ஒருபுறம் ராணுவத்தினரால் நிகழ்த்தப்படும் அரச பயங்கரவாதம்; மறுபுறம் அவ்வப்போது நடைபெறும் குண்டு வெடிப்புகள், இரண்டுக்கும் மத்தியில் அல்லாடுகிறது காஷ்மீர் மக்களின் வாழ்க்கை. 

ஸ்ரீநகரில் உள்ள பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடிந்த நிலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் அஹ்லே ஹதீஸ் ஜமாஅத்தின் தலைவர் மவ்லவி சவுக்கத் அஹ்மத் ஷா பலத்த காயமடைந்தார். அவரை மக்கள் விரைவாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல, வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த மசூதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் வைக்கப்படிருந்த குண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் சிவா முரளி சகாய், மவ்லவி ஷாவை குறி வைத்தே இக்குண்டு வெடிப்பு நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மவ்லவி சவுக்கத் அஹ்மத் ஷா, சுமார் ஒரு லட்சம் பேர் உறுப்பினராக உள்ள, 600 பள்ளிவாயில் களை நிர்வாகம் செய்து வரும் அஹ்லே ஹதீஸ் அமைப்பின் தலைவராகவும், காஷ்மீர் விடுதலையில் ஆர்வ முடையவராகவும் காஷ்மீர் விடுத லையை முன்னெடுத்துச் செல்லும் காஷ்மீர் விடுதலை முன்னணியுடன் இணக்கமான உற விலும் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

மசூதிக்கு அருகில், அதுவும் பெரும் கூட்டம் கலந்து கொள்ளும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை முடிந்ததும் குண்டு வைத்து ஒரு முக்கிய மதகுரு கொள்ளப்படுகிறார் எனில், பள்ளிவாயில்களை குறி வைத்து ஏற்கனவே குண்டு வைத்த இந்துத்துவாக்களின் கைவரிசை இதிலும் நீண்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது.

அரசு உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோடு, கோயில்களுக்கு விஷேச நாட்களில் பாதுகாப்பளிப்பதுபோல் பள்ளிவாசலுக்கு வெளிக்கிழமை மற்றும் விஷேச நாட்களில் பாதுகாப்பளிக்க அரசு முன் வர வேண்டும் எனக் கோருகின்றனர் காஷ்மீர் மக்கள்.

- முகவை அப்பாஸ்

Pin It