மாதுரிதான் அந்தச் செய்தியை முதலில் சொன் னாள். அவளுடைய தங்கை பூர்ணிமா பட்ட மேற் படிப்பு படிப்பதற்காக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்திருக்கும் செய்தியைத் தாங்கிய கடிதத் தை மாதுரி தான் தூது அஞ்சல் அலுவலரிடம் இருந்து பெற்றாள். செய்தியைப் படித்துச் சொன்னதும் பூர்ணிமா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். பெற்றோர்களும் மகிழ்ச்சி அடையத்தான் செய்தனர். அவர்களுக்கு வேறு எண்ணமும் இருந்தது. பெரியவளுக்குத் திரு மணம் முடிந்தது போலவே சின்னவளுக்கும் முடித்து விட்டால் தங்கள் கடமை முடிந்துவிடும். பின் நிம்மதி யாக இருக்கலாம் என்று அவர்கள் விரும்பினார்கள். ஆனால் பூர்ணிமா தான் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றும், அதுவும் மேலைநாட்டில்தான் படிக்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தாள்.

இந்தியாவில் பெண்ணடிமைத்தனம் மிகுந்து இருப்பதால், மேலைநாட்டுக்குச் சென்று படிக்க நினைத் துள்ளதாகவும், படிப்பு முடிந்த பின்னும் இந்தியா விற்குத் திரும்பிவரும் எண்ணம் இல்லை என்றும் அவள் தெளிவாகவே கூறிக்கொண்டு இருந்தாள். அவள் திரும்பி வரமாட்டேன் என்று கூறுவதாலேயே அவளை அனுப்பக் கூடாது என்று அவளுடைய பெற்றோர்கள் முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தனர். மாதுரிதான் பெற்றோர்களைச் சமாதானப்படுத்தினாள். மாதுரி ஒரு கல்லூரியில் பொருளாதார ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டு இருக்கிறாள். அவளுடைய கணவர் அதே கல்லூரியில் வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்.

பூர்ணிமா இந்தியாவில் பெண்கள் மதிக்கப்படுவது இல்லை என்றும், ஆகவே இந்தியாவில் இருப்பதற்கே பிடிக்கவில்லை என்றும் அடிக்கடி கூறிக்கொண்டு இருப்பாள். மாதுரியும் அதை அப்படியே ஒப்புக்கொண் டாலும் மேலை நாடுகளிலும் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுவதில்லை என்பதை வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் மேற்கோள் காட்டிப் பேசுவாள். ஆனால் இந்தியாவைவிட மேலைநாடுகளில் பெண் சுதந்திரம் சிறப்பாக உள்ளது என்பதை அவள் ஒப்புக் கொள்வாள். ஆனால் மேலை நாடுகளில் பெண் களுக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மாட்டாள். சமதர்ம (சோஷலிச) சமூகம் அமைந்து, அது பொதுவுடைமை (கம்யூனிச) சமூகமாக வளர்ச்சி அடையும் போதுதான் பெண்கள் முழுமை யான சுதந்திரத்தை அடைய முடியும் என்று கூறுவாள். திருமணமாவதற்கு முன் இந்த யோசனை இல்லாமல் ஏன் போனது என்று பூர்ணிமா கேலி செய்வாள். மாதுரியின் கணவர் ஒரு மார்க்சிய அறிஞர். அவரிடம் இருந்து பொதுவுடைமைக் கருத்துக்களைத் தெரிந்து கொண்டுதான் மாதுரி பூர்ணிமாவிடம் வாதம் செய்து கொண்டிருந்தாள். எது எப்படி இருப்பினும், தன் தங்கை அமெரிக்காவில் மேல் படிப்பு படிப்பது நல்லதே என்று நினைத்து, தன் பெற்றோர்களை ஒப்புக்கொள்ள வைத்தாள். அதன் வெற்றிகரமான முடிவுதான் அன்று வந்த கடிதம்.

பூர்ணிமா மிகுந்த ஆவலுடனும், மகிழ்ச்சியுடனும் அமெரிக்காவிற்குச் சென்றாள். லாஸ்ஏஞ்சல்ஸ் நகரம் மிகப்பெரிய நகரம். செலவும் அதிகமாகவே ஆனது. படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் பலர் தங்களுக்குக் கிடைக்கும் உதவித் தொகையில் சிக்கனமாகச் செலவு செய்து, பணத்தை மிச்சப்படுத்துவார்கள். ஆனால் பூர்ணிமாவால் அது முடியவில்லை. மிக அதிகமாகச் செலவு பிடிக்கும் நகரமாக இருந்ததால், அவள் எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும், அதிகமாகப் பணத்தைச் சேமிக்க முடியவில்லை. சிலர் அந்நாட்டு விதிகளைச் சற்று ஓரம் கட்டிவிட்டுக் கடைகளில் வேலை செய்து வருமானத்தை ஈட்டுவார்கள். ஆனால் படிப் பில் மட்டுமே முழு ஈடுபாடு கொண்டிருந்த பூர்ணிமா அத்தகைய விதிமீறல்களைச் செய்யவில்லை.

பூர்ணிமா நன்றாகப் படித்துக் கொண்டு இருந் தாள். அவளுடைய அறிவுத்திறனை ஆசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர். இது அவளை மேலும் படிப் பில் ஊக்கப்படுத்தியது. இந்தியாவில் பெற்றோர்களும், உற்றோரும் அதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு நாள் நியூயார்க் நகரில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒரு விவாத அரங்கிற்கு ஏற்பாடு செய்தி ருந்தனர். விவாதத்தில் திருமணமானவர்கள் மட்டும் பங்கு கொள்ளலாம் என்றும், நிகழ்ச்சியில் அனைவரும் பங்குகொள்ளலாம் என்றும் ஏற்பாடாகி இருந்தது. விவாதப் பொருள் இதுதான். “அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்குத் திரும்பிப் போவதா அல்லது அமெரிக்காவிலேயே தங்கிவிடுவதா?.” இதை அறிந்த பூர்ணிமா சிறிது செலவு ஆனாலும் பரவா யில்லை என்று முடிவு செய்து நியூயார்க் சென்று அந்த விவாத அரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள்.

அந்த விவாத அரங்கில் பெண்கள் அனைவரும் இந்தியாவில் நிலவும் பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டி, இந்தியாவிற்குத் திரும்பக் கூடாது என்று வாதம் செய்தனர். ஆண்களில் சிலர் இதை ஒப்புக் கொண்டனர். சிலர் பண்பாடு என்றும் மொழியைக் காக்க வேண்டும் என்றும், தாய்நாட்டுக்குத் தங்கள் அறிவு பயன்பட வேண்டும் என்றும் கூறி ஆகவே இந்தியாவிற்குத் திரும்புவது நல்லது என்றும் விவாதித் தனர்.

இந்நிகழ்வைப் பற்றித் தன் தமக்கையிடம் விவரித்த பூர்ணிமா, அமெரிக்காவில் பெண்கள் முழுமையான சுதந்திரத்துடன் இருப்பதால்தான் பெண்கள் அனைவரும் இந்தியாவிற்குத் திரும்ப விரும்பவில்லை என்று கூறினாள். பூர்ணிமா சொல்வதை எல்லாம் அமைதி யாகக் கேட்டுக் கொண்டிருந்த மாதுரி அமெரிக்காவில் பெண்களுக்கு இந்தியாவில் உள்ளதைவிட அதிக சுதந்திரம் இருப்பதை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் முழுமையான சுதந்திரம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்றும் கூறினாள். “போக்கா! நீ மாமா வுடன் சேர்ந்து ரொம்பக் கெட்டுப் போயிட்டே!” என்று பூர்ணிமா கூற, “இல்லேடி அவரைக் கட்டிக்கிட்ட பிறகு தான் நிறைய விஷயமே புரிய ஆரம்பிச்சது” என்று மாதுரி பதில் கூறினாள். தன் தமக்கை திருமணமான பின் நிறைய மாறிவிட்டாள் என்று பூர்ணிமா நினைத்த தில் உண்மை இருக்கவே செய்தது. முன்பெல்லாம் பூர்ணிமா ஒன்றைச் சொல்ல அதைப் பின்பற்றித்தான் மாதுரி போராடுவாள்.

மாதுரியும், பூர்ணிமாவும் சிறுமிகளாக இருந்த போது, ஒருமுறை குலதெய்வ வழிபாடு என்று அவர் களுடைய பூர்விக கிராமத்திற்குச் சென்றிருந்தனர். அப்பொழுது வழிபாடு முடிந்தபின் சாப்பிட அமர்ந்த போது ஆண்கள் அனைவரும் பலகை மீது அமர, பெண்களைத் தரையில் அமரச் சொன்னார்கள். மாதுரி மற்ற பெண்களைப் பின்பற்றி தரையில் அமரப் போனாள். ஆனால் பூர்ணிமா “ஏன் பெண்கள் பலகை மீது உட்காரக் கூடாதா?” என்று எதிர்ப்புக் குரல் எழுப்ப மாதுரி அவளைப் பின்பற்றி, தானும் பலகை மீது தான் அமர்வேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள். கூடவே மற்ற சிறுமிகளையும் போராட்டத்தில் இழுத்துக் கொண்டாள். பெரியவர்கள் வேறு வழி இல்லாமல் பெண்கள் அமரவும் பலகையை அளிக்க வேண்டிய தாயிற்று. இதுபோல் ஒரு போராட்டத்தில் மாதுரி வலுவாக இருந்தாலும் பூர்ணிமா தான் எதையுமே ஆரம்பித்து வைப்பவளாக இருப்பாள்; மாதுரி பின் பற்றுபவளாகத் தான் இருப்பாள்; ஆனால் திருமண மாகிச் சில காலத்திற்குப் பின் மாதுரி தன்னை மிஞ்சி விட்டதாக நினைத்தாள்.

இப்பொழுதும் அப்படியே பேசியதைப் பற்றி, பூர்ணிமா சிறிது ஏமாற்றம் அடைந்தாள். மேலைநாடு களில் பெண்கள் சுதந்திரமாக இருப்பதாகவே நினைத்தாள்.

காலம் சுழன்றது. பூர்ணிமா பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டாள். மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற, தன்படிப்பைத் தொடர வேண்டும் என்று அவள் கூறிய போது, பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்தனர். திருமணத்தை முடித்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளும்படி அவர் கள் கூறினர். ஆனால் பூர்ணிமாவோ பெண் சுதந் திரத்தை மதிக்கும் ஒருவன் கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், அப்படி யாரும் கிடைக்கா விட்டால் திருமணமே வேண்டாம் என்றும் உறுதி யாகக் கூறியதைக் கேட்ட பெற்றோர்கள் மாதுரியைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். மாதுரி தான் தன் தங்கை அமெரிக்காவிற்குச் சென்று படிக்க வாதாடிப் பெற்றோர் களை ஒப்புக்கொள்ள வைத்தாள். இப்பொழுது அவள் தங்கள் கையை மீறிப் போய்விட்டாள் என்று அங்க லாய்த்தார்கள்.

மீண்டும் மாதுரிதான் பெற்றோர்களைச் சமாதானப் படுத்தினாள். பூர்ணிமாவின் அறிவுக்கூர்மை, ‘திருமணம் செய்துவிட்டால் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கலாம்’ என்று வழக்கமான நடைமுறைக்குப் பலியாகிவிடக் கூடாது என்றும், அவள் மேற்கொண்டு படித்தால் மேரி க்யூரியைப் போல் தலைசிறந்த அறிவியல் அறிஞராக மிளிருவாள் என்றும், ஆகவே அவள் தொடர்ந்து படிக்கட்டும் என்றும் வாதாடி வெற்றியும் பெற்றாள்.

பூர்ணிமாவிற்கு ஸான்ஃபிரான்ஸிஸ்கோவிற்கு அருகில் உள்ள டேவிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பைத் தொடர உதவித் தொகையுடன் இடம் கிடைத்தது. பூர்ணிமா மகிழ்ச்சியுடன் படிப்பைத் தொடர்ந்தாள். படிப்பு முடியும் தறுவாயில், ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் உள்ள அனைத் துலக செயல்முறைப் பகுப்பாய்வு நிறுவனத்தில் (International Institute for Applied Systems Analyses) இளம் அறிவியலாளர்களுக்கான மூன்று மாதக் கோடைக்காலப் பயிற்சி முகாமில் பங்குகொள் ளும் வாய்ப்பு நாடி வந்தது. அறிவியல் அறிஞர்களாகப் பணிபுரியும் நோக்கம் உள்ளவர்களுக்கு இது அரி தானதும், பெருமைப்படக் கூடியதுமான வாய்ப்பாகும். இந்நிறுவனத்தில் அறிவியல் அறிஞர்களே உயர்த்திப் போற்றும் அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும், உளவியலின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் ஃப்ராய்டும் இருந்து ஆராய்ந்தனர் என்பதில் இருந்தே இந்நிறுவனத்தின் சிறப்பை அறிய முடியும். இத்தகு சிறப்புமிகு நிறுவனத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணியும் உலகம் முழுவதிலும் உள்ள இளம் அறிவியல் அறிஞர்களுடன் பழகுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பை எண்ணியும் பூர்ணிமா மிகவும் மகிழ்ந்தாள்.

 

குறித்த காலத்தில் அவள் வியன்னாவை அடைந் தாள். அவளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த விடுதி அறை வசதியாகவே இருந்தது. அடுத்த நாள் பயிற்சி வகுப்பு தொடங்கிய போது, அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். சில நாட்களில் அந்நிறுவனத்தில் அறிவியல் அறிஞராகப் பணிபுரிந்து கொண்டு இருந்த ஜெஸிகா என்ற அமெரிக்கப் பெண் அறிமுகமானாள். சிறிது காலத்தில் இருவரும் நெருக்கமான நண்பர் களாயினர். காரணம் இருவருமே பெண் விடுதலை நோக்கில் மிக அழுத்தமானவர்களாக இருந்ததுதான். ஒரு இந்தியப் பெண் இவ்வளவு அழுத்தமாகப் பெண் விடுதலைக் கருத்தைக் கொண்டிருப்பதை முதல்முத லாகப் பார்ப்பதாக ஜெஸிகா கூறினாள். பயிற்சி நேரம் போக மீதி நேரத்தில் பூர்ணிமாவும் ஜெஸிகாவும் ஒன்றாகக் கூடி இருப்பது வழக்கமாயிற்று. வியன்னா நகரைச் சுற்றிப் பார்க்கவும், கடை கண்ணிகளுக்குப் போகவும் பூர்ணிமாவுக்கு ஜெஸிகா உற்ற துணையாக இருந்தாள்.

ஒருநாள் மாலை பூர்ணிமா ஜெஸிகாவைப் பார்க்கச் சென்ற போது அவளுடைய முகத்தில் இலே சான வருத்தம் தெரிந்தது. பூர்ணிமாவைப் பார்த்ததும் அவள் தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டாலும் பூர்ணிமா விடவில்லை. அவளுடைய வருத்தத்திற்கான காரணத்தை வினவினாள். அது அலுவலக விஷயம் என்றும், இதுபோல் அடிக்கடி நிகழும் என்றும் ஜெஸிகா கூறியதைப் பூர்ணிமா ஏற்கவில்லை. அதைத் தன் னுடன் பகிர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினாள். ஜெஸிகாவும், தனக்கு மேலதிகாரியாக இருப்பவன் தன்னைவிடத் தகுதியிலும், திறமையிலும் குறைந்தவன் என்றும், வேலை செய்யும் போது அவனைவிடத் திறமையை அதிகமாக வெளிப்படுத்தும் சமயங்களில் எல்லாம் ஏதாவது வாக்குவாதங்கள் எழும் என்றும் கூறினாள். பூர்ணிமாவுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி யைத் தந்தது. அவளைவிடத் தகுதியிலும் திறமையி லும் குறைந்த ஒருவன் அவளை விட உயர்ந்த நிலைக்கு எப்படிச் செல்ல முடிந்தது? பூர்ணிமா கேட்டே விட்டாள். ஜெஸிகா கூறிய விடை பூர்ணிமாவை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜெஸிகா கூறிய விடை இதுதான் “என்ன செய்வது? இது ஆணாதிக்க உலகம்.”

“என்னது, இங்கும் ஆணாதிக்கமா?” பூர்ணிமா அலறியேவிட்டாள்.

“ஆம். இதற்கு ஏன் இப்படி அலறுகிறாய்?” என்று ஜெஸிகா சாவதானமாகக் கேட்டாள்.

“இல்லை. நான் இந்தியாவில்தான் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது, இங்கு அப்படி எல்லாம் இல்லை என்று நினைத்தேன்.”

“நீ நினைப்பதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அது முழு உண்மை அல்ல. சில பெரிய பதவிகள் என்று வரும்பொழுது இங்கும் பெண்களைப் புறக்கணிக்கத்தான் செய்கிறார்கள்.”

“ஏன்? எப்படி?”

“என்னவென்று சொல்வது? என்னையே எடுத்துக் கொள்ளேன். என்னைவிடத் தகுதியிலும், திறமை யிலும் குறைவான ஒருவனை அவன் ஆண் என்பதற் காக என்னைவிட உயர்நிலையில் வைத்துள்ளனர்.”

“ஏன் அப்படி?”

“பெண் என்றால் பிள்ளைப் பேறு காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டும்; குழந்தையைக் கவனிப் பதில் வேலையில் நாட்டம் குறையும் என்றெல்லாம் நினைக்கிறார்கள். எனக்குத் திருமணத்தில் நாட்டமே இல்லை. அதையும் என் விவரக் குறிப்பில் எழுதி இருந்தேன். இருந்தாலும் நிர்வாகம் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எதற்கு வம்பு என்று நினைக்கிறார்கள்.

பூர்ணிமா ஜெஸிகாவின் இவ்வுரையாடல், பூர்ணிமா வுக்குத் தன் தமக்கையை நினைக்க வைத்தது. மறுநாளே பூர்ணிமா மாதுரியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள். தனக்கும் ஜெஸிகாவுக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றித் தெரிவித்தாள். அனைத்தையும் அமைதியாகக் கேட்ட மாதுரி “நீங்கள் பிரச்சினையை மட்டும்தான் புரிந்து கொண்டு இருக் கிறீர்கள். பிரச்சினையின் வேரைப் புரிந்து கொள்ள வில்லை” என்று கூறினாள்.

“பிரச்சினையின் வேரா? என்ன சொல்கிறாய் அக்கா?” என்று பூர்ணிமா கேட்டாள். “பல இடங்களில் ஆண்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் அதிக மாகக் கூலி கொடுக்க வேண்டிவரும் என்பதற்காகக் குறைந்த கூலியில் பெண்களை வேலைக்கு வைத் துக் கொள்வதைப் பார்த்திருக்கிறாய் அல்லவா?” என்று மாதுரி கேட்டதற்கு “ஆமாம்” என்று பூர்ணிமா ஒப்புக் கொண்டாள். அதன்பிறகு மாதுரி தெளிவாக விளக்கினாள். “பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை அளிப்பவர்களும் சரி, ஆண்களுக்கு முன் னுரிமை கொடுத்து வேலை அளிப்பவர்களும் சரி, அவர்களுடைய ஒரே நோக்கம் தங்கள் முதலீட்டுக்கு வரும் இலாபத்தை அதிகரிப்பது மட்டுமே. உணர் நிலை வேலைகளுக்குச் செல்லச் செல்ல, பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வதைவிட ஆண்களை வைத்துக் கொள்வதே அதிக இலாபத்திற்கு வழி என்று நினைக்கிறார்கள். ஆனால் சோஷலிச சமூகத்தில்.... மாதுரி தொடரும் முன்பேயே “சோஷலிச சமூகத்தில் இப்பிரச்சினை இருக்காதா?” என்று பூர்ணிமா இடை மறித்தாள்.

“நான் அப்படி அடித்துச் சொல்லவில்லை. ஆனால் இப்பிரச்சினை வலுவிழக்கத் தொடங்கிவிடும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். சில தலைமுறை களில் சோஷலிச சமூகம் கம்யூனிஸ்ட் சமூகமாகப் பரிணமிக்கும் போது ஆணாதிக்கத்திற்கு அங்கே வேலை இருக்காது” என்று மாதுரி கூறியதைப் பூர்ணிமா மெதுவாக உள்வாங்கிக் கொண்டாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த பூர்ணிமா “அப்படி என்றால் நான் படிப்பு முடிந்தபின் இந்தியா விற்குத் திரும்ப வேண்டும் என்று கூறுகிறாயா?” என்று கேட்டாள்.

“நீ இந்தியாவிற்குத் திரும்பினால் அம்மாவும் அப்பாவும் மகிழ்ச்சி அடைவார்கள். எனக்கும் மகிழ்ச்சி யாகவே இருக்கும். ஆனால் உன்னுடைய மனநிலை இங்கு வாழ்வதற்கு ஒத்துவருமா என்று தெரிய வில்லை. நீ கூறியது போல் ஆணாதிக்க மனநிலை இல்லாத ஒரு பையனைப் பார்த்து, அவனைத் திருமணம் செய்துகொண்டால், அப்புறம் இருவரும் சேர்ந்து என்ன முடிவு எடுக்கிறீர்களோ அப்படி நடந்து கொள்ளலாம்” என்று மாதுரி கூறினாள்.

Pin It