொண்டுள்ளனர். எனவே இவர்கள் இந்தியாவிற்கு அடிமையாக இருப்பார்கள் என்று பகல் கனவு காண்கிறார்கள். இந்திய அரசு அனுப்பியுள்ள கைக்கூலிகள்.

இவர்கள் பொய்யான செய்திகளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளைச் சொல்லிக் கொண்டு போகலாம். இவர்களுக்கும் பா.ஜ.க.விற்கும் பதில் அளிக்கும் வகையில்,

காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றி, அதன் மூலம் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு பா.ஜ.கவினர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காஷ்மீர் (மாநில) முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது குடியரசு தினத்தன்று, மாநிலத்தில் நடக்கும் அரசு விழாக்களில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும். அப்படியிருக்கும்போது, பா.ஜ.வினர் ஊர்வலமாக வந்து லால் சவுக் பகுதியில் கொடியேற்ற உள்ளதாகக் கூறுவது தேவையற்றது. கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்த மாநிலம். தற்போது அமைதிக்கு திரும்பியுள்ளது.

பா.ஜ.வினரின் இந்தச் செயலால், காஷ்மீரில் மீண்டும் வன்முறை தூண்டப்பட்டு, அமைதி சீர்குலையும் நிலை ஏற்படும். எனவே, பா.ஜ.வினர் தனிப்பட்ட முறையில் தேசியக் கொடி ஏற்றுவதை கைவிட வேண்டும். லால் சவுக் பகுதியில் பா.ஜ.வினர் கொடியேற்றுவதற்கு தற்போது என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது? மீறி, கொடியேற்றி அதனால் ""காஷ்மீர் மக்களின் பகையை மேலும் மேலும் ஏன் வளர்த்துக் கொள்ள வேண்டும்?''

1991ல் முரளி மனோகர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப்பட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உமர் அப்துல்லாவை பா.ஜ.க.வை அரசு முறைப்படி நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார். ""உமர் லால் சௌக் இந்தியாவில் இல்லையா?'' என எதிர் கேள்வி கேட்கிறார்கள் பா.ஜ.க.வினர். ஏன் உமர் அப்துல்லா, லால் சௌக்கிற்கு வந்து கொடி ஏற்றக் கூடாது என்று சொல்கிறார் என்றால், லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் போன்றவர்களின் உருவ பொம்மைகளை எரித்துள்ளனர். அதனால் யாரும் லால் சௌக் பகுதிக்கு செல்வதில்லை. ""யாருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையோ அவர்கள் மட்டும்தான் அங்கு செல்வார்கள். அதைப் பற்றி தெரிந்தும், தெரியாதவர் மாதிரி தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் மன்மோகனும், சோனியாவும். அதனால் தான் இன்று அப்துல்லா இவ்வாறு பேசுவதை காதில் கேட்டு பின்னும் அமைதியாக இருப்பதற்குக் காரணம். யாருக்குவெட்கம், மானம், சூடு, சொரணை (சொந்த தேசம்) இல்லையோ அவர்கள் தான் லால் சௌக்கில் கொடி ஏற்றுவார்கள்.

வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத இந்தியாவின் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறும்போது காஷ்மீரில் பா.ஜ.வினர் கொடியேற்றுவது வன்முறையைத் தூண்டுவதற்காக அல்ல. மாறாக, காஷ்மீர் இந்தியாவில் ஒரு பகுதி என்பதை உணர்த்துவதற்காகத்தான். வரும் 12ம் தேதி கோல்கட்டாவிலிருந்து பா.ஜ.வினர் யாத்திரை துவங்கி பல்வேறு மாநிலங்கள் வழியாக காஷ்மீர் செல்கின்றனர். இந்த யாத்திரையின் நோக்கம், வன்முறையை தூண்டுவதல்ல. இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துவதற்காகவே நடக்கிறது.

இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இல்லாத காஷ்மீரை காப்பதும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் காப்போம் என்று வெறித்தனமாக கூச்சல் போடுவதும் காஷ்மீர் மக்களுக்கு அன்னியமான சொற்களே என்பதை இந்தியாவை கட்டி காக்கும் கட்சிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா) இவர்களின் ரகுபதி ராகவ பசனை பாட்டுகள் காஷ்மீர் மக்களுக்கு ஒப்பாரியாகத்தான் கேட்கும். இந்திய ஒற்றுமை பேசும் பகல் கனவு களவாளிகளுக்கு ஒரு வரலாற்றுச் செய்தியை நாம் சொல்ல முடியும். 15 ஆண்டுகளுக்கு முன் அசாமில் இதே குடியரசு தினத்தில் ஆளுநர் கொடி ஏற்றுவதற்கு முன் அசாமின் தேசிய பாடல் பாடப்பட்டது. இதற்கு காவிக் கொடி காலிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்குப் பதில் அளித்துப் பேசிய ஆளுநர் அசாம் தேசம் எப்போதும் ""இந்தியப் பண்பாடு இந்திய தேசிய கீதம், அனைத்தும் இந்தி மொழி'' அவர்களுக்கு அன்னியமானது என்று கூறினார்.

இந்திய வெறியர்கள் காஷ்மீரில் நடத்தும் வன்முறை, அத்துமீறல் அனைத்துக்கும் இந்தியர், இந்தியா என்ற வன்முறை சொல்லாடல்கள் காரணம் என்பதை புரிந்து கொண்டு காஷ்மீர் மக்களின் விடுதலையைக் காப்பது, ஒவ்வொரு தனித் தேச விடுதலை இயக்கங்களின் கடமை இந்திய தேசியத்தின் மூவர்ணக் கொடிகள் இந்தியாவில் எங்கும் பறக்க அனுமதிக்கக் கூடாது என்ற முழக்கத்தை முன் வைப்போம். விடுதலைக் காற்றை ஒடுக்குண்ட தேச முழுவதும் நிரப்புவோம்.