ஒத்த நோய்க் குறிகளை உருவாக்கக் கூடிய மருந் தாற்றலைக் கொண்டு நோயை சரிசெய்தல் அல்லது 'ஒத்தது ஒத்ததைக் குணமாக்கும்’ என்பதே ஓமியோ பதியின் அடிப்படைத் தத்துவம் ஆகும். மனிதன் என்பவன் கை, கால், தலை, முகம் போன்ற உறுப்புகள் இணைந்த கூடு எனக் கூறினால் அது தவறு. அந்தக் கூட்டிற்குள் உயிர் என்ற ஒரு ஆற்றல் இருந்தால்தான் அது மனிதன்.

அதாவது உறுப்புகளின் சேர்க்கையை மனிதன் என்று கூறிவிட முடியாது. அதனுள்ளே உள்ள சக்திதான், ஆற்றல்தான் மனிதனை முழுமையடையச் செய்கிறது. அதைத்தான் உயிராற்றல் என்கிறார் ஓமியோபதியின் தந்தை சாமுவேல் ஹனிமன். மனித உடலை இயக்கும் ஆற்றல் இது. நோயை ஏற்கும் திறனும், நோயை எதிர்க்கும் திறனும் அதனிடம் உண்டு. உருவம் இல்லாத, கண்ணுக்குப் புலப்படாத அந்த ஆற்றல்தான் உயிராற்றல் ஆகும்.

ஒவ்வொரு பொருளும் அதற்கே உரிய தனித் தன்மையோடு இருக்கிறது. அத்தன்மையை மையமாக வைத்துதான் ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு நிகழ் வும், ஒவ்வொரு உயிரும் அது அதுவாகவே இருக் கின்றன. எனவே அந்த மையத்தில் மாற்றம் ஏற் படாமல் ஒருபோதும் அந்த உயிரியில் மாற்றம் ஏற் படாது. ஒன்றன் மையப் பாதிப்புதான் புறச்சுற்றில் வெளிப்படுமேயொழிய புறச்சுற்றில் தனித்து எந்த மாற்றமும் நிகழாது.

அகமுரண்பாடே முதன்மையான முரண்பாடு. எனவே உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பே பின் நோயாக வெளியுறுப்புகளில் வெளிப்படுகிறது. இதனை, மருத்துவர் கென்ட், ““symptoms are the outward expression of the internal sickness” என்று கூறுகிறார். அதாவது, உயிராற்றல் பாதிக்கப்பட்டுள்ளதன் வெளிப் பாடே, வெளியுறுப்புகளில் ஏற்படும் நோய் பாதிப் பாகும். மேலும், ““Every individual is susceptible to certain things; is susceptible to sickness and equally susceptible to cure” என்றும் கூறுகிறார். அதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளை ஏற்கும் திறன் உண்டு. அது நோய்க்கும் நலனுக்கும் சமமாகப் பொருந்தும் என்பதாகும்.

கிருமிக் கொள்கையை உலகுக்கு எடுத்துரைத்தவர் லூயி பாஸ்டர் என்பவராவார். நோய்க்கான காரணம் நுண்ணுயிரி கள் தான் என்றும் அவற்றை அழிப்பதுதான் நோயிலிருந்து மனிதனைக் காக்கும் ஒரே வழி என்றும் அறிவித்தார். அதே மனிதர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, நோய்க்கான காரணம் நுண்ணுயிரிகள் மட்டுமல்ல அதற்கு முன்னே அவனுள், அவன் மையத்தில் மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாகவே கிருமிகள் அவனைத் தாக்குகின்றது என்பதைத் தெளிவாக உலகுக்கு எடுத்துரைத்தார். கிருமிகள் மட்டுமே நோய்க்குக் காரணமல்ல; நோய் எதிர்ப்புத் திறனுள்ள உடல் அமைப்பும் (மையம்) தான் காரணம் என்பதை ஆய்வு முடிவுகளின் மூலம் வெளிப்படுத்தினார்.

எனவே, எவ்வளவுதான் வீரியம் மிக்க மருந்து களைக் கொண்டு கிருமிகளை அழித்தாலும், அவ னுடைய நோய் எதிர்புத்திறனுள்ள உடல் அமைப்பு, அதாவது, அவனுடைய மையம் (உயிராற்றல்) சரியா காத வரையில் அவன் புதிது புதிதான நோய்க்கு ஆட்பட்டுக் கொண்டேதான் இருப்பான். ஆக, கிருமி களைக் கொல்லும் மருந்துகளைக் கொண்டு மட்டுமே நோய்களை முழுமையாகக் குணமாக்க இயலாது என்பது திண்ணம். இந்தக் கிருமிக் கொல்லும் மருந்து கள் (antibiotic) மனிதர்களுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ள நோய் எதிர்ப்பாற்றலைப் பாழடித்து மேலும் பல புதிய நோய்கள் தோன்றுவதற்குக் காரண மாக அமைந்துவிடுகின்றன.

இந்நிலையில் கிருமிக் கொல்லும் மருந்துகளை அளிப்பதைவிட, உடலின் மையத்தை, உயிராற்றலை, சரிசெய்யும் மருந்தே மனிதன் எல்லாப் பிணிகளிலிருந்தும் விடுபடத் தேவைப் படுகிறது என்பதைத் தெளிவாக நாம்  புரிந்து கொள்ள வேண்டும். உயிராற்றலுக்கு மருந்தளிப்பதன் மூலம், நோய் ஏற்புத்திறனுள்ள உடல் அமைப்பு, நோய் எதிர்க்கும் திறனுள்ள உடல் அமைப்பாகப் பலப்படுகிறது. இத்தகைய சிறப்பான செயலைத்தான் ஓமியோபதி எனும் ஒல்லியல் மருந்துகள் செய்கின்றன.

அதவாவது, இவை மனிதனுடைய உயிராற்றல் நிலையில் வினைபுரிந்து `சுயநலமாக்கல் ((self healing process)’ செயலைத் தூண்டிவிடுவதால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் அதன் வேர் வரை அழிக்கப்பட்டுக் உடல் குணமாக்கப்படுவதுடன் அவ் உடலின் இயக்கமும் சீரடைகிறது.

தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் இம் மருத்துவத்தின் மருந்துகள் ஆற்றல் வடிவில் இருப்பதால், ஆற்றல் வடிவிலுள்ள நோயை, அதாவது, பாதிப்படைந்த உயிராற்றலை ((Immunity power) நேரடியாகத் தொடமுடிகிறது; நோயைக் குணமாக்க முடிகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு மனிதன் எவ்வகையான நோய்க்கு ஆட்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் பாதிக்கப்பட்ட உயிராற்றலின் வெளிப்பாடே.

ஒரு ஆற்றலைச் சரி செய்ய வேண்டுமெனில், அது இன்னொரு ஆற்றலால்தான் முடியும். எனவே மருந்தின் பருப்பொருளில் இருந்து ஆற்றலை வெளிக் கொணரத்தான் மருந்தை வீரியப்படுத்துதல் என்கிற முறையை ஓமியோபதி மருந்து தயாரிப்பில் கொண்டு வந்தார் சாமூவேல் ஹானிமன் அவர்கள்.

அணு பிளவுபடும்போது எவ்வாறு ஆற்றல் வெளிப்படுகிறதோ அதுபோலவே மருந்தின் பருப்பொருளை ஆல்க ஹாலில் கலந்து குலுக்கக் குலுக்க ஆற்றல் வெளிப்படுகிறது. கரையாத பருப்பொருளாயின் அதைப் பால் சர்க்கரை மாவில் கடையக் கடைய ஆற்றல் வெளிப்படுகிறது. இதைத்தான் வீரியப்படுத்தும் முறை என்கிறோம். ஒல்லியல் மருத்துவத்தில் முதல் சிறப்பம்ச மாகக் கருதப்படுவது இந்த வீரியப்படுத்தும் முறைதான்.

இரண்டாவது சிறப்பம்சம் என்னவெனில் குறைந்த அளவு மருந்து (minimum dose). அதாவது, மிக நுண்ணிய அளவு மருந்துப் பொருளைக் கொடுப் பதுடன், அம் மருந்தின் பருப்பொருள் ((crude substance) என்பதே அதில் இல்லாத அளவுக்கு வீரியப்படுத்தப்பட்டு ஆற்றலாக மாற்றப்பட்டு விடுவதால் பக்க விளைவுகள் என்பதே இல்லாமல் போய் விடுகிறது.

மூன்றாவது சிறப்பம்சம் (single remedy) ஒரே மருந்து என்பதுதான்.

இது சர்க்கரை நோய்க்கான மருந்து, இது தூக்கம் வருவதற்கான மருந்து, இது வயிற்றுப்புண்ணுக்கான மருந்து என்று ஒரு மனிதன் தனக்கு இருக்ககூடிய பல நோய்களுக்கு ஒரே நேரத்தில் பல மருந்துகள் எடுத் துக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஓமியோபதியில் நோய்க்கு மருந்தில்லை, நோயுற்ற மனிதனுக்கே மருந்து என்பதால் அவனுக்குப் பல நோய்கள் இருந்தபோதும் அவனுக்குரிய ஒரு மருந்தில் அத்தனை நோய்களும் குணமாகிறது.

நோய்க்கு மருந்து என்றால் சர்க்கரை வியாதிக்கு ஒரு மருந்து, இரத்த அழுத்தத்திற்கு ஒரு மருந்து, தைராய்டு சுரப்பி வீக்கத்திற்குத் தனி மருந்து எனப் பல மருந்து கள் தேவை. ஆனால், ஓமியோபதியில் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருந்து என்பது அறவே இல்லை. நோயுற்ற மனிதனின் உடல் மையத்திற்கு  (உயிராற்றலுக்கு)தான் மருந்து. மனிதன் எப்போதும் தன்னை அறியாமலேயே, தன் மரபணுவில் உள்ள எண்ணங்களோடு, இப்போதிருக்கும் சுற்றுப்புறச் சூழ் நிலையால் உருவாகும் மாற்றங்களையும் ஒன் றிணைத்து அதற்கேற்ற தனித்தன்மை உடையவ னாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான்.  ஒவ்வொரு மனிதனும் தோற்றத்தில் மட்டுமின்றி பேசும் முறைகளிலும் எண்ணங்களிலும் உணர்வு களிலும் கூட மற்றவரிடமிருந்து மாறுபடுகிறான்.

மேலும் நாம் ஒரு நிகழ்வை எதிர்கொள்ளும் முறையி லும் இந்த உலகத்தை நாம் பார்க்கும் பார்வையிலும் நமது இயல்பான பண்பிலும் நாம் உண்ண விரும்பும் உணவிலும்கூட வேறுபடுகிறோம். அத்தோடு இந் நாள்வரை நாம் அனுபவித்து வந்துள்ள நோய்களிலும் கூட மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறோம். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்க, சர்க்கரை நோயுள்ள 10 நபருக்கும் ஒரே மருந்து என்பது முறையானது அல்லவே! சர்க்கரை நோயுள்ள ராமசாமிக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கும், அதே நோயுள்ள சுப்பிரமணிக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கும். சர்க்கரை நோயுள்ள அனைவருக்குமே ஒரேவித எண்ணப்போக்கு இருக்கும் என்பது சாத் தியப் படாத ஒன்று.

எனவே, இராமசாமியின் தனித் துவம் என்னவென்று கண்டறிந்து அவரின் தனித் துவமான அந்த உடல் மையத்திற்கு ஒரு மருந்தும். சுப்ரமணியின் உடல் மையத்திற்கு ஏற்றாற்போல் தனிமருந்தும் தேவைப்படுகிறது. எனவேதான்  சர்க் கரை நோய் என்ற நோய்க்கு மருந்தில்லை, இராம சாமி என்கிற தனித்துவமான மனிதனின், சுப்பிரமணி என்கிற தனித்துவமான மனிதனின் உடல் மையங் களுக்கே மருந்து என்று ஒல்லியல் மருத்துவம் கூறு கிறது. இதைத்தான் `நோய்க்கு மருந்தில்லை; நோயுற்ற மனிதனுக்கே மருந்து (Homeopathy treats the patients not disease)’ என்கிறோம். அதுபோலவே இராமசாமி யின் எண்ண ஓட்டமும், சுப்பிரமணியின் எண்ண ஓட்டமும் ஒத்திசைவாக இருந்து, இருவரின் தனித் துவமும் ஒரே இருந்தால் இருவருக்கும் ஒரே நோய்தான் வர வேண்டும். என்கிற அவசியமில்லை.

இராமசாமிக்குச் சர்க்கரை நோயும், சுப்பிரமணிக்குப் புற்றுநோயும் வரலாம். ஆனால், இங்கே மருந்து என்பது ஒரே மாதிரியான தனித்துவம் கொண்ட இருவருக்கும், நோய் வேறுபட்டு இருப்பினும் மருந்து ஒன்று தான். எனவேதான், ஒரே மருந்து வெவ்வேறு நோய்களுக்குக் கொடுக்கப்படுவதும், ஒரே நோய்க்கு வெவ்வேறு மருந்து கொடுக்கப்படுவதும் ஆன விந்தை இங்கே நிகழ்கிறது. இதை அறிந்துதான் நவீன மருத்துவத்தின் தந்தையான சர்.

வில்லியம் ஆசுலர் என்பவர்,`நல்ல மருத்துவன் நோயைக் குணப் படுத்துகிறான்; உயர்ந்த மருத்துவன் என்பவன், அந்நோய் பெற்றிருக்கும் மனிதனைக் குணப்படுத்து கிறான் (The good physician treats the disease the great physician treats the patient who has the disease)’’ என்று கூறினார். ஆங்கில மருத்துவத்தின் தந்தையான ஆசுலர், ஓமியோபதி மருத்துவத்தின் தந்தையான ஹானிமனைப் பற்றி கூறுகையில், `மருத்துவ உலகிற்கு ஹானிமனை விட அதிகமாக வேறுயாரும் நன்மை செய்து விடவில்லை’’ என்று கூறுகிறார்.

ஓமியோபதியின் நான்காவது சிறப்பம்சம், ``துயரர் ஆய்வு’’. அதாவது, தனித்துவ மனிதனின் மையத்தை கண்டறியும் ஆய்வு.

ஓமியோபதியில் துயரர் ஆய்வு என்பது ஒரு கலை. அவருடைய கனவு, பொழுதுபோக்கு, சிறு வயது கால கட்டம், சந்தோசத்தில் அவரது வெளிப்பாடு, துயரத்தில் அவரது வெளிப்பாடு, நோயால் அவரின் மனதில் ஏற்பட்ட பாதிப்பு, வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பு, நோயுற்ற தால் எதைச் செய்யமுடியாமல் தவிக்கிறார் என்பது போன்ற பல நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு அவரை முழுமையாக ஆய்வு செய்கிறோம். அதாவது, மற்றவரிடமிருந்து இவரை வேறுபடுத்தியது எது? இவரை இந் நோய்க்கு உரியவராய் மாற்றிய தனித்துவ அம்சம் என்ன? எத்தகைய ஆழமான உணர்ச்சிகளும், உணர்வுகளும், ஏமாற்றங்களும் அவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்தின என்பதைக் கண்டறிகிறோம். ஓமியோபதி மனித உடலை, மனித உள்ளத்தின் வெளிப்பாடாகப் பார்க்கிறது. அதாவது ஒருவருடைய உணர்ச்சிகள், எண்ணங்கள், அச்சங் கள், கருத்துகள், உள்ளக் கிளர்ச்சிகள், மேலும் இவற் றின் எதிர் விளைவான செயல்பாடுகள் இவற்றோடு கூடவே நலம் நாடுவோரின் ஏற்புத் தன்மை உள்ளிட்ட அனைத்தையும் ஓமியோபதி ஆய்வு செய்யும். உள்ளக் கிளர்ச்சிகள் எப்போதும் வெளி மனதால் ((conscious mind) மறைத்து வைக்கப்படுகின்றன.

அத்தகைய நிகழ்வுகளை முழுமையாக வெளிப்படுத்தும் அம்சங்கள் என்னவெனில், அவரை மிகவும் பாதிக்கும் அம்சங்கள், கனவுகள், ஆர்வங்கள், பொழுதுபோக்கு கள், குழந்தைப் பருவ இயல்புகள், ஆசைகள், கற்பனைகள், குறைபாடுகள் ஆகியவையே ஆகும். ஓமியோபதி மருத்துவர் இவை தொடர்பான கேள்விகளை எல்லாம் கேட்பதற்கு இதுவே காரணமாகும்.

ஓமியோபதியில் சொல்லப்படும் முழுமையான அணுகுமுறை என்பது நலம் நாடுவோரின் உடல், உள்ளம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களை இவ் விரண்டுக்கும் அப்பால் சென்று ஆற்றல் மட்டத்தில் ஏற்படும் உணர்ச்சி நிலைகளை வைத்து ஆய்வு செய்வதாகும்.

ஒரு மனிதனை முழுமையாகக் குணப்படுத்த வேண்டுமாயின் இந்த ஒன்றுபட்ட அணுகுமுறை ஒரு கட்டாயமாகும். ஓமியோபதியின் பிரதான நோக்கம் நோயுற்ற உடலுக்கு மட்டுமே மருத்துவம் செய்வதன்று; மாறாக நோய்க்கு அடிப்படையான காரணத்தை நீக்குவதாகும். அதாவது, நோய்க்கு உள்ளாகியுள்ள உயிராற்றலை குணப்படுத்து வதே ஆகும். இது உடல் அளவில் நலத்தை ஏற் படுத்துவது மட்டுமின்றி பாதிப்புக்குள்ளாயிருக்கும் உடல் மற்றும் உள்ளம் இரண்டுக்கும் இடையே ஓர் ஒத்திசைத்த அமைதிச் சமநிலையை உருவாக்குவ தாகும்.

பின்னர் இது உடலுக்குள்ளும் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி விடுகிறது. இவற்றோடு நலம் நாடுவோரின் தூக்கம், பசி, தாகம் ஆகியவற்றிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன அளவில் அச்சம், கவலை, பதற்றம், முதலிய உணர்ச்சி நிலைகளில் மேம்பாடு ஏற்படும். நலம் நாடுவோர் தம் அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் மன அழுத்தங்களை எதிர் கொள்ளும் துணிவு வந்துவிடும்.

அத்தோடு அறிவு, உணர்ச்சி ஆகியவற்றில் இருக்கக்கூடிய பொருந்தா நிலைகளை உணர்ந்து கொள்ளும் விழிப்பு நிலை உருவாக்கிவிடும். இதுபோன்ற விழிப்புணர்ச்சி வாழ் வின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் பார்க்கும் சுதந்தரப் பண்பை வழங்கும். இதுவே உண்மையான நோய் தீர்க்கும் தத்துவமாகும்.

இந்த மிக உயர்ந்த இலக்கினை அடைவதற்கு மனிதனின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிந்து கொள்வது ஓர் ஓமியோபதி மருத்துவருக்கு அவசிய மாகும். இதற்காக அவர் செலவிடும் நேரம் ஆளுக்கு ஆள் மாறுபடும். அதாவது ஒருவர் எந்த அளவுக்குத் தன்னைப் புரிந்து கொண்டு விழிப்போடு இருக்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும். அதாவது முதல் முறை பார்க்கும்போது மட்டும் ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ கூட ஆகலாம். இத்தகைய முழு ஆய்வினை மேற்கொள்வதற்காக, ஓமியோபதி யின் ஐந்தாவது சிறப்பம்சம் (proved on human beings) அனைத்து மருந்துகளும், ஆரோக்கிமான மனம், மற்றும் உடல்நிலை கொண்ட மனிதர்களிடத்தில் கொடுத்து நிரூபணம் செய்யப்பட்டவை ஆகும்.

ஒரு ஓமியோபதி மருந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் மனிதரிடத்தில் அதிக அளவு கொடுக்கும் போது அந்த மருந்துக்குரிய அறிகுறிகள், அதாவது அந்த மருந்து என்னென்ன நோய்களை குணப் படுத்துமோ அந்த நோய்கான அறிகுறிகள் அனைத் தும் அம் மனிதரிடத்தில் உருவாகும். அதே மருந்தை நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களிடம் கொடுத்து, அதே அறிகுறிகள் அனைவரிடமும் தோன்றியதை ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டினார் ஹானிமன். அனைத்து அறிகுறிகளையும் (symptoms) தொகுத்து வைத்துக் கொண்டார்.

அந்த மருந்துக்குரிய தனித்துவமான அறிகுறிகள் இவை எனக் குறித்து வைத்துக் கொண்டார். அந்த அறிகுறிகளுடன் வரும் நோயாளர் களுக்கு அந்த மருந்தைக் கொடுத்தபோது நோய் முற்றிலும் நீங்கியத்தைக் கண்டறிந்தார். அதையும் நூற்றுக்கும் மேற்பட்டோர்களிடம் கொடுத்துப் பார்த்து நிரூபணம் செய்த பின்னரே உலகுக்கு அறிவித்தார். இவ்வாறு ஒவ்வொரு மருந்துகளுமே நல்ல உணர்வு நிலையிலுள்ள மனிதர்களிடம் பலமுறை கொடுத்து நிரூபணம் செய்யப்பட்டவைகளே ஆகும்.

`ஒரு மருந்து எதை உருவாக்குகிறதோ, அதை முழுமையாக போக்கக்கூடிய நீக்கக் கூடிய தன்மை யையும் அதனுள்ளே கொண்டுள்ளது’’ என்பதே ஓமியோபதி மருத்துவம் ஆகும். இதுதான் ஓமியோ பதியின் தத்துவமான, ``ஒத்தது ஒத்ததைக் குணப் படுத்தும்’’ என்பதாகும்.

மேலும், ஓமியோபதியைப் பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் பரவலாக இருந்து வருகிறது. என்ன வென்றால் `ஓமியோபதி மருந்து மெதுவாக வேலை செய்யும்’ என்பதுதான் அது. உழைக்கும் மக்கள் விடிவுக்கான இம்மருத்துவத்தைப் புறக்கணிப்பதற்காக மற்றவர்களால் உருவாக்கப்பட்ட கருத்துதான் இது. அவர்களே ள்கூட ஓமியோபதி இவ்வளவு வேகமாக வேலை செய்கிறது என்பதை கண்கூடாக பார்த்த பின் இப்போது ஓமியோபதி மருந்துகளில் ஊக்க மருந்து (ஸ்டிராய்டு) கலக்கிறார்கள். அதனால்தான் உடலில் வேகமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று புறங்கூற ஆரம்பித்து விட்டார்கள். நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும் ஓமியோபதி முறையை, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் ஸ்டிராய்டு மருந்துகளோடு ஒப்பிடுவது மிகத் தவறானதாகும்.

அறுவைசிகிச்சை

முதலில், அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். செயற்கை யான நோய்களுக்குத்தான் அறுவை தேவைப்படும். செயற்கையான நோய் என்றால், திடீரென்று ஏற்படும் விபத்து, அதனால் ஏற்படும் எலும்பு முறிவு, கால், கைகள் இழப்பு முதலானவைகளே. இதில், நோய்க்கான காரணி புறவயமானது. இதில், அகக் காரணி இல்லை. மனிதனின் மனம் பாதிப்புக்கு ஆளாகி அதனால் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகின்றது என்றால் ஓமியோ பதியில் மருத்துவம் உண்டு.

துயரர் ஆய்வுக் கலை யின் மூலம் நோயுற்றவரை முழுமையாகப் புரிந்து கொண்டு அவருக்கே உரிய தனிப்பட்ட மருந்தைத் தேர்வு செய்து கொடுக்கும்போது, அவர் நோயிலிருந்து முழுமையாக விடுபடுகிறார். அதைவிடுத்து நோய்க்கான காரணம் எதையும் கண்டறியாமல், அந்த உறுப் பினால் உனக்குத் தொல்லையா, சரி வா வெட்டி எடுத்து விடலாம் என்பது சரியான தீர்வு அல்ல. திரு. ஆப்ரகாம் மாஸ்லோ அவர்கள் கூறிய கருத்து இங்கே நினைவுகூறத் தக்கது. அது என்னவெனில்,`யார் ஒருவரிடம் சுத்தியல் மட்டும் இருக்கிறதோ அவர் அனைத்துப் பிரச்சனைகளையும் ஆணியாகவே பார்ப்பதற்கு பழக்கப்பட்டுவிடுவார்’’ என்பதாகும்.

அதாவது, மனிதனை உறுப்புகள் இணைந்த ஒரு பொருளாக மட்டுமே பார்ப்பவர்களின் கண்களுக்குத் தான், செயல்படாத அல்லது தொல்லை கொடுக்கின்ற உறுப்பைக் கழட்டி எறியத் தோன்றும். எனவே, காரணத்தை கண்டறிந்து களைவதை விட்டுவிட்டு உறுப்பை வெட்டி எடுப்பது சரியான தீர்வும் அல்ல; இயற்கையான நோயைக் கொண்ட அவர்களெல்லாம் அறுவை தேவைப்படும் மனிதர்களும் அல்ல. முன்பு கூறியதுபோல புறக்காரணிகள் நோயை உண்டாக்கி யிருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை தேவை.

ஒரு சிறந்த மருத்துவ முறை என்பது எப்படி இருக்க வேண்டுமென்றால்,

1. துயரரை எந்தவிதச் சிறு பலகீனத்திற்கும் ஆளா காமல் காப்பதாக இருக்க வேண்டும்.

2. அவரை முழுவதுமாக நலப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

3. அந்த நலமாக்கல் விரைவாகவும், இதமாகவும், முழுமையாகவும் நடைபெற வேண்டும்.

4. அது எளிய முறையில் எந்த வித ஊறும் விளை விக்காத வகையில் எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய தத்துவத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டும்.

5. துயரரை நலமாக்குவது மட்டுமன்றி அவருடைய எதிர்ப்பாற்றலைக் கூட்டி அவரைப் பல நோய்களிலிருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள் ளும் ஆற்றல் உள்ளவராக மாற்றுவதற்கு உதவு வதாக இருக்கவேண்டும்.

6. ஒரு சிறந்த மருத்துவ முறை என்பது மனித சமூகத் தின் சாரத்தை அறிந்திருக்க வேண்டும்.

7. மனிதன் சமூகம் சார்ந்தவன் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நலமுள்ள நிலை, நோயுற்ற நிலை என்ன என்பது பற்றிய ஆழமான புரித லோடு அணுகுவதாக இருக்க வேண்டும்.

8. மனிதனைச் சாதாரண நிலையிலிருந்து உன்னத நிலைக்கு மாற்றுவதாக இருக்க வேண்டும்.

9. ஏழை எளிய மக்கள் அனைவராலும் எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

10. மனிதனைப் பொருளாகப் பார்க்காமல் முழுமையான ஆற்றலாகப் பார்க்கின்ற அணுகுமுறை வேண்டும்.

மேற்கூறிய அனைத்து தன்மைகளையும் கொண் டுள்ளதாக இருக்கும் ஒரே மருத்துவம் ஓமியோபதி எனும் ஒல்லியல் மருத்துவமே ஆகும்.