“ஆமாம்! அதிகார பலத்துடன் தான் திணித்திருக்கிறது அரசு. அணு குண்டு தயாரிப்பதற்காக ஆக்கப்பூர்வமான அணு சக்திக்கு இந்தியாவெங்கும் 123 என்று அமெரிக்க ஒப்பந்தம் போடப்பட் டது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த அணு உலை இழப்பீடு சட்டத்தை அமெரிக்கா ஏற்கவில்லை.

அதோடு, அணு குண்டு பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்துப் போடச் சொல்லி இந்தியாவை அமெரிக்கா நிர்பந்தப்படுத்துகி றது. இதற்கு உடன்பட மறுக்கும் இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து போட வேண்டாம் என்று சொல் லுகிற ரஷ்யாவையும், பிரான்சை யும் முதலில் இறக்கி விட்டு, அணு உலையை (இந்தியாவில்) இயங்க விட்டால்... அமெரிக்கா தானாக (தனது கொள்கையை விட்டு) இறங்கி வரும் என்பதற்கான செயல் தந்திரமாக கூடங்குளத்தை திறக்க அவசரப் படுத்தியது மத் திய அரசு.

அதே சமயம், மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ஹிலாரி கிளின்டன், இழப்பீடு மசோதாவில் அமெரிக் காவிற்கு தகுந்தாற்போல் மாற்றம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக் கொள்ளவில்லை என்கிற கோபத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஹிலாரி பேசி விட்டுப்போன கணக்குப்படி, ஜெ. அரசாங்கம் வேண்டுமென்றே கூடங்குளம் போராட்டம் நடக்கட்டும் என்று சுமார் 8 மாதங்கள் அமைதியாக இருந்தது.

மறுபடியும், மத்திய - மாநில அரசுகள் அணு சக்திக்கு ஆதரவு என்பதால், அணு சக்தி அல்லாத மாற்று வழியான காற்றாலை, அனல் மின் நிலையம் மூலம் தமிழகத்தின் மின்சாரத் தேவை யைப் பூர்த்தி செய்ய எல்லாத் திட்டத்தையும் போட்டு விட்ட ஜெயலலிதா அரசாங்கம், கூடங் குளம் மூலமாக தமிழகத்துக்கு மின்சாரம் வரப் போவதில்லை என்பது தெரிந்திருந்தும் மத்திய அரசின் நலனில் நின்று, கூடங் குளம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண் டிருந்த நிலையிலேயே தங்கள் இஷ்டத்திற்கு அமைச்சரவை முடிவு என்று எடுத்து அணு உலையை திறந்திருக்கிறது.

தான் முன்பு எடுத்த அமைச்ச ரவை முடிவை தான் (மீண்டும்) எடுக்கும் அமைச்சரவை முடிவு மூலம் அவமானப்படுத்தி, இழிவுப டுத்தி ரத்து செய்து மறுக்கக் கூடிய ஒரே அரசியல் தலைவி ஜெயலலி தாதான்.

அதோடு இன்னொரு விஷயம், ப்ளாண்டைச் சுற்றி 144 தடை இருக்கு. ப்ளாண்டுக்குள் செல்லும் பணியாளர்களை தடுக்கக் கூடாது என்றெல்லாம் ஒப்பந்தம் போட்டு, உதயகுமாரை அதில் கையெழுத் திட வைத்த அரசாங்கம் 5 கி.மீட் டருக்கு அப்பால் (இடிந்தகரை யில்) நீ எந்தப் போராட்டம் வேண் டுமானாலும் நடத்திக் கொள் என்று சொல்லி விட்டது.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங் கள்! இடிந்தகரையில் இதுவரை யில் உண்ணாவிரதம், போராட் டம் என்ற பெயரில் நடந்தவை அணு உலையை நிறுத்துவதற் கான போராட்டங்கள் அல்ல. இதுவரை நடந்தது அணு உலையை எதிர்க்கக் கூடிய ஆதர வுப் போராட்டங்கள்தான் (நர்ப்ண்க்ஹழ்ண்ற்ஹ் நற்ழ்ன்ஞ்ஞ்ப்ங்ள்).

 

அணு உலை வாசலில் நின்று, முற்றுகையிட்டு ப்ளாண்டுக்குள் ஆட்களைப் போகவிடாமல் தடுத்தது கூடங்குளம் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் தான் உதயகுமார் அல்ல. மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்தியதுதான் உண்மையான அணு உலை எதிர்ப்புப் போராட் டம்.

5 கி.மீ. அப்பால் இருந்து கொண்டு நடத்துவதற்குப் பெயர் ஆதரவுப் போராட்டம் ஆக, எதிர்ப்பை இவர்கள் (உதயகுமார் தரப்பினர்) காட்டவில்லை. எதிர்ப் புக்கு ஆதரவுதான் கொடுத்தார் கள்.

உதயகுமாரின் போராட்டம் தொடக்கத்திலிருந்தே எதிர்ப்புப் போராட்டமல்ல. இடிந்தகரைக்குள்ளேயே எல்லாப் போராட்டத்தையும் சுருக்கியது உதயகுமாருடைய சரியான திட்டமல்ல... மறை மாவட்டப் பேராயர் இவான் அன்பு ரோசும் சரியான திட்டத்தை செயல்படுத்தவில்லை '' என்று நீண்ட விளக்கம் அளித்த மணியி டம்,

நீங்கள் சொல்லுகிற கூடங்கு ளம் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் தொட ருமா? என்றோம்.

“இதற்கு இப்பொழுது பதில் சொல்ல முடியாது. அணு உலை யைப் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதி யில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப் பட்டு நடமாட்டத்தை அரசு கண் காணித்து வருகிறது. அணு சக்தி ஆதரவு சக்திகள் மக்கள் மீது போரை கட்டவிழ்த்து விட்டிருக்கி ன்றன. இதை அறவழியில் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் போராட்ட வியூகங்கள் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது...'' என்றார் மணி கட்அண்ட் ரைட்டாக!

- ஃபைஸல்

Pin It