இந்த தலைப்பே வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். வன்முறையில் தோய்ந்து, சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுகிற, சட்ட நெறி முறைகளை மதிக்காத பாசிச வெறி பிடித்த சிவசேனா கட்சி மஜ்லிஸ் கட்சிக்குத் தடை கோருவதா என்று!

இந்த கோரிக்கையை வைத்திருக்கும் சிவசேனா, மஜ்லிஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தாலாவது அது முஸ்லிம் விரோதப் போக்குடன் இந்த கருத்தை கூறுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிவசேனா கோரும் தடை என்பது மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும்தான் என்பதால் மஜ்லிஸ் கட்சியைப் பார்த்து சிவசேனா மிரண்டு போயிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது.

சிவசேனாவின் இந்த மிரட்சிக் குக் காரணம், ஆந்திராவைக் கடந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் தடம் பதிக்கிறது அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி என்பதுதான்.

சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் நடந்த மாநகராட்சி தேர்தலில் இக்கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதன் தாக்கம் தான் சிவசேனையின் மிரட்சியில் தெரிகிறது.

கடந்த 26ம் தேதி மஹாராஷ்டி ராவின் சட்டமன்றத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது பேசிய சிவசேனா கட்சியின் எம்.எல்.சி.யான திவாகர் ராட்டே, “எம்.ஐ.எம். கட்சி பிரிட்டீஷ் அரசால் தடை செய்யப்பட்ட கட்சி. இக்கட்சி யின் தலைவர் அசத்துத்தீன் உவைசி மஹாராஷ்டிராவின் ஒளரங்காபாத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறார். அதனால், அந்த கட்சி மஹாராஷ்டிரா முழுவதிலும் தடை செய்யப் பட வேண்டும்...” என பேசியுள்ளார்.

அத்தோடு, “சமீபத்தில் நடந்த நான்டெட் மாநகராட்சித் தேர்தலில் எம்.ஐ.எம். கட்சியுடன் போலியான தேர்தல் உறவை வைத்து களமிறங்கியுள்ளது காங்கிரஸ்...” என்றும் தெரிவித்திருக்கிறார் திவாகர் ராட்டே.

ஒளரங்காபாத்தில் உவைசி நுழையத் தடை என்பதால் அக்கட்சியை மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் தடை செய்ய வேண்டும் என்கிறது சிவசேனா. இப்படிச் சொல்லும் சிவசேனா... கேரளாவில் சில பகுதிகளில் நுழைய பிரவீன் தொகாடியா விற்கு தடை போட்டிருக்கிறது கேரள அரசு. இதை வைத்து கேர ளாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் என்கிற பாசிச கட்சியை அம்

மாநில அரசு தடை செய்ய வேண்டும் எனக் கேட்க தைரியம் இருக்கிறதா சிவசேனாவிற்கு?

எம்.ஐ.எம். கட்சியை பிரிட்டீஷ் அரசு தடை செய்ததாம். அதனால் மஹாராஷ்டிராவில் அக்கட்சியைத் தடை செய்ய வேண்டுமாம். இதன் மூலம் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது சிவசேனா.

எம்.ஐ.எம். கட்சி சுதந்திரப் போராட்டத்தில் தன்னை உட்படுத்திக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க அரசியல் களம் கண்டிருக் கிறது. ஆங்கில அரசுக்கு எதிராக சினத்தெ ழுந்திருக்கிறது. அதனால்தான் பிரிட்டீஷ் அரசு அந்தக் கட்சியை தடை செய்திருக்கிறது என்ற உண்மைதான் அது!

சிவசேனையைப் பார்த்து நாம் கேட்க விரும்புவது... பிரிட்டீஷ் அரசு தடை செய்த ஒரு கட்சியை அதை முன்னுதாரணமாக வைத்து மஹாராஷ்டிரா அரசும் தடை செய்ய வேண்டும் என்று வாதித்தால்... அதற்கு முழு தகுதி படைத்தது இந்தியாவில் பாசிச வேர்களைப் பரப்பி வைத்திருக் கும் சிவசேனாவின் கூட்டாளி யான ஆர்.எஸ்.எஸ்.ûஸத்தான் தடை செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இந்திய அரசின் ஒருமைப் பாட்டிற்கு எதிராக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ய போதுமான காரணங்களும், முகாந்திரமும் இருக்கின்றன. சிவசேனை இந்த கோரிக்கையை வைத்து விட்டு, அதன் பிறகு எம்.ஐ.எம். கட்சிக்கான தடை குறித்து பேசட்டும்.

மஹாராஷ்டிராவில் முதலில் தடை செய்யப்பட வேண்டிய கட்சி சிவசேனாதான். இதற்கு தேர்தல் அங்கீகாரமும் ரத்து செய் யப்பட வேண்டும். இதற்கான காரணங்களும், முகாந்திரமும், ஆதாரங்களும் ஆர்.எஸ்.எஸ். ஸ்ப் போலவே பக்கம் பக்கமாக இருக்கிறது. அதனால் தடை செய்யப்பட வேண்டியது  சிவசேனா  தானே  தவிர  ஜனநாயகக் கூறுகளை   கடைபிடித்து  வரும் எம். ஐ.எம். கட்சி அல்ல! ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.

Pin It