முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளுக் காவும், முஸ்லிம் கள் பாதிக்கப்பட்டால் குரலெழுப்பவும் தமிழகத்தில் பல முஸ்லிம் அமைப்புகள் சிறிய தும் - பெரியதுமாக இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான அமைப்புகள் முஸ்லிமல்லாத மக்கள் பிரச் சினைகளுக்காகவோ, பொது ப்பிரச்சினைகளுக்காவோ களம் காண்பதில்லை. இத னா லேயே முஸ்லிம்கள் அவர்க ளுடைய பிரச்சினைகளுக்குத் தான் போராடுவார்கள் என் கிற விமர்சனம் ஏனைய சகோ தர அமைப்புகளுக்கு மத்தி யில் இருந்து வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் இட ஒதுக்கீடு போன்ற முஸ்லிம் களின் நலன் சார்ந்த பிரச்சினை களில் தோழமை அமைப்புகள் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் இஸ்லாமிய அமைப் புகள், இஸ்லாமியரல்லாத சகோதர அமைப்பினர் நடத்தும் நியாயமான போராட்டங்களில் கூட கலந்து கொள்வதில்லை.

இத்தகு சூழலில் "இனம், மொழி, மதம், நாடு என்ற பாகு பாடு இல்லாமல் பாதிக்கப்பட் டவர்களுக்காக குரல் கொடுக்கச் சொல்கிறது இஸ்லாம்' என்ற கருத்தியலை முன் வைத்து ஒடுக் கப்படும், அடக்கப்படும், பாதிக் கப்படும் மக்களுக்காக தோழமை அமைப்புகளுடன் இணைந்து களம் கண்டு வரும் இந்திய தவ் ஹீத் ஜமாஅத், இஸ்லாமியரல் லாதவர்களின் நியாயமான போராட்டங்களில் தன்னை முன் னிலைப்படுத்தியும் வருகிறது.

இந்த வகையில், அணு உலை எதிர்ப்பை ஆரம்பம் முதல் மையப்படுத்தி வரும் இந்திய தவ் ஹீத் ஜமாஅத், கடந்த காலங்க ளில் நடந்த அணு உலை எதிர்ப் புக் கூட்டங்களில் பங்கேற்று அணு உலை எதிர்ப்பாளர்க ளுக்கு ஊக்கம் அளித்து வந்திருக் கிறது.

2010ல் 123 அணு சக்தி ஒப்பந் தம் அணு உலை இழப்பீட்டு மசோதாவை எதிர்த்து "அணுக் கதிர் வீச்சு பாதிப்பு எதிர்ப்பு மக் கள் முன்னணி' சார்பில் எழும்பூர் ஜீவஜோதி அசெம்பளி அரங்கத் தில் கருத்தரங்கம் நடந்தது.

அதில் இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கலந்து கொண்டு, நிறைவுரையாற்றிய அதன் தலைவர் எஸ்.எம். பாக்கர்,

“போராளிகள் அரங்கக் கூட்டத்தை நடத்தி மனதில் உள்ளதை கொட்டி விடுவதா? போராடாதவரை வெற்றி கிடைக் காது. போராளிகள் அரங்கக் கூட்டங்களுக்குள் முடங்கி விடக் கூடாது. போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும்...'' என்று போராட்ட வடிவங்களை வீரியப் படுத்தும் வகையில் பேசியிருந் தார்.

2011ம் ஆகஸ்டு மாத இறுதி யில் கூடங்குளம் இடிந்தகரைப் பகுதியில் அணு உலைக்கு எதி ராக நடந்த பிரம்மாண்டமான உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்லாயிரக்க ணக்கான மக்கள் மத்தியில் பேசிய எஸ்.எம். பாக்கர்,

“உண்ணாவிரதம் என்பது இறைவனுக்கு செய்யும் வழிபாடு. அதனை இதுபோன்ற போராட் டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையுடைய வர்கள் நாங்கள். ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்காக நம்மை ஏன் வருத்திக் கொள்ள வேண்டும்? ஆட்சியாளர்களை வருத்தச் செய் யும் போராட்டங்களை முன்னெ டுப்போம் வாருங்கள்!'' என அணு உலை எதிர்ப்புப் போராட்டத் திற்கு ஆதரவைத் திரட்டினார்.

கடந்த 25-11-2011 அன்று சென்னை பத்திரிகையாளர் மன் றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த அணு உலை எதிர்ப்பு கூட் டத்தில் கலந்து கொண்டு, “கல் பாக்கம், கூடங்குளம் அணு உலைகள் மூலம் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்பாக்கம் அணு உலையில் 30 ஆண்டு கால மாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப் புகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.

மின்சாரம் தயாரிக்கத்தான் அணு உலை என்கிறது அரசு. ஆனால் உண்மையில் அணு ஆயு தங்கள் தயாரிக்கத்தான் அணு உலைகள். மக்களுக்கு மின்சாரம் தரத்தான் அணு உலை என்கின்ற னர். மக்கள் உயிரோடு இருந்தால் தான் மின்சாரம் தேவைப்படும்...'' என அணு உலை குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார் எஸ்.எம். பாக்கர்.

இதே போன்று கடந்த 15-03-2012 பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை அலுவலகத்தி லும், 22-03-2012 அன்று மதிமுகவின் தாயகத்திலும் கூடங்குளம் அணு உலை திறக்கப்படுவதை எதிர்த்து அணு உலை எதிர்ப்பு இயக்கம் நடத்திய கருத்தரங்குகளிலும் எஸ்.எம். பாக்கர் உள் ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக 16-03-2012 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அணு உலையின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சா ரத்தை இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார் இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கர்.

- அபு

Pin It