மனுஸ்மிருதிக் காலம் தொட்டு
மாபெரும் வேள்வித் தீயில்
அணுஅணுவாய் மாட்டை வெட்டி
அழகாகச் சுட்டுத் தின்றான்
தனிச்சுவை அதிலே கண்ட
தர்ப்பைப்புல் பார்ப்பான்! இன்றோ
இனிப்பொறேன் என்று சொல்லிக்
களத்திலே இறங்கி விட்டான்

ஒருமாட்டை முழுசாய்த் தின்பான்
ஒருபத்துக் குதிரை உண்பான்
திருவோட்டு மக்கள் நம்மேல்
தீதென்ன கண்டு விட்டான்?
எருமைத்தோல் கூட்டம் என்றே
எண்ணிவிட் டானா நம்மை?
கருவாட்டுத் தட்டில் கூடக்
கைவைத்து விட்டான் பாவி!

மொத்த நம்ஏழை யர்க்கும்
முடிந்திடும் மட்டில் வாங்கச்
சத்தான, விலைகு றைந்த
சரக்கிது மட்டும் தானே?
புத்தத்தை, சமணம் தன்னைப்
பூண்டறச் செய்தான், இன்றோ
உத்தம வில்லன்போல், இதன்
உள்ளேயும் நுழைந்து விட்டான்

ஈசா! நீ காப்பாய்!” என்றே
இறைவனை வணங்கப் போனால்
நீசா! நீ நெருங்கி டாதே!
நில்!”என நம்மை இன்றும்
கூசாமல் புலையன் என்றே
கூறிடும் பார்ப்பான் எங்கும்
கோ’சாலை வைத்து மாட்டைக்
கும்பிடச் சொல்கின் றானே!

ஐடெக்கின் பொறிஞ னாக
அமெரிக்கா செல்வான் அம்பி
டைகட்டிக் கொண்டு காலில்
டக்கராய் துக்கூர ஷிவும்’
மெய்தொட்டு இறுக்கும் பெல்ட்டும்
மேலான மாட்டின் தோலால்
செய்திட்ட பொருள்கள் என்ற
சிந்தனை அவனுக் குண்டா?

ஏமாற்ற வந்த வெள்ளை
எசமானன் எதுசொன் னாலும்
ஆம், ஆம், ஆம்! எனத் தலையை
ஆட்டினான், அவனுக் கேதான்
மாமாவாய்ப் போனான்; நம்மை
மட்டமாய் ‘பறையா!’ என்றான்
கோ’மாதா கறிஉண் டோனைக்
கும்பிட்டுத் ‘துரையே!’ என்றான்

பால்ஆகும்; தயிரும் ஆகும்;
பசுமாட்டு வெண்ணெய் ஆகும்;
வால்தூக்கி மாடு பெய்யும்
கோமியம் ஆகும்; மாட்டின்
கால்மாட்டுச் சாணி ஆகும்
கழிசடைப் பிண்ட மான
நூல்மேனிப் பார்ப் பா னுக்குப்
பசுக்கறி நோவ தேனோ?

கிருத்தவன் துலுக்கன் இங்கே
கெட்டழிய வேண்டும் ; பார்ப்பான்
ஒருத்தன்தான் வாழ வேண்டும்!
மாட்டுணவு என்னும் பேரால்
நரித்தனம் செய்வான்! தோழா!
நம்பணி என்ன? இந்த
வெறித்தனம் மாய்க்க வேண்டும்
வீணரைச் சாய்க்க வேண்டும்!