சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குஜராத் முன்னாள் உள்துறை அமைச் சர் அமித்ஷா, அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருப் பது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு - நிறைவேற்றப்பட்டுள்ள அணு உலை இழப்பீடு மசோதாவை பாஜக எதிர்த்து வந்தது. இதனைச் சமாளிக்கும் வகையில், பாஜகவை மசோதாவிற்கு ஆதரவு சக்தியாக மாற்ற நினைத்த மத்திய அரசு, பாஜகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சொராப்தீன் என்கவுண்டர் விவகாரத்தில் நரேந்திர மோடியை சேர்க்காமல் இருந்தால் அணு உலை இழப்பீட்டு மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்போம் என பாஜக தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்ட நிபந்தனையை மத்திய காங்கிரஸ் அரசு ஏற்றுக் கொண்டதாகவும் டெல்லி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த ஒப்பந்த அடிப்படையில்தான் நரேந்திர மோடியை வழக்கில் சேர்க்க வேண்டாம் என மத்திய அரசு சிபிஐக்கு நெருக்குதலைத் தந்ததாகவும் கூறி, நாடாளுமன்ற அவையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும், லாலுவும், முலாயமும் அரசியல் பரபரப்புக்காகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் இந்தப் பிரச்சினையை அரசியல்ரீதியாக கையிலெடுக்கிறார்கள் என்கிற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், அமித்ஷா விடுவிக்கப்பட்டுள்ளதும், மோடி சொராப்தீன் வழக்கில் சேர்க்கப்படாமல் இருப்பதும் - இதற்குப் பின்னணியில் உயர்மட்ட அரசியல் விளையாடியிருப்பதை பகிரங்கப்படுத்துவதாகவே உள்ளது. உயர்மட்ட அரசியல் விளையாடி யிருப்பதை பகிரங்கப்படுத்துவ தாகவே உள்ளது.

ஏனெனில் நரேந்திர மோடியின் வலது கரமாகவும், அவரது அமைச் சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் அமித்ஷா. எனவே மோடிக்குத் தெரியாமல் சொராப்தீன் என்கவுண்டர் சம்பவம் நடந்திருக்க முடியாது.

நரேந்திர மோடியைக் கொல்ல வந்த தீவிரவாதி என்று சொல்லித்தான் சொராப்தீனின் போலி என்கவுண்டரை நியாயப்படுத்தியது குஜராத் காவல்துறை. இன்று வரை பிஜேபி உள்ளிட்ட இந்துத்துவா கும்பல்கள் இதைத்தான் சொல்லி வருகின்றன. ஆக, மோடியின் சிக்னல் இல்லாமல் சொராப்தீன் என்கவுண்டர் நடந்திருக்காது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

நரேந்திர மோடி சொராப்தீன் விஷயத்தில் கைதாவார் என்று பத்திரிகைகள் எல்லாம் எழுதி வந்த நிலையில், மோடிக்கும் சொராப்தீன் வழக்கிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் சிபிஐ நற்சான்று வழங்கியிருப்பது காங்கிரஸ் மீது பலமான சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

"நரேந்திர மோடிக்கு சிபிஐ வழங்கியிருக்கும் நற்சான்றிதழ் குறித்து கருத்துத் தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், மத்திய அரசின் கவனத்துக்கு வராமல் சிபிஐ இந்த சான்றிதழை வழங்கியிருக்க முடியாது. இவ்விவாதத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி சபையில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவோம்'' என எச்சரித்திருக்கிறார்.

அணுசக்தி இழப்பீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு பாஜகவின் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவை இருப்பதே, மோடிக்கு சிபிஐ நன்சான்றிதழ் வழங்கியிருப்பதற்குக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இக்குற்றச்சாட்டுகள் எதற்கும் பதிலளிக்காமல் மௌனம் சாதிக்கிறது மத்திய அரசு. இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. மத்திய அரசா? மதவாத அரசா? என்பதை அதுதான் தெளிவுபடுத்த வேண்டும்.

பூனைக்குட்டி வெளியே

அணு உலை இழப்பீடு மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த பாஜக, இந்த மசோதாவில் சில திருத்தங்களை மட்டும் செய்யுமாறு கூறிவிட்டு, ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் மற்ற கட்சிக் காரர்கள், பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆரம்பம் முதல் மசோதாவை எதிர்த்து வந்த பாஜக திடீரென ஆதரவு தெரிவித்திருப்பது மோடியை கைது செய்யாமல் இருக்க திரை மறைவில் நடந்த அரசியல் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகிறது. அப்படியே சரண்டர் ஆனால் ரகசிய ஒப்பந்தம் உறுதிப்பட்டு விடும் என்று நினைத்த பாஜக, எதிர்ப்புத் தெரிவிப்பதைப் போன்று நடித்து இறுதியில் சில திருத்தங்களைக் செய்தால் ஏற்கிறோம் என்று சொல்ல.. பிரதமர் உடனே அதை ஏற்றுக் கொண்டு ரகசிய ஒப்பந்தம் என்ற பூனைக் குட்டியை வெளியே விட்டிருக்கிறார்.

- ஃபைஸ்

Pin It