திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 7 கி.மீ. சாலை வழியாகக் கவுத்திமலை, வேடியப்பன்மலை அமைந்திருக்கிறது. இந்த மலையில் இரும்புத்தாது எடுப்பதை 8.2.2014 அன்று செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இதை எதிர்த்து அம்மலை யைச் சுற்றியுள்ள சுமார் 51 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திருவண்ணாமலை நகரில் ஆட்சியர் அலு வலகம் முன்பும், நீதிமன்றம் முன்பும், சாலை மறியல் போன்ற பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள்.

இச்செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் அப்பகுதி மக்களை நேரில் கண்டு உண்மைகளைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அதன்படி, அப்பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கிராம மக்களிடம் அழைத் துச் சென்றனர். அவர்களிடம் இருந்து பின்வரும் தகவல்களை நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

கவுத்தி-வேடியப்பன் இரட்டை மலையில் இரும்புத் தாது படிமங்கள் இருப்பதாக 1978-ஆம் ஆண்டே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 1992க்குப் பிறகு பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் நடத்தப்பட்ட தில் 35 மில்லியன் டன் இரும்புத்தாது படிமங்கள் அப்பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இந்தக் கனிம வளங்களைக் கையகப்படுத்துவதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டனர்.

பிறகு நான்கு ஆண்டு களுக்கு முன்னர் ஜிண்டால் என்ற தனியார் நிறுவனம் மலையில் உள்ள இரும்புத்தாதை வெட்டி எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தது.

இதைத் தொடர்ந்து திரு வண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத் தில் இரும்புத்தாது வெட்டி எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில்தான் வனத்துறைக் கட்டுப்பாட் டில் உள்ள கவுத்தி மலையில் தமிழகத் தொழில் வளர்ச் சிக் கழகத்துடன் ஜிண்டால் நிறுவனம் இணைந்து இரும்புத்தாது வெட்டி எடுக்க முடிவு செய்தது.  இதனால் அப்பகுதியைப் பார்வையிட வரும் ஜிண்டால் நிறுவனத் தார் அப்பகுதி மக்களால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

கவுத்தி வேடியப்பன் மலையில் இரும்புத்தாது வெட்டி எடுக்கப்பட்டால், மலையில் வாழ்கின்ற ஆயிரத் துக்கும் மேற்பட்ட மான்கள், காட்டுப்பன்றிகள், பாம்புகள், மயில்கள், பறவைகள் இன்னும் பல விலங்குகள் அழியும். அதுமட்டுமல்ல, அங்குள்ள இலட்சக்கணக் கான அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் அழியக் கூடிய ஆபத்தும் உள்ளது.

வேடியப்பன் மலையில் உள்ள பழைமை வாய்ந்த வேடியப்பன் கோயில் அமைந்துள்ளதால், பல்வேறு ஊர்களில் இருந்துவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கோயில் அழியும் என்ற ஆபத்தை அறிந்து அப்பகுதி மக்களுக்கு ஆதர வாகவும், மலையைத் தனியார் கைப்பற்றுவதற்கு எதிர்ப்பாகவும் இருக்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இங்கு இரும்புத்தாது படிமங்களை வெட்டி எடுப்பதி னால், அம்மலையின் அருகிலுள்ள வேடியப்பனுர், வெங்காயவேலூர், முனியந்தாங்கல், இனாம்காரியந் தால், ஆடையூர், கீழ்ப்புதூர், காந்திநகரம், கருத்து வாம்பாடி, புனல்காடு, பெரியகுளம், பாலியப்பட்டு, ஒட மாத்தூர், ஓரந்தவாடி, பெரிய ஒழவன்குட்டை, மன்னை உட்பட 51 கிராமங்களில் வாழ்கின்ற இரண்டு இலட் சத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தம் வாழ்வாதாரங் களையும், உடைமைகளையும், உரிமைகளையும் பாதுகாத்திடக் ‘கவுத்திமலை மக்கள் பாதுகாப்பு இயக்கம்’ ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த இயற்கை வளங்களை அழித்துவிட்டு இரும்புத் தாது தோண்டி எடுத்தால் கிடைக்கும் இலாபத்தைவிட அதனால் ஏற்படும் இழப்பு தான் அதிகமாக இருக்கும் என்று உச்சநீதிமன்றத்தின் அதிகாரமளிக்கப்பட்ட குழு எச்சரித்துள்ளது.

இந்நிலையிலும், ஜிண்டால் நிறுவனத்திற்காக வனத்துறைக்குச் சொந்தமான 6483 ஏக்கர், நீர்பாசன நிலம் 6445 ஏக்கர், நீர்பாசனம் இல்லாத நிலம் 7227 ஏக்கர், விவசாய நிலம் 2622 ஏக்கர் என ஒட்டுமொத்த மாய் 26918 ஏக்கரைiக் கையகப்படுத்த போகிறதாம். கவுத்தி-வேடியப்பன்மலை 2 ஆயிரத்து 800 எக்டேர் உள்ள பரப்பளவில் இப்போது 23 எக்டேரில் இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்காக அனுமதி வழங்குவது குறித்துமட்டும் ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் அதே இடத்தில் தாது வெட்டி எடுக்கவும், பிரிக்கவும் தொழிற் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் நேரடியாக 1500 பேருக்கும், மறைமுகமாக 3000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், தொழிற் சாலை இல்லாத மாவட்டமான திருவண்ணாமலை யில் இரும்புத்தாது பிரித்தெடுக்க அனுமதி கிடைத்தால் புதிய தொழிற்சாலை உருவாகும் என்றும், தற்பொழுது 23 எக்டேரில் இரும்புத்தாது வெட்டி எடுத்துப் பிரிக்கும் பணியே குறைந்தது 10 ஆண்டுகளுக்கு நடக்கும்.

பிறகு மீதமுள்ள இடங்களுக்கும் படிப்படியாகத் தாது வெட்டி எடுக்க அனுமதி பெற்று, அதன் மூலம் 100 ஆண்டுகளுக்கு இரும்புத்தாது பிரிக்கும் தொழிற்சாலை இயங்க வாய்ப்பு அமையும் என்று அப்பகுதி மக்களுக்கு ஜிண்டால் நிறுவனமும் அதற்குத் துணைபோகும் மத்திய-மாநில அரசுகளும் கூறிவருகின்றன.

இந்நிலையில், இதுபோன்ற நலத்திட்டம் ஜிண்டால் என்கிற தனியார் நிறுவனத்தாரால் உங்களுக்கும், உங்கள் ஊர் பகுதிக்கும் வளர்ச்சி ஏற்படுகிறதா? என்று கேட்டதற்கு, பெரிய ஒழவன் குட்டை கிராமத்தைச் சேர்ந்த கௌதமி மற்றும் பல பெண்கள் மிகுந்த சினத் துடன், “அது எப்படி எங்களுக்கும் எங்கள் ஊருக்கும் வளர்ச்சி ஏற்படும்?

பல ஆண்டுகளாக நாங்கள் இங் கேயே வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு மிக முதன் மையான தொழில் விவசாயம். தரிசு நிலமாக இருந்த இடத்தை நிலமாக மாற்றி எங்கள் வாழ்வாதாரத்தை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். அப்படி இருக்கும் பொழுது ஜிண்டால் நிறுவனம் வந்தால் இந்த கவுத்தி-வேடியப்பன் மலையையொட்டி சுற்றளவு பரப்பில் உள்ள 7 கி.மீ.

விளைநிலங்களைக் கையகப்படுத்திக் கொண்டு இங்குள்ள 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்க ளைக் கட்டாயம் வெளியேற்றுவார்கள். எனவே ஆயிரம், இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறுவது இதுபோன்ற நிறுவனங்களுக்குப் பழக்க மான ஒன்றுதான்.  அப்படியே அது உண்மையாக இருந்தாலும் 2 இலட்சம் பேர் வாழ்வாதாரங்களை அழித்து, உடைமைகளைப் பறித்துக்கொண்டு, வெறும் 2 ஆயிரம் பேருக்கு வேலை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆனால் உண்மையில் இத்திட்டத் தால் உள்ளூர் மக்களில் வெறும் 180 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்” என்கிறார்கள்.

கருத்துவாம்பாடி கிராம மக்களிடம் கேட்டதற்கு, “மலையைத் தோண்டி இரும்புத்தாது எடுப்பதால் ஏற்படும் அதிர்வு 10 கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங் களைப் பாதிக்கும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் 300 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. மேலும் இங்கு இரும்புத்தாது தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அந்த நிறுவனத்தாரால் சுமார் 2000 அடி ஆழத்தில் நீர் எடுக்கப்படும் போது, இப்பக்தி மக்களுக்கு வேளாண்மையே இல்லாமல் போவதுடன் வேளாண்மையுடன் இணைந்துள்ள கால்நடை விலங்குகளும் அழியும் ஆபத்து உள்ளது என்கிறார்கள்.

மன்னை கிராமத்து மக்களிடம் மலையில் உள்ள இரும்புத்தாது எடுப்பதைப் பற்றி கேட்டபோது, “சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சூழல் ஏற்பட்ட போது கவுத்தி மலைப் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஜிண் டாலை எதிர்த்தோம்.

மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து அந்தத் திட்டத்தை அப்போதைய மாவட்ட ஆட்சியர் இராசேந்திரன் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தார். தற்போதும் அதேபோன்று பிரச்சனைகள் வருகிறது.

எனவே எங்கள் உடைமைகளையும் உரிமைகளை யும் வாழ்வாதாரங்களையும் இழக்கமாட்டோம். இந்த மண்ணையும் மக்களையும் காத்திட நாங்கள் எந்த விதமான எதிர்ப்பையும் எதிர்கொள்வோம்; போராடு வோம்” என்று உறுதியுடன் கூறுகின்றனர்.

சில மாதங்களுக்கு முன், மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தனிக்குழு அமைத்து இக்குழுவினர் கவுத்தி மலையில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.

அதன்படி, மத்திய சுற்றுச்சூழல் குழுத் தலை வர் ஜெயகிருஷ்ணா, கூடுதல் முதன்மை வனத் துறைத் தலைவர் சமன் சின்ஹா, வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் கல்யாணசுந்தரம், திருவண்ணா மலை மாவட்ட வன அலுவலர்கள் சிவசங்கர், ராஜேந் திரன், கோட்டாட்சியர் முத்துகுமாரசாமி, வட்டாட்சியர் வேடியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் 7.2.2014 அன்று கவுத்தி-வேடியப்பன் மலையில் நேரில் சென்று இரும்புத்தாது வெட்டி எடுப்பதற்காக அளவீடு செய்யப் பட்டுள்ள 23 ஹெக்டேர் இடத்தை அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இப்பகுதியில், இரும்புத்தாது வெட்டி எடுப்பதால் பொதுமக்களுக்கும், விவசாயத்துக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளது.

இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அனுமதி வழங்கப் படுவது குறித்து மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வின் முடிவு தங்க ளுக்குச் சாதகமாக வரும் என்று அப்பகுதி மக்கள் நம்பவில்லை.

காரணம் அப்பகுதி வனத்துறை அதி காரிகள் கவுத்தி-வேடியப்பன் மலையில் வன விலங்கு களான மான்கள், மயில்கள் போன்றவை இல்லை என்றும், அரியவகை மூலிகைச் செடிகள், மரங்கள், ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளன என்றும் பொய் யான தவறான தகவலை அரசுக்குத் தருகின்றனர்.

சுமார் 2 இலட்சம் மக்கள் கொண்ட 51 கிராமத்தில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்று சம்மந் தப்பட்ட அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை ஜிண்டால் தனியார் நிறுவனங் களுக்குச் சாதகமாகவும், மக்களுக்கு எதிராகவும் செயல் பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று முடிந்துள்ள சூழ்நிலையில் பல்வேறு ஓட்டு அரசியல் கட்சிகள் மக்கள் நலனில் அக்கறை உள்ளது போல் காட்டிக் கொள்கின்றனர்.

ஆனால் இவர்களது ஒப்புதல் பேரால்தான் மலையில் உள்ள இரும்புத்தாது எடுப்பதற்கு ஜிண்டால் நிறுவனம் முயற்சி எடுத்திருக்கிறது என்பது பற்றி அப்பகுதி மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.

தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், எப்பொழுதும் போல் தேர்தல் பிரசாரத்தில் தனது பார்ப்பன நரித் தந்திர உத்தியைக் கையாண்டு மக்களிடம் ஓட்டு பெற மக்கள் நலனில் அக்கறையுள்ளது போல் காட்டிக்கொள்ள, சேலத்தில் தேர்தல் பரப்புரையில், “கவுத்தி-வேடியப்பன் மலையில் உள்ள இரும்புத்தாது எடுப்பதால் அப்பகுதி மக்கள் பாதிப்பு அடை கிறார்கள். எனவே என் உயிர் மூச்சு உள்ளவரை அம் மலையை எடுக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் இந்த ஜெயலலிதா தேர்தல் நேரங்களிலே எப்படிப் பேசுவார், மற்ற நேரங்களில் எப்படிப் பேசுவார் என்பது கடந்த சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த் தால் போதும்; ஈழச்சிக்கல், கூடங்குளம் போராட்டம் இவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் தமிழகத்துக்குத் தடையில்லா மின்சாரம் கொண்டு வருவதாகச் சொல்லி வெற்றி பெற்ற பிறகு வரலாறு காணாத கடுமையான மின்வெட்டால் தமிழக மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று ஒவ்வொரு தேர்தல் போதும் வாக்குறுதி யைக் கொடுத்து மக்களை மாக்களாக ஏமாற்றியதை போல் இம்முறையும் கவுத்தி-வேடியப்பன் மலையைச் சுற்றியுள்ள 51 கிராமங்களையும் ஏமாற்றத் தமிழக அரசு திட்டம் தீட்டுகிறது.

‘கவுத்தி மலைப் பாதுகாப்பு இயக்கத்தினர், ஓரணி யில் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். ஜிண்டால் போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை இம் மண்ணிலே காலூன்ற விடாமல் விரட்டியடிக்க நாமும் அவர்களோடு இணைந்து போராடுவோம் வாருங்கள்!

Pin It