“ஓடிப் போய் விடுங்கள் இல்லையென்றால் சுட்டு விடுவேன்''

காவல்துறை என்றால் சர்வாதிகார நாட்டில் அதிகார வர்க்கத்தின் அல்சேஷன் என்றும், ஜனநாயக நாட்டில் மக்கள் காவலர் என்றும் சொல்வார்கள். தமிழ்நாட்டு காவலர்கள் சமீப காலமாக மக்கள் பிரச்சினையில் நடந்து கொள்ளும் முறை ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு சர்வாதிகாரத்தின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்வ தாகவே இருக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி விண்ணப் பங்களுக்காக அறவழியில் போராட்டம் நடத்தியவர் கள் மீது துணை கண்கா ணிப்பாளர் சந்தானப் பாண்டியன் நடத்திய காட்டு மிராண்டித் தாக்கு தல் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யது. தற்போது உயரதிகாரி களின் விசாரணையை சந் திக்க முடியாமல் சந்தான பாண்டியன் விடுமுறையில் சென்று விட்டார்.

அந்த சூடு ஆறுவதற்குள் சென்னையில் காவல்துறை அதிகாரியின் கொலை மிரட் டல் பேச்சின் எதிரொலியாக காவல் நிலை யம் நள்ளிரவில் முற்றுகையிடப்பட்டது என்ற செய்தி அறிந்து சென்னை பாரிமுனை பகுதியிலுள்ள பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு விரைந்தோம். அங்கே ஆவே சத்துடன் கோஷமிட்டுக் கொண்டிருந்த இந் திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளான இஸ்மாயில், புஹாரி ஆகியோரை தனியே அழைத்து என்ன பிரச்சினை என்றோம்.

“சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் உமா சங்கர் என்பவருக்கு சொந்த மான வீட்டில் புஹாரி என்பவரும், அவரு டைய சகோதரி குடும்பத்தினரும் 1964 ஆம் ஆண்டிலிருந்து தங்கி இருக்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் நோய் வாய்ப்பட்டு புஹாரி இறந்து விட்டார். சில நாட்களில் அவரது இன்னொரு நெருங்கிய உறவினரும் மரணமடைந்து விட்டதால் புஹாரியின் சகோதரி மகனான உமரை மட்டும் வீட்டில் விட்டு விட்டு அனைவரும் சொந்த ஊரான கீழக்கரைக்கு சென்று விட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த உமரிடம் உடனடியாக வீட்டை காலி செய்து தருமாறு வீட்டின் உரிமையாளர் உமா சங்கர் மிரட்டியுள்ளார். ஆனால் தனக்கு ஆறு மாத காலம் அவகாசம் தரு மாறு உரிமையாளரிடம் கேட்டி ருக்கிறார் உமர்.

இந்நிலையில், திடீரென கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி இரவு 8 மணியளவில் அங்கு வந்த எக்ஸ்பிளனேடு போலீசார் உமர் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து வீட்டில் இருந்த பணியாளர் துரையையும், அவருடைய நண்பர் ரமேஷையும் பலவந் தமாக வீட்டை விட்டு வெளியேற்றி வீட் டிற்கு பூட்டும் போட்டனர்.

பின்னர் அவ்விருவரையும் காவல் நிலை யத்திற்கு அழைத்துச் செல்ல தரதரவென பிடித்து இழுத்து வந்து ஆட்டோவில் ஏற்றிய போது, தனக்கும் இந்த வீட்டிற்கும் சம்மந்தம் கிடையாது. நண்பரைப் பார்ப்பதற்காக வந் தேன் என்று ரமேஷ் கூற... அவரை அங்கேயே விட்டு விட்ட போலீஸ் துரையை மட்டும் காவல் நிலையத்திற்கு தூக்கிச் சென்றது.

காவல் நிலையத்தில் காத்திருந்த இன்ஸ் பெக்டர் செல்லப்பா, “உடனடியாக ராத்திரி யோட ராத்திரியா வீட்டை காலி பண்ணி விட்டு ஓடிவிடு. போகலைன்னா குடித்து விட்டு வீட்டில் சீட்டு விளையாடியதாக கேஸ் போடுவேன். பெண்டிங்ல இருக்கிற எல்லா கேசையும் உன் மேல போடுவேன். ஸ்டேஷ னிலிருந்து வீட்டுக்குப் போக முடியாது. நேரா ஜெயிலுக்குத்தான் போகனும். உடன டியாக வீட்டை காலி செய்து வீடு. வண்டி யெல்லாம் நான் அரெஞ்ச் பண்ணித் தர் றேன்னு...'' மிரட்டியிருக்கிறார்.

இதனைக் கேள்விப்பட்டு ஸ்டேஷனுக்கு வந்த நாங்கள் இன்ஸ்பெக்டர் செல்லப்பா விடம், “இந்தப் பிரச்சினையில் ஒரு சார்பாக நடந்து கொண்டு வீட்டிலிருப்பவரை பலவந்தமாக வெளியேற்றி வீட்டிற்கு பூட்டும் போடுவது நியாயமான நடவடிக்கையா? என்று கேட்டோம்.

அதற்கு அவர், “நாங்க அப் படித்தான் செய்வோம்! நீங் கள் இந்த விஷயத்துல தலை யிடாதீங்க. இல்லைன்னா புழ லுக்கு அனுப்பிடுவேன் என்று எங்களையும் மிரட்டும் வகையில் பேசினார்.

இன்ஸ்பெக்டரிடம் மேற் கொண்டு பேசுவதில் பல னில்லை. என்பதால் அசிஸ் டெண்ட் கமிஷ்ன ரிடம் பேசிக் கொள்வோம் என்று ஸ்டே ஷனை விட்டு கிளம்பியபோது அசிஸ் டெண்ட் கமிஷ்னர் முரளி எதிரில் வந்தார்.

இன்ஸ்பெக்டர் சட்டத்துக்கு புறம்பாக வீட்டைப் பூட்டியது மட்டுமல்லாமல் கேட்க வந்தவர் களையும் மரியாதைக் குறைவாக பேசுகிறார் என்று அவரிடம் புகாராகக் கூறினோம்.

நாங்கள் பேசி முடிப்பதற்குள் முழு வேகத்தில் எகிற ஆரம்பித்த ஏ.சி. முரளி, “அந்த சொத்தப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? தேவையில்லாம இதில் தலையி டாதீங்க. எஸ்.டி.பி.ஐ.யை ஒழிச்சு கட்டுன மாதிரி உங்களையும் ஒழிச்சுடுவேன்...'' என்று சவுண்ட் விட்டார்.

“எஸ்.டி.பி.ஐ நல்லாத்தானே இருக்கு. நீங்க ஒழிச்சிட்டேன்னு சொல்றீங்க...'' என்று கேட்டதற்கு “உயிர் மேலே ஆசை இருந்தா இந்த இடத்தை விட்டு ஓடிப்போ யிடுங்கள். இல்லைன்னா ஓட விட்டு சுட்டுடுவேன்...'' என்று சொல் லியபடியே வண்டியில் ஏறிப் போய் விட்டார்.

இந்த தகவலை கேட்டதும் அந்த இரவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஸ்டே ஷன் முன் கூடி விட்டார்கள். நடந்த சம்பவத்திற்கு சம்பந்தப் பட்ட காவல்துறை அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என் பதற்காக ஸ்டேஷனை முற்றுகையிட்டுள்ளோம்...'' என நடந்த சம்பவத்தை நம்மிடம் விளக்கினர் புஹாரியும், இஸ்மாயிலும்!

நேரம் ஆக ஆக ஸ்டேஷன் முன்னால் கூட்டமும் கோஷச் சத் தமும் கூடிக் கொண்டே போனது.

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!

கொலை மிரட்டல் விடுத்த

உதவி கமிஷனர் முரளியை

வன்மையாக கண்டிக்கிறோம்!

ஒழிக! ஒழிக!

காவல்துறை அராஜகம் ஒழிக!

மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!

ஐஎன்டிஜே நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேள்!

என்ற கோஷங்கள் இரவு நேர நிசப்தத்தில் அந்தப் பகுதியையே அதிர வைத்தது. நிலைமை மோச மாவதை உணர்ந்த கமிஷ்னர் ஆபிஸ் உயரதிகாரிகள், “நடந்த விஷயங்களை சிட்டி கமிஷ்னர் கவனத்திற்கு கொண்டு சென்றுள் ளோம். நாளை கமிஷனரை வந்து சந்தியுங்கள். இப்போது போரா ட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்...'' என்று ஐஎன் டிஜே நிர்வாகிகளான புஹாரி மற்றும் இஸ்மாயிலிடத்தில் கேட்டுக் கொண்டதையடுத்து முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு அனைவரும் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.

வட சென்னைப் பகுதியெங் கும் ஏ.சி. முரளியைக் கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் ஒட் டப்பட்டுள்ளன. நாம் போஸ்டரை புகைப்படம் எடுக்கும் சம யத்தில் லோக்கல் உளவுத்துறை காவலர் ஒருவர் போஸ்டர் வாசகங்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

மக்களின் நண்பன் என்ற மனப்போக்கு மருந்துக்குக் கூட காவல்துறையினரிடத்தில் இல்லை! பொது மக்களின் சேவகர்களாக இருக்க வேண்டிய காவல்துறை சர்வ அதிகாரங்க ளையும் பெற்றவர்களாக மக் களை எதிர்கொள்வது மக்க ளாட்சி தத்துவத்திற்கு எதிரா னது என்பதை காவல்துறைக்கு யார் சொல்லி புரியவைப்பது?

முதல்வர் ஜெயலலிதா பதிவி யேற்றவுடனே “தமிழகத்திலிருந்த ரவுடிகள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி விட்டார்கள்'' என்றார். அவர் கள் ஆந்திராவிற்கு ஓடவில்லை தமிழகத்தில்தான் இருக்கிறார்கள் போலீஸôர் வடிவில் என்று எண்ணுமளவிற்குத்தான் தமிழக போலீஸôரின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

- அபு சுபஹான்