kulandaisamy 330கரூர் மாவட்டத்தில் காவிரியின் தென்கரை யி லுள்ள வாங்கலாம் பாளையத்தில், 14.7.1929இல் பிறந்தவர் நீரியில் அறிஞரும், கல்வியாளரும், கவி ஞரும், பகுத்தறிவாளருமான வா.செ.குழந்தைசாமி அவர்கள் தம் 87ஆம் அகவையில், 10.12.2016 சனி அன்று மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் அறி விக்கிறோம்.

வா.செ.குழந்தைசாமி கல்வி பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தம்பி வா.செ.பழநிசாமி தலை சிறந்த வழக்குரைஞர்.

வா,செ.குழந்தைசாமி இந்தியாவில் பொறியியல் பட்டமும், செருமனி, அமெரிக்காவில், உயர் படிப்புகளை யும் பெற்றவர்.

அடிப்படையில்-கல்லணை கட்டுமானம் பற்றி நன்கு அறிந்து, நீரியல் பொறியாளராக இருந்தாலும், சிறந்த கல்வியாளராகவும் இருந்தாலும், பகுத்தறி வாளராகவும் திகழ்ந்தவர்.

1978-1979இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களிலும் 1981-1990 இல் அண்ணா பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராக விளங்கியவர்.

இப்பணிகளுக்கிடையே சிறந்த இலக்கிய இயலாள ராகவும், “குலோத்துங்கன்” என்ற புனை பெயரில் இளமை தொட்டுக் கவிதைகளை எழுதுபவராகவும் திகழ்ந்தார்.

தந்தை பெரியாரோடும், “திருச்சி சிந்தனையாளர் கழகத்தின்” தலைவர் கு.ம.சுப்பிரமணியம், மற்றும் தி.க.தோழர்கள் சிலருடனும் நல்ல தொடர்பிலிருந்தவர்.

“திருச்சி சிந்னையாளர் கழகம்”, 7-3-1970இல், பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது. “உண்மை” தமிழ் மாத இதழ் 15-1-1970இல் திருச்சி பெரியார் மாளிகையில் தொடங்கி வைக்கப்பட்டது.

“பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” தொகுக்கும் பணியை 1971-72இல் நான் மேற்கொண்டேன். ஆசிரியர் ந.கணபதி எனக்குத் துணை நின்றார். 4, 5 இளைஞர்கள் மூலங்களைப் பார்த்து எடுத்தெழுதினார்கள்.

இம் முயற்சியைப் பற்றி யாரோ சிலர் சொன் னதை நம்பி, “யாரோ நான்கு பேர்-யானையைக் காண முயலும் குருடர்கள் போல்-பெரியார் சிந்த னைகள் என்று தொகுக்கிறார்களாம். என்று கொச் சைப்படுத்தி, 1972இல் “உண்மை”, இதழில் எழுதினார், வா.செ.குழந்தைசாமி.

“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூல், 1.7.1974 இல் வெளியிடப்பட்டது.

அப்பணியைச் செய்தவர்க்கு, எனக்குப் பாராட்டு விழா நடத்திட, எனக்குத் தெரியாமலே கு.ம.சுப்பிரமணியன், நோபின் கு.கோவிந்தராசலு, ச.சோமு, உறையூர் கோ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்து விட்டனர்.

எனக்குப் பாராட்டு உரை வழங்க வா.செ.குழந்தை சாமி அவர்களையே அழைப்பது என, வேண்டு மென்றே, முடிவு செய்தனர்.

விழாவில் என்னைப் புகழ்ந்து பேசினார். அப்பேச் சின் ஊடே, “தந்தை பெரியாரின் பேச்சும் மூச்சும் தமிழ்நாட்டுப் புழுதியோடும் காற்றோடும் கலந்து விட்டன. அதை எவரும் அழிக்க முடியாது” என்று அப்பெருமகனார் பேசிய பேச்சை ஒலி பெருக்கியில் கேட்ட நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் விழா நடந்த தேவர் மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஈயைப் போல் மொய்த்துவிட்டனர்.

அத்தகைய பேச்சாற்றல் மிக்கவர் அறிஞர் வா.செ. குழந்தைசாமி, அப்பெருமகனாரின் மறைவு தமிழ்-தமிழர் நலனுக்குப் பேரிழப்பாகும். அத்தகைய பேரிழப் புக்கு ஆளாகித் துன்பமடையும் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

வாழ்க வா.செ.குழந்தைசாமி புகழ்!

Pin It