கலந்துரையாடல் என்பது நாம் முன்னேற எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்; பேச வேண்டும்; அணுக வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

தொழிலதிபரானாலும்,அரசு ஊழியரானாலும்,உறவினர்களானாலும் நண்பர்களானாலும், நிறுவன ஊழியரானாலும் அவரவர்களின் கலந்துரையாடலின் செயல்பாடுகளின் வழியிலேயே முன்னேறுவார்கள்; உதவுவார்கள்; வெற்றி பெறுவார்கள்.

எதிரே அமர்ந்திருப்பவரின் சுயமரியாதைக்கும் செல்வாக்கிற்கும் பங்கம் ஏற்படாதவண்ணம், மிகைப் படுத்திக் கூறாமல் நம்பகத்தன்மை குறையாமல் கலந்துரையாட வேண்டும். கலந்து பேசுவதால் பல நன்மைகள் விளையும்.சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்பது போல படிக்காதவர்கள்,பாமரர்கள்,எளியவர்கள் கூறும் கருத்துக்கள் மிகவும் நன்மையை உண்டாக்கும்.உதாரணம் மிக அதிகம் படித்த உயர் பதவியில் இருந்த ஒரு பொறியாளர் “இந்த இடத்தில் அணைக்கட்டினால் தாங்காது” என்று கூறியுள்ளார். அந்த அணை கட்டும் திட்டத்தை பச்சைத்தமிழன் அதிகம் படிக்காத தலைவர் அந்த அதிகாரியிடம் கலந்து பேசி, பல வழிமுறைகளைத் தெரிந்தவரை கூறியுள்ளார்.அதன் பிறகு அந்த பொறியாளர் ஒத்துக்கொண்டு அணையினைக் கட்டி முடித்துள்ளார். அப்படிக் கலந்து  பேசிய தால்தான் சாத்தனூர் அணை நமக்குக் கிடைத்தது அன்று கலந்துரையாடல் இல்லை என்றால் இப்படி ஓர் அணை இன்று இல்லை.

இன்று நம் மாநிலத்தில் உள்ள சட்டமன்றம், மக்களுக்கு வெளிப்படையான திட்டங்களைத் தீட்டி செயல்படுவதில்லை. திட்டங்களைப் பற்றிக் கலந்து பேசாமல் எதிரணியினரைப்பற்றிக் கதை சொல்வது,லாவணி பேசுவது, கேலியும் கிண்டலும் பேசுவது,கண்மூடித்தனமாக மேசையைத் தட்டி என்ன சொன்னார்கள், எதை பேசினார்கள் என்று அறியாமல் மக்கள் நலன் பலவற்றை விட்டுவிட்டுத் தேவையற்ற இனாம் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டுவதும் பேசுவதும் வாடிக் கையாகிவிட்டது. கடமையும் மக்கள் சேவை மனப்பான்மையும் இல்லாத அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகள் நிறைந்துவிட்டனர். நல்லவர்கள் சிலராயிருப்பதால் நன்மையின் வளர்ச்சி மிகமிகக் குறைவு.

உரையாடலில் உன்னதம் அடைய நல்லுணர்வுகளுடன் உரையாடுங்கள். தீய எண்ணத்துடன் உரையாடுவதை நிறுத்துங்கள்.கல்வியில் சமத்துவக் கல்வியைக் கொடுங்கள். எதிர்காலத்தில் மாணவர்கள் ஏற்றத்தாழ்வின்றிக் கலந்து பேசுவார்கள்.