பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களின் சிந்தனைகளும் எழுத்துக்களும் பேச்சுக்களும் இன்றைய நிலையில் உலக அளவில் உயிர் பெற்று நடைமுறைப்படுத்தப்படுவதை சோதனைக்குழாய் குழந்தை போன்ற பல்வேறு செய்திகள் மூலம் இன்று நாம் கண்டு, கேட்டு மகிழ்கிறோம். அந்த வகையில் பெண்கள் கடவுள் சிலைகட்டு வழிபாடு நடத்தும் உரி மையினைப் பெற்று வழிபாடு செய்து வருகின்றனர். இறந்துவிட்ட இரண்டு குருக்களின் விதவை மனை வியர் கடவுளுக்கு வழிபாடு நடத்தும் உண்மை நிகழ்வு நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

கோயில் கருவறை என்கிற புனித இடம் வரை சென்று வழிபாடு நடத்தும் நிகழ்வினை, இறந்துவிட்ட இரண்டு குருக்களின் மனைவிகள் இன்று புரட்சிகர மாகச் செய்து வருகின்ற நிகழ்வு கர்நாடக மாநிலம் மங் களூரில் நடந்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் நாள் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகாமையில் உள்ள குட்ரோலி கோகர்னநாதசுவாமி கோயிலில் இரண்டு விதவைப் பெண்கள் அர்ச்சகர்களாக ஆக்கப்பட்டதன் மூலம், பெண்களின் ஆளுமை மீட்டுருவாக்கம் பெற்றுள்ளது. அந்த இரண்டு பெண்களை அடையாளப்படுத்தி வெளியிடத் தயங்கியவர் முன்னாள் மத்திய அமைச்சர், பேராயக் கட்சியைச் சார்ந்த சனார்த்தனன் பூசாரி. இவ்விரு விதவைப் பெண்களுக்கு அர்ச்சகர்களுக்குத் தேவையான பயிற்சியினை 4 மாதங்கள் அளித்து வழமையான முறைப்படி அவர்கள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கருவறையில் உள்ள சிவன், அன்னபூர்னேஸ்வரி ஆகிய கடவுள் உருவங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்குள்ள தத்தாக்தேரி கடவுளைப் புனிதப்படுத்துதல் நிகழ்வினையும் செய்யப் பணித்தனர்.

சனார்த்தன் பூசாரி அவர்களின் இந்த நடவடிக்கை மானிட குலத்தின் சரிபாதி எண்ணிக்கையில் உள்ள பெண் குலத்தின் உரிமையை நிலைநாட்டும் முக்கிய நிகழ்வு என்பதில் எந்தவித அய்யப்பாடுமில்லை.

நாட்டில் இன்றும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் நடந்துகொண்டுள்ள இந்தத் தருணத்தி லும், இதுபோன்று பெண்கள் மதிக்கப்படுவது என்பது தாய்மையைப் போற்றும் பண்புகள் இன்றும் உள்ளன என்பதும், வேத நூல்களில் உயர்ந்த இடத்தில் பெண்கள் வைத்துப் போற்றப்பட்டதும், ஆண்-பெண் பாலினத் தின் சமநிலையைத் தூக்கிப்பிடிக்கின்றது. கணவனை இழந்த பெண்களைக் கைம்பெண்கள் என்று அழைப் பது தவறு என்பதை நிலைநிறுத்துகின்றது. கன்னடத்தில் ‘Mather Devo Bava’ என்பது ‘தாய், கடவுளுக்குச் சமமானவர்’ என்ற பொருளினை நினைவூட்டுகின்றது.

18ஆம் நூற்றாண்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட வகுப்பு மக்கள் இந்த குட்ரோலி கோயிலில் நுழைவதற்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. பில்லவா இனத்து மக்களாலும் தொடர்ந்து நாராயணகுரு அவர் களின் தலைமையில் கேரளத்து மக்கள் மத வழிபாடு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததன் விளைவாகவும், நாராயணகுரு அவர்கள் பிரகடனப்படுத்தி அறிவித்த - கடவுள் படைத்த அனைத்து உயிர்களும் சமமானவை; அவர்களது கடவுள் வழிபாடும் சமமானவை என்றும் அவரின் கொள்கையான ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே சாதி என்கின்ற அறிவிப்பாலும் நிலைமைகள் மாறின. நாராயணகுரு கேரளா முழுவதும் 101 கோயில் களைக் கட்டி எல்லா மக்களையும் சென்று வழிபட வைத்தார். அதன்பின் குருஜி என்று அழைக்கப்பட்ட சாருகர், தலைமையில் இந்த இயக்கம் மங்களூர் வரை பரவியது. 1994ஆம் ஆண்டு சாருகர் கொரகப் பாவினால் குடரோலிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் கம்பாகட்ட பகுதியில் புனிதப்படுத்தப்பட்டது. அந்தக் கோவிலின் முக்கிய வழிபடு தெய்வம் கோகர்மா நந்தா அதாவது சிவன் ஆகும்.

அந்தக் கோயிலின் கட்டட வடிவமைப்பு கேரள மாதிரியில் அமைந்துள்ளது. பின்பு அது சோழர் கலை வடிவமைப்பில் மாற்றப்பட்டது. அது 1991ஆம் ஆண்டில் முன்னாள் இந்திய முதன்மை அமைச்சர் இராஜீவ் காந்தியினால் தொடங்கி வைக்கப்பட்டது. பார்ப்பனர் அமைப்பின் தலைவரும் தெற்குக் கன்னட சாகித்திய பரிசித்தின் தலைவருமான பிரதிப்குமார் கல்குரா சனார்த்தன் பூசாரியினால் துவங்கி வைக்கப் பட்ட இந்த நிகழ்ச்சியினை வரவேற்றார்.

இதற்கு எதிர்மாறான கருத்துகளும் நிலவுகின்றன. பேராயக் கட்சியின் தலைவர் சனார்த்தன் பூசாரியின் முடிவு மக்கள் மனதில் அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது. “பெண்களின் ஆளுமையை மேம்படுத்தல் என்பது வேறு. ஆனால் பெண்கள் கோயில் கருவறைக்குள் நுழையலாமா? பெண்கள் ஆளுமைத் திறமையை ஊக்குவித்தல் நல்லதுதான். ஆனால், முக்கிய முடிவு களை மேற்கொள்ளும்போது அனைத்துத் தரப்பு மக்களின் கருத்தினைக் கேட்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்” என்று ஸ்ரீ ஈசா விட்டதால் சாமிஜி கருத்து ரைக்கின்றார்.

2011ஆம் ஆண்டு இக்கோயிலின் வரலாற்றில் புதுமை செய்யப்பட்டது. அதாவது மங்களூர் தசரா பண்டிகையின் சந்திகா யாகத்தின்போது, கைம்பெண்கள் கோயிலின் பண்டிகையில் கலந்துகொள்ளவும் வெள்ளித் தேரினை இழுத்துவரவும் அனுமதிக்கப்பட்டனர். அதே ஆண்டு அக்டோபர் 26ஆம் நாள் தீபாவளியின் போது அர்ச்சகர் மனைவி மாலதி பெண்தெய்வம் அன்னபூர் னேஷ்வரி முன்னிலையில் தங்களின் கணவர்கள் இறக்க நேரிட்டால், திருமணத்தின் போது செய்விக்கப் பட்ட புனிதச் சின்னங்களை அகற்றப்போவதில்லை என்ற உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார்.

கடந்த புத்தாண்டின் போது மணம்முடித்த 5000 பெண்கள் தங்கள் கணவன்மார்கள் இறந்துவிட்டால் தாங்கள் கைம்பெண்ணாக வாழவிரும்பவில்லை என்ற உறுதிபாட்டினையும், தொடர்ந்து மத மற்றும் புனித சடங்குகளின் போது முக்கிய பங்குவகிக்கப் போவதாகவும் உறுதி ஏற்றனர்.

இந்த ஆண்டுப் புத்தாண்டின் போது அர்ச்சகர், அனுசுயா குமாரி என்கின்ற 76 அகவை நிறைந்த கணவனை இழந்த ஓய்வுபெற்ற ஆசிரியைக்குப் பாத பூஜை செய்வித்தார். டெல்லியில் நடைபெற்ற பாலியல் குற்றத்துக்காக ஏறக்குறைய 5000 பெண்கள் தலா 5 கிலோ அரிசியை நல்லெண்ண அடிப்படையில் வழங்கினர்.

நன்றி - Bangalore Mirror Oct 4, 2013 - Deepthi Shridhar

தமிழில் : கோ.மு.கறுப்பையா