2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்ந்த வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலை மறக்க முடியாத சம்பவமாக அமைந்து விட்டது.

இந்த வன்முறை வெறி யாட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான குற்றவாளிகள் தப்பி விட்டனர். பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடந்து வருகிறது.

குஜராத் மாநிலத் தலைநகர் அஹ்மதாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களின்போது தப்பிப் பிழைத்த முஸ்லிம்கள் காவல் துறையினரிடத்தில் புகார் அளித்து அபயம் தேடியபோது, அப்புகார்களைப் பதிவு செய்யாதது மட்டுமில்லாமல், காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த முஸ்லிம்களை காவல் துறையே வன்முறையாளர்களிடம் காட்டிக் கொடுத்தது.

ஒரு சில நியாயமான காவல் துறை அதிகாரிகளின் நேர்மையான நடவடிக் கையாலும், அழுத்தத்தாலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில்தான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் ஒன்றான வீராம்கம் என்ற இடத்திற்கு அருகேயுள்ள ஜோரா வார்பீர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இம்ரான்பட், ஜம்முபட், ஹைதர் பட் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பான விசா ரணை அஹ்மதாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் 7 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட் டனர். ஆனால் இதிலிருந்து 5 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர்.

ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 12-07-2011 அன்று தீர்ப்ப ளித்த நீதிபதி டி.பி. பட்டேல், குற்றம் சாட்டப்பட்டிருந்த போபா பார்வாட், பாசுஜி ரான்சோஜி ஆகிய இருவருக்கு ஆயுள் தண் டனையும், விதல் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்ட னையையும் விதித்து உத்தரவிட்டார்.

இவர்களைத் தவிர, வகேலா கேலா, முலா கேலா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் தண்டனையும், மேரா கேலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண் டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கிலிருந்து 4 பேர் விடுவிக்கப்பட்டுள் ளனர். இது தொடர்பான இன்னும் இரண்டு வழக் குகள் நீதிமன்றத்தில் நிலு வையில் இருப்பது குறிப் பிடத்தக்கது.

ஒன்பது ஆண்டுகளுக் குப் பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக் குச் சமம் என்கிற நீதியி யல் வார்த்தையையும் தாண்டி நீதித்துறையின் மீது ஒரு சிறிய நம்பிக் கையை ஏற்படுத்தியிருக் கிறது.

இன்னும் நரோடா பாட் டியா, குல்பர்க் சொûஸ ட்டி, பெஸ்ட்பேக்கர் போன்ற கலவர வழக்கு கள் மிகவும் முக்கியத்து வம் வாய்ந்த வழக்குகள். இங்கெல்லாம் கொத்துக் கொத்தாய் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இருந்தா லும், இந்தப் பகுதிகளில் நடைபெற்றபடுகொலைச் சம்பவங்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும, அவரது அமைச்சரவை சகாக்களும், பாஜக கட்சியின் புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்களை புலனாய்வுக் குழு குஜராத் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளது.

இந்த வழக்குகளை தாமதப்படுத்தாமல் - குற்றவாளிகளை உடனே தண்டிக்கும் வகையில் விசாரணையை நீதிமன்றங்கள் வேகப்படுத்த வேண்டும். இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நீதிமன்றங்களில் மட்டும்தான் இருக்கிறது என்பதை நீதித்துறை உணர்ந்து கொள்ள வேண்டும்.

- அபு