குஜராத் என்கவுண்ட் டர் ஸ்பெஷலிஸ்ட் டி.ஜி. வன்சராவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மும்பையைச் சேர்ந்த இஷ் ரத் ஜஹான், ராஜஸ்தானைச் சேர்ந்த சொராபுத்தீன் ஷேக் உள்ளிட்ட பல அப்பாவி முஸ் லிம்களை போலி என்கவுண் ட்டர் மூலம் போட்டுத் தள்ளி யதால் "சஸ்பெண்ட் உத்த ரவு' பெற்றதோடு, சொராபுத் தீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் விசாரணைக் கைதி யாகி அஹ்மதாபாத் சிறை யில் அடைக்கப்பட்டிருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி இவர்!

முஸ்லிம் விரோதப் போக்கு கொண்ட வன்சரா சிறையில் இருந்தபடியே எழுதிய கவிதைக ளில் முஸ்லிம் எதிர்ப்பை கொட் டியுள்ளார்.

சிறைச்சாலை என்பது கொடூர மனம் படைத்தவரை யும் பண்படுத்தும் இடம். ஆனால் அங்கே சென்ற பின்பும் வன்சராவின் முஸ்லிம் விரோதப் போக்கு குறையவில்லை என் பதை அவரது கவிதைகள் சொல் கின்றன.

வஹ்ஹாபியோ நி அவ்லாதோ நே

நிர்தே தய் நே மாரோ

ச்சக்டி நாகோ ஜிஹாதியோனே

சிந்து பர் பஹ்காவோ

ஜின்னா ச்சே ஏக் மஹா ஜிஹாதி

தேனா கீத் நா காவோ

மசலி நாகோ மவாலியோ நே

சிந்து பர் பஹ்காவோ...

என்று குஜராத்தி மொழியில் வன்சரா கவிதை எழுதியுள்ளார்.

இதன் பொருள் :

வஹ்ஹாபிகளின் (மதப்பற்று மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட முஸ்லிம் கள் வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படு வதுண்டு) குழந்தைகளை இரக்கமில்லா மல் கொல்லுங்கள்.

ஜிஹாதிகளை நசுக்குங்கள்!

ஜின்னா மிகப்பெரிய ஜிஹாதி

அவரது பாடல்களைப் பாடாதீர்கள்!

சமூக விரோதிகளான முஸ்லிம்களை

நசுக்குங்கள்!

சிந்துவுக்கு அப்பால் அவர்களை விரட்டுங்கள்!

வன்சரா ஒரு பயிற்சி எடுத்த ஆர்.எஸ்.எஸ். ஊழியரைவிட கூடுதலான மதவெறி பிடித்தவர் என்பது இப்போது புரிந்திருக் குமே!

இந்த மதவெறியர் தெண்டுல் கர், அன்னா ஹசாரே, உசாமா பின்லேடன், அஜ்மல் கசாப் உள்ளிட்டவர்களைப் பற்றியும் தனது மகன்களான பார்த், அர்ஜூன் பற்றியும் இன்னும் பலரைப் பற்றியும் சுமார் 270 கவிதைகளை எழுதியிருக்கிறார் என அஹ்மதாபாத் சிறை நிர்வா கம் தெரிவிக்கிறது.

எதையாவது எழுதித் தொலையட்டும்! ஆனால் சிறைக்குள் சென்ற பின்பும் முஸ் லிம்களுக்கு எதிரான அவரது சிந்தனையை கூர் தீட்டியிருப் பதை பார்க்கும்போது இவரது பணிக் காலத்தில் எத்தனை முஸ் லிம்களுக்கு இவரால் துயரங்க ளும், தொல்லைகளும் ஏற்பட்டி ருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த வாரம் குஜராத்தி லுள்ள சபர்மதி மத்திய சிறைச் சாலை நிர்வாகம் ஒரு நிகழ்ச் சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் வன்சரா எழுதிய கவிதைகள் வெளியிடப்பட்டுள் ளன.

மதவெறி பிடித்த வன்சரா வின் கவிதைகளை வெளியிட் டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரோ அல்லது வேறு இந்துத்துவா இயக்கங்களைச் சேர்ந்தவரோ அல்ல.. இந்தக் கவிதை நூலை வெளியிட்டது குஜராத்தின் முன்னாள் டி.ஜி.பி. யான எஸ். ஷபீர் காந்த்வா வாலா என்கிற முஸ்லிம்தான்!

2002 கோத்ரா ரயில் எரிப்புக் குப் பின்பு குஜராத் முஸ்லிம்க ளைக் கருவறுத்த நரேந்திர மோடியின் அரசு இயந்திரங்க ளின் கயமைத்தனத்தை கண்டித்து தங்களின் உயர் பதவிகளை கால் செருப்பாக நினைத்து வீசியெ றிந்த முஸ்லிமல்லாத காவல் துறை அதிகாரிகளுக்கு மத்தி யில், பதவி சுகத்திற்காக மோடி யின் கால்களில் கிடந்த வர்தான் காந்த்வாவாலா. இதன் மூலம் டி. ஜி.பி.யாக அந்தஸ்து பெற்றவர்.

“பார்த்தீர்களா! ஒரு முஸ்லிமுக்கு உயர் பதவி அளித்திருக்கிறேன்'' என்று மோடி பீற்றிக் கொள்ள கருவியாக மாறியவர் இந்த காந்த்வா வாலா. இதனால் தான் இவரை வைத்து நூல் வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளனர் சபர்மதி சிறை அதிகாரிகள்.

வன்சராவின் கவிதைத் தொகுப்பை காந்த்வா வாலா வெளியிட்டதும் மகிழ்ந்து போன வன்சரா... "காந்த்வா வாலா அற்புதமான மனிதப் பிறவி!'' எனப் போற்றிப் புகழ்ந்தி ருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி வெளியானவுடன் உடனே தனது ரியாக்ஷனைக் காட்டியி ருக்கிறார் பிரபல சமூக ஆர்வல ரும், குஜராத் கலவரத்தில் பாதிப் புக்குள்ளானவருமான டாக்டர் ஜே.எஸ். பந்துக் வாலா.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது (கந்த்வா வாலாவின் செயல்) ஒட்டு மொத்த குஜராத் முஸ்லிம்களுக் கும் அவமானம். மோடியின் தயவைப் பெறுவதற்காக வன் சரா நடத்திய போலி என்க வுண்ட்டரில் குறைந்தபட்சம் 15 அப்பாவி முஸ்லிம்கள் உயிர் துறந்ததை காந்த்வா வாலா மறந்து விட்டார்.

சொராபுத்தீன் மனைவி கௌசர் பீவி கொல்லப்படுவ தற்கு முன் காவல்துறையினரால் கற்பழிக்கப்பட்டார். இந்நிலை யில் இதுபோன்ற இழி செயல்க ளில் ஈடுபட்ட ஒருவரை பிரபல மான முஸ்லிம் ஒருவர் பகிரங்க மாக பெருமைப்படுத்தியிருப்பது நமக்கு (முஸ்லிம்களுக்கு) ஏற் பட்ட கேவலம்'' என தெரிவித் துள்ள பந்துக் வாலா, "இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை அதிலும் குறிப் பாக குஜராத் முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் உணர்வுப் பூர்வமானவர்கள். முஸ்லிம் பிர முகர்கள் அல்லது பிரபலமான முஸ்லிம்கள் தங்கள் சமூகத்துக்கு தீங்கிழைத்தவர்களுடன் கூடிக் குலாவுவதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதனை அவமானம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அதனால்தான், 2002 கலவரத் தின்போது பெரும் இழப்புகளை போரா முஸ்லிம்கள் சந்தித்தது தெரிந்தும், தாவூதி போரா பிரிவி னரின் தலைவர் மோடியின் தயவை நாடிச் சென்றதை குஜ ராத் முஸ்லிம்கள் கடுமையாக விமர்சித்தனர்.

2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைகள் நடந்து முடிந்த ஓரிரு மாதங்களுக்குள் சூரத் நகரில் பகிரங்கமாக மோடி யைப் பாராட்டினார் தாவூதி போரா தலைவர்.

மோடி நடத்திய சாத்பாவ்னா உண்ணாவிரதத்தின்போது ஒரு போரா முஸ்லிம் பொது மக்கள் மத்தியில் மோடியின் காலில் விழுந்தார்.

போராக்களின் இந்த "ஏற்றுக் கொள்ளுதல்' என்கிற கயமைத்த னத்தைப் பயன்படுத்தி 2002 சம்ப வங்களை முஸ்லிம்கள் இப் போது மறந்து விட்டனர் என்று சொல்லி வருகிறார் மோடி. முஸ்லிம் சமூகத்தைப் பிளவுபடுத்துவ தில் மோடி வெற்றி பெற்று விட் டார் என்றே சொல்ல வேண் டும்...'' என்றும் தனது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

துரோகிகளின் சுய நலத்தால் எதிரிகள் வெற்றி பெறத்தான் செய்வர்.

- ஃபைஸ்

நன்றி : முஸ்லிம் அப்சர்வர்

Pin It