பெரம்பலூர் மாவட்டம் வ. களத்தூர் கிராமத்தில் உருவெடுத்துள்ள இந்து முஸ்லிம் பிரச்சினை குறித்து மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையில் அக்கறை கொண்ட பேரா. அ.மார்க்ஸ் தலைமையிலான சமூக ஆர்வலர்கள் உண்மை அறியும் குழுவாக செயல்பட்டு வ. களத்தூருக்கு நேரில் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கண்டறிந்த உண்மைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். இனி சமூக ஒற்றுமை குலையும் வகையிலான விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்ற அக்கறையுடன் சமூக ஒற்றுமைக்கு வழி சமைக் கும் பரிந்துரைகளை செய்துள்ளதுள்ளனர் இக்குழுவினர்.

உண்மை அறியும் குழுவினர் வெளி யிட்டுள்ள 9 பக்க அறிக்கையை மக்கள் ரிப்போர்ட் இதழ் அச்சுக்குச் செல்லும் தருவாயில் நமக்கு மின்னஞ்சல் செய்திருந்தார் பேரா. அ. மார்க்ஸ்.

அறிக்கையை முழுமையாக வெளி யிட முடியாத நிலையில், அதன் முக்கி யத்துவத்தைக் கருதி இக்குழுவினர் முன் வைத்திருக்கும் பரிந்துரைகளை மட்டுமே இங்கு வெளியிட முடிந்தது.

தமிழகத்தில் தொடர்ந்து சமூக ஒற்றுமைக்காக களமாடி வரும் பேரா. அ. மார்க்ஸ் குழுவினருக்கு மக்கள் ரிப்போர்ட் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

(- ஆர்)

சமூக நல்லிணக்க நோக்கில் கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன் வைக்கிறோம்.

1.    வி.களத்தூர் பிரச்சினைக ளுக்கு மூல காரணமாக உள்ள சர்வே எண் 119/1 இடத்தில் ஒப்பந்தங்களுக்கு விரோதமாகக் கட்டப்பட்ட இந் துக்களின் கோவில் அப்படியே இருக் கலாம் எனவும், மீதியுள்ள காலி இடத் தில் எல்லோருக்கும் பயன்படும்படி யான பேருந்து நிலையம் அமைக்கப் பட வேண்டும் எனவும் முஸ்லிம்கள் கோருவது முற்றிலும் நியாயமானது.

அந்த இடம் வருவாய்த் துறைக்குச் சொந்தமனது என்பதால் நீதிமன்ற வழக்கை திரும்பப் பெறச் செய்து இக் கோரிக்கையை நிறைவேற்ற வேண் டும். வன்முறையாகப் பிரச்சினைக் குரிய இடத்தில் கோவில் ஒன்றைக் கட்டியுள்ள இந்துக்களின் மறுப்பை அரசு ஏற்கக் கூடாது.

2.    ஊர்வலப் பாதை தொடர்பாக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சிலரிடம் மாற்றுக் கருத்துக்கள் உள்ளதை மறந் துவிட இயலாது. ஊர்வலம் தொடர் பான முஸ்லிம்களின் அச்சம் நியாயமாயினும் பாரம்பரியமாக அவ்வழியே ஊர்வலங்கள் சென்று வந்ததையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே காவல் துறையும் வரு வாய்த் துறையும் இணைந்து இரு தரப்பு முக்கியஸ்தர்களும் அடங்கிய ஒரு நிரந்தரக் குழு ஒன்றை அமைத்து மிகவும் முக்கியமான ஊர்வலங்களை மட்டும் கடும் நிபந்தனைகளுடனும், கண்காணிப்புகளுடனும் நடத்த அனு மதிக்க வேண்டும் நடத்தப்படும் ஊர் வலங்கள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

ஊரைச் சுற்றிவிட்டு மீண்டும் திரும்பிக் கோவிலுக்கு வருவதற்குத் தேவையில்லாத திருமண ஊர்வலங் கள் நேரடியாகத் தார்ச்சாலையில் செல்லும்போது வல இடத் திசைப் பிரச்சினை வராது என்பதால் சாமி ஊர் வலங்கள் தவிர்த்த பிற ஊர்வலங்கள் முஸ்லிம் தெருக்கள் வழியாகச் செல் வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

3.    பிப்ரவரி 22 அன்று மேற் கொள்ளப்பட்ட முறையற்ற கைதுகள் தொடர்பாக காவல்துறைக் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறப் புப் பிரிவு ஆய்வாளர் கோபால கிருஷ் ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய் யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.    வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லாம் வழக்கில் சேர்க்கப்பட்டுள் ளதைக் காவல்துறையே ஏற்றுக் கொள்வதால் குற்ற எண் 17/13 என்கிற முதல் தகவல் அறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உண்மையில் சமபவத்துடன் தொடர்புடையவர்கள் தவிர மற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5.    வி. களத்தூர் முஸ்லிம்கள் மத் தியில் கல்வி ஆர்வம் இல்லை என்கிற மாவட்ட ஆட்சியரின் கவலை நியாய மானது. முஸ்லிம்கள் இதைக் கவனத் தில் கொள்ள வேண்டும். வி. களத்தூருக்குப் போக்குவரத்து வசதிகள் அதிகமாக்கப்பட வேண்டும்.

6.    பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிய வி.களத்தூர் ஜமாத் பொருளாளர் அய்னுதீன் என்பவர் பழி வாங்கும் நோக்கில் திருவெறும்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆர்.டி.ஓ ரேவதியின் தலையீட் டால்தான் அவரை மாற்ற நேர்ந்தது என்பதை அதிகாரிகளே ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரது இடமாற் றம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.

அறிக்கையின் முழு விபரத்தை www.amarx.org என்ற இணைய தளத்தில் காணலாம்.

Pin It