குஜராத் மாநிலம் போர் பந்தரில் பிறந்து இந்து - முஸ்லிம் ஒற்றுமையை மையப்படுத்தி தேச விடுதலைப் போராட்டத்தில் வெற்றி கண்டு குஜராத் திற்கு பெருமை சேர்த்தவர் மகாத்மா காந்தி.

பதவியைப் பிடிப்பதற்காக இந்து - முஸ் லிம் கலவரத்தை தூண்டி அதன் மூலமாக முதல்வர் பதவியில் அமர்ந்து குஜராத்திற்கு சிறுமை சேர்த்தவர் நரேந்திர மோடி.

2002 ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற் பட்டு கரசேவகர்கள் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்துத்துவா வெறியர்கள் மதவெறியைத் தூண்டி குஜராத் மாநிலம் முழுவதையும் மதக்கலவர பூமியாக மாற்றினர்.

அதற்கு ஆலோசனைகளையும், திட்டங் களையும் வழங்கியது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களையும் இந்துத் துவா வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட வைத்தவர்தான் இந்த அயோக்கிய மோடி.

இதனை ஊடகங்கள் பெரிய அளவில் வெளிப்படுத்தியுள்ளன. நடுநிலையாளர்க ளும், மனித உரிமை ஆர்வலர்களும் மோடி அரசின் நய வஞ்சகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினர்.

உச்சகட்டமாக தெஹல்கா பத்திரிகை இந்துத்துவா வெறியர்களின் வாக்குமூலங் களின் மூலம் குஜராத் கலவரங்களின் கதா நாயகர்கள் யார் என்பதை அடையாளம் காட்டியது.

குஜராத் கலவரங்களின் நிஜம் சுட்ட காரணத்தால்தான் வெளிநாடுகளில் என்னு டைய முகத்தை காட்ட முடியாத அளவிற்கு அவமானமாக இருக்கிறது என்று இந்துத் துவா ஆதரவாளரான வாஜ்பாய் பத்திரிகை களில் புலம்பினார்.

குஜராத் கலவரங்களுக்கு காரணகர்த்தா யார் என்பது நாட்டு மக்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன் றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு மட்டும் தெரியவில்லையாம். அதனால் நரேந்திர மோடிக்கும், அவருடைய கூட்டாளி களுக்கும் கலவர வழக்கில் தொடர்பில்லை என்று அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு பிரச் சினை ஏற்படும்போதெல்லாம் ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸýம், காவிக் கூட்டமும் ரகசிய உடன்படிக்கைகள் செய்து கொள் ளும். அவை நடைபெறும்போதெல்லாம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படும்.

இப்படித்தான் பாபர் மஸ்ஜித் இடத்தில் செங்கல் பூஜை நடத்தப்பட்டது. இப்படித்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாற்றமாக இந்துத்துவ வெறியர்களால் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. தற்போது மோடிக்கு எதிராக ஆதாரமில்லை என்று கூறி புனித நீராட்டு நடத்தப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு கரசேவைக்கு ஆட்களை தயார்படுத்தியமைக்காக மோடியை முதல் வர் பதவி வேட்பாளராக்கியது சங்பரிவார்.

2002ம் ஆண்டு நடந்த குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைகளுக்காக மோடிக்கு பிரதமர் பதவி வழங்க சங்பரிவாரங்கள் நாயைப் போன்று நாக்கை தொங்கவிட்டு அலைகின்றன.

குஜராத் மாநிலம் மோடியின் ஆட்சியில் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று ஊடகங்கள் மூலம் பறைசாற்றி மோடியின் இமேஜை மாற்ற முயன்றாலும் மக்கள் மோடியை மன்னிக்க இன்னும் முன் வரவில்லை.

அதனால்தான் பாரதீய ஜனதாவின் கூட் டணி கட்சிகள் தங்கள் மாநில தேர்தல் பிரச்சாரங்களுக்கு மோடி வரக் கூடாது என்று முதல் கட்டளை போட்டுத்தான் கூட் டணி வைக்கின்றன.

யதார்த்த நிலைமை இவ்வாறிருப்பதால் தான் சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை வைத்து படம் காட்டி மோடியை பிரதமர் நாற் காலியில் உட்கார வைத்து விடலாம் என்று பார்ப்பன பத்திரிகைகள் செயலில் இறங்கி யுள்ளன.

பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்து கொண்டு நடத்திய, "இந்தியா ஒளிர்கிறது' என்கிற பிரச்சார படமே மக்களிடம் பலிக்க வில்லை. மோடிக்கு நல்லவன் முகமூடி அணி விப்பதா?

இறுதியாக, வாஜ்பாய் 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தோல்விக்கு குஜராத் கலவரம்தான் காரணம் என்று சொன்னார். அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியா மல் காட்டுக் கத்தல் கத்தி அவருடைய வாயை இந்துத்துவா வெறியர்கள் மூடினர்.

எதிர்வரும் பாராளுமன்றதேர்தலின் முடிவுக்கு பிறகு தன்னுடைய தோல்விக்கும் குஜராத் கலவரமே காரணம் என்று மோடி சொல்வான் அப்போது இந்த இந்துத்துவா வெறியர்கள் என்ன சொல்கிறார்கள் என் பதை பொறுத்திருந்து பார்ப்போம்!