இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்று புவிவெப்பம், மற்றொன்று பட்டினிச் சாவுகள். இவை இரண்டுமே ஒன்றுக் கொன்று தொடர்புடன் இருக்கின்றன. உலகச் சுகாதார அமைப்பு 2007-இல் ஓர் ஆய்வறிக் கையை வெளியிட்டது. அதில், மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம், உலகெங்கும் 2020-ம் ஆண்டு முதல் வருடத்திற்கு 3 இலட்சம் பேர் பலியாகக் காரணமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக 2000-த்தில் இருந்து இத்தகைய காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.

உலகின் பணக்கார நாடுகளே இந்த அவல நிலைக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால் ஏழை நாட்டு மக்கள் தான் இதன் பாதிப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்குதலால் பாதிக்கப்படு கிறார்கள்.

கடந்த 100 ஆண்டுகளில் வானவெளி வெப்பம் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. 20-ம் நூற்றாண்டில் சராசரி வெப்பம் 0.740 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது; இது 2100ம் ஆண்டு 2 முதல் 3 டிகிரி வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பனி உருகுவதால் நதிகள் கடலுக்கு நீர் கொடுப்பது குறையும். கடல்நீர் நிலத்திற்கு உள்ளே புகுவதால் குடிநீரின் அளவு குறையும். வெள்ள மும் வறட்சியும் மாறி மாறி வரும். பயிர் வளர்ச்சி  நர ம் கு றைவதால் அதன் விளைச்சலும் குறையும்.

இந்தக் காலநிலை மாற்றத்தால் கடலோரங்களில் தொடர்ந்து புயலும், வெள்ளமும் ஏற்படும். கோடிக் கணக்கான மக்கள் இடம்பெயர்வார்கள். உயிரிழப்பும், பொருள் இழப்பும் பெரிய அளவில் ஏற்படும். இந்த மாற்றத்தால் வடக்கு ஆசியாவில் 50 கோடி மக்கள், சீனாவில் 25 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். 2020-ம் ஆண்டில் ஆசியா முழுவதும் 120கோடி மக்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள்.

மேலும் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதால்,  ஏழை நாடுகள் உணவை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்படும். கடல் மட்டம் உயர்வதால் மக்கள் நெருக்கம் மிகுந்த கொல்கத்தா, டாக்கா, ஷாங்காடீநு போன்ற பெருநகரங்களில்கடும் பாதிப்பு நிலவும்.

இதனால் வறட்சி ஏற்பட்டு மக்கள் இடம் பெயர்வார்கள். இந்தச் செயல்களால் உலகில் பாதுகாப்பும்,அமைதியும் பாதிக்கப்படும். வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உலக நாடுகளின்அரசாங்கங்களின் கவனம் முழுவதும் புவி வெப்பம் மீதுஇருப்பது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

- ‘தினத்தந்தி’ நாளிதழ், 3.5.2014