கீற்றில் தேட...

அண்மைப் படைப்புகள்

ஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘குண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

Hiroshimaசுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலக யுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சு பதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

“ அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது. அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது.

‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணீக்கு ஹிரோஷிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது .அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் ஹிரோஷிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.

ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளீப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Pin It

Map of samoa1888 ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்டு வந்த, தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள - சமோவா என்றழைக்கப்படும் தீவுக்கூட்டங்களை தன் காலனிக்குள் கொண்டு வர விரும்பினார். அதற்காக ஒரு படைக்கப்பலை சமோவாவிற்கு அனுப்பினார். ஜெர்மானிய வீரர்கள் அந்தத் தீவின்மீது குண்டுகளை வீசித் தாக்கினர். அதில் சில குண்டுகள், அந்தத் தீவிலிருந்த அமெரிக்க நாட்டுக்குச் சொந்தமான சொத்துக்கள் மீதும் விழுந்தன. அங்கிருந்த அமெரிக்கக் கொடியை ஜெர்மானிய மாலுமிகள் கீழிறக்கினர். இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த அமெரிக்க அரசு, பதில் தாக்குதலுக்காக தனது போர்க்கப்பலை அங்கு அனுப்பியது. இருநாட்டுக் கப்பல்களுக்கும் இடையே கடும்போர் மூளவிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்த்து. பெரும் புயல் ஒன்று சமோவா துறைமுகத்தைத் தாக்கியது. அதில் இருநாட்டுக் கப்பல்களும் அழிந்தன. அதனால் பெரும்யுத்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இரத்தம் மட்டுமே தோய்ந்திருக்கும் உலகப் போர் வரலாற்றில் மெல்லிய புன்னகை வரவழைக்கும் சம்பவமாக இன்றும் இது இருக்கிறது.

Pin It

கியூபாவுக்கு வெளியே FOCO கிளர்ச்சிக் குழுக்களைத் துவக்கியதன் மூலம் குவேராயிசம் செல்வாக்கு பெற்றிருந்தது. கியூபாவுக்குள் அது சோஷலிசக் கட்டுமானத்தின் மூலம் ஒரு மார்க்சீய லெனினியக் கட்சியின் முன் மாதிரியாக இருந்தது. போக்கோ கிளர்ச்சி குழுக்களின் வாரிசு என்ற முறையில் கட்சியின் முன்னணி போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டது. சாராம்சத்தில் குவேராயிசம் இரண்டு கட்டமான ஆனால் தொடர்ச்சியான புரட்சிக்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தது. அதில் போக்கொ கிளர்ச்சிக் குழுக்கள் முதல் கட்டத்தின் முன்கையெடுக்கும் செயற்பாட்டுடனும், இரண்டாம் கட்டத்தில் மார்க்சீய லெனினிய கட்சியின் முன்னணி செயற்பாட்டுடனும் இயங்கின.
Cheஇருந்த போதிலும், ‘தொடர்ச்சியான புரட்சி’ என்ற இரட்டைப்பணியை ஒரு ஒற்றை அமைப்பு செய்யக்கூடிய சாத்தியத்தை சே- திறப்பாகவே விட்டிருந்தார். ‘மார்க்சீய லெனினியகட்சி ’ (1963) என்ற கட்டுரையில், கட்சியின் முன்னணிப் படையான போக்கொ புரட்சி மையங்களுக்கு மாற்று என அவர் கருதவில்லை. ஆனால் அதுவே தன்னளவில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல்_இராணுவ முன்னணி என்றார். ஒவ்வொரு அரசியல் இராணுவப் புரட்சி மையங்களும் மார்க்சீய லெனினிய கட்சியாகத் தகுதி அடையாது என்ற போதிலும் ஆயுதப் புரட்சி மூலம் தனது தகுதியை வென்றெடுத்தால் ஒழிய எந்தவொரு கட்சியும் முன்னணிப்படை (vanguard) ஆகாது எனவும் கருதினார்.

தேசீய விடுதலை என்கிற கட்டத்தினைக் கடக்கு முன்னரே மக்களின் முன்னணிப்படையாக ஆக முடியும் என்றால் அந்தக் கட்சி சோஷலிசத்தைக்கட்டும் பணியை எதிர்கொள்ளும்போது அதிக தீவிரத்துடனும் மக்கள் மத்தியில் அதிக மதிப்போடும் இருக்கும் எனச் சொன்னார். அத்தகைய சந்தர்ப்பத்தில் முன்னணிக் கட்சியானது போரின் மூலம் உள்நாட்டு ஆளும் வர்க்கத்திடமிருந்தும் எகாதிபத்தியத்திடமிருந்தும் மக்களை விடுவிக்கும் வரலாற்றுக்.கடமையை நிறைவேற்றி இருக்கும், பழைய சமூக அமைப்பை அடித்து நொறுக்கிவிட்டு புதிய சமூக அமைப்பை உருவாக்கி இருக்கும்” என்றார்.

எப்படி புரட்சிகர மையத்தை மார்க்சீய லெனினிய கட்சியுடன் இணைப்பது என்பது குறித்து வாங்குயின் ஜியாப்பின் மக்கள் யுத்தம் -மக்கள் ராணுவம் (Genaral Vonguyen Giap’s - People’s war- People’s Army) என்ற நூலின் கியூப மொழிப்பதிப்பிற்கான தனது முன்னுரையில் கோடிகாட்டுகிறார். வியத்நாமிய முன்மாதிரியில் கொரில்லாக்களும் மக்கள் படையும் ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கி வழிகாட்டும் மார்க்சீய லெனினிய கட்சியின் முஷ்டிகளாக இருந்தன. புரட்சிகரப் படையானது ஆயுதந்தாங்கிய மக்கள் திரளை மட்டுமல்ல, ஆயுதந்தாங்கிய கட்சியையும் கொண்டிருந்தது. வியத்நாமிய முன் மாதிரியானது கியூபாவை விட அனைத்தும் உள்ளடக்கியதாக இருந்தது.ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவது கடினமானது.

மார்க்சீய லெனினிய கட்சியின் சரியான வரலாறு பற்றிய அவரது கோட்பாடு ‘கட்சியைக் கட்டுவது பற்றி ‘ (1963) என்ற அவரது கட்டுரையில் தரப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் அவர் மார்க்சீய லெனினிய கட்சியின் இரண்டு பிரதான கடமைகளாவன அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதும் வளர்த்தெடுப்பதும் என வரையறுத்து உள்ளார். இந்தத் தத்துவம் ‘சோஷலிசமும் கியூப மனிதனும்’ (1963)என்ற கட்டுரையில் மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் கம்யூனிசத்தைக் கட்டுவதற்கு பொருளாதார அடிப்படையோடு கூடவே ஒரு புதிய வகையிலான மனிதனும் உருவாக்கப்பட வேண்டும் என்றார். இவை ஒரே சமயத்தில்-இணையானவயாக உருவாக்கப்பட வேண்டும்.. கியூபாவின் பொருளாதார கலாச்சாரப் புரட்சியின் பின் விளைவாக அல்ல என்றார். இந்தக் கொள்கையானது கிளர்ச்சி மையங்கள் பற்றிய அவரது முதல் நிலைப்பாட்டுக்கு நெருக்கமான ஒப்புமை கொண்டுள்ளது. இவ்வாறாக ஒரு முறையான ராணுவத்தை முறியடிக்க புரட்சிகரக்கட்சி அவசியம் இல்லையென்றபோதிலும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளைக் கடந்து செல்ல கட்சி அவசியம் ஆகிறது.

அதே சொற்பொழிவில்தான் கம்யூனிசத்துக்கான மாற்றத்தைத் துவக்குவதில் கட்சியின் மூன்னணியானது பொருளாதார நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்காக காத்திருக்க அவசியம் இல்லையென்று சொன்னார். போதுமான அளவு குறைந்த பட்ச வளர்ச்சி இருக்கும் போது புறவயமான நிலைகள் தூண்டிவிடப்பட முடியும் எனவும், அவர் ‘கிரியா ஊக்கிகள்’ என அழைத்த செயற்பாட்டினைப் பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சிக்கான கால அவகாசம் குறைக்கப்பட முடியும் எனவும் சொன்னார். இந்த வழியில் சோஷலிசத்தை உறுதிப்படுத்துமுன் இடையிடையே வரும் கட்டங்களைத் தவிர்த்து கம்யூனிசத்துக்கான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றார்.

சோஷலிசமும் கம்யூனிசமும் அடிநாதமாக உறையும் எதிர் நிலைகளின் விளைவு மட்டுமல்ல, கட்சியின் முன்னணி, சமூக மாற்றத்தை வழிகாட்டி ஊக்குவித்தலின் விளைவும் ஆகும் என்றார். ‘மார்க்சீய லெனினியக் கட்சி ’ என்ற நூலின் குறிப்புகளில் சே- குறிப்பிடுவது போல; புறவயமான அகவயமான எல்லா நிலைகளும் கூடிவரும் வரை புதிய சமூக அமைப்பினைக் கட்டுமானம் செய்யக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியின் முன்னணிப்படை இவற்றை உருவாக்க முடியும் என்றார். கிளர்ச்சி மையங்கள் பற்றிய சேயின் பொதுமைப்படுத்தலுக்கும் இதற்கும் ஒரு வெளிப்படையான ஒப்புமை இருக்கிறது. கட்சியின் முன்னணித் தத்துவம் வேண்டுமென்றே பின்னதன் மேல் முன்மாதிரிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் கிளர்ச்சி மையம் என்பது மார்க்சீய லெனினிய கட்சி அரசியல் கருவின் சிந்தனை ஆகும்.

அத்தகையதொரு கட்சியின் கவர்ச்சி பொருத்தப்பாடு உழவர்களைவிட திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கத்துக்கானது. இந்த வெளிச்சத்தில் பார்த்தால் சேயின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதற்குறிப்பு ‘கட்சி கட்டுதல்’ பற்றிய அவரது கட்டுரையில் வெளிவந்தது குறிப்பிடத் தகுந்தது. போக்கோ புரட்சி மையம் புரட்சிக்கான எழுச்சியில் அரசியல் முன்னணிப்படையாகத் தொண்டாற்றியது என்பதுடன் நிலச்சீர்திருத்தத்துக்கும் பிரதான முகவராகச் செயல்பட்டது. சோஷலிசக் கட்டுமானத்தின் போது முன்னணிப்படையாகச் செயல்பட்ட கட்சியானது கியூபாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் முகவராகச் செயல்பட்டது.

‘பாட்டாளி வர்க்கமும் கியூபாவின் தொழில்மயமாதலும் (1960)’ என்ற கட்டுரையில் சே- குறிப்பிடுவது போல் : முந்தைய புரட்சிகர நோக்கமான நிலச்சீர்திருத்தத்தின் மூலமாக உழவர்களைத் திரட்டுவது என்பது பின்னர் கட்டுமான கட்டத்தில் தொழில்மயமாக்கலின் மூலம் தொழிலாளரைத் திரட்டுவது என மாற்றம் பெற்றது. புரட்சிகர மையம் பற்றிய சே - யின் மூன்றாவது பொதுமைப்படுத்தலுக்கும் இதற்கும் வெளிப்படையான ஒப்புமை இருக்கின்றது. புரட்சிகர மையத்தின் இலட்சியத்தின் உச்சம் கிராமப்புரம் எனின் கட்சியின் பிரதான குவிமையம் நகரத்தில் இருக்கிறது.

சே-யின்பிரதான பொருளாதாரக் கட்டுரைகளில் கட்சியின் முன்னணிப் படையுடைய திட்டவட்டமான கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன என்பதுடன் ‘சோஷலிசத்திட்டமிடலும் அதன் முக்கியத்துவமும்’ (ஜூன் 1964) என்ற கட்டுரையில் சுருக்கித் தரப்பட்டுள்ளது .சர்வதேச முதலாளித்துவத்தின் புறவயமான பிணைப்புகள் வளர்ச்சி குன்றிய நாடுகளில் மிகவும் பலவீனமாக உள்ளன. அங்கு நிலவும் ஏகாதிபத்தியத்தின் அகவயமான பவீனமான கன்னிகளை உடைத்தெரிய , பாட்டாளி வர்க்கத்துக்கு உதவுவதாக அமைந்துள்ளன என்கிற லெனினியக் கோட்பாட்டினை இந்தக் கட்டுரை மறு உறுதி செய்கிறது. பொருளாதார சார்பு நிலையைக் கடந்து செல்வதில் சே- பரிந்துரைக்கும் போர்த்தந்திரம், தொழில் நுட்ப பொருளாதார அடிப்படையை நிர்மானிப்பதும் புதிய மனிதனை உருவாக்குவதும் இணையானதும் உடனடியானதும் என்பது ஆகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஏகாதிபத்தியத்தால் காலனியாக்கப்பட்ட தனக்கென சொந்த தொழில் ஏதுமில்லாத தனிப்பட்டதொரு சந்தையை நம்பியிருக்கும் நாட்டில் சோஷலிசத்தைக் கட்டுமானம் செய்வது எப்படி என்ற கேள்விக்கு இது தான் விடையாகும்.

வளர்ச்சி குன்றிய நாடுகளுக்குப் பொருத்தமான சோஷலிசத் திட்டமிடலின் நிதி ஒதுக்கீட்டு மாதிரி அதே தலைப்பிலான அவரது கட்டுரையில் கோடிகாட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டுக்கான இந்த மாதிரியானது ஸ்டாலினிய _ ஸ்டாலினிய சித்தாந்தத்துக்குப் பிறகான திட்டங்களப் புறமொதுக்கி மார்க்ஸின் ‘கோதா வேலைத்திட்டம் பற்றி ‘ (மே 1878) என்ற கட்டுரையில் விவரிக்கப்பட்டதும் , லெனினின் ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலில் மறு உறுதி செய்யப்பட்டதுமான மாதிரியைப் பின் பற்றுகிறது. சோவியத் நாட்டில் முதலாளித்துவ பொருளாதார செயல்பாட்டிற்கு பணிபுரியும் தனிச்சொத்துடைமை, தனிப்பட்ட முறையில் லாபம் , டிவிடெண்டுகள் வட்டி வாடகை ஆகியவற்றை ஒழித்ததன் மூலம் கடந்து செல்லப்பட்டன என சே- வாதிட்டார்.

இவை சோஷலிசத்துக்கு ஏற்புடையன ஆனால் சந்தை உறவுகளைக் கடந்து கம்யூனிசத்துக்கு மாறுவதான நிபந்தனை என்பதற்குக் குறைவானவை எனவும் வாதிட்டார். ஏற்கனவே சொல்லப்பட்ட கோதா வேலைத்திட்டம் பற்றிய கட்டுரையில், கம்யூனிசத்தின் அடிமட்ட கட்டத்திலேயே சந்தை உறவுகளையும், தரப்படுத்தப்பட்ட மனித உழைப்புக் காலத்தின் அடிப்படையில் ஊதியத்தை நிர்ணயிப்பதில் ஆதிக்கம் செலுத்தும் சந்தை உறவுகளையும் பணத்தின் பாத்திரத்தையும் அகற்றி விடுகிறது.

நிதி ஒதுக்கீட்டில் முன்கூட்டியே வரவு செலவு திட்டமிடல் என்பது உற்பத்தி உறவுகளை முதலாளித்துவத்துவ இருந்து கம்யூனிச முறைக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது..அதே வேளையில் சே- யின் கோட்பாடான விருப்ப (தன்னார்வ) உழைப்பு என்பதோ முதலாளித்துவ மனித உறவுகளை கம்யூனிச மனித உறவுகளாய் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1964 இல் அவர் ஆற்றிய உறையில் விருப்ப உழைப்பின் நோக்கத்தில் பலவிதமான வெளிப்பாடுகள் உண்டு எனவும், முதலாவதாக சலிப்பான வேலைச்சுமையை சமூகப்பங்கேற்பான புரட்சிகரமான கடமையாய் மாற்றுவது., இரண்டாவதாக மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்குமான வித்தியாசங்களைக் கடந்து செல்வது, மூன்றாவதாக செலவினம்/உற்பத்தி செலவு பற்றிய அக்கறை உள்ள மக்களுக்கு உழைப்பின் மதிப்பு தெரியுமாதலால் வீண் சேதாரங்களைக் குறைப்பது, விருப்ப உழைப்பு என்பது. கம்யூனிச சமுதாயத்தில் எந்த பொருளாதார ஆதாயத்தையும் (ஊக்கத்தொகை) எதிர்பாராமல் அல்லது பொருளாதார சலுகைகளை மிகையாகப் பெறாமல் செலுத்தப்படும் உழைப்பு எனவும் சொன்னார். ஒன்றிணைந்த பொருளாதார மற்றும் கல்விப்பணிகள் சே-யின் ‘ திட்டமிட்ட வரவு செலவு வாயிலாக நிதி ஒதுக்குதல் மற்றும் விருப்ப(தன்னார்வ) உழைப்பு வழங்குதல் இவற்றின் மூலம் கட்சியின் முன்னணிப்படையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

கட்சி முன்னணிப்படையின் பொருளாதார மற்றும் கல்வி புகட்டும் பணிகள், விருப்ப (தன்னார்வ) உழைப்பு மற்றும் நிதி ஒதுக்கலில் வரவு செலவினை முன்கூட்டியே திட்டமிடல் என்ற சே-யின் வழிகாட்டலின்படி நிறைவேற்றப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் செலவினங்களைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்குதல் என்றபோதிலும் அது பொருளாதார ஊக்கத்தொகையின் பரப்பு எல்லையைக் குறைத்து புதிய மனிதனுக்கு கல்வி புகட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. விருப்ப (தன்னார்வ) உழைப்புத் திட்டம் புதிய மனிதனுக்குக் கல்வி புகட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும் அதன் நோக்கம் உற்பத்தியின் அளவை அதிகரிப்பதாக இருந்தது. வளர்ச்சிக்குறைவை சமாளிக்கும் இந்த இரு எதிர் வினைகளும், கியூப புரட்சியினுள் குவேராயிசத்தை தெளிவாக வரையறுக்கும் நீரோட்டமாக இருந்ததுடன் ஒருகாலகட்டத்தில் பிடலின் ஆதரவையும் பெற்றிருந்தது. இருந்த போதிலும் 70-களில், வரவு செலவைத்திட்டமிடல் கைவிடப்பட்டு பொருளாயத ஊக்கச் சலுகைகளை அதிகரித்ததானது, பிற்பாடு கியூபப்புரட்சி தனக்கென சொந்த வழியை வகுத்துக் கொண்டதைக் காட்டுகிறது.

ஆங்கில மூலம் DONALD C. HEDGES - LEGACY OF CHE GUEVARA

தமிழாக்கம் : புதுவை ஞானம். - புதுவை ஞானம்

(குறிப்பு: இந்த மொழிபெயற்பு மறைந்த தோழர். திருவொற்றியூர் இராகவன் அவர்களது விருப்பத்தை நிறைவேற்று முகத்தான் செய்யப்பட்டது. இதன் முற்பகுதி அதாவது ‘கிளர்ச்சிக்கு முந்தைய கட்டம்’ - திண்ணை இணைய தளத்தில் www.thinnai.com வெளியிடப்பட்டது. அடுத்த பகுதி இப்போது வெளியாகிறது. ஒரு விபத்து - தலையில் நடந்த அறுவைச் சிகிச்சை அதன் பின் விளைவுகள் எனது மொழியாக்கப் பணியைத் தடுத்து விட்ட போதிலும் இனி முடிந்தவரை தொடருவேன்.)

Pin It

1961 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரிககாரின் ‘மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்’ என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வாலெண்டினா திரஸ்கோவா தேர்வு செய்யப்பட்டார்.

‘வோஸ்டாக்-6’ என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 ஜூலை 16 ம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார் வாலெண்டினா. விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்த விண்வெளி வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார் வாலெண்டினா.

ஜூன் 19 ம் தேதி விண்கலம் பூமிநோக்கி பாய்ந்து வந்தபோது தரையிரங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து பாதுகாப்பாக இறங்கினார் வாலெண்டினா. ‘ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்’ என்ற மெடலுடன் ‘லெனின் விருது’ மற்றும் பல விருதுகள் குவிந்தன. இந்த வெற்றி அத்தனையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தார் வாலெண்டினா.

Pin It

இன்று மிகச்சிறந்த கவிஞராக கொண்டாடப்படும் ஷெல்லி வாழும் காலத்தில் புறக்கணிக்கப்பட்டவர். தன்னுடைய கவிதையை வெளியிடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டவர். அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் கழித்துத்தான் அவரது கவிதைகள் அவரது மனைவியால் வெளியிடப்பட்டன.

1810 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஷெல்லி. தனது 17 வயதில் நாத்திகத்தின் அவசியம் (The Neccessity of Atheism) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது. தொடர்ந்து இதுபோன்ற புரட்சிக் கருத்துக்களை ஷெல்லி வெளியிட்டார்.

ஷெல்லியின் தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மதப்பற்று மிகுந்தவர். அவர் ஷெல்லியின் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுமாறு வேண்டினார். ஷெல்லி மறுக்கவே உதவி செய்வதை தந்தை நிறுத்திக் கொண்டார். இதனால் உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டது, இருந்தாலும் தன்னுடைய புரட்சிகர எழுத்தை மட்டுமே ஷெல்லி நிறுத்திக் கொள்ளவே இல்லை.

அவர் இத்தாலியில் தங்கியிருந்தபோது படகொன்றில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பெரும் புயலடித்து படகு கவிழ்ந்தது. 1822 ம் ஆண்டு 30 வயது கூட நிறைவடையாத ஷெல்லி மரணமடைந்தார். ஆனால் அவரது கவிதைகள் அவர் இறந்த பதினேழு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட போது பெரும் புயலைக் கிளப்பியது. இன்று வரை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்படும் ஷெல்லி வாழ்நாளில் ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.

Pin It