முழுமையாக விசாரணை நிறைவுறாத இராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, செய்யாத குற்றத்திற்காக சகோதரர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிர்  மத்திய அரசால்  பறிக்கப்பட இருக்கிறது.

perarivalan_267இது மரண தண்டனை அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில்  தூக்குக் கயிறை தழுவப்போகிறார்கள்.

தமிழர்கள் எந்த ஒரு சமயத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசை தமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் விடுதலையை பெற்றுத்தரக் கூடிய வகையில் சட்டரீதியான போராட்டங்களையும், மக்கள் திரள் போராட்டங்களையும் நாம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதற்குப் பெருமளவிலான நிதி தேவைப்படுகிறது. நிச்சயம் இந்த நிதிச்சுமையை இந்த மூவரின் குடும்பத்தினரால் தாங்க முடியாது.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் உறவுகளே! இந்த நிரபராதிகளைக் காக்க நிதியுதவி அளியுங்கள்! 21  ஆண்டுகளாக சிறையில் வாடும் தனது பிள்ளையைக் காக்கக் கோரி நம்மிடம் முறையிடும் அற்புதம் அம்மாளின் துயருக்கு ஒரு முடிவு காண உதவுங்கள்! 21 ஆண்டுகளாக அவர் சிந்திக் கொண்டிருக்கும் கண்ணீருக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மனமுவந்து நிதி  தாருங்கள்!!

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண்: 603801511669

கணக்கு வைத்திருப்பவர் பெயர்: இரமேஷ்
வங்கிக் கிளை: அண்ணா சாலை, சென்னை

Donate options

நிதியுதவி அளித்தபின்பு அதுகுறித்த விவரங்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

நீங்கள் அளிக்கும் நிதி கீழ்க்காணும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

1. மரண தண்டனைக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரச்சாரம் செய்தல்

2. துண்டறிக்கைகள், சிறுவெளியீடுகள் கொண்டு வருதல்.

3. ஒத்த கருத்துள்ள இயக்கங்களின் பணிகளுக்கு உதவுதல்.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்

கௌரவ தலைவர் - நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

கௌரவ ஆலோசனைக் குழு - பேரா.ஜக்மோகன் சிங், நீதியரசர்கள் அஜித்சிங் பெய்ன்ஸ், எச்.சுரேஷ்

செயற்குழு - பேரா.பால் நியூமன், மனித உரிமையாளர் கண.குறிஞ்சி உள்ளிட்டவர்கள்.

18.8.2011 வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு - 2000 இருசக்கர வாகனங்களில் சென்னை கண்ணகி சிலையிலிருந்து வேலூர் சிறை வரை பரப்புரை பயணம்.

20.8.2011 சனிக்கிழமை காலை 10 மணிக்கு - சென்னை பாரிமுனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலட்சம் தமிழர்களாய் குடும்பத்துடன் ஒன்றுகூடல்.

- மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்

Pin It