வாக்காளர்கள் -
வேட்பாளர்களின் கறுப்புப் பணத்தில்
குறைந்த பட்சக் கூட்டாளிகள்..!

மக்களின் மனங்களை
கொள்ளை கொண்ட
ஆளும் கட்சி ..
மணற்கொள்ளையிலும்
சிறந்து விளங்குகிறது..!
 
முதலில் மதுக்கடையை திறந்து
"குடிநோயாளி" ஆக்குவார்கள்..!
பிறகு மருத்துவக்  காப்பீடு தந்து
"வாழும் வள்ளல்" ஆவார்கள் ..!
 
ஏகாதிபத்தியத்தை
நக்கி பிழைக்கும் நாய்கள்
நாடாளுகின்றன..!
அடிமைகளில் சிறந்தவர்களை
அறிவிக்கிறார்கள் "அமைச்சர்கள்" என..!
 
நம்மை கொலை செய்து
நல்லாட்சி நடத்துகின்றன
அரசுகள்..! 
 
தேசத்தை விற்பதே
நவீன தேசபக்தி..!
மறுப்பவனும் எதிர்ப்பவனும்
"தேசத்துரோகி"ஆவான்..!
 
ஒரு வேசியின் -
திறந்த யோனியைப் போல
எம்தேசம்..!
வன்புணர்ச்சி கொள்ள
வருக வருகவே
பன்னாட்டு நிறுவனங்கள்..!
 
கடவுள் இறந்து விட்டதை
உறுதி செய்யும்
பிரேத பரிசோதனை அறிக்கையை
ஏழை நாடுகளிடம்
விநியோகிக்கின்றன
வல்லாதிக்க நாடுகள்.

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It