ஆய்ந்துபடி

அன்னைத்தமிழ்ஆய்ந்துபடி

அதனையும்ஆழ்ந்துபடி

பார்மொழியாம்தமிழ்படி

பழகுதமிழ்நீபடி

யார்மொழியின்நூலெனினும்

பசுந்தமிழில்பாயும்படி

புதைபடும்தமிழ்மடி

பொலிவினைக்காணும்படி

புதுப்புதுநூல்கள்படி

புரட்சிவரநீயும்படி                (ஆய்ந்துபடி)

புகுந்திளநெஞ்சினிலே

புதுஒளிபாயும்படி

புனைந்துளநூலெதையும்

புரியும்படிதேடிப்படி

பகுத்திடும்நால்வருணம்

பாரினில்ஏன்இப்படி?

பகுத்தறிவாளர்களின்

பலவிதநூல்வாங்கிப்படி

கலைகளில்தமிழ்படி

கல்வியிலும்தமிழ்படி

அலைபடும்ஆலயத்தில்

ஆட்சியினில்தமிழைப்படி

திருமணம்தமிழ்படி

குடிபுகதமிழ்படி

நறுமணமானதமிழ்

மாண்புறவேதூக்கிப்பிடி                (ஆய்ந்துபடி)

மார்க்ஸ்பெரியாரைப்படி

மாவோஅம்பேத்கர்படி

மாவீரன்பகத்சிங்படி

மருதுதிப்புவீரம்படி

பாவேந்தர்பாட்டுப்படி

பாவாணர்ஆய்வுபடி

பாராண்டதமிழுக்கொரு

பழிவராமல்தாங்கிப்பிடி

விழிகளில்தீப்பொறி

வெளிப்படநீபடி

விழுந்தவர்எழுந்திடவே

விளங்கிவரும்நூலைப்படி

மொழிகளில்தாய்மொழி

முகிழ்த்திடநீபடி

பழிசொலும்மூடர்களின்

பகைமுடிக்கவாளைப்பிடி!          (ஆய்ந்துபடி)

(பாவேந்தரின் “நூலைப்படிசங்கத்தமிழ்நூலைப்படி” என்னும்பாடலின்சந்தத்தில்எழுதப்பட்டது)

Pin It