“பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல” இது சமீப காலத் திரைப்படங்களில் இடம் பெறும் முத்திரை உரையாடல். இது நிழல் உலக காட்சி

ஆனால் உண்மையிலேயே சிங்கள இனவெறி இராணுவத்தினருக்கு, விடுதலைப்புலிகள் தளபதி, பிரிகேடியர் பால்ராஜ் என்ற பெயரைக் கேட்டாலே குலை நடுங்கிப் போகும். அவரின் போர்த்திறன் அத்தகையது.

balraj_450விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.

பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தன் இளம் அகவையிலேயே யுத்தக் கலையில் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். போராடும் குணம் என்பது இயற்கையாகவே அவரது உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. தமிழீழ விடுதலையின் மீது தீராத காதல் கொண்ட பிரிகேடியர் பால்ராஜ் 1983-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்!

விடுதலைப் புலிகளின் வீரவரலாற்றில் பிரிகேடியர் பால்ராஜ் கண்ட களங்கள் பல.

1986-இல் கிளிநொச்சி கரடிப் போக்குச் சந்தியில் நிலை கொண்டிருந்த இலங்கை சிறு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி முகாமைக் கைப்பற்றி தனது முதல் சமரை வரலாற்றில் பதிவு செய்து கொண்டார் பால்ராஜ்.

இந்திய அமைதி (அமளி)ப்படை 1990- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழமண்னை விட்டு அகற்றப்பட்ட பின்னர் வன்னி மண்ணின் தளபதியாக நியமிக்கப்பட்டார் பால்ராஜ். வன்னியில் தமிழர்களின் வாழ்விற்குப் பெருந்தடையாக இருந்த சிங்களப் படைத்தளங்களைத் துடைத்தழிக்கும் பணியில் ஈடுபட்டார்.

1990-ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்து சிங்களப் படைத்தளங்களை தனது தாக்குதல் நடவடிக்கையால் தகர்த்தெறிந்தார் பிரிகேடியர் பால்ராஜ்.

1991-1993, 1995-1997 அகிய காலக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் முதலாவது மரபு வழிப்படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையை வழி நடத்தினார் பிரிகேடியர் பால்ராஜ்.

மணலாற்றில் சிறிலங்க சிங்களப் படைகள் மேற்கண்ட “மின்னல்” நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலைச் சிறப்பாக எதிர்கொண்டார். இதன் பின்னர் தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் துணைத்தலைவர் என்ற உயர்பதவியில் நியமிக்கப்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்.

பிரிகேடியர் பால்ராஜ் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்திய சமர்களாக யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையைக் குறிப்பிடலாம். எதிரிகளின் டாங்கிகளை முதன் முறையாக அழித்த இந்நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

அச்சமரில் சிறிலங்க இராணுவத்தின் கேணலாக இருந்த சரத் பொன்சேகா தலைமையில் ஆனையிறவிலிருந்து, வடக்காக யாழ்பானம் நோக்கி நடத்தப்பட்ட ‘யாழ்தேவி’ நடவடிக்கையை பெறும் ஆறே நாட்களில் முறியடித்தார் பால்ராஜ். சிங்களர்களிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கியது இச்சுமர்.

சிறிலங்க இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்ச்சலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும், ‘இடிமுழக்கம்’ நடவடிக்கைக்கு எதிரான சண்டையிலும் பின்னர் இடம் பெற்ற ‘சூரியக்கதிர்’ இராணுவ நடவடிக்கைக்கு எதிரான தாக்குதல்களிலும் தலைமை தாங்கினார் பிரிகேடியர் பால்ராஜ். இச்சமரானது 1995-இல் யாழ்ப்பானத்தில் நடைபெற்றது.

புலிகளின் “ஒயாத அலைகள்-1” என்ற பெயரிலான தாக்குதல், 1996-ஜீலை18-இல் முல்லைத் தீவு இராணுவ முகாம் மீது நடத்தியது. இத்தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தாக்குதல் நிகழ்வும் பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

மேலும் 1998-இல் கிளிநொச்சியை மீளக்கைப்பற்றிய “ஓயாத அலைகள்-2” நடவடிக்கைக்கும் தலைமை தாங்கினார்.

2000-மார்ச்-18-இல் 1500 போராளிகளுடன் குடாரப்பில் தரையிறக்கி விடப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் தன் தலைமையில் 34 நாட்கள் தாக்குப்பிடித்து ஆனையிறவுக்கான வினியோகத்தை துண்டித்ததன் மூலம் ஆனையிறவு கைப்பற்றப்பட்டது. இச்சமரே சமர்களுக்கெல்லாம் ‘தாய்ச்சமர்’ என்று புலிகளால் கருதப்பட்டது.

இச்சமரின் போது தனது சக போராளிகளிடம் பேசும் போது, “எதிரி ஆக்கிரமித்துள்ள எங்களுடைய யாழ் மண்ணில் மீண்டும் நாம் காலடி எடுத்து வைக்கப்போகிறோம். நாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை எதிரிக்குச் சொல்லி வைக்கப் போகின்றோம். புலிகள் யார் என்பதை எதிரிக்குக் காட்ட வேண்டும்” என்ற கூறி செருக்களமாட ஆயத்தப்படுத்தினார் பிரிகேடியர் பால்ராஜ்.

இத்தாவின் பெட்டிச் சமரில் சிங்களப் படைகளின் தலைமை தளபதிகள் வகுத்தத் திட்டங்கள், தந்திரங்கள், மற்றும் சர்வதேச இராணுவ வல்லுநர்களின் ஆலோசனைகளோடு களமிறங்கிய சிங்கள இராணுவப் படையை திக்குமுக்காட வைத்து, அவர்களின் இராணுவ நிலைகளைத் தவிடுபொடியாக்கியது பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான படையணி.

இச்சமரின் இடையே பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்ட சிங்கள இராணுவம் அந்நடவடிக்கையினூடே பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ கைப்பற்றுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தது. ஆனால் அச்சமரின் இறுதியில் சிங்களப்படைக்கு பின்னோக்கி – புறமுதுகிட்டு ஒடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை

இச்சமர் தொடர்பாக தளபதி காமினி கெட்டியாராட்சியைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், “40000 பேரைக் கொண்ட படையைக் கொண்டு, வினியோகம் ஏதுமின்றி சண்டையிடும் 1500 பேரைச் சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா?” என்று கடுமையாக வசவு பாட, அதற்கு கெட்டியாராட்சி அளித்த இரு வரிப் பதில்தான் பிரிகேடியர் பால்ராஜின் வீரத்தைப் பறைசாற்றும் கண்ணாடியாக விளங்குகிறது.

அவரின் பதில்:

“பிரபாகரன் நேராக வந்து சண்டையிட்டாக் கூட சமாளிக்சுடுவோம், ஆனால் வந்திருப்பது பால்ராஜ், நிலை கொண்டுவிட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்”

இந்த உரையாடல் இத்தாவில் சண்டைத் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உரையாடல் பதிவினை ஆனையிறவு வெற்றியுடன் திரும்பிய தளபதி பிரிகேடியர் பால்ராஜ்க்கு தலைவர் பிரபாகரன் போட்டுக் காண்பித்தார்.

குடாரப்பில் இறங்கி நடக்க முடியாத கால்களுடன் நடந்து வந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை ஒளிப்படம் எடுத்து தன் பணிமனையின் சுவரில் மாட்டி அம்மாவீரனுக்கு மண்ணில் வாழ்ந்த காலத்திலேயே மணி மகுடம் சூட்டினார்.

தமிழர்களின் புறநானூற்று வீரத்தை நிகழ்காலத்தில் உலகுக்குக்காட்டிய புலிகளின் வரலாற்றில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு உரிய இடம் உண்டு.

வீரம் விளைந்த ஈழத்தின் விடுதலைக்கு வித்தாய்-விதையாய் மாறிப்போன பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஈகம் தமிழ்கூறும் நல்லுலகு உள்ளவரை நிலைந்து நிற்கும்.

சிங்கள இராணுவ நிலைகளுக்கு இடையே முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதும், ஈழத்தின் விடுதலைக்கும் - தமிழ்தேசத்தின் விடுதலைக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பதும்-களமாடுவதும் தான் ஈழ விடுதலைக் கனவில் தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அகவணக்கமாக அமையும்.

- தங்க.செங்கதிர்

Pin It

காரல் மார்க்சு 1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத் தில் பிறந்தார்.

காரல் மார்க்சு தன் பள்ளிப் படிப் பின் இறுதித் தேர்வில், “எதிர்காலப் பணி யைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், “மனித குலத்தின் பெருமைக்காகப் பாடுபடக் கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொண்டால், எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. ஏனெனில் அவை யெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது; கஞ்சத் தனமில்லாதது; அகங்கார மற்றது. நமது மகிழ்ச்சி கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும்; என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். உன்னத மான மனிதர்கள் வடிக்கும் கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்” என்று எழுதினார். ஆழ்ந்த கருத்துகளைக் கவிதை நடையில் எழுதும் ஆற்றல் காரல் மார்க்சுக்குப் பள்ளிப் பருவத்திலேயே அமைந்துவிட்டது. மார்க்சு எழுதிய இக்கட்டுரையும் மற்றும் ஆறு கட்டுரைகளும் இன்றும் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன.

‘டெமாக்ரிடஸ்  மற்றும் எபிகூரசு ஆகியோரின் இயற்கை பற்றிய தத்துவத்தில் வேறுபாடு’ எனும் தலைப்பில், மார்க்சு தன் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதினார். டெமாக்ரிடஸ், எபி கூரசு இருவருமே நாத்திகர்கள். ஆயினும் டெமாக்ரிட சைவிட எபிகூரசின் ஆய்வும், தத்துவமும் உயர்ந்த வை என்பது மார்க்சின் மதிப்பீடாகும். இக்கட்டுரையில் எபிகூரசை, கீழ்க்குறித்துள்ள லுக்ரிடசின் புகழ் மொழி களை மேற்கோள் காட்டி மார்க்சு பாராட்டியுள்ளார்.

“பிணம் போல் கனத்த மதத்தின் சுமை தாங்காமல் மனிதக் கண்ணுக்கும் புலப்படாதபடி மனித வாழ்வு முட்டிபோட்டு ஊர்ந்தது. முரண்டு பிடித்த தனது ஊனக் கண்களை கிரேக்கத்தின் ஒரு மனிதன் உயர்த்தி னான். முதலில் முதுகெலும்பை நிமிர்த்தினான். துணிவோடு எதிர்கொண்டார். கடவுள்கள் பற்றிய கதைகள் அவனை நொறுக்கவில்லை. வானத்தின் மின்னல் ஒளியும் இடியும் அவனை அசைக்கவில்லை. அவனது காலடி யில் மதம் வீழ்ந்து நசுங்கியது. அவனது வெற்றியால் நாமெல்லாம் வானமளவுக்கு உயர்ந்தோம்.”

1841 ஏப்பிரல் 15 அன்று ஜெனா பல்கலைக் கழகம் காரல் மார்க்சுக்கு முனைவர் பட்டம் வழங்கியது. அப்போது மார்க்சுக்கு அகவை 23.

ரைன்லாந்து பகுதியின் தலைநகரான கொலோனில் 1842இல் ‘ரைனிஷி ஷெய்டுங்’ என்ற நாளேடு தொடங்கப்பட்டது. 1842 மே மாதம் அதில் பத்திரிகைச் சுதந்தரம் பற்றி மார்க்சு நீண்ட கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில், “வாழ்வதற்கும் எழுது வதற்கும் மனிதன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ, எழுதவோ கூடாது. எழுத் தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால், எழுத்து உயிர்த் திருப்பதற்காகத் தனது உயிரையும் தியாகம் செய்வான்” என்று எழுதினார். அதன்படியே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.

1842இல் அந்நாளேட்டின் ஆசிரியரானார். பிரடெரிக் எங்கெல்சு இங்கிலாந்தில் இந்நாளேட்டின் நிருபராக இருந்து செய்திகளையும் கட்டுரைகளையும் அனுப்பி வந்தார். மார்க்சும் எங்கெல்சும் நேரில் சந்திப்பதற்கு முன்பே, இந்த நாளேட்டின் மூலம் இருவரும் அறிமுக மாயிருந்தனர். ரைனிஷி ஷெய்டுங் நாளேட்டிற்கு நான்கு மாதங்களே மார்க்சு ஆசிரியராக இருந்தார். அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகத் திறனாய்வு செய்ததால், அரசு இந்நாளேட்டை வெளியிடுவதற்குத் தடை விதித்துவிட்டது.

1843 சூன் 19 அன்று காரல்மார்க்சும் ஜென்னியும் திருமணம் செய்து கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்கு மேலான இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. அப்போது மார்க்சின் அகவை 25. ஜென்னியின் அகவை 29.

பிரஷ்யாவில் (செருமனி) இருந்து கொண்டு பத்தி ரிகை நடத்த முடியாது என்பதால், பாரிசு நகரிலிருந்து அர்னால்டு ரூகே என்பவருடன் இணைந்து புதிய பத்திரிகை நடத்துவதற்காக மார்க்சும் ஜென்னியும் 1843 அக்டோபரில் பாரிசில் குடியேறினர். 1844 சனவரியில் ‘ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு’ என்ற பெயரில் இரட்டை இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியர்கள் அர்னால்டு ரூகே - காரல் மார்க்சு என அட்டையில் குறிக்கப்பட்டிருந்தது. இம்முதல் இதழே இறுதி இதழாகவும் அமைந்துவிட்டது. பிரஷ்ய அரசு (ஜெர்மன்) தனது நாட்டுக்குள் இப்பத்திரிகை நுழையத் தடை விதித்தது. மேலும் மார்க்சு தன் சொந்த நாடான பிரஷ்யாவுக்குள் நுழைந்தால் கைது செய்ய ஆணை பிறப்பித்தது.

ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு இதழில் மார்க்சு, ‘ஹெகலின் உரிமையின் தத்துவம் பற்றிய விமர்சனத்திற்குப் பங்களிப்பு-ஓர் அறிமுகம்’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். 13 பக்கங்கள் கொண்ட அக்கட்டுரையில்தான் மார்க்சின் புகழ்பெற்ற - ‘மதம் மக்களுக்கு அபின்’ எனும் சொற்கோவை இடம்பெற் றுள்ளது. அதன் முழுமையான பத்தி கீழே தரப் பட்டுள்ளது.

“மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது அந்த மதம் எனும் ஆன்மீக வாசனையைக் கொண்டுள்ள உலகத்திற்கு எதிரான மறைமுகப் போராட்டமே! மத ரீதியான துன்பம் என்பது உண்மையான துன்பத்தின் வெளிப்பாடே - உண்மையான துன்பத்துக்கு எதிரான கண்டனமே. மதம் என்பது; ஒடுக்கப்பட்ட சீவனின் பெருமூச்சு; இதயமற்ற உலகின் இதயம்; ஆன்மநேய மற்ற சூழல்களின் ஆன்மநேயம். அது மக்களின் அபின். மக்களின் கற்பிதமான இன்பம் என்கிற மதத்தை ஒழிக்க உண்மையான இன்பத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது. நடப்புச் சூழல்கள் பற்றிய மாயைகளைக் கைவிடச் செய்ய அந்த மாயைகளைத் தாங்கி நிற்கும் சூழல்களைக் கைவிடச் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே மதம் மீதான விமர் சனம் என்பது மதம் எனும் ஒளிவட்டத்தைக் கொண்ட கண்ணீர் வாழ்வு பற்றிய முதல் விமர்சனமாகும்.”

மதம் நீடித்திருப்பதற்கான அடிப்படைச் சூழலை மாற்றாமல், மதத்தை ஒழிக்க முடியாது என்கிற இம் மாபெரும் கருத்தை, மார்க்சு தன் 26ஆம் அகவையில் கண்டறிந்தார் என்பது பெருவியப்புக்குரியதாகும்.

மேலும் இதே கட்டுரையில் மார்க்சின் மற்றொரு புகழ்பெற்ற மேற்கோளும் இடம்பெற்றுள்ளது : “ஒரு பௌதிக சக்தியானது இன்னொரு பௌதிக சக்தியா லேயே தூக்கி எறியப்படும். ஆனால் சித்தாந்தமும் கூட ஒரு பௌதிகச் சக்தியாக மாறும் - எப்போது எனில், அது மக்கள் திரளைக் கவ்விப் பிடிக்கும் போது”. தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான தொடர் பையும், தத்துவம் மனிதர்களின் வழியாக மாபெரும் பௌதிகச் சக்தியாக மாறும் என்கிற பேருண்மை யையும் மார்க்சு இதில் சுட்டிக்காட்டி உள்ளார்.

மார்க்சைவிட 14 ஆண்டுகள் மூத்தவரான பாயர் பாக் என்பவர் 1841இல் ‘கிறிஸ்துவத்தின் சாரம்’ என்கிற நூலை வெளியிட்டார். பொருள் முதல் வாத அடிப்ப டையில் பாயர்பாக் அந்நூலில் மதத்தை விமர்சனம் செய்திருந்தார். இந்நூலை மார்க்சு வரவேற்றார். ஆயினும் பாயர்பாக் தர்க்க அடிப்படையில்-சிந்தனை அடிப்படையில் மட்டுமே மதத்தை விமர்சனம் செய் திருப்பதை மார்க்சு உணர்ந்தார். பாயர்பாக்கின் தத்துவம் நடைமுறையிலிருந்து விலகி கற்பனை உலகில் நிற்பதால் பயன்படாது என்று எண்ணினார். 1844இல் பாரிசில் இருந்தபோது பாயர்பாக்கின் நூல் பற்றிய தன் கருத்துகளைக் குறிப்பேட்டில் இரத்தினச் சுருக்கமாய் எழுதினார். இதுவே பாயர்பாக் பற்றிய சூத்திரங்கள் எனப்படுகிறது. இதன் 11வது சூத்திரத்தில் “தத்துவ ஞானிகள் பல வகையிலும் உலகை விளக்கி இருக் கிறார்கள். நாம் செய்ய வேண்டியது என்னவோ அதை மாற்றுவதுதான்” என்று எழுதி இருந்தார். இக்குறிப்பேட்டை மார்க்சு இறந்தபிறகே எங்கெல்சு கண்டெடுத்தார்; 1888இல் இதை நூலாக வெளியிட்டார். மார்க்சின் கல்லறையில் இந்தச் சொற்றொடர் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரஷ்ய அரசின் நெருக்குதல் காரணமாக 1845ஆம் ஆண்டு மார்க்சு குடும்பம் பாரிசிலிருந்து வெளியேற வேண்டும் என்று பிரான்சு அரசு ஆணையிட்டது. அதனால் மார்க்சு குடும்பம் பெல்ஜியத்தின் தலை நகரான பிரஸ்ஸெல்ஸ் நகரில் குடியேறியது. நடப்பு அரசியல் பற்றி மார்க்சு எழுத்து வடிவில் ஏதும் வெளி யிடக் கூடாது என்கிற நிபந்தனையின் பேரில்தான் அந்நாட்டில் அவர் தங்க அனுமதிக்கப்பட்டார்.

“இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளால் படைக்கப்பட்ட பொருள்களும் உயிரினங்களும் அவை தோன்றிய காலம் முதலாக மாறாமல் நிலைபெற்று இருக்கின்றன” என்று மதவாதிகளும் கருத்து முதல் வாதிகளும் கூறிவந்தனர். இதை மறுத்து செருமானிய தத்துவ அறிஞரான ஹெகல் (1770-1830) “இவ்வுல கிலும் - இப்பேரண்டத்திலும் உள்ள எல்லாப் பொருள் களும் இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருக் கின்றன. பொருள்களின் இயக்கத்திற்கு அப்பொருள் களுக்குள் பொதிந்துள்ள எதிரெதிர் ஆற்றல்களே - முரண்பாடே காரணம். உலகில் எந்தவொரு பொரு ளும் தனித்து இருப்பதில்லை. எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று இயங்குகின்றன” என்று அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அறிவித் தார். இந்தக் கோட்பாடுதான் இயக்கவியல் எனப்படு கிறது. இதுவே மார்க்சியத்தின் அடிப்படையாகும். எனவேதான் ஹெகல் இயக்கவிலின் தந்தை எனப்படு கிறார்.

ஹெகலின் கோட்பாட்டை மார்க்சு, எங்கெல்சு உள்ளிட்ட எண்ணற்ற இளைஞர்கள் தீவிரமாக ஆதரித்தனர். இவர்கள் ‘இளம் ஹெகலியர்’ என அழைக்கப்பட்டனர். ஆனால் மார்க்சின் ஆய்வுநோக்கு விரிவடைந்தபின், “உயர்ந்த படைப்புகளை உருவாக் குவதற்கு அடிப்படையாக இருப்பது மனிதனின் சிந்தனையே” என்கிற ஹெகலின் முடிவை மார்க்சு எதிர்த்தார். ‘ஹெகல் இயக்கவியலைத் தலைகீழாக நிறுத்தியுள்ளார். அதை நேராக மாற்றுவதே நம் வேலை’ என்று மார்க்சு கூறினார்.

ஆனால் மற்ற இளம் ஹெகலியர்கள், ஹெகல் கூறியுள்ளதே சரி என்று கூறி, ஹெகலைத் தலை மேல் வைத்துக் கொண்டாடினர். எனவே இளம் ஹெகலியரின் தத்துவ நிலைபாடுகளுக்கு எதிராக 1845 நவம்பரில் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து, ‘ஜெர்மானிய சித்தாந்தம்’ என்ற நூலை எழுதினர். ஆனால் எங்கெல்சின் இறப்புக்குப் பின்னரே, இந் நூலின் சில பகுதிகள் வெளிவந்தன. முழுமையான வடிவில் நூலாக 1930களில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியால் வெளியிடப்பட்டது. இந்த நூலில் தான் மார்க்சியத்தின் பிழிவான வரிகளாகத் திகழும் “உணர்வு வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை. வாழ்நிலை தான் உணர்வைத் தீர்மானிக்கிறது” எனும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய சமூகத்தில் இந்திய மார்க்சியர்களும், மற்றவர்களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கூறப்பட்டிருப்பது போன்ற - நூற்பா (சூத்திரம்) போன்ற - ஒரு கருத்தை மார்க்சும் எங்கெல்சும், ‘செருமானிய தத்துவம்’ நூலில் எழுதி யுள்ளனர் :

“ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளே ஒரு யுகத்தை ஆளும் சிந்தனைகளாக உள்ளன. ஆளும் வர்க்கம் என்றால் அது சமுதாயத்தின் பொருளியல் சக்தியை மட்டுமல்லாது அறிவுச் சக்தியையும் ஆளு கிறது. பொருள் உற்பத்திக்கான காரணங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிற வர்க்கமானது, அதன் காரணமாகவே அறிவு உற்பத்திக்கான காரணங்க ளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தச் சாதனங்களைக் கொண்டிராதவர்களின் சிந்தனை கள் இதற்குப் பொதுவாகவே அடங்கிப் போய்விடு கின்றன.”

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுச் சக்தியை ஆளும் வர்க்கமாகப் பார்ப்பனர்களே இருந்து வந்துள்ளனர். வருணாசிரம-சாதிய அமைப்பின் காரணமாகப் பார்ப்பனர்கள் சமூகத்திலும் மதம் தொடர்பானவற்றிலும் பெற்றிருந்த ஏகபோக உரிமையால் சமூகத்திற்கான கருத்துரு வாக்கம் செய்யும் மூலகர்த்தாக்களாக விளங்கினர். உற்பத்திச் சக்திகளிலும் உற்பத்தி உறவுகளிலும் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களால் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமைகளில் - பிறப்பால் அறிவிலும் தகுதியிலும் உயர்ந்தவர் என்ற நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. முதலாளிய உற்பத்தி முறை மேலோங்கிய பிறகும், இதேநிலைதான் நீடிக்கிறது.

ஏனெனில் உற்பத்திச் சக்திகளிலும் உற்பத்தி உறவு களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்ற அதே வேகத்தில் அச்சமூகத்தின் சித்தாந்தத்தில் மாற்றங்கள் நிகழ்வ தில்லை. இதற்கெனத் தனியாக, தீவிரமான முயற்சி களை மேற்கொண்டாலன்றி, பழைய சமூகத்தின் சித்தாந்த ஆதிக்கமே தொடர்ந்து நீடிக்கும். இந்தியாவில் பாரசிகர், ஹுணர், குஷானர், துருக்கியர், ஆங்கிலேயர் முதலான அயல்நாட்டவர்களின் படையெடுப்பும், ஆட்சிகளும் ஏற்பட்ட பிறகும் இந்தியாவில் பார்ப்பனியச் சித்தாந்தமே சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது. உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் வேகத்திற்கு ஈடான வகையில் சமூகச் சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளுடன் சீனாவில் 1965இல் மாசேதுங் ‘கலாச்சாரப் புரட்சியை’ நடைமுறைப்படுத்தினார்.

செய்தி ஏடுகள், தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன ஊடகங்கள் வாயிலாக ஆளும்வர்க்கம் தன் இருத்தலுக்கான நியாயத்தை மக்கள் நெஞ்சங்களில் பதியச் செய்து வருகிறது. இந்தியா அரை நிலப்பிரபுத் துவ - அரை முதலாளித்துவ நாடாக இருப்பதால், பார்ப்பனர்கள், ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் கருத்தியலை, சாதி அமைப்பை, தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.

1847இல் புருதோன் என்பவர் ‘வறுமையின் தத்துவம்’ என்ற நூலை எழுதினார். முதலாளித்துவம் பற்றிய பொருளாதார விதிகள் என்பவை நிலையான வை; மாற்ற முடியாதவை என்று புருதோன் அந்நூலில் அறுதியிட்டுக் கூறியிருந்தார். அந்நூலின் கருத்தை மறுத்து, மார்க்சு, ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலைப் பிரெஞ்சு மொழியில் எழுதினார். ஏனெனில் புருதோன் அவருடைய நூலைப் பிரெஞ்சு மொழியில் எழுதியிருந்தார்.

‘பொருளாதாரர விதிகள் என்பவை வரலாற்று ரீதியாக உருவானவை. மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்திச் சாதனங் களும் தோன்றிவருகின்றன. இந்த வளர்ச்சியின் நிகழ்வுப் போக்கின் ஊடாகச் சமுதாயம் மாறுகிறது. உற்பத்திச் சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் அடிக்கட்டுமானமாகக் கொண்டுள்ள சமுதாயத்தில், அவற்றுக்கு ஏற்ப, மேல்கட்டுமானமாக உள்ள அரசியல், சட்டம், தத்துவங்கள் முதலானவற்றில் மாறுதல்கள் ஏற்படுகின்றன’ என்று மார்க்சு பதில் அளித்தார்.

இலண்டனில் இருந்த ‘நீதியாளர் கழகம்’ என்பது 1847 முதல் ‘கம்யூனிஸ்டு கழகம்’ என்ற பெயரில் இயங்கியது. கம்யூனிஸ்டு கழகத்தின் வேண்டுகோளை ஏற்று மார்க்சும் எங்கெல்சும் இதில் இணைந்தனர். புதிய பெயருக்கு ஏற்ற தன்மையில் கட்சியின் கோட் பாடுகளை வகுக்கும் பொறுப்பு மார்க்சு, எங்கெல்சு இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் உருவாக்கிய 23 பக்க அறிக்கை ‘கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை’ என்ற பெயரில் 1848 பிப்பிரவரியில் இலண்டனில் வெளியி டப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த அறிக்கையை எழுதிய போது மார்க்சின் அகவை 30. எங்கெல்சுக்கு 28 அகவை.

“இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறேயாகும்” எனும் வரியுடன் தொடங்கும் கம்யூ னிஸ்டு அறிக்கையில், நிலவுடைமை உற்பத்தி முறை யிலிருந்து முதலாளிய உற்பத்தி முறைக்கு மாறியுள்ள தால், சமூகத்தில் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முதலாளித்துவத்தின் இயக்கப் போக்கு மற்றும் அதன் சுரண்டல் வடிவங்கள் குறித்து நெஞ்சைக் கனலாக்கும் நடையில் எழுதப்பட்டுள்ளது.

“அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள் - கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று, பாட்டாளிகள் இழப் பதற்கு ஏதுமில்லை - தங்கள் அடிமைச் சங்கலிகளைத் தவிர! ஆனால் அவர்கள் வெல்வதற்கோ அனைத்து உலகும் இருக்கிறது. எனவே உலகத் தொழிலாளர் களே ஒன்றுசேருங்கள்” என்ற அறைகூவலுடன் முடியும் கம்யூனிஸ்டு அறிக்கை உலகம் முழுவதும் உழைக்கும் மக்களிடையே புரட்சிக் கனலை மூட்டியது. முதலாளிகளிடையே பெரும் அச்சத்தை ஊட்டியது.

கம்யூனிஸ்டு அறிக்கையில், தான் புதியதாகக் கூறியுள்ள கோட்பாடு குறித்து மார்க்சு வெய்டெமை யருக்கு 1852 மார்க்சு 3ஆம் நாள் எழுதிய மடலில் அவருக்கே உரிய அறிவு நாணயத்துடன் எழுதியுள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை நவீன சமுதாயத்தில் வார்க்கங்கள் இருக்கின்றன என்பதையோ, அவற் றிற்கு இடையே போராட்டம் நடக்கிறது என்பதையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சேராது. எனக்கு வெகுகாலத்திற்கு முன்னரே இந்த வர்க்கப் போராட் டத்தின் வரலாற்று வளர்ச்சியை முதலாளித்துவ வரலாற்றாளர்கள் விரிவாகக் கூறியிருக்கிறார்கள். அதேபோன்று இந்த வர்க்கங்களின் பொருளாதார உள்கட்டமைப்பை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் விவரித்து விட்டார்கள். நான் செய்துள்ள புதிய பங் களிப்பு 1. இந்த வர்க்கங்களின் இருப்பு என்பது உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதாகும். 2. வர்க்கப் போராட்டமானது அவசியமான வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது. 3. அந்தச் சர்வாதிகாரமும் அனைத்து வர்க்கங்களையும் ஒழித்த, ஒரு வர்க்கமற்ற சமுதாயத்திற்கான இடைக்கால ஏற்பாடாகவே இருக்கும்.”

கம்யூனிஸ்டு அறிக்கையை செருமனி, பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலி, பிளமிஷ், டேனிஷ் ஆகிய ஆறு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியிடத் திட்ட மிட்டனர். 1848 பிப்பிரவரியில் செருமன் மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. நாற்பது ஆண்டுகள் கழித்து - மார்க்சு மறைந்த பிறகு, 1888இல் தான் ஆங்கில மொழியில் வெளிவந்தது.

‘சமதர்ம அறிக்கை’ என்ற பெயரில் பெரியார் 1931இல் ‘குடிஅரசு’ ஏட்டில் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிட்டார். அய்ந்து வாரங்கள் ஒரு தொடராக அது வெளிவந்தது. முதலாளிகளும் பட்டாளிகளும் எனும் முதல் அத்தியாயம் மட்டுமே வெளியானது. ப. ஜீவானந்தம் இதை மொழிபெயர்த்தார்.

கம்யூனிஸ்டு அறிக்கையை குடிஅரசில் வெளியிட்ட போது பெரியார் எழுதிய அறிமுக உரையில், “உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் எல்லா நாடுகளிலும் பணக்காரன் - ஏழை, முதலாளி-தொழிலாளி என்கிற வேற்றுமை மட்டுமே இருக் கின்றன. ஆனால் இந்தியாவிலோ, இவற்றுடன்கூட உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்கிற ஏற்றத்தாழ்வு முதன்மையானதாகவும், இந்தத் தத்துவத்துக்குக் கோட்டையாகவும் இருந்து வருகிறது” என்று எழுதினார். சமதர்மம் வருவதற்கு - வர்க்க ஒர்மை ஏற்படுவதற் குத் தடையாக உள்ள வருணாசிரம - சாதி அமைப் பைத் தகர்க்க வேண்டியது முதன்மையான வேலை என்று பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார்.

1849 ஆகஸ்டு மாதம் மார்க்சு இலண்டனில் குடியேறினார். அதன்பின், இறுதி வரை இலண்டனி லேயே வாழ்ந்தார். 1851 முதல் இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் படித்தார். 1852இல் அமெரிக்காவின் ‘நியூயார்க் டெய்லி டிரிபியூன்’ ஏட்டிற்கு மார்க்சு இந்தியா வைப் பற்றி 11 கட்டுரைகள் எழுதினார். இலண்டனில் படித்தவற்றின் அடிப்படையில் இந்தியாவின் நிலையை மார்க்சு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இதோ, ஓர் எடுத்துக்காட்டு :

“இந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வச் சடங்காயிற்று. இதை நாம் மறக்கக் கூடாது. இந்தச் சிறு சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும் அடிமை முறையாலும் களங்கமடைந்திருந்தன. மனிதனைச் சூழ்நிலைக்கு எஜமானன் ஆக்குவதற்குப் பதிலாக, அவனை அதற்கு அடிமைப்படுத்தின. சமூக நிலையை ஒருபொழுதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தன. இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலைமை ஏற்படுத்தப்பட்டது. இயற்கை யின் எஜமானனாகிய மனிதன் குரங்காகிய அனுமன் முன்பும், பசுமாட்டின் முன்பும் தெண்டனிப்பட்டு வணங்கியதில் இந்தச் சிறுமை காட்சியளித்தது. இவற்றை நாம் மறக்கக் கூடாது என்பதே அது.

1857 மற்றும் 1858இல் ‘நியூயார்க் டெய்லி டிரிபியூன்’ ஏட்டிற்கு சிப்பாய்கலகத்தை மய்யப்படுத்தி மார்க்சு 18 கட்டுரைகளும் எங்கெல்சு 10 கட்டுரை களும் எழுதினர். மார்க்சு எழுதிய முதல் கட்டுரையில், “ரோமாபுரியின் பிரித்தாளும் கொள்கை எனும் சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கடைப்பிடித்தே பிரிட்டன் ஏறக்குறைய 150 ஆண்டுகாலமாக இந்திய சாம்ராஜ் ஜியத்தைத் தந்திரமாகத் தனது பிடியில் வைத்திருக் கிறது. பகைமைகள் நிறைந்த பல்வேறு இனங்கள், குலங்கள், சாதிகள், சமயங்கள், அரசுகள் ஆகிய வற்றை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்டிருக்கின்ற பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கின்றோம்” என்று எழுதியுள்ளார்.

1858இல் மார்க்சு ‘அரசியல் பொருளாதார விமர் சனத்திற்கு ஒரு பங்களிப்பு’ என்ற நூலை எழுதினார். இந்நூலுக்கு 1859இல் மார்க்சு ஒரு முன்னுரை எழுதி னார். இந்நூலைவிட இந்த முன்னுரை புகழ்பெற்ற தாகிவிட்டது. அந்த முன்னுரையில் மார்க்சியத்தின் சாறாக உள்ள ஒரு மேற்கோளைப் படியுங்கள்:

“மனிதர்கள் தங்களது சமூக வாழ்வை நடத்திச் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் சில திட்ட வட்டமான உற்பத்தி உறவுகளை மேற்கொள்கிறார்கள். அந்த உறவுகள் தவிர்க்க முடியாதவை. இவர்களின் ஆணைக்கு அடங்காதவை. அந்த உற்பத்தி உறவு களின் கூட்டு மொத்தமே சமுதாயத்தின் பொருளா தாரக் கட்டமைப்பாக - உண்மையான அடித்தளமாக அமைகிறது. இந்த அடித்தளத்தின் மீதே ஒரு சட்டபூர்வ மற்றும் அரசியல் மேற்கட்டுமானம் எழுகிறது. அதற்கேற்ற திட்டவட்டமான சமூக உணர்வுகளும் தோன்றுகின்றன. பொருள் உற்பத்தி வாழ்வு முறையே பொதுவாக சமூக, அரசியல், அறிவுபூர்வ வாழ்வு முறையினை நெறிப்படுத்துகிறது. மனிதனின் உணர்வு நிலை மனிதனின் வாழ்நிலையைத் தீர்மானிக்க வில்லை. மனிதனின் வாழ்வு நிலையே மனிதனின் உணர்வைத் தீர்மானிக்கிறது.”

மனிதகுல வரலாற்றைப் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கும் மார்க்சின் இந்நூல் வெளி வந்த 1859ஆம் ஆண்டில், சார்லஸ் டார்வின் எழுதிய ‘இயற்கைத் தேர்வின் மூலமாக உயிரினிங்களின் தோற்றம்’ எனும் நூல் வெளிவந்தது. மார்க்சின் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கோட்பாட்டுக்கு டார்வினின் நூல் அரண்சேர்ப்பதாக அமைந்தது.

1867 செப்டம்பர் 14 அன்று மார்க்சின் பேருழைப் பால் உருவாக்கப்பட்ட ‘மூலதனம்’ நூலின் முதல் பகுதி வெளியிடப்பட்டது. முதலாளிய உற்பத்தி முறையில் மூலதனத்தை உருவாக்குவதிலும் பெருக்குவதிலும் அச்சாணியாகச் செயல்படும் ‘உபரி மதிப்பை’ ஆய்ந்தறிந்து கூறியதே மார்க்சின் இரண்டாவது மாபெரும் பங்களிப்பாகும்.

அய்ரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலை மைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மூல தனத்தின் முதல் பாகத்தை மார்க்சு எழுதினார். தன் சிந்தனiயை மேலும் விரிவுபடுத்துவதற்காக அமெரிக் காவின், இரஷ்யாவின் பொருளாதாரம் குறித்த எண் ணற்ற நூல்களைப் படித்தார். விரிவான குறிப்புகளை எழுதினார். ஆனால் இவற்றை நூல் வடிவில் எழுது வதற்குள் 1883 மார்ச்சு 14 அன்று அவர் மறைந்தார். ‘மனிதகுலத்தின் ஒரு தலை குறைந்தது. ஆனால் நம் தலைமுறையின் மிகச்சிறந்த தலை அது’ என்று எங்கெல்சு கூறினார்.

மூலதனத்தின் இரண்டாம் பாகம் என்று எழுத மார்க்சு திட்டமிட்டிருந்ததை, எங்கெல்சு இரு பகுதி களாகப் பிரித்து இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று வெளியிட்டார். இரண்டாம் பாகம் 1885ஆம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 1894ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. உண்மையில் இரண்டாம், மூன்றாம் பாகங்களை மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதினார்கள் என்றே கருத வேண்டும்.

வெவ்வேறு நாடுகளில் நிலவும் சமூகச் சூழல்களுக்கு ஏற்பவே மார்க்சியத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதை மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தியுள்ளனர். இலெனினும் மாவோவும் இக்கருத்துக்கு மேலும் செழுமை சேர்த்துள்ளனர். இந்தியாவின் சமூக உற்பத்தியில் சாதி அமைப்பு திட்டவட்டமான முறையில் செயல் படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இன்றைய ஏகாதிபத்தியச் சூழலில் மார்க்சியத்தை மறுகட்ட மைப்புச் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமை நம்முன் உள்ளது.

(சிந்தனையாளன் மே 2012 இதழில் வெளியானது)

Pin It

வெல்ஸ் : ஸ்டாலின் நீங்கள் என்னை சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. அண்மையில் நான் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுடன் அவரது லட்சியங்கள் குறித்த நீண்ட நேரம் உரையாடினேன். உலகை மாற்றும் உங்கள் முயற்சி பற்றி அறிய விரும்புகிறேன்.

ஸ்டாலின் : அது போன்ற பெரிய திட்டங்கள் எதுவுமில்லை.

வெல்ஸ் : நான் ஒரு எளிய  மனிதனாக உலகம் முழுவதும் சுற்றி வருகின்றேன். உலகின் மாற்றங்களை நான் கூர்ந்து கவனித்து வருகின்றேன்.

stalin_400ஸ்டாலின்: முக்கியமான அறிஞரான நீங்கள் சாதாரணமானவரல்ல. மனிதர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை வரலாறே நிச்சயிக்கிறது. உங்கள் உலகப் பார்வை உங்களை சாதாரணமானவராகக் காட்டவில்லை.

வெல்ஸ்: நான் போலித்தனமான எளிமை பாராட்டவில்லை. நான் உலகை சாதாரண மனிதனின் பார்வையிலேயே பார்க்க விரும்புகிறேன். பெரிய அரசியல்வாதியாகவோ, ஆட்சியாளராகவோ பார்க்க விரும்பவில்லை. எனது அமெரிக்கப் பயணம் எனக்கு எழுச்சியூட்டியது. பழைய பொருளாதார உலகம் நொறுங்கிக் கொண்டுள்ளது. புதிய பொருளாதார‌ வாழ்வு முறை கண்களுக்குத் தெரிகிறது. லெனின் "நான் வணிகத்தை முதலாளிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார். ஆனால் உலக முதலாளிகளிடமிருந்து சோசலிசத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய சூழல். அமெரிக்காவில் பெரும் மறு சீரமைப்பு நடந்து கொண்டுள்ளது. திட்டமிட்ட சோசலிசப் பொருளாதார முயற்சி அங்கு துவங்கியுள்ளது. நீங்களும் ரூஸ்வெல்ட்டும் இரு வேறு முனைகளில் பயணத்தைத் துவங்கியுள்ளீர்கள். அதில் ஏதோ ஒரு ஒற்றுமை காண்கிறேன். அரசு கட்டுப்பாட்டில் புதிய அலுவலகங்கள் உருவாகி  வருகின்றன. புதிய சமூக சேவை உணர்வு உங்களைப் போல அங்கும் தேவையாகி வருகிறது.

ஸ்டாலின்: அமெரிக்கா எங்களிடமிருந்து மாறுபட்ட லட்சியத்துடன் பயணிக்கிறது. பொருளாதாரச் சிக்கலின் காரணமான மாற்றமே அங்கு நிகழ்கிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையை மாற்றாமல், தனியாரின் முதலாளித்துவ சிக்கலிலிருந்து விடுபட நினைக்கிறார்கள். அவர்களின் இன்றைய பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து குறைவான இழப்புடன் தப்பிக்க நினைக்கின்றனர். நாங்கள் பழைய பொருளாதாரச் சீர்குலைவை உணர்ந்து முற்றிலும் புதிய பொருளாதார அடித்தளத்தை உருவாக்க முயல்கிறோம். அவர்கள் தமது பொருளாதாரச் சிக்கலைச் சரி செய்வதில் வெற்றி பெற்ற போதும், தமது பழைய முதலாளித்துவ வேர்களை விட்டுவிட விரும்பவில்லை. அவர்களின் இந்தப் பொருளாதார அமைப்பு, மீண்டும் மீண்டும் அவர்களை அராஜக உற்பத்தி வெறிக்கே இட்டுச் செல்லும். இத்தகைய முயற்சியால் சமூகத்தைச் சீரமைக்க முடியாது. சிக்கலையும், அழிவையும் தரும் பழைய பொருளாதார முறையை ஒழிக்கவும் முடியாது. சில தற்காலிக மேம்போக்கான மாற்றங்களே தரக் கூடும். இதை அவர்கள் பெரும் சீர்திருத்தம் என நினைக்கலாம். ஆனால் அவர்கள் தங்களது பழைய அராஜக பொருளாதாரத்தையே காப்பாற்றிக் கொண்டுள்ளார்கள். எனவே அங்கு எவ்விதச் சமூக சீர்திருத்தமும், மாற்றமும் நடக்காது, அங்கு திட்டமிட்ட பொருளாதாரம் முடியாது. திட்டமிட்ட பொருளாதாரம் என்பதன் அடிப்படை என்ன? வேலையின்மையை ஒழிப்பதே. இது ஒரு முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சாத்தியமா? சிறிது முடியும் என்று  ஏற்றுக் கொண்டபோதும் முற்றாக வேலையின்மையை ஒழிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் அனுமதிக்காது. வேலையின்மை இருப்பதன் மூலமே முதலாளித்துவம், உழைக்கும் மக்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க முடியும். அதன் மூலமே மலிவாக உழைப்பை அது பெற முடியும். திட்டமிட்ட பொருளாதாரம் என்பது மக்களின் தேவைக்கானவற்றையே உற்பத்தி செய்யும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தியே  முற்றிலும் வேறுபட்ட லட்சியம் கொண்டது. லாபமே அதன் உச்ச லட்சியம். இழப்பை எதற்காகவும் முதலாளித்துவம்  ஏற்காது. மக்கள் நலனுக்காக அது தனது லாபத்தை விட்டுத்தராது. முதலாளித்துவத்தை, அதன் சொத்துடமை வெறியை, லாப நோக்கத்தை ஒழிக்காமல் திட்டமிட்ட பொருளாதாரம் இயலாத ஓன்று.

வெல்ஸ் : நீங்கள் சொன்னதில் பெரிதும் உடன்படுகிறேன். ஒரு நாடு முழுவதும் திட்டமிட்ட பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டு, அரசு படிப்படியாக அதை நிறைவேற்றத் துவங்கினால், பொருளாதார ஏகாதிபத்தியம் பலமிழந்து, சோசலிசம் உருவாகி விடுமல்லவா? ரூஸ்வெல்டின் புதிய திட்டம் வலுவானது. அது சோசலிசத்தை நெருங்கும் என நான் நினைக்கிறேன். உங்களுக்குள்ளான போட்டி, பகைமையை விட்டு பொது உணர்வை வளர்த்து, ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தால் என்ன?

ஸ்டாலின் : நான் ரூஸ்வெல்டின் துணிவைக் குறைத்து மதிப்பிடவோ, அவரது லட்சிய வேட்கையை நம்பாமலோ இல்லை. திட்டமிட்ட பொருளாதாரம், முதலாளித்துவம் இரண்டின் அடிப்படை பற்றிய புரிதல் அவசியம். இன்றைய முதலாளித்துவ உலகின் பெரிய தலைவர் அவர். முதலாளித்துவ சூழலில் திட்டமிட்ட பொருளாதாரம் என்பது இயலாத ஓன்று என உறுதியுடன் கூறும் அதே வேளையில், ரூஸ்வெல்டின் திறமையை, உண்மை உணர்வை நான் மதிக்கிறேன். சூழல் சரியில்லாதபோது எத்தனை திறமை வாய்ந்த தலைவனும் லட்சியத்தை எட்ட முடியாது. படிப்படியான மாற்றம்  என்பது பேசுவதற்கு எளிதாக இருக்கலாம். சோசலிசம் என்பது என்ன? முதலாளித்துவ லாபத்தை சமுக நலனுக்காக முழுவதும் இல்லாவிட்டாலும் ஒரு சிறிதாவது குறைப்பது. தேசிய பொருளாதார மேம்பாட்டிற்காக அதை பயன்படுத்துவது. அதை  ரூஸ்வெல்ட்டோ, வேறு எந்த மனிதாபிமானத் தலைவரோ ஆர்வமுடன் செயல்படுத்த முயன்று, முதலாளித்துவத்தின் அடிப்படை லாபத்திற்கு இடையூறு தந்தால், அவர் தோற்கடிக்கப்பட்டு, வீசப்படுவார். அமெரிக்காவின் வங்கிகள், பெரிய தொழில்கள், பெரிய பண்ணைகள் எல்லாம் ரூஸ்வெல்டின் கையில் இல்லை. இவை மட்டுமின்றி, ரயில்வே, கப்பல், சாலைகள் என எல்லாம் தனியார் கைகளில் உள்ளது. நாட்டின் அறிவாளிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும், பொறியாளர்களும் ரூஸ்வெல்ட் அதிகாரத்தில் இல்லை. தனியார் கம்பெனியின் சம்பளக்காரர்களே. முதலாளித்துவ அரசு நாட்டைப் பாதுகாக்கவும் நிர்வாகத்தை கவனிக்கவுமான அமைப்பே. வரி வசூலிக்கவும், மக்களைக் கட்டுப்படுத்தவுமான கடமை கொண்டது. அதற்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தமில்லை. மாறாக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கைப்பாவையே அரசு. எனவேதான் நான்  ரூஸ்வெல்டின்  நல்ல எண்ணங்களும், ஆசைகளும் முதலாளித்துவ சமுதாயத்தில் நிறைவேறாது என வருந்துகிறேன். பல தலைமுறைகள் முயன்றால் ஒருவேளை இது நடக்கக் கூடும் என நம்பலாம்.

வெல்ஸ் : நான் அரசியல் பொருளாதார விளக்கங்களை உறுதியாக நம்புகிறேன். அமைப்பு சிறப்பாக நடக்கவும், நல்ல சமூகம் அமையவும் பலர் விரும்புகின்றனர். நவீன அறிவியலைச் சார்ந்த சமூகம் சோசலிசத்தை செயல்வடிவமாக்கும். தனிமனித ஒழுக்கம் சமூகத் தேவையாகி விட்டது. முதலில் வங்கிகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பின் போக்குவரத்து, பெரும் தொழில்கள், வணிகம் என ஒவ்வொன்றாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சோசலிசத்தை எட்டலாம். தனி மனிதத்துவமும், சோசலிசமும் எதிர் எதிரானவை அல்ல. அவற்றின் நடுவேயான நடுவழிப்பாதை உண்டு. சோசலிசத்திற்கு இணையான ஒழுக்கமுள்ள நிறுவனங்களும் உண்டு. திட்டமிட்ட பொருளாதாரம் என்பது நிர்வாகத் திறன், நேர்மை கொண்டோரால் நிறைவேற்ற முடியும். அவர்கள் மாற்றத்தைப் படிப்படியாக கொண்டு வந்து விடுவர். சோசலிசத்தின் முன் சிறப்பான நிறுவனங்கள் உருவாக்கி விடும். நல்ல நிறுவனங்களின்றி சோசலிசத்தை உருவாக்க முடியாது. அது வெறும் கற்பனையே.

ஸ்டாலின் : அப்படியில்லை. தனி நபருக்கும், கூட்டுக்கும் ஒப்பிட முடியாத வேற்றுமை உண்டு. தனிநபர் விருப்பமும், கூட்டு விருப்பமும் வேறு வேறானவை. சோசலிசமும், கூட்டுச் செயல்பாடும் தனியார் நலனை மறுப்பதில்லை. சோஷலிச நலனும் தனியார் நலனும் வேறு வேறாக இருக்க முடியாது. மாறாக சோசலிசமே தனிநபர் நலனைச் சிறப்பாக்கி, பாதுகாக்க முடியும். எனவே தனியார் நலனும், சமூக நலனும் எதிரெதிரானவையல்ல. ஆனால் உடமை வர்க்கமான முதலாளி வர்க்கமும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கமும் ஒன்றுபடாத எதிரெதிரானவையே. ஒருபுறம் வங்கி, தொழிற்சாலை, சுரங்கம், வணிகம் அனைத்தையும் தன் கையில் வைத்துள்ள முதலாளித்துவம் தன் நலன், தன் லாபம் தவிர வேறு எதையும் கவனிக்காது. சமூகக் கூட்டு இவை பற்றிய அக்கறை அதற்கில்லை. அது தனது நலனுக்காக தனிநபரை அடக்கும், ஒடுக்கும், மாறாக உடமைகள் ஏதும் இல்லாத உழைக்கும் வர்க்கம் தனது உயிர் வாழ்வுக்காக, எவ்விதச் சூழலிலும் உழைப்பை விற்று வாழ வேண்டியதாக உள்ளது. இவ்வாறு எதிர் எதிராக எதிர்பார்ப்பு கொண்ட இவை எப்படி ஒன்றுபட்டு வாழ முடியும்? ரூஸ்வெல்ட் இந்த இரு முனைகளை ஒன்றுபடுத்தும் முயற்சி எதையும் மேற்கொள்ளத் துவங்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். நான் அமெரிக்கா போனதில்லை. ஏடுகள் மூலமே அதைப் பற்றி அறிகிறேன். ஆனால், சோசலிச உருவாக்கம் பற்றி எனக்குக் கொஞ்சம் அனுபவம் உண்டு. ரூஸ்வெல்ட் உழைக்கும் மக்களின் நலனை நிறைவேற்ற, உடமை வர்க்க நலன்களில் கைவைத்தாரென்றால், அடுத்த கணமே அவருக்குப் பதிலாக வேறொருவர் அந்த நாற்காலியில் அமர்த்தப்படுவார். அதிபர்கள் வருவார்கள், போவார்கள், முதலாளிகள் நிரந்தரமானவர்கள். முதலாளித்துவ நலனைக் காக்கவே அதிபர். அவர்களை எதிப்பவர் எப்படி பதவியில் இருக்க முடியும்?

வெல்ஸ் : நீங்கள் மலினப்படுத்தி மனிதர்களை ஏழைகள், பணக்காரர்கள் என்று மட்டுமே பார்க்கிறீர்கள். நான் இதை மறுக்கிறேன். பணம், லாபம், இவற்றை மட்டுமே சிந்திக்கும் ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் கேவலமாகவே இங்கு போலவே அங்கும் மதிக்கப்படுகிறார்கள். லாபம் மட்டுமே எண்ணாத பலர் மேற்கில் உள்ளனர். அவர்களிடம் பணம் உள்ளது. அதை அவர்கள் எதிலாவது முதலீடு செய்து லாபம் பெற நினைக்கிறார்கள். லாபம் ஈட்டுவது மட்டுமே அவர்களின் இறுதி லட்சியம் அல்ல. பணம் ஒரு வாழ்க்கைத் தேவை அவ்வளவே . இது போன்ற கருத்தும், வாழ்வும் கொண்ட படித்தவர்கள் உண்டு. தற்போதைய லாப நோக்க முதலாளித்துவ வாழ்வை ஏற்காதவர்களும் உள்ளனர். இவர்களை முதலாளித்துவத்தின் பக்கம் தள்ளாமல், சோஷலிச சமூகம் அமைக்கப் பயன்படுத்தலாம். சோசலிசம், கூட்டு வாழ்வு பற்றி நான் சமீபகாலமாக அதிகம் பேசி பிரச்சாரம் செய்து வருகிறேன். ஏழை, பணக்காரன் என்று மட்டும் பார்த்து இடைப்பட்ட இவர்களை நிராகரிப்பது சரியல்ல. இவர்கள் முதலாளித்துவ பேராசை தவறு என வருந்துவது போலவே, உலகின் கருப்பு வெள்ளைப் பார்வையும் தவறு, பொருளற்றது என்று கருதுகின்றனர்.

ஸ்டாலின் : நிச்சயம் ஒரு மத்தியதர வர்க்கம் உள்ளது என்பதை நானும் ஏற்கிறேன். உலகில் நேர்மையான நல்லவர்கள் உண்டு. அது போல நேர்மையற்ற தீயவர்களும் உண்டு. சொத்துள்ள பணக்காரர், சொத்தேதுமற்ற ஏழைகள் எனும் பிரிவினை அடிப்படையானது. இதை எவரும் மறுக்க முடியாது. இவை இரண்டிலும் சேராத, நடுநிலையான நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று உண்டு என்பதை ஏற்கிறேன். எனினும் அடிப்படையான சமூக முரண்பாடு என்பது சுரண்டப்படும் ஏழைகளுக்கும், சொத்துடமை மிக்க பணக்காரர்களுக்கும் மட்டுமே. இது தொடரும். இதுவே சமூகப் பொருளாதார நிலையை முடிவு செய்யும்.

வெல்ஸ்: ஏழைகளில்லாமல் உழைப்பால் உற்பத்தி செய்யும் மக்கள் தொகை என ஒரு பிரிவு இன்று பெருமளவில் உள்ளதல்லவா?

ஸ்டாலின் : சிறு நிலவுடமையாளர்கள், கைவினைக் கலைஞர்கள், சிறு வியாபாரிகள் என ஒரு நடுத்தர வர்க்கம் உள்ளது என்பதை நான் ஏற்கிறேன். இவர்களா நாட்டின் விதியை முடிவு செய்பவர்களாக உள்ளார்கள்? உழைக்கும் மக்களே உலகின் தேவைகளை உற்பத்தி செய்தும் ஏழைகளாக உள்ளனர்.

வெல்ஸ் : வேறுபட்ட முதலாளிகளும் உண்டு. லாபத்தை மட்டும் நினைத்து அதிகமாக செல்வத்தை மேலும், மேலும் குவிக்க நினைப்போர் உண்டு. இவற்றைத் தியாகம் செய்ய நினைக்கும் பணக்காரர்களும் உண்டு. மார்கன் போன்ற சொத்தை மட்டுமே நினைக்கும் முதல் வகை உண்டு. ஆனால் ராக்பெல்லர், போர்டு  போன்ற சுயநலத்துடனும், சிறந்த நிர்வாகிகளாக சமூக சிந்தனை கொண்ட மற்றொரு வகையான பணக்காரர்கள் உண்டு. அவர்கள் சோவியத் யூனியன் பற்றி ஆதரவான மாற்றுக் கருத்துக் கொண்டவர்களாக உள்ளனர். ஜப்பான், ஜெர்மனியின் நிகழ்வுகள் அதற்குத் துண்டுகோள். சர்வதேச அரசியல் தவிர வேறு பல மனிதாபிமான மாற்றங்களும் காரணம். தனிச்சொத்து உலகம் பலவீனமாகிச் சரிந்து வருகிறது. எனவே முரண்பாடுகளை முன்னிறுத்தி, உலகைப் பிளவுப்படுத்திப் பார்ப்பது, ஒன்றுபட்ட சமூகம் முழுமைக்குமான நல்ல மாற்றத்தைத் தடுப்பதாகி விடும் என நான் அஞ்சுகிறேன். ஒற்றுமை வளர்க்க வேண்டிய காலம் இது. நான் உங்களை விட இடதுசாரி எண்ணம் கொண்டவன். பழைய சமூக அமைப்புகள் தகர்ந்து வருகிறது என்பதை உணர வேண்டிய காலம் இது ஸ்டாலின்.

ஸ்டாலின் : பணம், லாபம் மட்டுமே முக்கியம் எனக் கருதும் பணக்காரர்கள், எதற்கும் பயனற்றவர்கள், மதிப்பற்றவர்கள் என்று நான் கூற மாட்டேன். அவர்கள் சிறந்த நிர்வாகிகள். அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள பல விசயங்கள் உண்டு. மார்கன் கூட திறமையனவரே. ஆனால் உலகை உருவாக்குவதில் அவர்களின் பங்கு எதுவுமில்லை. அவர்களுக்கு அவர்களின் லாபமே லட்சியம். நாங்களும் அவர்களும் இதில் எதிர்எதிர் முனைகளில் நிற்கிறோம். உழைக்கும் மக்கள் மீதான அவர்களின் அணுகுமுறை என்ன? இவர்களால் வீதியில் வீசப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை எத்தனை? முதலாளிகளின் லாப வேட்கை மாறாதது. முதலாளித்துவம் அது சார்ந்த நடுத்தர வர்க்கத்தால் தூக்கி எறியப்படாது. தொழிலாளி வர்க்கமே அதைச் செய்ய முடியும். நடுத்தர வர்க்கம் எந்த முடிவையும் தானே எடுக்காது. அது முதலாளிகளின் உத்தரவுக்காக  காத்திருக்கும். நடுத்தரவர்க்கம் முதலாளித்துவ சார்பு போதையிலிருந்து விடுபட்டு வருகிறது. அது அதிகமான நல்லன செய்ய முடியும். புதிய சமூக உருவாக்கத்திற்கு எதிராகச் சதி செய்தவர்களும் உண்டு. அவர்களை எங்கள் லட்சியத்திற்கு கொண்டு வர முடியவில்லை. பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்கள், புதிய சமூகம் உருவாக உதவினர். கசப்பும், இனிப்பும் நிறைந்த அனுபவம் எமக்குண்டு. எமது தொழில்நுட்ப வல்லுனர்கள் புதிய சோஷலிச சமூகம் உருவாக எம்முடன் துணைநின்றனர். எனவே எங்களுக்கு இவர்களின் நல்ல, மோசமான முகங்கள் பற்றிய அனுபவம் உண்டு. இவர்களின் முதலாளித்துவ எஜமான ஆன்மிக உறவை முற்றாகத் துறந்து வெளிவர முடிவதில்லை. இப்படி நடக்கும் என்று எதிர்பார்ப்பது ஒரு கனவே. இந்த நிபுணர்கள் எத்தனை பேர் ஐரோப்பாவில் உள்ளனர்? உலகம் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளதை நாம் மறுக்க முடியுமா? இத்தகைய மாற்றத்திற்கு அரசியல் அதிகாரம் அடிப்படை தேவை. அரசியல் அதிகாரமின்றி மாற்றத்தை எப்படிக் கொண்டு வரமுடியும் ? இது இல்லாமல் ஆசை மட்டும் கொண்டு லட்சியத்தை அடைய முடியாது. இதைச் செய்ய முதலாளித்துவத்திற்கு இணையான வலிமை கொண்ட  வர்க்கம் தேவை. அத்தகைய போராட்டத் தலைமையை உழைக்கும் வர்க்கமே எடுக்க முடியும். அதற்குத் துணையாக அறிவுஜீவிகள் இருக்க முடியுமே தவிர, அவர்கள் தலைமை தாங்கி உலகை மாற்றுவது என்பது கடிமனான, வேதனை மிக்க முயற்சி. இதற்கு அர்ப்பணிப்புமிக்க , வலிமை கொண்ட வர்க்கம் தேவை. அதற்கு அறிவுஜீவிகள் துணைபுரிய வேண்டும். மகத்தான பயணத்திற்கு வலிமை வாய்ந்த பெரிய கப்பல் தேவை.

வெல்ஸ் : கப்பல் மட்டுமல்ல, மாலுமிகளும், தலைமை தாங்கும் கேப்டனும் தேவை.

ஸ்டாலின் : ஆம் பயணத்தின் முதல் தேவை கப்பலே, கப்பலின்றி கேப்டன் எங்கே ?

வெல்ஸ் : அந்த பெரிய கப்பல் மனித குலமே. தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல.

ஸ்டாலின் : வெல்ஸ், நீங்கள் உலகம் நல்லவர்களையே கொண்டது என நம்புகிறீர்கள்; இதில் கேட்டவர்களும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். முதலாளித்துவத்தின் புனிதத் தோற்றத்தை நான் நம்பவில்லை.

வெல்ஸ் : கடந்த காலத்திற்கு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அப்போது அறிவுஜீவிகள் மிகச் சிலரே. அவர்கள் முதலாளிகளைச் சார்ந்தவர்களாக, புரட்சிகர மாற்றத்தை விரும்பாதவர்களாக இருந்தார்கள். இப்போது அவர்கள் பெருகி உள்ளார்கள். அவர்கள் மனநிலை மாறியுள்ளது. முன்பு அவர்கள் புரட்சிகரப் பேச்சுகளைக் கேட்கவும் தயாராக இல்லை. நான் பிரிட்டிஷ் அறிவுஜீவிகள், விஞ்ஞானிகளின் ராயல் சொசையிட்டியில் சமூக மாற்றமும், விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உரையாடினேன். முப்பது ஆண்டுகளுக்கு முன் இது சாத்தியமே இல்லை. இப்போது பல புரட்சிகர மாற்றங்களை அங்கு காண்கிறேன். மனிதகுல நலனுக்கான விஞ்ஞானம் தேவையென உணர்கிறார்கள். உங்கள் வர்க்கப் போராட்ட பேச்சு இதற்கு ஒத்து வருவதாக இல்லை.

ஸ்டாலின் : ஆம். முதலாளித்துவம் இப்போது ஒரு பெரும் சிக்கலில் தவித்துக் கொண்டுள்ளது. அது தப்பிக்க விரும்புகிறதே தவிர தீர்வு காண விரும்பவில்லை. அது தட்டுத்தடுமாறித் தவழ்ந்து வெளிவரலாம். ஆனால், தலை நிமிர்ந்து புதிய வாசலில் வெளியே வரமுடியாது. அது முதலாளித்துவத்தின் அடிப்படையையே அழித்துவிடும். இந்த முதலாளித்துவ சிக்கலை அறிவுஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர்.

வெல்ஸ் :  புரட்சி பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். மக்கள் எப்போதாவது தானாக எழுச்சி பெற்றுப் போராடியுள்ளார்களா? புரட்சி என்பது புத்தியுள்ள சிலர் விதைப்பதே என்பதை நீங்கள் மறுக்க முடியுமா ?

ஸ்டாலின் : ஆம், புரட்சியைத் துவக்க  புரட்சிகரமனம் கொண்ட சிலர் தேவையே. ஆனால் மிகுந்த அறிவும், திறமையும் கொண்ட ஆற்றல்மிக்க சிறுபான்மை அறிவுஜீவிகள், நல்லுணர்வுடன் அதை ஆதரிக்கும் உழைக்கும் பெரும்பான்மை மக்கள் துணையின்றி புரட்சியை வெற்றி பெறச் செய்து விட முடியாது.

வெல்ஸ் : செயலற்ற துணையிருப்பு, மன ரீதியிலான ஒத்துழைப்பு

ஸ்டாலின் : உணர்வு குறைந்த, அரைமனதான ஒத்துழைப்பு எனினும் லட்சக்கணக்கான அவர்களின் ஒத்துழைப்பின்றி, அறிவுஜீவிப் பெரும்பான்மை செயலற்றதே அல்லவா ?

hg_wellsவெல்ஸ் : நான் கம்யூனிஸ்ட் ஊர்வலங்களைப் பார்த்துள்ளேன். அவை காலம் கடந்த பழைய யுக்திகளாகவே படுகிறது. அது அடக்குமுறைக்கு எதிரான முழக்கங்களாகவே உள்ளன. சர்வாதிகாரம் ஒழிந்த ஜனநாயக சமுகத்தில் அவை காலாவதியான கோஷங்களாகவே தெரிகிறது. வன்முறை மூலம் எந்த அரசையும் தூக்கியெறிவது சாத்தியமா? அப்படி எதிர்க்கத்தக்க சர்வாதிகார அரசு எதுவும் இன்று இல்லை. பழைய முதலாளித்துவ சிந்தனைகளின்  பலமானது தகர்ந்து வரும் நாட்களில் திறமை, புதுமை, ஆக்கப்பூர்வான  அணுகுமுறைகளே தேவை. வன்முறை முழக்கங்கள் அல்ல. பொருந்தாத அந்த முழக்கங்களை, ஊர்வலங்களை ஆக்கப்பூர்வமான அணுகுமுறையற்ற தொல்லையாகவே மக்கள் கருதுகின்றனர்.

ஸ்டாலின் :  பழைய முறைகள் தகர்ந்து வருகின்றன என்பது உண்மையே. சாகும் அதைக் காப்பாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதலாளித்துவம் தானாகவே தகர்ந்து வருவதாக நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். மாற்றம் என்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். நீண்ட சிக்கலான பாதை அது. அது தானாகவே நடப்பதில்லை. வர்க்கங்களின் மோதல் தவிர்க்க முடியாதது. முதலாளித்துவம் ஒரு மரத்தைப் போல பட்டுப் போய் விழுவதில்லை. கடுமையான போராட்டமின்றி மாற்றமில்லை. புதிய உலகம் எழும்போது பழைய உலகம் அதை அத்தனை எளிதாக வாழ விடுவதில்லை. நீங்கள் சொல்வது போல் பழைய உலகம் நொறுங்கி விழுந்து கொண்டுள்ளது. அது தானாக விழுவதில்லை. அது தன்னைக் காத்துக் கொள்ள ஜீவ மரணப் போராட்டத்தை வன்முறையுடன் நடத்துகிறது. பாசிசம் கூட தன்னை பாதுகாத்துக் கொள்ள உலகையே ரத்தக்களரியாக்கியது அல்லவா? கம்யூனிஸ்டுகள் வன்முறைகளை விரும்பி ஏற்பதில்லை. பழைய உலகம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உலகை மீண்டும் ரத்தக் காடாக்க முயல்கிறது. எனவேதான் வன்முறையை, வன்முறையால் கம்யூனிஸ்டுகள்  எதிர்க்க விருபுகிறார்கள். பழைய உலகை எப்படியும், மாற்ற நினைக்கிறார்கள். ஒரு அமைப்பை மாற்றுவது அத்தனை எளிதல்ல. சிரமமான, சிக்கலான, நீண்டகாலம் பிடிக்கும் முயற்சியே மாற்றம்.

வெல்ஸ் : முதலாளித்துவ உலகம் சும்மா விழவில்லை. வன்முறை ரௌடித்தனத்துடன் விழுந்து கொண்டுள்ளது. அப்படிப்பட்ட மோதலில் சோசலிஸ்டுகள், சட்டத்தையும் , அமைதியையும் நிலைநாட்ட போலீசுடனும், இராணுவத்துடனும் ஒத்துழைக்க வேண்டும். பழைய முறைகள் பயன்படாது.

ஸ்டாலின் : கம்யூனிஸ்டுகள் வரலாற்றின் பாடத்தை, அனுபவத்தைக் கொண்டு, செயல்படுபவர்கள். முதலாளி வர்க்கம் தானாக விரும்பி உலக மேடையை விட்டு வெளியேறவில்லை. 17ம் நூற்றாண்டு இங்கிலாந்து பழைய அமைப்பை க்ராம் பெல்லின் வன்முறை கொண்டே ஒழித்தது.

வெல்ஸ் : க்ராம்பெல் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே போராடினார்.

ஸ்டாலின் : அரசியல் சாசனப்படிதான் வன்முறையில் இறங்கினாரா? மான்னரின் தலையை வெட்டினாரா? நாடளுமன்றத்தைக் கலைத்தாரா? பலரைச் சிறையில் தள்ளினாரா? கொன்றாரா? உளுத்துப் போன சாரின் அரசு தானாகவா வீழ்ந்தது? எத்தனை ரத்தம் சிந்தவேண்டியிருந்தது? செத்துக் கொண்டிருந்த ருஷ்ய முதலாளித்துவம் அத்தனை உயிர்களை பலி கொண்ட பின்னர் தானே வீழ்ந்தது? பிரான்சிலும் 1789ல் வன்முறை எழுச்சியுடன் தானே மாற்றம் வந்தது. விரிசல் கண்ட மாளிகையைப் பூசிக் காப்பாற்ற முயன்றனர். ஆளும் வர்க்கத்தை பாதுகாக்க மக்களை பலியிட்டனர்.

வெல்ஸ் : எனினும் பல படித்த வழக்கறிஞர்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களுக்கு துணை நின்றனர் அல்லவா?

ஸ்டாலின் : புரட்சிகர இயக்கங்களில் அறிவுஜீவிகள் பங்கு இல்லையா? பிரெஞ்சுப் புரட்சி வழக்கறிஞர்களின் புரட்சியா? மக்கள் புரட்சியா? பிரபுத்துவத்தை வென்றது மக்கள் அல்லவா?  வழக்கறிஞர்கள் சட்டத்திற்கு உட்பட்டா அன்று அங்கு புரட்சி நடத்தினார்கள்? புதிய புரட்சிகரச் சட்டங்களை பின்னர் தானே அவர்கள் எழுதினார்கள்? வரலாற்றில் ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்திற்குத் தானாக இடம் தந்து விலகியதில்லை. கம்யூனிஸ்டுகள் இந்த வரலாற்றை அறிந்தவர்கள். முதலாளி வர்க்கம் தானாக வெளியேற முன்வந்தால் மகிழ்ச்சியுடன் கம்யூனிஸ்டுகள் வரவேற்பார்கள். அப்படி நடக்குமா? எனவே தான் உழைக்கும் மக்களை வர்க்கப்போராட்டத்திற்குத் தயாராவதற்கு கம்யூனிஸ்டுகள் அழைக்கின்றனர். தாலாட்டுப் பாடுபவன் தளபதி இல்லை. எதிரியைச் சரியாக புரியாமல் எந்த தளபதியும் சரணடைய மாட்டான். அப்படிச் செய்பவன் தற்கொலைக்குத் தயாராகிறான். அது உழைக்கும் வர்க்கத்திற்குச் செய்யும் துரோகமாகும். உழைக்கும் வர்க்கத்தின் தயார் நிலை, வன்முறை தூண்டலல்ல. 

வெல்ஸ் : பலத்தை பயன்படுத்துவதன் தேவையை நான் மறுக்கவில்லை. அது சட்ட வரம்புக்கு உட்பட்டிருப்பது நல்லது. பழைய அமைப்பு தானாகவே நொறுங்கிக் கொண்டுள்ளது. எனவே பழைய அமைப்பை ஒழிக்கப் பெரும் வன்முறை ஆர்ப்பாட்டம் தேவையில்லை. எனது கருத்து 1.நான் கடுமையான விதிகளை ஏற்கவில்லை. 2.இப்போதைய முறையை நான் எதிர்க்கிறேன் 3. சோசலிசம், வர்க்கப்போர் முறையும் தனித்தனியாக வேண்டும். மாறாக சோசலிசம் பற்றிய கல்வியே போதுமானது.

ஸ்டாலின் : பெரிய லட்சியத்தை அடைய புரட்சிகரமான வர்க்கத் துணை வேண்டும். அந்தத் துணை கட்சியே. அதில் அறிவுஜீவிகள் உண்டு. எத்தகைய அறிவுஜீவிகள் தேவை? பழைய அமைப்பில் பல படித்த அறிவு ஜீவிகள் உண்டல்லவா? இங்கிலாந்திலும், பிரான்சிலும், ருசியாவிலும் அறிவுஜீவிகள் அராஜகத்தின் பக்கமே இருந்தனர். அவர்கள் பெற்ற கல்வி, அரஜாகத்திற்கே துணை புரிந்ததல்லவா? சோசலிசத்திற்கு உதவும் கரங்களே தேவை. படித்தவர்கள் உதவி தேவையே. முட்டாள்களைக் கொண்டு சோசலிசத்தைச் சமைத்துவிட முடியாது. படித்தவர்களின் பங்களிப்பு மகத்தானது. எத்தகைய அறிவாளிகள் எந்த நோக்கத்துடன் உதவிக்கு வருகிறார்கள் என்பதும் முக்கியமல்லவா ? 

வெல்ஸ் : கல்வியில் மாற்றமின்றி எவ்விதப் புரட்சியும் நடக்காது. ஜெர்மனி பழைய கல்விமுறை மாற்றத்தினாலேயே  அது ஒரு குடியரசாக மாறாமல் போனது. அது போலவே, பிரிட்டிஷ் தொழிற் கட்சியும் அதே தவறைச் செய்தது.

ஸ்டாலின் : புரட்சியின் முதற்தேவை வலுவான சமூக பின்புலம். அது தொழிலாளர் வர்க்கமே. இரண்டாவது புரட்சிக்குத் துணை நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி அவசியம். அதில் புத்திசாலியான தொழிலாளர், அதற்குத் தொழிற்நுட்ப வல்லுனர்களின் துணை, தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக இல்லாமல் உதவும். அறிவுஜீவிகள் தேவை. மூன்றாவதாக அரசியல் அதிகாரம். அதன் மூலம் புதிய சட்டம் இயற்றலாம். பயனுள்ள பழைய சட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். கம்யூனிஸ்டுகள் வன்முறையை நம்புவர்கள் என்ற தவறான எண்ணத்தைக் கைவிட வேண்டும். எதிரிகள் ஆயுதம் தூக்காத வரை, கம்யூனிஸ்டுகளுக்கு ஆயுதம் வீண் சுமையே. வரலாறு அப்படி எதிபார்ப்பது தவறு என்பதையே உறுதிப்படுத்துகிறது.

வெல்ஸ் : இங்கிலாந்தில் 1830 - 70களில் அதிகாரத்திலிருந்த அரச வம்சம் எவ்வித வன்முறைப் போருமின்றி ஆட்சியை முதலாளி வர்க்கத்திற்குத் தந்தது. இத்தகைய உதாரணமும் உண்டு.

ஸ்டாலின் : புரட்சிகர மாற்றம் வேறு, சீர்திருத்தம் வேறு. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 19 ஆம் நூற்றாண்டில் சார்டிஸ்ட் இயக்கம் பெரும் சீர்திருத்தம் கொண்டு வந்தது.

வெல்ஸ் : அவர்கள் குறுகிய காலம் இருந்து மறைந்து போனார்கள்.

ஸ்டாலின் : உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை. சார்டிஸ்ட் இயக்கம், ஆளும் வர்க்கத்தினரைப் பல சலுகைகள் தரவும், பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் செய்ததில் பெரும் பங்காற்றியது. ஆளும் வர்க்கம், அரசரானாலும் சரி, முதலாளித்துவமானாலும் சரி, மிக புத்திசாலித்தனமானவை. தமது வர்க்க நலனை காப்பதில் குறியானவை. 1926ல்  பொது வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்தபோது அவற்றின் தலைவர்களை எந்த அரசும் கைது செய்திருக்கும். அதை செய்யவில்லை. அது தனது வர்க்க நலனைக் காக்கும் என்பதால் தான் கைது செய்யவில்லை. தமது நலனுக்கு எதிரான இவ்விதச் சலுகைகளையும், சீர்திருத்தங்களையும், முதலாளித்துவ அரசு செய்யாது. எனவே அவற்றின் சீர்த்ருத்தங்கள் புரட்சிகரமான மாறுதல் என்று நம்பி ஏற்க முடியாது.

வெல்ஸ் : என் நாட்டின் ஆளும் வர்க்கம் பற்றி என்னை விட நீங்கள் நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளீர்கள். பெரிய புரட்சி, சிறிய புரட்சி என்று எதுவும் உள்ளதா? சீர்திருத்தங்களைச் சிறிய  புரட்சி எனலாமா ?

ஸ்டாலின் : மக்கள் வற்புறுத்துதல் காரணமாக பூர்ஷ்வா அரசு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம். அடிப்படை சமூக மாற்றத்திற்கு அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமது அரசைக் காத்துக் கொள்ளச் செய்யும் இடைக்கால சமாதானமே அவை. இதுதான் சீர்திருத்தம். ஆனால் புரட்சி என்பது ஆட்சி அதிகாரத்தை ஒரு வர்க்கத்திடமிருந்து மற்றொரு வர்க்கத்திற்கு மாற்றுவது. எனவே சீர்திருத்தம் புரட்சியாகாது. சீர்திருத்தத்தால் சமூக மாற்றம் வராது.

வெல்ஸ் : எனக்குப் பெரும் வெளிச்சம் தரும் இந்த உரையாடலை நடத்த அனுமதி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. சோசலிசம் பற்றிய உங்களின் அடிப்படைக் கருத்து என்ன என்பது புரிந்தது. உலகின் லட்சக்கணக்கான மக்கள் கேட்கவும், வழிகாட்டவுமான முன் மாதிரியான மனிதர்கள் உலகில் இருவரே. ஒன்று நீங்கள், மற்றவர் ரூஸ்வெல்ட். மற்றவர்கள் பேசலாம். ஆனால் கேட்கப்படுமா? பின்பற்றப்படுமா? என்பது சந்தேகத்திற்குரியதே. உங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை நான் காணவில்லை. ஆனால் சாலைகளில் பார்க்கும் மனிதர்கள் முகங்களில் மகிழ்ச்சி உள்ளது. மக்கள் ஆரோக்கியமாக உள்ளனர். நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருவதன் அறிகுறியே அவை. 1920க்கும் இன்றைக்கும் உள்ள மாற்றங்கள் வியப்பூட்டுகின்றன.

ஸ்டாலின் : போல்ஸ்விக் ஆகிய நாங்கள் இன்னும் புத்திசாலிதனமாகச்  செயலாற்றியிருந்தால், இன்னும் மகத்தான‌ சாதனைகளை செய்திருக்க முடியும்.

வெல்ஸ் : மனிதர்கள் புத்திசாலிகளாக இருந்தால் மனித மூளையை மறுசீரமைக்கும் ஐந்தாண்டுத் திட்டங்களை முதலில் போட்டிருப்பார்கள். உன்னதமான சமூகம் அமைய நாம் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது.

ஸ்டாலின் : எழுத்தாளார்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் அல்லவா ?

வெல்ஸ் : துரதிஷ்டவசமாக நான் வேறு பல பணிகளால் செல்ல வேண்டியுள்ளது. ஒரு வார காலமே ருஷ்யாவில் தங்குகிறேன். தங்களுடன் நிகழ்ந்திய இந்த உரையாடல் மிக்க மனநிறைவைத் தருகிறது. சோவியத் எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்புகள் பல உண்டு. கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் இன்னும் அதிகம் தேவை. இது பற்றி கார்க்கியுடன் பேசுவேன். நீங்கள் இத்தகைய பேச்சுச் சுதந்தரத்தை அதிகம் தருவீர்களா?

ஸ்டாலின் : இந்த சுதந்திரத்தை சுய விமர்சனம் என்கிறோம். இதற்கு நிறைய வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. நான் வேறு ஏதாவது செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் உடன் செய்வதில் மகிழ்வேன்.

வெல்ஸ் : நன்றி !

ஸ்டாலின்: நன்றி !

தமிழாக்கம் : Dr. ஜீவானந்தம்

Pin It

உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது மாமேதை கார்ல் மார்க்சின் பெயர். அவர் தன் அருமை நண்பர் பிடெரிக் ஏங்கல்சுடன் சேர்ந்து கம்யூனிச லட்சியத்தைப் பிரகடனம் செய்தார். அதன் மூலம் உலகப் பாட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் தத்துவத்தைத் தந்தார். தலைசிறந்த புரட்சிக்காரராக, உலகப் பாட்டாளி வர்க்க லட்சியத்தின் உறுதியான போராளியாக அவர் தன் வாழ் நாளெல்லாம் உயர்ந்து நின்றார்.

karl_marx_450அவர் தனது காலத்தில் உலக நாடுகளில் சோஷலிஸ்ட்களுக்கு போதனை செய்த பேராசிரியர். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கக் கட்சிகள் உருவாகக் காரணமாய் இருந்தவர், உதவிகள் செய்தவர்.

ஆழமான கட்சி உணர்வு மிகுந்தவர். கொள்கைப் போராட்டத்தில் விட்டுக் கொடுக்காமல் போராடித் தன் கொள்கையை, தன் கருத் தை அழுத்தந்திருத்தமாக நிலைநாட்டியவர். இயற்கை, சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குகளின் விதிகள் குறித்த விஞ்ஞானத் தை உருவாக்கியவர், வளர்த் தவர்.

அவரது நண்பர்களுக்கு இடையே தலைசிறந்த நண் பராகத் திகழ்ந்தவர் ஏங்கல்ஸ். காவியப் புகழ் படைத்த நட்பு இவர்களது நட்பாகும். மார் க்ஸ் - ஐ சந்தித்த பின்னர் அடுத்த நாற்பது ஆண்டு காலம், மார்க்ஸ் உயிர் துறக்கும் வரை அனைத்து உதவிகளையும் செய்து மார்க்ஸ்-ஐப் பாதுகாத்தவர். அது மட்டுமல்ல, மார்க்சின் மறைவுக்குப் பின்னர், மார்க்ஸ் எழுதி முடிக்காமல் விட்டுச் சென்ற நூல்களை எழுதி முழுமைப்படுத்தியவர் ஏங்கல்ஸ்.

‘மூலதனம்’ என்னும் உலகப் புகழ்பெற்ற நூலின் இரு தொகுதிகளும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் என்னும் இரு மனிதர்களின் படைப் பாகும் என்றார் மாமேதை லெனின். இந்த மேதைகள் இருவரின் பெயர்களும் பிரிக்க முடியாதபடி இணைந்துவிட்டன என்பது உண்மையே.

மார்க்ஸ் நகைச்சுவை உணர்வு மிகுந் தவர். அவரது பேச்சிலும் எழுத்திலும் துள்ளிவரும் எள்ளல் சுவை கொஞ்சமல்ல. ‘அவரது எழுத்து நடை என்பது கிரேக்கர் கள் குறுவாளாகவும் எழுத்தாணியாகவும் பயன்படுத்திய ஆயுதம் போன்றது’ என அவரது ஆருயிர் நண்பர் லீப்னெஹ்ட் கூறியுள்ளார். மார்க்சின் விமர்சனங்கள் குறி தவறாமல் இதயத்தில் பாயக்கூடியவை.

மார்க்ஸ் இலக்கியப் பேராற்றல் மிக்க ஆசான். அவரது வாக்கியக் கட்ட மைப்புக்குள் பல இலக்கிய மேற்கோள்கள் இருப்பதைக் காணமுடியும். மாபெரும் ஜெர்மன் கவிஞர் ஹென்ரிச் ஹெய்னே-வை நேசித்தவர், ஷேக்ஸ்பியரை ரசித்தவர், கதே-வுடன் கைகுலுக்கியவர்.

குழந்தைகளுக்குப் பிரிய மான கிறிஸ்துமஸ் தாத்தா! அவர் வாரி வாரி வழங்கிய தெல்லாம் நகைச்சுவையும் நீதிநெறி விளக்கமும் கொண்ட கற்பனைக் கதைகளும் இதய பூர்வமான அன்பும்தான்.

காதலித்து மணந்தவர். மனித குலத்திலேயே மிகுந்த மனிதாபிமானம் மிக்கது காதல் என்றவர். ஜென்னியை மணக்க ஏழாண்டுக் காலம் காத்திருந்தவர். தனது காலத் தில் புரட்சிகரப் பத்திரிகை யாளராய்த் திகழ்ந்த அவரை வறுமையில் வாட்டி எடுத்தது முதலாளித்துவ உலகம்.

பிறந்த குழந்தைக்குப் பால் வாங்கக் காசில்லை; அதே குழந்தை இறந்த போது சவப்பெட்டி வாங்கவும் வழி இல்லை!

ஜென்னி இறந்தவுடன், தனது உயிராய் நேசித்த ஜென்னியை இழந்தவுடன் ‘மூர்’-ம் (மார்க்ஸ்) இறந்து விட்டார் என்று ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்.

உலக மக்களுக்கு அன்பு மழை பொழிந்த மேகம்! சொந்தக் குழந்தைகளையும் பாட்டாளி வர்க்க லட்சி யத்திற்குப் பாடுபட வைத் தவர்!

அவர் 1818 மே - 5ஆம் நாள் மார்க்ஸ் பிறந்தார். அவரது தந்தை ஹென்ரிச் மார்க்ஸ். தாயார் ஹென்ரியேட்டா பிரஸ்பர்க். கார்ல் என்று பெயரிட்டார் அவரது தந்தை.

1835-இல் பதினேழு வய தான போது கார்ல் தன் பள்ளிப் படிப்பை முடித் தார். அந்த ஆண்டு அக் டோபரில் முதன்முதலாக டிரியர் நகரைவிட்டு வெளியூர்ப் பயணம் மேற்கொண்டார். பான் பல்கலைக் கழகத்தின் சட்டப் பிரிவில் இளம் மார்க்ஸ் சேர்ந்தார்.

லுத்விக்வான் வெஸ்ட்பாலன் என்பவர் ஜெர்மானிய உயர்குடிப் பிரமுகர். அவரது குடும்பத்தினர் மார்க்ஸ் குடும்பத்தினருடன் நட்புறவு கொண்டிருந்தனர். அவரது மகள் ஜென்னி பிற்காலத்தில் இளம் மார்க்சின் துணைவியானார். ஹோமர், ஷேக்ஸ்பியர் எழுதிய படைப்புக்கள் யாவும் வெஸ்ட் பாலனுக்கு மனப்பாடம்! அவர் தன் இளைய மகன் எட்கார், மகள் ஜென்னி உடனிருக்க மார்க்சுக்கு மாபெரும் இலக்கியப் புதையல் களை அறிமுகப்படுத்தினார். மார்க்சின் கவிதை உணர்வுகளைத் தூண்டி வளர்த் தார். கற்பனாவாத சோஷலிஸ்ட்டான செயின்ட் சைமனை முதலில் மார்க்சுக்கு எடுத்துக் கூறினார்.

jenny_marx_522ஜென்னியின் அண்ணன் ஃபெர் டினாண்டு பிரஷ்ய அரசாங்கத்தில் உள் துறை அமைச்சர். அவர் தனது மைத் துனரான மார்க்சுக்கு முக்கிய அரசியல் எதிரியாக மாறியவர்.

மார்க்ஸ் 1839-இல் பெர்லின் பல் கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்றார். மார்க்ஸ் - ஜென்னி காதல் நிறைவேற இன்னும் ஏழாண்டு கள் காத்திருக்க வேண் டிய தாயிற்று!

இளம் மார்க்ஸ் இடதுசாரிச் சிந்தனை யாளராய் மாறிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு தந்தை யோ மிகுந்த கவலை அடைந்தார். 1839 மே மாதம் கார்லின் தந்தை மரணம் அடைந்தார். அப்பா வின் மீது அவருக்கு அளவு கடந்த நேசம். கார்ல் மார்க்ஸ் மரணம் அடையும் போது தன் சட்டைப் பை யில் தனது தந்தையின் நிழற் படத்தை வைத்திருந்தார். அந்த அளவுக்கு அப்பாவை நேசித்தவர்.

1840 ஆம் ஆண்டுகளில் தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னை யும் இணைத்துக் கொண் டார். இக்குழுவினர் மத்தி யில் கார்ல்-க்கு அதிக ஆதரவு கிட்டியது. இளம் ஹெகலிய வாதிகளும் மார்க்சும் மதத் தைக் கடுமையாக எதிர்த்தனர். கிறிஸ்துவ மதம் அறநெறி யற்றது. மனிதனுக்கு விரோத மான சக்திகள் மனிதனை ஆளுகின்ற, மனிதத் தன்மை யற்ற உலகத்தில் உண்டாக்கப் பட்டதே மதம் என்றார் இளம் மார்க்ஸ். 1859, ஏப்ரல் 15ல் ஜெனா பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

“நான் போற்றுகின்ற மனிதர் டாக்டர் மார்க்ஸ். அவர் மிகவும் இளவயதுக் காரர். வயது 24 இருக்கும். அவர் மத்திய கால தத்துவ ஞானத்துக்கும் அரசியலுக் கும் இறுதி அடிகொடுப் பார். கூர்மையான நகைச் சுவை உணர்வை ஆழமான தத்துவச் செறிவுடன் இணைக் கிறார். ரூஸோ, வால்டேர், ஹோல்பர்க், லஸ்ஸிங், ஹெய்னே, தத்துவஞானி ஹெகல் ஆகிய எல்லோரும் இணைந்திருப்பதை - இணைத் திருப்பது என்றுதான் கூறு கிறேன், கலந்திருப்பதாகச் சொல்லவில்லை, கற்பனை செய்யுங்கள் அவர்தான் டாக்டர் மார்க்ஸ்” மார்க்ஸ் - ஐப் பற்றிய தன் கருத்தை மோசஸ் ஹேஸ் என்பவர், அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் துல்லியமாக முன் னறிந்து கூறினார். இந்த மோசஸ், இயேசுநாதர் வருகை யைப் போல கம்யூனிசப் புரட்சி வரப் போகிறது என்று முன்கூட்டியே சொன்னவர்.

தன் மகனைப் பணம் சம் பாதிக்க லாயக்கற்ற உதவாக் கரை என்று வசை பாடினார் கார்ல்-இன் தாய். தந்தையின் சொத்தில் பங்குதர மறுத் தார். ஜென்னியின் குடும்பத் தாருடனும் கருத்து வேறு பாடு கொண்டிருந்தார். கை யில் பணம் இல்லாத நிலை யில் ஜென்னி - மார்க்ஸ் திருமணம் அடுத்த இரண் டாண்டுகளுக்கு கேள்விக் குறி ஆனது.

1842 ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்ட ரைய்னிஷ்ச் ஜுய்டங் என்னும் அரசியல் இதழில் சேர்ந்து ஆசிரியர் பொறுப்பேற்றார். அவர் ஆசிரியரான பின்னர் பத் திரிகை வளர்ச்சி அடைந் தது பிரஷ்ய அரசை எதிர்க்க மார்க்ஸ்-இன் கையில் பத் திரிகை ஓர் ஆயுதம் ஆனது. 1843 மார்ச்சில் பத்திரிகை தடை செய்யப்பட்டது. பின் னர் புரட்சிகரப் பணியில் ஈடுபட பாரிஸ் சென்றார். மார்க்ஸ் முன்னதாக ஜென்னி யைச் சந்தித்தார்.

1843ஜூன் 12 அன்று கிரியுஸ்நாக் என்ற ஊரில் திருமணம் நடைபெற்றது. திருமண ஒப்பந்தச் சான்றிதழ் அளிக்கப்பட்ட போது, அவர் களுக்கு எவ்விதத் தொழி லும் இல்லை என்பதும் அதில் குறிப்பிட்டிருந்தது.

1843 அக்டோபரில் பாரீசில் குடியேறிய பின்னர் கடும் அரசியல் பணி மேற் கொண்டனர். அங்கிருந்த நீதியாளர்கள் கழகத்தில் சேர்ந்தார் மார்க்ஸ். ஜெர் மனியின் மாபெரும் கவிஞர் ஹெய்னே அடிக்கடி மார்க் சின் இல்லம் வந்தார். கருத் துக்களைப் பகிர்ந்து கொண் டார். ஜெர்மனியை விடு விக்கும் சக்தி தோன்றும் என்று தன் கவிதை களில் முழங்கினார் ஹெய்னே. மார்க்சின் சிந்தனைத் தாக்கம் அவரது கவிதை களில் வெளிப் பட்டது.

1844-இல் பிரெஞ்சு - ஜெர்மன் பத்திரிகை தொடங்கப் பட்டது. மார்க்ஸ் அதன் ஆசிரியர். “தத் துவமானது மக்களின் மனத்தைப் பற்றிய உடனேயே அது பொருள் வகை சக்தி யாகிறது” என்றும் ஒரு சோஷலிசப் புரட்சியைச் சாதிக் கும் சமூக சக்தி பாட் டாளி வர்க்கம்” என் றும், “எல்லாவித மான சமூக அரசியல் ஒடுக்குமுறையிலிருந் தும் மனித குலத்தை விடுவிப்பதே சோஷ லிசப் புரட்சியின் கண்ணோட்டம்” என்றும் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டார் மார்க்ஸ்.

அவரது எழுத்துக்களைக் கண்டு மிரண்டது அரசு. அவரைக் கைது செய்ய பிரஷ்ய அரசு உத்தரவிட்டது. 1844-இல் சைலிஷிய நெசவாளர்களின் மாபெரும் எழுச்சியை ஆதரித்து பாரீசில் இருந்தபடி கட்டுரைகள் எழுதினார் மார்க்ஸ். பிரஞ்சு மற்றும் பிரஷ்ய அரசுகள் ஆத்திரமடைந்தன. 24 மணி நேரத்திற்குள் பிரான்ஸ் - ஐ விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.

மார்க்ஸ் தம்பதியினர் பிரசல்ஸ் (பெல்ஜியம்) நகரில் குடியேறினர். வேண்டா வெறுப்பாக அவரை ஏற்றுக் கொண்ட பெல்ஜிய அரசு, ஒரு பத்திரிகையாளராக அவர் வாழ முடியாதபடி தொல்லை கொடுத்தது. மார்க்ஸ் குடும்பம் வறுமை யில் வாடியது. நண்பர்கள் காப்பாற்றினர். ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ என்று தான் எழுதிய நூலுக்கு கிடைத்த முதலாவது ராயல்டியை மார்க்சுக்கு அனுப்பினார் ஏங்கல்ஸ்.

மார்க்சும் - ஏங்கல்சும் 1842 ஆம் ஆண்டில் கொலோன் நகரில் முதன் முதலாகச் சந்தித்துக் கொண் டனர். அப்போது ரைய்னிஷ்ச் ஜூய்டங் இதழின் ஆசிரிய ராக இருந்தார் மார்க்ஸ். 1844-இல் மார்க்ஸ்-ஐ மீண்டும் சந்தித்த ஏங்கல்ஸ் பத்து நாட்கள் அவருடன் பல்வேறு தத்துவஞான கருத்துக்களை விவாதித்தார். இரு வருக்கும் இடையில் ஒரு தெளிவான கருத்தொற்றுமை இருப் பதை இருவருமே புரிந்து கொண்டனர்.

1845-இல் ஏங்கல்சுடன் இங்கிலாந்து சென்றார் மார்க்ஸ். மான்செஸ்டர் நூலகம் சென்று இருவரும் ஆராய்ச்சியில் இறங்கினர்.

1846 டிசம்பரில் மார்க் சுக்கு மகன் பிறந்தான். எட் கார் எனப் பெயரிடப்பட்டது. ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர். மார்க்ஸ், ஏங்கல்ஸ் முதன் முதலாகச் சேர்ந்து எழுதிய நூல் ‘புனிதக் குடும்பம்’. பின்னர் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலை எழுதி முடித் தாலும் அவர்களது வாழ் நாளில் அதை வெளியிட முடியவில்லை. அது 1932-இல் சோவியத் யூனியனில் முதன் முதலாக வெளியிடப் பட்டது.

1846 பிப்ரவரியில் பிர சல்ஸ் கம்யூனிஸ்ட் கடிதப் போக்குவரத்து கமிட்டியை உருவாக்கினர். பல நாடு களில் கிளைகள் அமைக்கப் பட்டன. புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள் கடிதம் மூலம் மார்க்ஸ் - ஏங்கல்ஸ் - ஐத் தெளிவு கொண்டனர்.

நீதியாளர் கழகத்தில் 1847-இல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் பொறுப்பேற்றதும் அது கம்யூனிஸ்ட் கழகம் ஆனது.

கம்யூனிசப் போராட்ட லட்சியத்தின் மீது மார்க்சுக்கு மிக ஆழமான ஈடுபாடு இருந்தது. பாட்டாளிகளின் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றிய விரிவான ஞானமும் அவருக்கு இருந்தது. உழைக் கும் மக்களை அவர் நேசித் தார். உழைக்கும் மக்களும் அவரை நேசித்தனர். அவர் கள் தங்கள் மரியாதையைத் தெரிவிக்கும் வகையில் இளை ஞர் மார்க்ஸ்-ஐ ‘தந்தை மார் க்ஸ்’ என்று அழைத்தனர்.

1847 இறுதியில் கம் யூனிஸ்ட் கழகத்தின் இரண் டாவது மாநாடு லண்டனில் கூடியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதுவதில் மார்க்சும் ஏங்கல்சும் ஈடு பட்டனர். 1848ல் இருவரும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை லண்டனில் வெளி யிடப்பட்டது. பாரீசில் 1848 பிப்ரவரியில் ஏற்பட்ட புரட்சியை மார்க்ஸ் வரவேற்றார். இதன் தர்க்கம் ஜெர்மனை விட்டு வந்து பிரசல்ஸ்ஸில் குடியேறியவர்களிடமும் ஏற்பட்டது. வறுமை இருந்த போதிலும் புரட்சிக்காரர்களின் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு மார்க்சும் - ஜென்னியும் உதவினர். ஐரோப்பா முழுவதும் போராட்டச் சூழல்கள் உருவாயின.

புரட்சியின் மையமான பாரீஸ் செல்ல விரும்பினார் மார்க்ஸ். அங்கிருந்த இடைக் கால அரசு அனுமதித்தது. ஆனால் அதற்குள் பெல்ஜிய அரசு அவரைக் கைது செய்து பிரசல்ஸ் சிறைக்கு அனுப்பியது. பின்னர் போலீஸ் பட்டாளம் ஜென்னியை அழைத்துச் சென்று, இழிவுபடுத்தி, நீதிமன்றத்தில் நிறுத்தியது.

பொதுமக்கள் ஆவேசப்பட்டனர். இதன் விளைவாக மார்க்சும் ஜென்னியும் விடுதலை செய்யப்பட்டனர். விஷயம் பத்திரிகைகளில் வெளியானது, நாடாளு மன்றத்தில் விவாதம் வந்தது. அதிகாரிகள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். மார்க்ஸ் 1848 மார்ச் 5-இல் பாரீஸ் வந்து சேர்ந்தார். பாரீஸ் புரட்சி நசுக்கப்பட்ட தும் லண்டனில் குடியேறினார். மார்க்சும் தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை யில் 33 ஆண்டுகள் இங் கிலாந்தில் குடியிருந்தார்.

1850-இல் மார்க்சின் ஒரு வயது மகன் காய்ச்சலில் இறந்தான். 1851-இல் மகள் பிரான்சிங்கா இறந்தார். அவள் பிறந்த போது பால் வாங்கவும் காசில்லை. இறந்த போது சவப்பெட்டிக்கும் வழியில்லை. அவ்வளவு வறுமை! ஒரு பிரெஞ்சுக் காரர் சவப்பெட்டி வாங்கித் தந்தார். 1855-இல் எட்டு வயது மகன் எட்கார் இறந்தான்.

மார்க்சின் மூத்த மகள்களான ஜென்னியும் லாராவும் திறமைசாலிகளாய் விளங்கினர். ஆங்கிலம், பிரெஞ்சு மொழியை நன்கு அறிந்திருந்தார்கள். ஜென்னி ஓவியம் வரைந்தாள். லாராவுக்கு இசையில் ஈடுபாடு அதிகம். உலக இலக்கியங்கள் மார்க்ஸ் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமாய் இருந்தன.

நியூயார்க் டெய்லி டிரிப்யூன் இதழில் நிறைய எழுதினார் மார்க்ஸ். 10 ஆண்டுகளில் 500க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருந்தார். 1853-இல் நேரடியாக ஆங்கிலத்தில் கட்டுரை எழுத ஆரம்பித்தார்.

1855 ஜூலை 1-ஆந் தேதி லண்டனில் நடைபெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தின் போது அவர்களுக்கு மத்தியில் மார்க்சும் அவரது ஆருயிர் நண்பர் லிப்னெஹ்ட்டும் இருந்தனர். போலீசாரிடம் கைதாகாமல் தப்பினர். அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியினால் பத்திரிகை மூலம் கிடைத்து வந்த வருவாய் குறைந்தது.

அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆப்ரஹாம் லிங்கனை ஆதரித்து எழுதினார் மார்க்ஸ். லிங்கன் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்பது முன்கூட்டியே எழுதினார்.

jenny_marx_4501860 நவம்பரில் ஜென்னி உடல்நலம் இழந்தார். டிசம்பரில் குணமானதும் மார்க்ஸ் நோயில் விழுந்தார். 1861-இல் தன் தாயைச் சந்தித்தார் கார்ல். தன் மகன் மூலதனம் பற்றி எழுதுவதைவிட சிறிது மூலதனம் சேகரிக்க முயற்சி செய்திருந் தால் நன்றாக இருக்கும் என்று அவரது தாய் அடிக்கடி கூறுவார். அது கடைசி சந்திப்பு; 2ஙூ ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தாய் மரணம் அடைந்தார்.

மார்க்ஸ் மிக மென்மையான உள்ளம் கொண்டவர். கஷ்டங்களை சந்தித்து சந்தித்து மனம் நைந்து போனார். 1862-இல் அவர் ஏங்கல்சுக்கு எழுதிய கடிதத்தில் நானும் குழந்தைகளும் செத்துவிட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்கிறாள். நான் அவளைக் குறைகூற முடியாது. இந்த நிலைமையில் நாங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய அவமரியாதை களும் கடும் துன்பங்களும் பயங்கரங்களும் உண்மையிலேயே வர்ணிக்க முடியாதவை,” என்று குறிப்பிட்டிருந்தார்.

1861-இல் பொருளாதார ஆராய்ச்சியை மார்க்ஸ் தொடர்ந்தார். வருவாய் தேடி அலையும் அவலம் நீடித்தது. எனவே 1863-இல் ரயில்வே கிளார்க் வேலைக்கு மனு செய்தார். கையெழுத்து சரியில்லை என்று கிளார்க் வேலையும் மறுக்கப்பட்டது.

1864-இல் கம்யூனிஸ்ட் அகிலம் தோற்றுவிக்கப் பட்டது. மார்க்ஸ் இதன் உள்ளமாகவும் உயிராகவும் இருந்தார் என்று பிற் காலத்தில் லெனின் குறிப் பிட்டார். இந்த அமைப்பு உலகத் தொழிலாளி வர்க்கத் தின் சர்வதேச அமைப்பாகும்.

மார்க்ஸ் 1874-இல் ஈரல் நோயால் பெரிதும் அவதிப் பட்டார். மகள் எலியனாரு டன் சென்று மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டார். காரல்ஸ்பாத்திலிருந்து திரும்பி வரும் வழியில் டிரஸ் டன், பெர்லின், லைப்சிக், ஷாம்பெர்க் ஆகிய இடங் களில் தங்கி ஜனநாயகத் தலைவர்களான வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் ஆகஸ்ட் கீப், கியோடர்யோர்ஸ்ன் மற்றும் நூல் வெளியீட்டாளர் ஓட் டோமெஸ்னர் ஆகியோரைச் சந்தித்தார். 1875-இல் ஓப்பன் ஹீம் இல்லத்தில் தங்கினார். 1876 செப்டெம்பரில் மகள் எலியனாருடன் பிராக் நகரில் இருந்த ஓப்பன் ஹீம் இல்லத் திற்கு மறுபடியும் சென்றார். அப்போது பின் ஜென், கிரி யுஸ்ஷாக் ஆகிய ஊர்களுக் கும் சென்றார். 33 வருடங் களுக்கு முன் அவரும் ஜென்னியும் சில மாதங்கள் அங்கிருந்ததை மகளுக்கு எடுத்துக் கூறினார். மார்க்ஸ் லண்டன் திரும்பும்முன் யுடினைச் சந்தித்தார். அவர் அகிலத்தின் ரஷ்யப் பிரிவின் முன்னாள் தலைவர்.

மார்க்சின் உடல்நிலை இப்போது நன்கு தேறி இருந்தது. மார்க்சின் இரண் டாவது மகள் லாராவிற்கும் பால் லபார்க்கிற்கும் 1868 ஏப்ரல் 2-இல் திருமணம் நடந் தது. லபார்க் பிரான்சில் தலைசிறந்த மார்க்சிய வாதி யாய்ப் பரப்புரை செய்து வந்தார்.

1869-இல் லாராவுக்கு மார்க்சின் முதல் பேரன் பிறந்தான். 1872-இல் மூத்த மகன் ஜென்னிக்கும் சார் லஸ் லாங்கேவுக்கும் திரு மணம் நடந்தது. லாங்கே கம்யூனிஸ்ட் அகிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.

மார்க்ஸ் தன் பேரப் பிள்ளைகளை நேசித்தார். மகள் லாராவின் மூன்று சிறிய குழந்தைகளும் ஜென்னியின் குழந்தையும் மரணம் அடைந்த போது பெரிதும் மனம் கலங்கினார் மார்க்ஸ்.

1871-இல் பாரீஸ் கம்யூனைப் பிரகடனம் செய் தது பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம். அந்தப் புரட்சிகர ஆட்சி 72 நாட்கள் நீடித் தது. கம்யூனுக்கு ஆதரவாக இயக்கம் நடத்தினார் மார்க்ஸ். ‘பிரான்சில் உள்நாட்டுப் போர்’ என்ற நூலையும் இந்தக் கால கட்டத்தில் எழுதினார்.

1848-இல் புரட்சி நடந்த போது ‘அகிலம்’ என்ற அமைப்பு இல்லை.

1871-இல் பாரீஸ் கம்யூன் புரட்சி நடந்தபோது ‘அகிலம்’ இருந்தது.

பாரீஸ் கம்யூன் வீழ்ச்சி அடைந்த பிறகு இனியும் அகிலம் நீடிக்க வேண்டிய வரலாற்றுத் தேவை இல்லை என்றார் மார்க்ஸ்.

இந்த அகிலத்தின் மூலம் சோஷலிசத்திற்கான பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச அளவிலான போராட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.

1870களில் பல நாடுகளில் தொழி லாளர் கட்சிகள் தோன்றின. இயக்கம், பொருளாதார, அரசியல் வளர்ச்சி, வரலாறு, பண்பாடு பற்றி ஆராய்ந்தார்.

1867 செப்டெம்பர் 14-இல் மூலதனத்தின் முதல் பாகம் ஹாம்பெர்க் நகரத்தில் வெளி யாயிற்று. அது மார்க்சியம் பரவுவதன் புதிய கட்டத்தைக் குறித்தது.

1872-இல் ரஷ்யாவில் (பீட்டர்ஸ்பர்க்) மூலதனம் ரஷ்ய மொழியில் வெளியிடப் பட்டது. மார்க்சின் மூலதனம் அவரது 40 ஆண்டு கால உழைப்பு ஆகும். அடுத்த இரண்டு பகுதிகளைப் படித்து, திருத்தி, எழுதி, சரி செய் தார் ஏங்கல்ஸ். இந்த விலை மதிக்க முடியாத பணியைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த லெனின், ‘மூலதனத்தின் இரண்டாவது மூன்றாவது பாகங்களை வெளியிடுவதன் மூலம் ஏங்கல்ஸ் தன் நண்ப ராகிய மாமேதைக்கு ஒரு கம்பீரமாக நினைவுச் சின்னத் தை எழுப்பி விட்டார். அதன் மூலம் அந்த நினைவுச் சின்னத் தின் மீது தன்னை அறியா மலேயே தனது பெயரையும் அழிக்க முடியாத வகையில் பொறித்துவிட்டார். உண் மையில் இவை மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் கூட்டுப் படைப்பாகும்’ என்று எழுதினார் லெனின். 4 பாகங்களைக் கொண்ட மூலதனம் 1954-61-இல் சோவியத் யூனியன் வெளியிடப்பட்டது.

1881ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆந் தேதி ஜென்னி மார்க்ஸ் மரணம் அடைந்தார்.

பின்னர் மார்க்சும் கடும் நோய்வாய்ப்பட்டார். மார்புச் சளி பெரும் தொல்லை கொடுத்தது. வைட் தீவுக்கு சிகிச்சைக்காகத் தன் மகள் எலியனாருடன் சென்றார். மார்க்ஸ் நோயின் தொல்லைக்கு மத்தியிலும் தனது பொருளாதார ஆராய்ச்சியை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். 1883 ஜனவரி 13-இல் மூத்த மகள் ஜென்னி மரணம் அடைந்தார். மூத்த மகளுக்கு 5 குழந்தைகள். அவள் இறந்த போது வயது 38. மிகவும் மனம் தளர்ந்து லண்டன் திரும்பினார்.

1883-இல் மார்க்சின் சுவாசப்பையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மார்க்ஸ் மெல்ல செத்துக் கொண்டிருந்தார். 1883 மார்ச் 14 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கம் போல ஏங்கல்ஸ் வந்த போது எல்லோரும் வீட்டில் கதறிக் கொண்டிருந்தனர். அமைதியாக எவ்வித வேதனையும் இல்லாமல் மார்க்சின் உடல் பிரிந்துவிட்டது.

உலகப் பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் லண்டன் விரைந்து வந்தனர். 1883 மார்ச் 17 லண்டன் ஹைகேட் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜென்னி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவரது உடலும் புதைக்கப்பட்டது.

கண்ணீர் மல்க ஏங்கல்ஸ் இரங்கல் உரையாற்றினார்.

“யுக யுகாந்திரங்களுக்கு அவர் பெயர் நிலைத்து நீடித்து நிற்கும். அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும்” என்றார். அவ்வாறே காலங்களை வென்ற மனிதராகிவிட்டார் மார்க்ஸ். அவரது தத்துவம் மார்க்சின் பெயராலே வழங்கப்பட வேண்டும் என்று ஏங்கல்ஸ் தெரிவித்த அடிப்படையில் மார்க்சியமும் காலத் தை வென்ற தத்துவமாகிவிட்டது!

(உங்கள் நூலகம் மே 2012 இதழில் வெளியானது)

Pin It

ஜெர்மன் நோயியலாளரும் (Pathologist), வானவியலாளருமான ஆஸ்கர் மின்கோவஸ்கி (Oskar Minkowski - January 13, 1858 - July 18, 1931) 1831ம் ஆண்டு, ஜனவரி 13ம் நாள், கௌனாவுக்கு அருகிலுள்ள அலெக்சன் (Alexoten, near Kaunas, now in Lithuania) என்று அழைக்கப்படும், இன்றைய லிதுவேனியாவில் பிறந்தார். ஆஸ்கர் மின்கோவஸ்கியின் இளைய சகோதரர், உலகப் புகழ் பெற்ற கணிதவியலாளர், ஹெர்மன் மின்கோவஸ்கியின் ஆவார். அது மட்டுமல்ல, ஹெர்மன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆசிரியரும் ஆவார். 
 
Oskar_Minkowski_250ஆஸ்கர்தான் சர்க்கரை நோயின் காரணி போதுமான மண்ணீரல் சுரப்பு இன்மையே என்று நிரூபித்தார். (சர்க்கரைநோயின் கட்டுப்பாளர்/மேலாளர் இன்சுலின் என்ற ஹார்மோன் என்ற உண்மையை பிரடரிக் பாண்டிங் (Dr.Frederick Banting) பின்னரே கண்டறிந்தார்). பிறகு ஆஸ்கரும், ஜோசப் வான் மேரிங்கும் இணைந்து மண்ணீரல் தான் சர்க்கரை கட்டுப்பாட்டை நடத்தும் தொழிற்சாலை என்று அறிந்தனர்.
 
ஆஸ்கர் மருத்துவப் படிப்பை 1888ல் முடித்தார். ஆஸ்கார் மேரி ஜோஹன்னா சேகலை மனைவியாக 1894ல் மணமுடித்தார். 1904 வரை ஸ்ட்ராபௌர்க்கில் மருத்துவராகப் பணி புரிந்தார். பின்னர் கிரிச்வேல்த்-ல் மருத்துவப் படிப்பின் சேர்மனாக இருந்தார். பின் பிரெஸ்லுவில் பேராசிரியராக இருந்தார். உலகின் வெற்றிகரமான முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையைச் (hepatectomy) செய்தவரும் இவரே.

Pin It