"திராவிடத்தால் வீழ்ந்தோம்", "திராவிடம் மாயை" என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றிய போதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார். அப்போது விடுதலையில் "ம.பொ.சிக்கு பதவியா?" என்று கேள்வி எழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது. சுதாரித்துக் கொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச் சொல்லி பதவி தர மறுத்துவிட்டார்.

ma_po_sivagnanamநடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி! ராதா கின்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார். அதில் "இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா! ம.பொ.சி க்கும் உனக்கும் ஒரே வயசுதானேம்மா! நீ மட்டும் போயிட்டியே" என்று புலம்புவார். ம.பொ.சியின் துரோகம் திராவிட இயக்கத்தினரிடையே அந்தளவு எரிச்சலை உண்டாக்கியிருந்தது.

விடுதலையில் 1953ல் குத்தூசி குருசாமி அவர்கள் ம.பொ.சி.யைப் பற்றி எழுதியிருந்தார்.

உயர்திருவாளர் ம.பொ.சி அவர்களைப் பற்றி இந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வந்தது. அதற்கு பதில் தரும் வகையில் ம.பொ.சி அவர்களால் எழுதப்பட்ட கடிதம் நேற்றைய இந்து இதழில் வெளிவந்திருக்கிறது. "சுதந்திரக் குடியரசு" தேவையென்று நான் கூறியிருப்பதாக நிருபர் கூறுகிறார். தமிழரசு மாநாட்டிலோ அல்லது வேறெங்குமோ என் ஆயுளில் இதுவரையில் எங்குமே இது மாதிரி பேசியது கிடையாது. இந்த மாதிரி பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக் கழகம் துவக்கப்பட்டது.

இந்த விவகாரம் மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்கட்கும், இந்த மாகாணத்து காங்கிரஸ்காரர்கட்கும் நன்றாகத் தெரியும்.இன்றைய இந்திய யூனியனின் ஒரு பகுதியான மொழிவாரி மாகாணம் ஏற்பட வேண்டுமென்ற கொள்கையை காங்கிரசும் ஒப்புக்கொள்கிறது என்பதை மட்டும்தான் என் சொற்பொழிவில் விளக்கியிருக்கிறேன். இதுதான் நண்பர் சிவஞானம் அவர்களின் பதில்.

மதிப்பிற்குரிய ராஜாஜியை தமக்கு சான்றுக்காக அழைத்து அவருக்கும் வெண்சாமரம் வீச வேண்டிய நெருக்கடியான நிலைமை நமது வீரபாண்டியன் ம.பொ.சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தத் தமிழனும் வெட்கித் தலைகுனிந்தே தீர வேண்டும். கேவலம் ஒரு சட்டசபை மெம்பர் பதவிக்காக நமது மாபெரும் வீரர் இப்படி ஆரியத்தின் அடிபணிகிறார் என்று அவர் சீடர்களே நினைத்து வேதனைப்படுவர் என்பது நிச்சயம்.

தோழர்களே! இப்படி பல நிகழ்வுகளை எழுதலாம். மாவீரர் ம.பொ.சி.யைப் பற்றி சொல்லி மாளாது. இவரது எச்சங்கள்தான் சீமான் போன்றவர்களும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Pin It

தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (மூன்று தொகுதிகள்) -  (முனைவர் பா.சுப்பிரமணியன் 1989 பதிப்பாசிரியர்) (வெளியீடு : தஞ்சாவூர் பல்கலைக் கழகம்)

பிற்காலச் சோழர் ஆட்சியில் இருந்த தஞ்சாவூர் கி.பி. 1535 முதல் 1675 முடிய 140 ஆண்டுகள் நாயக்க மரபினர் ஆட்சியில் இருந்தது. இதன் அடிப்படையில் ‘தஞ்சை நாயக்கர் ஆட்சி’ என்று வரலாற்றியலர் குறிப்பிடுவர்.

கி.பி. 1676 இல் மராத்தியனான ஏகோஜி என்ற வெங்கோஜி, தஞ்சை நாயக்கர் ஆட்சியை சூழ்ச்சி யால் ஒழித்து ஆளத் தொடங்கினான். இந்நிகழ்வில் இருந்து தஞ்சையில் மராத்தியர் ஆட்சி தொடங்கி, 1855 முடிய நீடித்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆங்கில ரெசிடண்டின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட தாக மராத்தியர் ஆட்சி இருந்தது.

மோடி ஆவணங்கள்:-

தஞ்சை மராத்தியர் ஆட்சியில் அரசு ஆவணங்கள் மராத்தி மொழியில் காகிதத்தில் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதும் போது அவர்கள் பயன்படுத்திய எழுத்து முறை ‘மோடி எழுத்து’ எனப்பட்டது. மோடி எழுத்தில் எழுதப்பட்டதால் இவ் ஆவணங்கள் ‘மோடி ஆவணம்’ என்றழைக்கப்படுகிறது. மோடி எழுத்து மற்றும் மோடி ஆவணம் குறித்து இந்நூலின் பதிப்பாசிரியர் தம் பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“மோடணே என்றால் மராட்டி மொழியில் ‘உடைதல்’ என்று பொருள். அஃதினின்று ‘மோடி’ என்ற சொல் வந்திருக்கக்கூடும். மோடி எழுத்து என்பது தேவநாகரி எழுத்தை உடைத்துச் சிதைத்து உருவாக்கியது எனக் கொள்ளலாம்.”

“மோடி எழுத்துக்கள் தேவநாகரி வரிவடிவத்தை அடியொற்றியவையாயினும் தேவநாகரியி லுள்ள பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டுள்ள தோடு குறில், நெடில் வேறுபாடுகளும் இல்லை. இடத்திற்குத் தக்கவாறு அமைத்துப் படித்துக் கொள்வதே முறையாயிற்று. மேலும் எழுது கோலைக் காகிதத்திலிருந்து எடுக்காமல் தொடர்ச்சியாக வேகமாக எழுத மோடி எழுத்து பயன்படுகிறது. இதனால் சத்திரபதி சிவாஜியின் காலத்திற்கு முன்பிருந்தே வரலாற்றுக் குறிப்புகள், கடிதப் போக்குவரத்து, நாட்குறிப்பு, வரவு செலவுக் கணக்குகள் முதலியன மராட்டி மொழியில் மோடி எழுத்தில் எழுதப்பட்டன. மோடி எழுத்தினைப் படிக்க வல்லோர் மட்டுமே இதனைப் புரிந்து கொள்ளக் கூடுமாகையால் அரசியல் இரக சியங்களைப் பிறரறியாமல் காப்பதற்கும் பயன் பட்டது.”

மோடி ஆவணங்களின் நிலை:-

கி.பி.1676 தொடங்கி 1855 வரையிலான மோடி ஆவணங்கள் மூட்டைகளாகக் கட்டிப் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளன. 1746க்கு முந்தைய ஆவணங்கள் டெல்லிக்கும் சென்னைக்கும் எடுத்துச் செல்லப் பட்டுவிட, எஞ்சிய காலத்து ஆவணங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டன.

தஞ்சை சரஸ்வதி மகாலில் இடம்பெற்றிருந்த மோடி ஆவணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மொத்தம் அய்ம்பத்தொன்பது தொகுதிகளாக உள்ளன. இவை தவிர ஏனைய மூலப்படிகள் தமிழில் மொழியெர்க்கப்படாமல் மோடி எழுத்து வடிவிலேயே உள்ளன. அவற்றில் உள்ள செய்திகள் வெளியுலகிற்கு இன்னும் தெரியவில்லை.

இதுவரை தமிழில் மொழியெர்க்கப்பட்ட மோடி ஆவணங்கள் மேற்கூறிய தலைப்பில் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மோடி ஆவணங்களுடன் இணைந்திருந்த தமிழ் ஆவணங்கள் சிலவும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

நூல் வெளிப்படுத்தும் செய்திகள்:

தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மராத்திய மன்னர்களின் ஆட்சி ஏறத்தாழ 180 ஆண்டு காலம் நீடித்துள்ளது. வாணிபத் தொடர்புடைய தரங்கம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய கடற்கரைப் பட்டினங்களும் இவர்கள் ஆட்சியில் இருந்துள்ளன.

இஸ்லாமியர்கள் குறிப்பிடத் தகுந்த எண்ணிக் கையில் வாழ்ந்துள்ளனர். கிறித்தவத்தின் பரவல் தொடங்கிவிட்டது. தரங்கம்பாடி, தஞ்சாவூர் ஆகியன கிறித்தவத்தின் முக்கிய மறைத்தளங் களாக (மிஷன் ஸ்டேஷன்) விளங்கின. மற்றொரு பக்கம் வைதிக சமய நெறியின் பாதுகாவலர்களாக அறியப்பட்ட பிராமணர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் இங்கு நிலைபெற்றிருந்தனர்.

வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட பல்வேறு சாதிப் பிரிவினர் திரளாக வாழ்ந்து வந்தனர். இம்மக்கள்பிரிவினர் அனுப்பிய மனுக்களும் மோடி ஆவணங்களில் இடம்பெற்று, இவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை நாம் அறியச் செய்கின்றன.

இம்மனுக்களின் மீது அரசுத் தரப்பில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளும், அரசு விதித்த தண்டனை களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

அரசு வழங்கிய கொடைகள், சமூகத்தில் நிலவிய சாதிகளுக்கிடையிலான உறவுநிலை, வழிபாட்டுத் தலங்கள், மடங்கள், சத்திரங்கள் போன்ற நிறுவனங் களின் செயல்பாடு ஆகியன தொடர்பான செய்தி களும் மோடி ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் நவீனத்துவத்தின் வருகை அறிமுகமாகத் தொடங்கிய காலமுமாகும். இக்காரணங்களால் சமுதாய வரலாறு தொடர்பான சான்றுகளாக மோடி ஆவணங்கள் அமைகின்றன. மிகுதியான வரலாற்றுத் தரவுகளைக் கொண்டுள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளை

1) மகளிர் நிலை       2) பிராமணர் நிலை

3) சாதிய உறவு         4) சமயநிலை

5) குற்றமும் தண்டனையும்        6) கல்வி

7) மருத்துவம்            8) பயணங்கள்

9) அறச் செயல்கள்                10) விலங்கு மருத்துவம்

என்ற தலைப்புகளில் பகுக்கலாம். இத்தலைப்பு களுக்குள் அடங்காத வேறு பல செய்திகளும் இத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

இச்செய்திகளையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு மராத்தியர் ஆட்சியின் சமூக, பண்பாட்டு வரலாற்றைத் தெளிவாக எழுத முடியும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியத்தின் முயற்சியால் அப் பல்கலைக் கழகத்தின் சுவடித் துறைப் பேராசிரியர் கே.எம்.வேங்கடராமையா ‘தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்’ என்ற ஆய்வு நூலை மோடி ஆவணங்களின் துணை யுடன் எழுதி தஞ்சை தமிழ்ப்பல்கழகத்தின் வாயி லாக வெளியிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாகவே மோடி ஆவணங் களின் இம்மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இன்னும் எஞ்சியுள்ள மோடி ஆவணங்களும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தால் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுக் காலத் தமிழகத்தின் சமூக, பண்பாட்டு வரலாற்றை விரிவாக எழுத முடியும்.

இனி இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்தி களைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம். முதலா வதாக அக்காலத்தில் நிகழ்ந்த குற்றங்களையும் அவற்றிற்கு வழங்கப்பட்ட தண்டனைகளையும் குறித்துக் காண்போம்.

குற்றமும் தண்டனையும்:-

‘அரிசிக்காரி நனைந்துபோன அரிசியை விற்ற தினால் அபராதம் 2 பணம் விதிக்கப்பட்டது’ (12. 1. 1784). ‘தட்டான் மகாதேவனிடம் பார்சிப் பாய்கள் நகைகள் செய்வதற்குக் கொடுத்ததில் தங்கத்தைத் திருடினதினால் அவனுக்கு அபராதம் பணம் 1’ (28. 1. 1784). பொய் சாட்சி சொன்னவனுக்குச் செய்த தண்டனை விவரம்:

... அவனுக்குக் காலில் விலங்கு போட்டு ஒரு வருஷம் வரையில் அவனிடமிருந்து மராமரத்து வேலை வாங்குவது என்றும் பின்பு விடுதலை செய்கிற நேரத்தில் அவனைத் தண்டோ ராவுடன் 4 வீதிகளில் சுற்றவைத்து, அவனுடைய முழங்காலுக்குக் கீழே பிரம்பால் 6 அடிகள் வீதம் ஒவ்வொரு வீதிக்கும் அடிகள் ஆறுஅடித்து விட்டு விடுகிறது. (1. 1. 1845).

மேற்கூறிய தண்டனையில் ஆறு அடிகள் என்பதற்குப் பதில் மூன்று அடிகள் என்று குறைத்து உத்திரவிடப்பட்டுள்ளது. அது போல் ஒரு வருடம் மேற்கொள்ள வேண்டிய மராமரத்து வேலை ஆறு மாதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பொது இடங் களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தியதை இச்செய்தியுணர்த்துகிறது. ‘குடியானவனுடைய பெண் தட்டிமாலில் கொஞ்சம் சாதத்தைத் திருடியதால் அவளுக்கு அபராதம் 3 தேங் காய்’. (தட்டிமால்: மாட்டுக் கொட்டகை). திருடியவள், பெண்குழந்தையென்பதால் அவளுடைய தந்தைக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மராட்டி எழுத்துக்களைக் கற்பிக்கிற சாமா சாரியர் வீட்டுக்குச் சென்று சீக்கிரமாக வரா மலிருந்ததினால் பள்ளிப்பையன்கள் வெளியே வந்து சாக்கடையில் விழுந்து காயப்பட்ட தினால் அபராதம் 6 பணம் வாங்கப்பட்டது (1834).

உமயாபுரம் கல்யாண ராமய்யர் என்பவர் நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சியம் கூறியதுடன் பொய்யான பத்திரத்தையும் கொடுத்துள்ளார். இதற்காகச் சிறையிலிருந்த அவர் தம்முடைய தந்தையின் ‘தவசத்திற்காக’ விடுதலை செய்ய வேண்டு மென்று மனுக்கொடுத்திருந்தார். இம்மனுவிற்கு எழுதப்பட்ட அலுவலகக் குறிப்பு வருமாறு:

“கும்பகோணம் ஜில்லா கோர்ட்டின் ஜெயிலி லிருக்கிற உமயாபுரம் சுகவாசி கல்யாண ராமய்யாவானவர் தன்னுடைய தகப்பனா ருடைய தவசத்திற்குத் தன்னை ஜெயிலிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்று மனு கொடுத்தார்.

ஷெ கல்யாண ராமய்யா பொய் ஸாஷி யையும் பொய்ப்பத்திரத்தையும் தயார் செய் திருப்பதால் அவருடைய குற்றத்திற்காக முதுகில் நாலு அடிகளை அடிப்பது அவனுக்குக் கேவல மான தண்டனை. அக்காரியம் சாஸ்திர சம்மந்தமானதால் ஒரு வேளை யாராவது மானஸ்தராக இருக்கிற குற்றவாளி தன் உயிருக்கு ஆபத்து நேரிடும்படி அபாயம் செய்துகொள்வான். ஆகையால் அதை மாத்திரம் செய்யாமல், உடல் முழுமைக்கும் கருப்பு - வெள்ளைப் புள்ளிகளை இட்டு, கழுதையின் மேல் வாலின் பக்கம் முகமாக உட்கார வைத்து, அவர் கழுத்தில் எருக்கம் பூமாலைகளைப் போட்டு, குற்றத்தின் விவரத்தைச் சொல்லி, தமுக்கு அடித்துக் கொண்டு, பிரசித்தமான வீதிகளில் தவறாமல் பட்டணம் முழுமையும் சுற்றி, அந்தந்தக் குற்றத்திற்கு 5,6 ஆண்டு வெளியில் விடாமல், ஜெயிலில் போட்டு, அவர் திருடனல்லாத தால் மொட்டை அடிக்காமல் வைத்துக் கொண்டு விடுதலை செய்வது வழக்கம்”.

சில குற்றங்களுக்கு என்ன தண்டனை விதிப்ப தென்பதை தருமசாஸ்திரம் கற்ற பண்டிதர்கள் முடிவு செய்துள்ளனர். வண்டியேறி கன்றுக்குட்டி இறந்துபோன ஒரு நிகழ்ச்சியில், வண்டியோட்டிக்கு வழங்க வேண்டிய தண்டனை குறித்து சரஸ்வதி மஹாலின் தரும சாஸ்திரிகள், ‘மனு விஞ்ஞானேஸ் வரியம்’ என்ற நூலைப் பார்த்து எழுதிய குறிப்பு வருமாறு:

“ஒரு நாளிரவில் 8 மணிக்கு வண்டிக்காரனுடைய தம்பியின் பிள்ளை 18 வயதுள்ள இராமனைக் கற்கள் ஏற்றிய வண்டியுடன் அனுப்பி அவனுக்குப் பின் வீரராகு என்னும் வண்டிக்காரன் வந்து கொண்டிருக்கையில், 4 மாதத்திய காளைக் கன்றின் மேல் சக்கரமேறி செத்துப் போனது. அந்தத் தப்பிதத்திற்காக சக் 1.5 பணம் வண்டிக் காரன் வீரராகுவிடமிருந்து அபராதம் வாங்கு கிறது. கன்றுக்குட்டியின் விலையை வாங்கி கன்றுக்குட்டிச் சொந்தக்காரனுக்கு (அய்யம் பெருமாள்) கொடுக்கிறது.”

கொத்தவால் செய்தி - இரவில் ரோந்து செய்து கொண்டிருக்கையில் புவாஜி போஸ்லேயின் வீட்டில் திருடின தாண்டவராய் என்பவனை, சிகப்புக் கம்பத்திற்கட்டி பிரம்பினார் 12 அடி அடித்து விடப்பட்டது.

வீரராகு பிள்ளை என்பவரின் மகளை நீல கண்டர் மற்றும் முப்பத்திரெண்டு பேர்கள் பல வந்தமாகத் தாலிகட்டிய வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு உடலை வருத்தும் ‘சரீர தண்டனை விதிக்கப்பட்டது. இதையெதிர்த்து அவர்கள் முறையீடு செய்தனர். அதில் சரீர தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையெதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்து ‘அர்த்த தண்டனை’ என்ற பெயரில் தண்டம் விதிக்கப்பட்டு சரீர தண்டனையி லிருந்து விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக வீரராகு பிள்ளை மன்னருக்கு முறையீடு செய்து உள்ளார். நீதி வழங்குவோர் வடமொழி சாஸ் திரங்களை தம் விருப்பத்திற்கேற்ப விளக்கம் செய் வதுண்டு என்பது தெரியவருகிறது (தொகுதி 1: 196-197).

கவனக் குறைவான செயல்களுக்கும், சிறிய குற்றங்களுக்கும் சிறிய அளவிலான தண்டனை வழங்கப்பட்டதற்குப் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடலாம்.

“யுத்த சாலையில் - ஒரு தச்சன் வேலை செய்து விட்டு வீட்டுக்குப் போகையில் பாராக்காரன் (காவல்காரன்) அவனுடைய வேஷ்டியை உதறிப் பார்த்த பொழுது 2-ஙு டாங்க் நிறை யுள்ள ஒரு பித்தளைத் தகடு வேஷ்டிக்குள் ஒட்டியிருந்தது. கீழே விழுந்ததைப் பார்த்துச் சொன்னதினால் வேலை செய்யுமிடத்தில் வேஷ்டியை உதறாமல் அஜாக்கிரதையாய் வந்த குற்றத்திற்காக அபராதம் 6 தேங்காய் விதிக்கப்பட்டது.”

சிவகங்கைக் குளத்தில் குடங்களை அலம்பிய இரண்டு பெண்களிடமிருந்து அபராதம் 4.5 சக்கரம் வாங்கப்பட்டது.

சில தண்டனைகள் பொதுமக்கள் முன்பு, அவ மானப்படுத்தும் முறையில் அமைந்தன. ஒருவனை சாதியிலிருந்து நீக்குவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. அப்படி அனுமதி பெறாது செய்தவர்களில் ஒருவனுக்கு தலையில் எச்சலை களைக் (எச்சில் இலைகள்) கொடுத்து அங்குள்ள சத்திரம் வகையறாவைச் சுற்றி வந்துவிடும் போது பிரம்பால் முழங்காலின் கீழே 12 அடிகளை அடித்து விட்டு, விட்டு விட்டார்கள் (தொகுதி 1: 413). பாக்கிப் பேரையும் கோட்டையில் மேல் தண்டித்தபடி தண்டனை செய்து 6 அடிகளை அடிக்கிறது. பாக்கி 4 பேர்களையும் பிராகாரம் செய்து எச்சலை மாத்திரம் கொடுத்து விடுகிறது.

‘இராஜ மால்படி களிமோடு என்னும் ஊரி லிருக்கும் வீராயி என்பவள் செம்பு திருடி னாள். அவளைச் சாவடியில் வைத்தார்கள். அவளுடைய கழுத்தில் செம்பைக்கட்டி இன்ன குற்றஞ்செய்தாளென்று வாசித்துக் கொண்டு நான்கு வீதிகளிலும் தண்டோ ராவுடன் சுற்ற வைத்து, ஒவ்வொரு வீதி யிலும் பிரம்பினால் 3 அடி வீதம் அடித்து மூன்று வாசல்களையும் காட்டி விட்டு கோட் டைக்கு வெளியே விரட்டி விட்டது. சொந்தக் காரனுக்கு செம்பு கொடுக்கப்பட்டது’. (தொகுதி 1: 451).

ஆங்கில ஆட்சி நிலைபெற்ற பின், ரெசிடெண்ட்

என்ற பதவியில் ஆங்கில அதிகாரி ஒருவரை மன்ன ராட்சிப் பகுதிகளில் நியமித்தனர். இவரது கட்டுப் பாட்டிற்குள்தான் மன்னர்கள் இருந்தனர். இதனால் மன்னருக்கு இணையானவர் என்றே இவரைக் கூறலாம். 1824 முதல் 1838 வரை ஜான் பைஃப் என்பவர் தஞ்சை மராத்திய ஆட்சியில் ரெசிடண்டாக இருந்தனர். 1825 ஆகஸ்ட் ஐந்தாம் நாள் இவர் அம்பாரி கட்டப்பட்ட யானையின் மீது அமர்ந்து ஆற்று வெள்ளத்தைப் பார்க்கப் பயணித்தார். அப் போது, ‘அங்கு’ என்ற தேவதாசியின் மகள் ‘நாகு’ என்பவள் வண்டியில் அமர்ந்து ரெசிடண்டின் யானைக்கு எதிராகப் பயணித்தாள். இதன் பொருட்டு அவளுக்கு ஒரு சக்கரம் இரண்டு பணம் தண்டம் விதிக்கப்பட்டது (தொகுதி 1: 89-90).

தஞ்சைக் கோட்டையின் கொத்தவால் (காவலாளி) ஒருவனது செயல் குறித்து வட இந்தியாவிலிருந்து வந்து சால்வை வியாபாரம் செய்யும் ஒருவர் மன்ன ருக்குக் கொடுத்த பின்வரும் மனு, திருடருக்கும், காவலாளிக்கும் உள்ள உறவை வெளிப்படுத்து கிறது (தொகுதி 1: 555).

‘சால்வைகள் வியாபாரத்திற்காக சில பேர்கள் வந்து துகையைக் கொடாமலே சால்வை களை எடுத்துப் போய் விட்டார்கள். அந்தத் திருடன் அகப்பட, கொத்தவாலிடம் ‘அவனை ஒப்பித்தேன். அவர் திருடனை விட்டுவிட்டார். என்னுடைய வேலைக்காரர்களைப் பிடித்துக் கொண்டு போய், சாவடியில் வைத்திருக் கிறார்கள். வீட்டில் வேலைக்கு ஆளில்லாமல் பட்டினி கிடக்கிறேன். இவையெல்லாம் விசாரணை செய்ய வேண்டும்.’

மொத்தத்தில் குற்றவாளிகளைத் திருத்தும் முறையில் அல்லாமல், உடலை வருத்தும் முறை யிலும், அவமானப்படுத்தும் முறையிலும், தஞ்சை மராத்தியர் காலத் தண்டனை முறைகள் இருந்துள்ளன. வடமொழி நீதி நூல்களின் அடிப்படை யில் பண்டி தர்கள் தண்டனைகளைப் பரிந்துரைத்ததும் நிகழ்ந் துள்ளது.

பிராமணர் நிலை:-

மராத்தி மன்னர்கள் பிராமணர்களுக்கு உயரிய இடம் வழங்கியிருந்தனர். பிராமணர் குடியிருக்க அக்கிரகாரங்கள் நிறுவப்பட்டதை மோடி ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

‘திரிபுவனம் சத்திரத்திற்குப் பக்கத்தில் புதிய அக்கிரகாரம் உண்டு பண்ண’ ‘புஞ்சை நிலம் ஆறு வேலியும் மரத்தடி நிலம் இரண்டு வேலியும்’ வழங்கப்பட்டுள்ளது (தொகுதி 1:36)

கும்பகோணத்தில் புதிய அக்கிரகாரம் ஒன்று கட்டப்பட்டு தானமாக வழங்கப்பட்டுள்ளது (தொகுதி 1: 123)

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம், பிராதப சிங்கின் மூன்றாவது மனைவி யமுனாம் பாள் பெயரால் யமுனாம்பாபுரம் என்றழைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள பிராமணர்களுக்கு அறுபது வேலி நன்செய், புன்செய் நிலங்கள் சர்வமானிய மாய் நீர்வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது (தொகுதி 1:271).

இரண்டாவது சிவாஜி மன்னனுக்குப் புத்திரப் பேறு வேண்டி கும்பகோணம் அக்கிரகாரத்தில் ஜபம், பாராயணம், ஹோமம், பிராமண போஜனம் ஆகியன செய்விக்கப்பட்டன. அத்துடன் அவர்கள் நீராட, காவிரியில் படித்துறையும் கட்டிக் கொடுக்கப் பட்டது (தொகுதி 1: 12)

கும்பகோணம் சத்திரத்தில் நூறு பிராமணர் களுக்கு உணவளிக்கவும் நல்ல நாள்களில் அக்கிர காரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் வழங்கவும் தெப்பெருமா நல்லூர் என்ற கிராமம் சர்வமானியமாகக் கொடுக்கப்பட்டுள்ளது (தொகுதி 1: 36)

வீடுகள், நிலங்கள் மட்டுமின்றி சத்திரங்களில் அவ்வப்போது பிராமணர்களுக்கு உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரவேந்திரபுரம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய ஊரில் சத்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதில் துவா தேசி நாட்களில் பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது (தொகுதி 1:48). வேத சாலையில் பிராமண போஜனம் நடத்தப்பட்டது (தொகுதி 1:466). வேதம் வல்ல பிராமணர்களுக்கு ‘சுரோத்திரியம்’ என்ற பெயரில் நிலக்கொடை வழங்கப்பட்டது. இந்நிலம் அவரது காலத்துக்குப் பின் அவரது பரம்பரையினருக்குச் சேராது (தொகுதி 2:259-263, 334)

உணவு தவிர வேறு சில பொருட்களும் அன் பளிப்பாக வழங்கப்பட்டன. செருப்பும், குடையும் இரண்டு பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப் பட்டதற்கான செலவு விவரம் மோடி ஆவணம் ஒன்றில் பதிவாகியுள்ளது (தொகுதி 1:49). இரா மேஸ்வரத்திற்கு இரண்டாம் சரபோஜி மன்னர் யாத்திரை சென்ற போது ‘எல்லாப் பிராமணர் களுக்கும் பூரி (தட்சினை) கொடுக்கிற வகையில் .5 படி அரிசியும் 4 காசும் கொடுத்து வந்தார் (தொகுதி 1:243). மேலும் சத்திரங்களில் பிராமணர்கள், வெள்ளைக்காரர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு உணவுக்குப் பதில் அரிசியும், உப்பு, புளி முதலிய உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இது ‘உலுப்பை’ எனப்பட்டது (தொகுதி 1:115). ஆட்சி புரிந்த வெள்ளையர்களுக்கும் அரசு உயர் அதிகாரி களுக்கும் இணையாக, பிராமணர்கள் ‘உலுப்பை’ பெற்றது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையைக் குறிக்கிறது.

கும்பகோணம் காஞ்சிமடத்தின் செயல்பாடு களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாஸ்திரிகள் சிலர் எழுதிய நீண்ட மனு ஒன்றும் மோடி ஆவணத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது (தொகுதி 1:354-356). காஞ்சிமடம் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்த பின்னர் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, அங்கு பணிபுரிந்த தம்பிரானின் திருட்டுச் செயல்கள் ஆகியன இம்மனுவில் விரிவாகப் பதிவாகியுள்ளன.

சாதிகள்:

சாதி வேறுபாடு அழுத்தமாகப் பேணப்பட்டு உள்ளது. தஞ்சை சிவகங்கைக் குளத்தில் குறிப் பிட்ட சாதிகளுக்கென்று படித்துறைகள் ஒதுக்கப் பட்டிருந்தன. ஒரு சாதியினரின் படித்துறையில் வேறு சாதியினர் புழங்குவதைத் தடுக்கக் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் (தொகுதி 1:74-75).

பஞ்ச கம்மாளர் என்றழைக்கப்படும் தட்டார், கன்னார், கல்தச்சர், கொல்லர், பொற்கொல்லர் ஆகிய ஐந்து கைவினைஞர்களும் ‘பாஞ்சாளர்கள்’ என்றழைக்கப்பட்டனர். இப்பிரிவினர் தம் திருமணத்தில் மேற்கொள்ளும் நடைமுறைகளைக் குறித்து அரசிடம் உடன்படிக்கை எழுதிக் கொடுத் துள்ளனர் (தொகுதி 1:193). சாதிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வரையறுக்கப்பட்டிருந்ததை இது உணர்த்துகிறது.

மோடி ஆவணங்களின் இடையில் தமிழில் எழுதப்பட்ட காகிதச் சுவடிகள் இருந்துள்ளன. இவற்றுள் வலங்கை, இடங்கைப் பிரிவு குறித்த நீண்ட ஆவணம் ஒன்று இடம்பெற்றுள்ளது (தொகுதி 2:356-371). இது இரண்டாம் சரபோஜியின் மகன் சிவாஜியின் ஆட்சிக் காலத்தில் (1832-1855) எழுதப் பட்டுள்ளதாக, கே.எம். வெங்கட்றாமையா குறிப் பிட்டுள்ளார். மற்றபடி இது எழுதப்பட்ட சரியான காலம் தெரியவில்லை. வாக்குமுலமாக அமைந் துள்ள இந்த ஆவணத்தில் வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

இப்பட்டியல் படி, வலங்கைச் சாதியினராக (1) ரெட்டிவடுகர் (2) கமல வடுகர் (3) துளுவ வடுகர் (4) துளுவச் செட்டி (5) வெள்ளாளச் செட்டி (6) குத்திக் கொல்லர் (7) நங்காரி வடுகர் (8) சேணயர் (9) சலுப்பன் (10) இடையர் (11) சாலியர் (12) கோமுட்டி (13) உப்பிலியன் (14) சாணான் (15) சுண்ணாம்புக்காரன் (16) மாறாயச் செட்டி (17) மேளகாரன் (18) வலையர் (19) தெலுங்க அம் பட்டன் (20) தமிழ் அம்பட்டன் (21) வண்ணான் (22) வாணியன் என இருபத்திரண்டு சாதியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இடங்கைச் சாதியினராக (1) மேலசெட்டி (2) கைகோளர் (3) பள்ளி (4) படையாச்சி (5) மறவர் (6) மேளக்காரர் என ஆறு சாதியினர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.

இப்பட்டியலைடுத்து அவர்கள் மணப்பந்தல் அமைக்கும் முறை, மண ஊர்வலம் நடந்தும் முறை ஆகியன தொடர்பான செய்திகள் பதிவாகியுள்ளன. சடங்குகளை மையமாகக் கொண்டு உருவான வேறு பாடுகளை இதன் வாயிலாக அறிய முடிகிறது.

மிருக வைத்தியம்:-

மராத்தியர் அரண்மனையில் யானை, குதிரை, ஒட்டகம், மாடு ஆகிய விலங்குகள் வளர்க்கப் பட்டுள்ளன. இவற்றிற்கான தீனி வழங்கப்பட்ட போதிலும் அவை அரண்மனை ஊழியர்களால் களவாடப்பட்டுள்ளன (தொகுதி 1:500). விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும், விபத்தினால் ஏற்படும் காயங்களுக்கும் உரிய மருந்து விவரங்களும் மோடி ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன. சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:

கன்றுக்குட்டிக்கு மாந்தமென்னும் ரோகத் திற்கு மருந்துக்கு கால்சேர் சுக்கு’ (தொ 1:60).

வண்டிமாட்டுக்கு பாரம் தூக்கி மாரில் இரத்தங்கட்டி, மாடு நொண்டுகிறதாகையால் உள்ளுக்குக் கொடுக்க, கர்க்கம் கோழியின் மசாலை ... (தொகுதி 1:60).

ஒட்டகத்திற்கு ஜலதோஷத்தினால் ஜுரம் வந்து தீனியை சாப்பிடாததினால் உள்ளுக்குக் கொடுக்க மசாலை... (தொகுதி 1:61).

குதிரைக்கு உஷ்ணந் தணிவதற்காக ‘தவிரி புத்தி’ என்னும் தயிர்ச்சாதம் தினமொன்றுக்கு கைலி அரிசி படி 5 இடை தயிர் சேர் 10 (தொகுதி 1:81).

கிரிராஜ் என்னும் குதிரைக்கு வாயுக்காக உள்ளுக்குத் தினம் கொடுக்க ஒரு வாரத்திற்கு இஞ்சியைக் கொடுக்கிறது (தொகுதி 1:82).

ஒரு மாட்டுக்கு கழுத்து வீங்கியிருப்பதற்கு ஒத்தடம் கொடுக்க கைலி உப்பு படி .5 மாட்டுக்குச் சிரங்கு வந்ததற்குத் தடவ வேப் பெண்ணை சேர் 2 கொடுக்கிறது (தொகுதி 1:83).

உடுப்பு தந்தமுள்ள யானைக்கு வாயுவினால் கால் பிடித்திருப்பதால் உள்ளுக்கு மருந்து 45 நாட்களுக்கு மாவுத்துவசம் கொடுப்பது. சுக்கு ஙு சேர், அரிசித் திப்பிலி ஙு சேர், கண்டத் திப்பிலி .5 சேர், காயம் .5 சேர், கோதுமை படி 2, செவ்வீயம் ஙு சேர், அபின் ஙு சேர், உப்பு படி 2, பனை வெல்லம் 2 சேர் (தொகுதி 1:87).

சமயம்:

மராத்தி மன்னர்கள் இந்து சமயத்தினர் என் றாலும் இஸ்லாமிய சமயத்தை ஆதரித்துள்ளனர். முஸ்லிம்களின் முகரம் பண்டிகை ‘அல்லாப் பண்டிகை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது (தொகுதி 1:133). முகரம் திருநாளையொட்டி நிகழும் ஊர்வலம் தொடர்பாக ‘அல்லா ஊர்வலம் சுற்றி வருவதற்கும் விருதுகளை வழக்கப்படி கொடுக்கிறது’ என்று குறிப்பிட்டு விட்டு ஈட்டிக்காரர்கள் 40, யானையின் மேலுள்ள விருதுகள், மேளம், ஸங்கீத மேளம், அரபி வாத்தியம், துருப்புகள், கோட்டையிலும் கோட்டைக்கு வெளியிலுமுள்ள தப்பு தம்பட்டம் வகையறா, நெட்டியினால் செய்த மரங்கள், 20 தீவட்டிகள், வாணங்களின் கடிகள், பல்லாக்குத் தூக்குகிற ஆள் 5, டகோரா வாத்தியம் ஜோடி 1, குதிரையின் சேணங்கள் என ஒரு பட்டியலைக் குறிப்பிட்டுள்ளது (தொகுதி 1:212).

நாகூர் தர்காவிற்கு நகரா வாத்தியமும் (தொ 1:215) தர்காவில் மூடுகிற போர்வையும் (தொ 1:217). மொகரம் பண்டிகையையொட்டி நிகழும் கொடி யேற்றத்தின் போது, விளக்கு எண்ணை வாங்க பத்து நாட்களுக்குப் பணமும் (தொகுதி 1:214) அரண்மனையிலிருந்து வழங்கப்பட்டுள்ளன.

தர்க்கா ஒன்றின் உரிமை தொடர்பான மனு ஒன்றும் மோடி ஆவணத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது (தொகுதி 2:61-64). இஸ்லாமியருடன் மராத்தி மன்னர்கள் கொண்டிருந்த நல்லுறவை இச்செய்திகள் உணர்த்துகின்றன.

மழை பெய்ய வேண்டி தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள நந்திக்கு, சிறப்பு வழிபாடு நிகழ்த்தப்பட்டது (தொகுதி 1:133).

***

(உங்கள் நூலகம் செப்டம்பர் 2012 இதழில் வெளியானது)

Pin It

முன்னுரை:

மதுரை மாநகரின் தெற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் இன்று ஒரு நகர மாகவே வளர்ந்துவிட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இம்மலையில் முருகன் கோயில்மட்டும்தான் உள்ளதா? வேறு பிற வரலாற்றுச் சின்னங்கள் உள்ளனவா? கால மாற்றத்தில் இவ்வூர் எவ்வகையிலெல்லாம் வளர்ந்தும், பண்பாட்டு மாறுதல்கள் பெற்றும் திகழ்கிறது என்பது சுவையான செய்தியாகும்.

திருப்பரங்குன்றம் வரலாற்றை அறிவதற்குப் பல தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி அண்மைக் கால இலக்கியங்கள் வரை இவ்வூரின் வரலாற்றைப் பேசுகின்றன. அதுபோல் சங்ககாலக் கல்வெட்டு களாகக் கருதப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் தொடங்கி கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் சான்றுகள் இவ்வூர் பற்றிய பல சுவையான செய்திகளைத் தருகின்றன. அறுபடை வீடுகள் பற்றிப் பேசும் திருமுருகாற்றுப் படையும் முதல் படைவீடாகத் திருப்பரங்குன்றத் தையே சுட்டுகிறது. எண்பெருங்குன்றங்களை வரிசைப் படுத்தும் சமணப் பழம்பாடல் ஒன்றும் திருப்பரங் குன்றத்தையே முதல் சமணத் தலமாகக் குறிப்பிடு கிறது. அந்த வகையில் இவ்வூர் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த ஊராக வரலாறு நெடுகிலும் திகழ்ந் துள்ளது.

இலக்கியங்கள் காட்டும் பரங்குன்று :

காலத்தால் முற்பட்ட சங்க இலக்கியங்களான அகநானூறு, மதுரைக் காஞ்சி, கலித்தொகை போன்ற இலக்கியங்களும், சற்றே காலத்தால் பின்தங்கிய பரிபாடல், திருமுருகாற்றுப்படை, ஆகிய இலக் கியங்களும் இவ்வூரைப் பற்றிப்பேசும் தொன்மையான இலக்கியங்களாகும். பக்தி இயக்கத்தின் மூலவர் களான திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரப்பதிகங்கள் அடுத்த கட்டமாக இவ்வூரைப் பற்றிப் பேசும் இலக்கியங் களாகும். மாணிக்கவாசகரின் திருக்கோவையார், கல்லாடம், பெரிய புராணம் ஆகியவை 9 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை எழுந்த இலக்கியங்கள். இவை தவிர திருப்புகழ் முதலான பல புராணங்கள், கோவைகள், அந்தாதிகள், என இலக்கிய வகைகள் பலவும் இவ்வூரைப்பற்றிப் பாடுகின்றன.

அகநானூற்றில் மருதன் இளநாகனார் என்னும் புலவர் திருப்பரங்குன்றத்தை முருகன் குன்றம் (அகம் 59) என்றே பாடுகிறார். எருக்காட்டூர் தாயங் கண்ணனார் என்னும் சங்கப்புலவர் ‘ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’ (அகம் 149) எனப் பாடுகிறார். மதுரைக் காஞ்சியில் ‘தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்’ (மதுரைக்காஞ்சி. வரி. 264) எனத் திருப்பரங்குன்றம் சுட்டப்படுகிறது. பரிபாடலில் ஏழுபாடல்கள் பரங்குன்றின் முருகனைப் பற்றிய பாடல்களாக அமைந்துள்ளன. இதில் ஒரு பாடலில் திருப்பரங்குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும், அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் காணவந்த மதுரை மக்கள் இங்கிருந்த ரதி, மன்மதன், அகலிகை, கௌதமன், பூனை உருக்கொண்ட இந்திரன் ஆகியோரை அடையாளங் கண்டு வியந்தனர். மேற்சுட்டிய சங்கப்பாடல்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் முருகனுக்குரியது என்றே சான்று பகர்கின்றன. ஆனால் பின் வந்த தேவார மூவர் காலத்தில் சிவபெருமான் கோயிலாக இக்கோயிலும் மலையும் பேசப்படுவதைக் காணலாம்.

திருப்பரங்குன்றம் சிவன்கோயில்:

பரன் + குன்றம் என்பதே பரங்குன்றம் என் றானது பரன் என்பதை, சிவபெருமானுக்குரிய பெயராகவே கருதுவர். சங்க இலக்கியங்களில் பரங் குன்றம் என்றே சுட்டப்பட்டிருந்தாலும் இங்கு முருகன் உறைந்ததாகவே குறிப்புகள் உள்ளன. ஆனால் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் இங்குள்ள சிவன்கோயிலே தலைமைக் கோயிலாகத் தலைமைக் கடவுளாகப் பேசப்பட்டுள்ளது.

‘அங்கமோராறும் அருமறை நான்கும்

 அருள்செய்து

பொங்கு வெண்ணூலும் பொடியணி

 மார்பில் பொலிவித்துத்

திங்களும் பாம்பும் திகழ்சடை

 வைத்தோன் தேன்மொழி

பங்கினன்மேய நன்னகர் போலும்

 பரங்குன்றே’

என்னும் ஞானசம்பந்தர் பாடல் அவர் வாழ்ந்த காலமான கி.பி.7ஆம் நூற்றாண்டில் சிவபெரு மான் இங்குத் தலைமைத் தெய்வமாகக் கருதப் பட்டுக் கோயில் கொண்டிருந்தார் என்பதையே காட்டுகிறது.

சுந்தரர் தேவாரத்தில் பரங்குன்றம் இரண் டாவது தலமாக வைத்துப் பாடப்பட்டுள்ளது. அவர் மதுரை மாநகரில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களுடனும் தங்கியிருந்து சுற்றி யுள்ள கோயில்களையெல்லாம் பாடியுள்ளார். சேரமான் பெருமாள் நாயனார், பாண்டிய மன்னன், அவன் மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழன் என்னும் மூவேந்தர்களே அவர்கள். இவர் களில் பாண்டிய, சோழ மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. சோழமன்னர்கள் அக் காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஆட்சி யாளர்களாக இல்லை. நின்றசீர் நெடுமாறனின் அரசி வளவர் கோன் பாவை மங்கையர்க்கரசி என அறிகிறோம். ஆனால் அப்போதைய வளவர் கோன் யார் என்று தெரியவில்லை. அது போலவே சுந்தரர் காலத்திய சோழ மன்னனும் யார் என்று அறியக்கூடவில்லை. சுந்தரர் காலத்தை சுமார் எட்டு (அ) ஒன்பதாம் நூற்றாண்டு என நாம் கருதினால் அப்போதைய பாண்டிய மன்னர்களாகப் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் (கி.பி 768 - 815) அடுத்து அவனது மகன் ஸ்ரீமாற ஸ்ரீ வல்லபன் (கி.பி. 815 - 862) ஆகியோரையே குறிப்பிடவேண்டும். பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் காலத்தில்தான் குடை வரை கோயில் திருப்பரங்குன்றத்தில் முழுமை பெற்றுள்ளது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமென்

                றமரர் பெருமானை ஆருரன் ஆரசி.

‘முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

                மொழிந்தாறு மோர் நான்கு மோர்

 ஒன்றினையும்

படியாயிவை கற்று வல்லவ் வடியார்

                பரங்குன்றமே யமர மன்னடிக்கே

குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக்

                குலவேந்தராய் விண்முழுதாள்பவரே.

என்னும் பாடலில் சுந்தரர் மூவேந்தர்களுடன் வணங்கிய செய்தி பெறப்படுகிறது. வேந்தர்களின் பெயர்கள் அறியப்படாவிட்டாலும் சேர, சோழ, பாண்டியர் என்னும் மும்மரபின் மன்னர்களும் திருப்பரங்குன்றம் கோவிலைச் சுந்தரரோடு வந்து வணங்கினர் என்பது உறுதிப்படுகிறது.

சங்ககாலத்தில் குறிஞ்சி நிலமாக, முருகன் குன்றமாகத் திகழ்ந்த பரங்குன்றம் அடுத்துவந்த பக்தி இயக்க காலத்தில சிவனுக்குரியதாக மாறி யுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் வைதீக சமயத்தின் கலப்பினால் தமிழ்த் தெய்வமான முருகன், சிவன் - பார்வதியின் மகனாக மாற்றப்பட்டுள்ளான்.

‘ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை

மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ

இழையணி சிறப்பின் பழையோள் குழவி’

எனத் திருமுருகாற்றுப்படை பாடுவதும் இவ்வைதீகக் கலப்பின் காரணமாகவே எனலாம். இவ்வாறாகத் தமிழ்க் கடவுள் முருகன் வைதீக மரபுக்குள் இணைக்கப் பட்டபின், தேவாரம் பாடப்பட்ட கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் தான் இங்கு, தற்போதுள்ள குடை வரை கோயில் குடைவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கி.பி.7-8ஆம் நூற்றாண்டுகளில்தான் பல்லவர், பாண்டிய நாட்டுப் பகுதிகளில் வைதீகம் சார்ந்த குடைவரைகள் தோற்றுவிக்கப்பட்டன. மிகத் தொன்மையான குடைவரையான பிள்ளையார் பட்டி குடைவரை வைதீகக் கடவுளாக அறிமுகம் ஆன விநாயகர்க்கு (கி.பி.500 - 550) எடுக்கப்பட்டது. மண்டகப்பட்டு குடைவரை சிவன், திருமால், நான் முகன் என மூவர்க்குமாக (கி.பி.600 - 630) எடுக்கப் பட்டது. அதனை ஒட்டியே மதுரைப் பகுதியிலும் குடைவரைகள் யாரால் எடுக்கப்பட்டது என்பதற்கு இங்குள்ள கல்வெட்டு ஒன்றே சான்றாக உள்ளது.

பராந்தக நெடுஞ்சடையனின் ஆறாம் ஆட்சி யாண்டைச் சேர்ந்த (கி.பி.773) இக்கல்வெட்டு, தரப்படுகிறது.

ஸ்ரீ கோமாறஞ் சடையற்கு

ராஜ்ய வருஷம் ஆறாவது செல்லா

நிற்ப மற்றவர்க்கு மஹா

சாமந்தனாகிய கரவந்த புராதி

வாசி வைத்யன் பாண்டி அமிர்

தமங்கல வரையரை இ

ன சாத்தங்கணபதி தி

ருந்து வித்தது திருக் கோஇ

லும் ஸ்ரீதடாகமும் இதனுள

றமுள்ளதும் மற்றவர்க்கு

தர்மபத்னி ஆகிய

நக்கங் கொற்றியாற் செயப்

பட்டது துர்காதேவி சோ

இலும் ஜேஷ்டை கோகிலும்.

இக்கல்வெட்டின் மூலம் பெறப்படும் செய்தி யாவது, மாறன் சடையன் என்னும் பராந்தக நெடுஞ் சடைய வர குணனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் (கி.பி.773ல்), இம்மன்னனின் படைத்தலைவன் சாத்தன் கணபதி இக்குடைவரையைத் திருத்துவித்தான். இவன் நெல்லை மாவட்டத்திலுள்ள ‘கரவந்தபுரம்’ என்னும் ஊரைச்சேர்ந்தவன். இக்கரவந்தபுரம் இன்று ‘உக்கிரன் கோட்டை’ என்று வழங்கப் படுகிறது. இவன் வைத்யகுலத்தைச் சேர்ந்தவன். இன்று லட்சுமி தீர்த்தம் என்று பெயர்பெற்றுள்ள குளத்தையும் இவனே அமைத்தான். அவனது மனைவி நக்கன் கொற்றி என்பவள் இம்மலையிலேயே துர்கா தேவி கோயிலும், ஜேஷ்டை கோயிலும் குடை வித்தாள். இவ்விரண்டு கோயில்களும், தற்போது மூடிவைக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டில் ‘திருத்துவித்தது’ என்ற ஒரு சொல் இடம்பெற்றுள்ளதைக் கொண்டு ஏற்கெனவே வணங்கப்பட்டுவந்த அநேகமாக முருகன் உறைவிட மாக வணங்கப்பட்டுவந்த இயற்கையான குகையை வரகுணன் முழுமைப்படுத்தினான் என்று கருத வாய்ப்புள்ளது. இவ்வாறு திருத்துவிக்கும் போது அப்போது வைதீகமாக்கப்பட்ட சமய நெறிகளின் படி சிவன், திருமால், முருகன், கணபதி, துர்க்கை என்ற ஐந்து தெய்வங்களுக்குமான கோயிலாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஐந்து தெய்வங்களை உள்ளடக்கியதாகப் பஞ்சாயதக் கோட்பாட்டின் அடிப்படையில் இக்கோயில் உரு வாக்கப்பட்டுள்ளது. இத்தெய்வங்களுடன் சூரியன் மட்டும் சேர்க்கப்பட்டுச் சண்மதக்கோட்பாடு உரு வாக்கப்பட்டு அதனைத்திருச்சியில் உள்ள பாண்டி யார் குடைவரையில் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். இவ்விதம் கலைச்சின்னங்களில் பலவித திரு உரு வங்கள் இடம்பெறுவதற்கு சமயக் கோட்பாடுகள் காரணமாக இருந்தன என்பதற்குத் திருப்பரங் குன்றம் ஒரு சிறந்த சான்றாக அமைகிறது.

இக்கோயிலில் நாம் காணும் இன்னொரு முக்கிய செய்தி ஜேஷ்டை வழிபாடாகும். தமிழகத்தில் குறிப்பாகப் பாண்டிய நாட்டு முற்கால குடை வரைகளில் விநாயகரும், ஜேஷ்டையும் இடம் பெறுவதும் உண்டு. ஜேஷ்டை வழிபாடு இத் தொடக்க காலத்தில் தாய்த்தெய்வமாக, வளமை வழிபாட்டின் வடிவமாகக் கருதப்பட்டுள்ளது. பிற்காலத்தில் திருமாலின் மனைவியாக திருமகள் ஏற்கப்பட்டபோது அவளே செல்வத்திற்குரிய தெய்வமாகக் கருதப்பட்டதால் சேட்டை வழிபாடு மங்கத் தொடங்கியது. அதற்கு ஒப்ப ஆழ்வார் பாடல்களிலும் இச்செய்தி படம்பிடித்துக் காட்டப் படுகிறது.

‘செய்ய கமலத் திருவுக்கு முன் பிறந்ததையல் உறவு தவிர்த்தோமே’ என்னும் நந்திக்கலம்பக வரியும் (பாடல் 112),

‘கேட்டீரே நம்பிமார்கள்

 கருடவாகனனும் நிற்கச்

சேட்டை தன் மடியகத்துச் செல்வம்

 பார்த்திருக்கின்றீரே’

(தொண்டரடிப் பொடியாழ்வார்)

என்ற இலக்கியச் சான்றுகள், வைணவத்தின் எழுச்சியின் காரணமாக சேட்டை வழிபாடு மறைந்தது என்பதைக் காட்டுகின்றன.

பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளில் (கி.பி. 12-13) திருப்பரங்குன்றம் உடைய நாயனார் என்று சிவபெருமானே சுட்டப்படுவதால் இக்கோயில் தொடர்ந்து சிவன் கோயிலாகவே வழிபடப்பட்டு வருகிறது. அருணகிரி நாதரின் வருகைக்குப்பின், முருக வழிபாட்டின் ஏற்றம் காரணமாக இவ்வூரில் முருக வழிபாடே மேலோங்கியுள்ளது. அமைப்பு வகையில் சிவன் கோயிலாக இருந்தாலும், வழி பாட்டு நெறியில் முருகவணக்கமே சிறப்பிடம் பெறு கிறது.

பிற்காலப் பாண்டியர்களால் (கி.பி. 12-13) அம்மனுக்கென்று தனியாகக் கட்டுமானக் கோயில் ஒன்று கட்டப்பட்டது. திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார் கோயில் எனப்படும். இத்திருக் கோயிலில் பல பாண்டிய மன்னர்களுடைய கல்வெட்டுகள் உள்ளன. நாயக்க மன்னர்கள் பல மண்டபங் களையும், சிற்றாலயங்களையும், கோபுரங்களையும் கட்டியுள்ளனர். மதுரையில் நாயக்கர் ஆட்சியை நிலைநாட்டிய விஸ்வநாத நாயக்கர் பேரனும், கிருஷ்ணப்ப நாயக்கரின் குமாரருமான வீரப்ப நாயக்கர் இன்றுள்ள பெரிய கோபுரத்தைக் கட்டி யுள்ளார்.

‘ஸகாப்தம் ‘1505 இன்மேல்

செல்லா நின்ற சுபானு

வருசம் கார்த்திகை 12 தேதி விசு

வநாத நாயக்கர் கிருஷ்ணப்ப

நாயக்கரய்யன் குமாரர்

வீரப்ப நாயக்க ரய்யன்

கட்டிவித்த கோபுரமும் திரு

மதிளும் உ’

என்ற கல்வெட்டு கோபுரத்தூணில் வலப்பக்கத்தில் உள்ளது. இது கொண்டு இக்கோபுரம் கி.பி. 1583இல் கட்டப்பட்டது என்பது உறுதியாகிறது. இதே ஆண்டில்தான் இதே வீரப்ப நாயக்கரால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கம்பத்தடி மண்டபமும் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் ஆட்சிக்கு முன்பாக ஆட்சி செய்த ஆறு நாயக்க மன்னர் களும் விஜயநகர மன்னர்களின் சிற்றரசர்களாகவே மதுரையை ஆட்சி செய்தனர். இதனைக் குறிக்கும் வகையில் ஒரு சான்று திருப்பரங்குன்றம் கோயில் கொடி மரத்தில் உள்ளது. கொடி மரத்தின் ஒரு புறம் விஜயநகர அரசு சின்னமாக வராகமும், வாளும், சூரியசந்திரருடன் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் மதுரை நாயக்கர் அரச சின்னமாக ஒரு மரத்தின் கீழ் படுத்திருக்கும் நந்தியும், குறுவாளும், சூரிய, சந்திரருடன் காட்டப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர்தான் தன்னாட்சி செலுத்தியவர். அவர் இக் கோயிலில் சொக்கநாதர் ஆலயம், பழனி ஆண்டவர் ஆலயம் என இரண்டு கோயில்களைக் கட்டியுள்ளார். அவருடைய உருவச் சிலைகளும் இங்குள்ளன. மங்கம்மாள் காலத்தில் இக்கோயிலின் இன்றுள்ள நுழைவாயில் மண்டபம் கட்டப்பட்டது. ஒரு தூணில் மங்கம்மாளின் சிற்பம் எதிர்த்தூணில் உள்ள முருகன், தெய்வயானைத் திருமணக் காட்சியைக் காண்பதாக வடிக்கப்பட்டுள்ளது கொண்டு இதனை உறுதிப் படுத்தலாம்.

திருப்பரங்குன்றத்தில் சாமானியர்களின் தொண்டு:

அரசர்களும், அவர்தம் தேவியரும் மட்டுமே திருப்பரங்குன்றம் கோயிலின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் பங்காற்றினர் என்பதில்லை. மாறாக, இங்குவாழ்ந்த அடித்தளமக்களும் இக் கோயிலைக் காப்பதிலும், வழிபடுவதிலும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ஓரிரண்டு செய்திகள் மட்டும் இங்கே தரப்படுகின்றன. கிபி. 1792 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. மதுரை மாநகரம் வெள்ளையர் ஆட்சிக்குட்பட்ட போது திருப்பரங்குன்றம் கோயிலையும் அவர்கள் ஆக்கிர மித்தனர். அதனைத் தடுத்து ஒரு கோயில் ஊழியர் ‘குட்டி’ என்பவர் கோபுரத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வறப் போரின் காரணமாக ஆங்கிலேயர் படை பின் வாங்கிச் சென்றது என்று ஒருகல்வெட்டு கூறுகிறது.

‘வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கி சொக்கநாதர் கோயிலையும் இடித்து, பழனி யாண்டவர் கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக்கொண்டு, ஆஸ்தான மண்டபங் கைக்கொண்டு அட்சகோபுர வாசல் கதவையும் வெட்டி, கலியாண மண்டபத்துக்கு வருகிற பக்குவத்தில், திருவிழாவும் நின்று தலமும் ஊரும் எடுபட்டுப் போராதாயிருக்கிறது என்று... வயிராவி முத்துக்கருப்பன் மகன் குட்டியைக் கோபுரத்தில் ஏறிவிழச் சொல்லி, அவன் விழுந்து பாளையம் வாங்கிப்போனபடியினாலே, அவனுக்கு ரத்தக் காணிக்கையாகப் பட்டயம் எழுதிக் கொடுத் தோம்.’

இக்கல்வெட்டின் மூலம் கோயில் ஊழியம் செய்யும் கடை நிலைப் பணியாளர் கோயிலைக் காப்பதற்காகத் தன்னுயிரை ஈகம் செய்துள்ளமை அறியப்படும். பிற நிர்வாகிகள் பலர் இருந்தும் யாரும் உயிர்விடத் துணியவில்லை. வயிராசி மகன் குட்டிதான் வைராக்யனாகவும் திகழ்ந்துள்ளான்.

இதுபோல் கோயில் ஆடல்மகளிர்களும் தம் பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதற்கு ஒரு சான்று. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 17 ஆம் ஆண்டில் (கி.பி.1233) ஒரு தேவரடியாள் பெண்ணுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது என்ற செய்தி ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. எனவே அக்காலம் முதல் அண்மைக்காலம் வரை இங்கு தேவரடியாட்கள் பணியாற்றியிருந்தனர். அவர்களுள் ஒரு பெண், தான் இறந்த பின் தன் சொத்துக்களை வைத்து கோயிலில் ஓர் அறப்பணி செய்யவேண்டும் எனக் கல்வெட்டில் வெட்டிவைத்துள்ளாள்.

‘உ தாது வருசம் மாசி மாதம் 30 திருப்பரங்

 குன்றத்திலிருக்கும் தாசி

பொன்னம்மாள் மகள் பாப்பாள் யிறந்து

 போற காலத்தில் தன்னுடைய

சொத்துக்களை வித்து தனக்கு

 சமாதிகட்டும்படிக்கும் துவாதேசிகட்டளை

நடத்தும் படிக்கும் அதியான சேனாபதி

 அய்யர் குமாரசாமியா

பிள்ளை யிடத்தில் சொன்னபடிக்கி

 நடத்தியிருக்கிறது உ.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள சமாதி அண்மைக்காலம் வரை திருப்பரங்குன்றம் அனைத்துமகளிர் காவல் நிலையம் அருகில் இருந்தது. இக்கல்வெட்டு 2006 ஆம் ஆண்டில் இக்கட்டுரை ஆசிரியரால் வாசிக்கப் பட்டு அப்போதைய காப்பாட்சியர் சாம் சத்யராஜ் அவர்களால் ஆவணம் இதழ் 17இல் வெளியிடப் பட்டது. தற்போது மேம்பாலம் கட்டும் பணிக்காக இச்சமாதி முற்றாக இடிக்கப்பட்டுவிட்டது. கல் வெட்டும் காணப்படவில்லை. இதன்மூலம் நாம் பெறும் செய்தியாவது, திருப்பரங்குன்றம் கோயில் வளர்ச்சிப்பணிகளில் சாமான்ய மக்களும் பங்காற்றி யுள்ளனர் என்பதே. பல்வேறு சமூகத்தவரும் பல சத்திரங்களும், மண்டபங்களும் அமைத்து விழாக் காலங்களில் அன்னதானம் செய்து வருவதும் ஒருவகையில் மக்கள் சேவையே.

பரங்குன்றில் சமணம்:

சங்ககாலத்திலேயே மதுரைப்பகுதியில் சமண சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தது. திருப்பரங் குன்றத்திலும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே சமணத்துறவிகள் தங்கியிருந்தனர் என்பதற்கு அடை யாளமாக அவர்களது கற்படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மூன்று கல்வெட்டுகள் இங்குள்ளன.

‘அந்துவன் கொடுபிதவன்’

‘எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன்

செய்தான்

ஆய்சயன நெடுசாதன்’

‘மாரயது கயம’

இம்மூன்றும் இங்குள்ள குகையில் கற்படுக்கை களின் மீது வெட்டப்பட்டுள்ளன. இக்குகை இன்றைய புகைவண்டி நிலையத்தின் கிழக்கே (எதிரில்) உள்ள மலைப்பாறையில் உள்ளது. இச்சமணச் சான்றுகளின் காலத்திற்குப் பின்னர் பக்தி இயக்கக் காலத்தில் சமண சமயத்திற்குச் சற்றே பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் அத்தற்காலிகப் பின்னடைவி லிருந்து மீண்டு கி.பி.9-10 ஆம் நூற்றாண்டுகளில் சமணம் மீண்டும் தனது பழைமையான நிலைகளில் மையங் கொண்டது. இக்காலகட்டத்தில் அச்சணந்தி என்னும் சமணத் துறவி நாடெங்கும் அலைந்து திரிந்து சமண மறுமலர்ச்சிக்கு உழைத்தார். இந் நேரத்தில் சமண சமயவாதிகளின் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. உருவ வழிபாடுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். பெண்களுக்கும் சமயத்தில் பங்களிப்பைக் கொடுத்தனர். நுண்கலைகளிலும் நாட்டம் செலுத்தினர். பல புதிய உறைவிடப் பள்ளி களை அமைத்து மக்களிடையே தொண்டாற்றினர்.

ஆவியூர்க்கு அருகிலுள்ள குறண்டி என்னும் ஊரில் திருக்காட்டாம்பள்ளி என்ற ஒரு பள்ளி சிறப்பாகச் செயல்பட்டது. பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளி என அது பெயர் பெற்றிருந்தது. இப்பள்ளியின் ஆசிரியர்களும், மாணாக்கர்களும் மதுரையைச் சுற்றியிருந்த பல பள்ளிகளோடும் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் பல இடங் களுக்கும் சென்று சமணத் திருமேனிகளைப் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கி வழிபடச் செய்தனர். திருப்பரங்குன்றம், கிழக்குயில் குடி, முத்துப்பட்டி, குப்பல்நத்தம், ஐவர் மலை போன்ற பல ஊர்களில் இவர்களது பணிகள் பற்றிய கல் வெட்டுகள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலின் பின்புறம் ஓர் இயற்கை யான சுனை உள்ளது. அங்குள்ள பாறையில் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று மகாவீரர் உருவம், மற்றொன்று பார்சுவநாதர் உருவம். இவற்றின் கீழ் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று,

‘வெண்புநாட்டுத் திருக்குறண்டி

அனந்த வீர்யப்பணி’

அனந்த வீர்யன் என்னும் ஒரு சமண அடியவர் இங்குள்ள மகாவீரர் சிற்பத்தை அமைத்துள்ளார். இதன் அருகில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தைச் செதுக்கியவர் பற்றிய குறிப்பு இன்னொரு கல்வெட்டில் உள்ளது.

‘ஸ்வஸ்திஸ்ரீ சிவிகை ஏறினபடையர்

நீலனாஇன இளந்தம்மடிகள்

மாணாக்கன் வாணன் பலதேவன்

செவ்விச்ச இப்பிரதிமை’

என்பது இதன் வாசகம். இக்கல்வெட்டுகள் கிபி.9-10 ஆம் நூற்றாண்டுகாலத்தைச் சேர்ந்தவை. இதே காலத்தில் மலை மேல் உள்ள காசிவிசுவநாதர் ஆலயத்தின் அருகில் உள்ள உயரமான பாறை யிலும் இரண்டு சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அதன்கீழ் கல்வெட்டுகளும் உள்ளன.

உமையாண்டார் கோயில்:

திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. இங்கும் ஒரு குடைவரைகோயில் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்டுள்ளது. யாரால் எடுக்கப்பட்டது என் பதற்கான சான்றுகள் இல்லை என்றாலும் கோயிலின் அமைப்பைக் கொண்டு காலங்கணிக்கப்படுகிறது. இக் கோயில் சமணக் கோயிலாக இருக்கவேண்டும் என்பதற்கான எச்சங்களும் உள்ளன. கிழக்கு நோக்கிய ஒரு கருவறையும், அதனை அடுத்த முன் மண்டபமும் கொண்ட இக்கோயில் தெற்குப்பார்த்து அமைந் துள்ளது. கருவறையில் தற்போது நந்தியின் முன் புறம் நிற்கும் அர்த்தநாரி சிற்பமே உள்ளது. ஆனால் இச்சிற்பத்தின் தலைப்பகுதியில் அசோக மரத்தின் கிளைகள் காட்டப்பட்டுள்ளன. சைவக்கோயில் களில் இவ்வாறு காணப்படுவதில்லை. எனவே தொடக்கத்தில் அசோகின் கீழ் அமர்ந்த ஓர் சமணத் துறவி அல்லது மகாவீரர் சிற்பம் இங்கு இருந் திருக்கலாம். பின்னர் இது சைவக் கோயிலாக மாற்றம் பெற்றபோது இதனை அர்த்தநாரியாக மாற்றிவிட்டனர் எனத் தோன்றுகிறது.

இதற்கு ஆதரமாக எதிர் சுவரில் உள்ள மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு ஒன்று (கிபி. 1233) இக் கோவில் பிரசன்னதேவர் என்னும் சைவ அடியாரின் வேண்டுகோளின்படி சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்னும் பெயரில் சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது என்ற செய்தியைத் தருகிறது. எனவே சமணக் கோயில் சைவக் கோயிலாக மாறியது என நம்பு வதற்கும் இடமுள்ளது. அம்மாற்றத்தின் போது நடராசர், சிவகாமி அம்மை, முருகன், வள்ளி தேவ சேனா, விநாயகர் உருவங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. வெளிப்புறப்பாறையில் தேவாரமூவர், பைரவர் சிற்பங்களும் உள்ளன. துறவியர் சிற்பங் களும் இடப்பக்கம் உள்ளன. இவர்களில் ஒருவர் பிரசன்ன தேவராக இருக்கலாம்.

இக்கோயிலும் பின்னாளில் சிதைக்கப்பட்டு உள்ளது. குடைவரைத் தூண்கள் நான்கும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. எக்காலத்தில், யாரால் இந்த அழிவு நேர்ந்தது என்று கூறுவதற்கில்லை.

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாம்:

திருப்பரங்குன்றம் மலையில் மதுரையை ஆட்சி செய்த சுல்தானிய மரபின் கடைசி மன்னன் சிக்கந்தர் ஷாவின் சமாதி இருப்பதாகக் கூறப்படு கிறது. அச்சமாதிக்குச் சென்று இஸ்லாமியர்கள் அவ்வப்போது வழிபாடு செய்வதுண்டு.

முடிவுரை:

சங்ககாலத்தில் அடர்ந்த மலையாக, குறிஞ்சி மக்கள் வாழ்ந்த பகுதி திருப்பரங்குன்றம். அவர் களின் தலைமைக்கடவுள் முருகன் உறைந்த குன்ற மாக இருந்தது. பின்னர் வைதீகத்தின் செல்வாக் கால் பரங்குன்றம் ஆனது. சிவன் தலைமைத் தெய்வமாக்கப்பட்டுத் தேவாரப்பாடல்களும், அதனையொட்டி குடைவரைகளும் உருவாக்கப் பட்டன. சங்காலத்திலேயே இம்மலையின் ஒரு பகுதியில் சமணர்களும் வாழ்ந்துள்ளனர். கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை அவர்களும் செல்வாக்குடன் விளங்கியுள்ளனர். 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இஸ்லாமியத் தொடர்பும் இம்மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், சமய நல்லிணக்கத்தின் சான்றாகத் திருப்பரங்குன்றம் திகழ்கிறது.

பயன்பட்ட நூல்கள்:

1.            Early Tamil Eprigraphy – Iravatham Mahadevan, Crea, Chennai - 2003.

2.            Dr.Devakhanjari, Madurai Through the Ages, Madurai. 2004.

3.            செ. போசு - திருப்பரங்குன்றம். தொல்லியல் துறைவெளியீடு சென்னை- 1981

4.  ஆவணம் இதழ்கள் 17 & 23

(உங்கள் நூலகம் செப்டம்பர் 2012 இதழில் வெளியானது)

Pin It

வ.உ.சிதம்பரனார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். அதன் அருகிலே தான் கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங் குறிச்சி உள்ளது. கவியரசர் பாரதி பிறந்த எட்டய புரம், வ.உ.சி. பிறந்த ஒட்டப்பிடாரத்திற்கு வடக்கே எட்டு மைல் தொலைவில் உள்ளது.

இந்த ஒட்டப்பிடாரம் என்ற ஊரில்தான் உலக நாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் மகனாக தியாக தீபம் வ.உ.சிதம்பரனார் 1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வியாழக் கிழமை பிறந்தார்.

1888இல் தூத்துக்குடியில் ஒரு தனவந்தரால் கோரல்மில் என்கிற பெயரில் ஒரு மில் கட்டப் பட்டது. அந்த கோரல் மில்லில் அப்போது 1695 பேர் வேலை செய்தார்கள். உழைத்து உழைத்து ஓடாய்ப் போன அத்தொழிலாளர்களை ஆங்கிலேயர்கள் கூலிகள் என்ற பெயரில் அடிமைகளாக நடத்தினர். நாள் ஒன்றுக்கு 14 மணி நேர வேலை. ஒருநாள் கூட விடுமுறை கிடையாது. உழைப்பிற்கேற்ற ஊதியமே கொடுக்கப்படவில்லை.

v_o_c_400கோரல்மில் தொழிலாளர்கள் தமக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்கித் தவித்தனர். வ.உ.சிதம்பரனாரிடம் சொல்லிக் கண்ணீர் வடித்தனர். விளைவு, வ.உ.சி.யும் சிவாவும் தொழிலாளர்களிடையே உணர்ச்சியூட்டும் எழுச்சி உரை ஆற்றினர். 27.12.1908 இல் கோரல்மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஆரம்பமானது.

தொழிலாளர்கள் பட்டினி கிடந்தனர். அவர்கள் குடும்பத்திற்குச் சோறு போட வ.உ.சிதம்பரனார் பல வழிகளிலும் உதவினார். தன்னுடைய மனைவி அணிந்திருந்த நகைகளை விற்று அவர்களுடைய பசியைத் தணித்தார்.

அன்றைய சப் கலெக்டர் ஆஷ் வ.உ.சி.யை மிரட்டினான். மிரட்டினால் பணியுமா சிங்கம்? பிறகு தன் பங்குக்கு கலெக்டர் விஞ்ச் துரையும் வ.உ.சி.யைக் கூப்பிட்டு மிரட்டினான். சுதந்திர வேங்கை இதற்கெல்லாம் பயப்படுமா?

தூத்துக்குடியில் ஒரு புயலையே உருவாக்கி விட்டனர் வ.உ.சி.யும், சுப்ரமணிய சிவாவும்.

வெள்ளையர் உணவு உண்ண உணவுப் பொருள்கள் தர வணிகர்கள் மறுத்தனர். சலவைத் தொழிலாளர்கள், நாவிதர்கள், கழிவுப்பொருள்களை அகற்றுபவர்கள் என அனைவருமே ஆங்கிலேயர் களுக்குக் காரியம் ஆற்ற மறுத்தனர். ஆளும் வர்க்கம் செய்வதறியாது திகைத்தது.

அடிமைகளாக இருந்த மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்தது வ.உ.சி.யின் வீரம் செறிந்த எழுச்சி உரைகளும் தன்னலமில்லாத் தொண்டு உள்ளமுமே ஆகும். இறுதியாக சத்தியம் வென்றது. கோரல்மில் நிர்வாகம் பணிந்தது, சிதம்பரனாரை அழைத்துப் பேசியது; வேலை நேரம் குறைக்கப் பட்டது. ஊதிய உயர்வும் கொடுக்கப்பட்டது. வெற்றிப் புன்னகையோடு வீரம் செறிந்த போராட்டம் நடத்தி 1909, மார்ச் 7 ஆம் நாள் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

தொழிலாளர்களின் சேனைத் தலைவரைத் தொழிலாளர்கள் வாயார வாழ்த்தினர். தூத்துக்குடி நகரமும் வ.உ.சி.யைப் போற்றிப் புகழ்ந்தது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் திருவள்ளுவர். அவ்வாறே வ.உ.சிதம்பரனாரும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவராகவே வாழ்ந்தார். சிதம்பரனார் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விருதுநகர் ராமையா தேசிகரைத் தம்முடைய இல்லத்தில் வைத்துக் காப்பாற்றி வந்தார். அவர் இரண்டு கண்களும் குருடான துறவி. சிதம்பரனார் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் உற்றார் உறவினரின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளானார். மனம் தளருவாரா அந்த மாவீரர்?

இந்திய வியாபாரிகளை நசுக்கும் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் கொட்டத்தை அடக்கத் துணிந்தார் வ.உ.சி.; இந்திய வணிகரின் ஆதரவைப் பெற்று 1906ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றை நிறுவ முயன்று துணிந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவரான பாண்டித்துரைத் தேவரை கம்பெனியின் தலைவராக்கி, செயலாளர் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டார் சிதம்பரனார்.

பம்பாய் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு போதுமான பணம் திரட்டிய பின்னர் “காவியா” என்ற கப்பலை வாங்கினார். பின் “லாவோ” என்ற மற்றொரு கப்பலையும் பிரான்சிலிருந்து வேதமூர்த்தி மூலம் வாங்கி, ஒரே கால கட்டத்தில் இரு பெரும் கப்பல்களையும் வெள்ளையனுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல் கொண்டுவந்து நிறுத்தினார். இந்தச் செயற்கரிய காரியம் செய்த வீரரை, சாதனை யாளரைப் பத்திரிகைகள் பாராட்டிப் புகழ்ந்தன.

வ.உ.சி.யை வெளியே விட்டு வைத்தால் ஆங்கில சாம்ராஜ்யத்திற்கே சாவு மணி அடித்துவிடுவார் என்று பயந்த ஆங்கிலேய அரசு இவரையும் சுப்ர மணிய சிவாவையும் கைது செய்தது. இறுதியாக வ.உ.சி.யின் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 07.07.1908 அன்று வெளியானது. அரச நிந்தனைக் குற்றத்திற்காக இருபது வருடமும், சுப்ரமணிய சிவாவுக்கு அடைக்கலம் தந்தமைக்கு இருபது வருடமும் தண்டனை விதித்த ஆங்கிலேய அரசு தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக - அதாவது, மொத்தத்தில் நாற்பது ஆண்டுகள் கடும் தண்டனை விதித்தது.

சட்ட ஞானம் பெற்ற வழக்கறிஞரை, சுதந்திர தீ மூட்டிய அரசியல் தலைவரை, கப்பலோட்டிய கர்ம வீரரை, ஏழைகள் பால் இரக்கம் கொண்ட ஏந்தலை, செந்தமிழ் வள்ளல் சிதம்பரனாரை, கொலையும், கொள்ளையும் புரிந்த கொடியவர் களான சமூக விரோதிகளோடு நாற்பதாண்டுகள் பூலோக நரகமான அந்தமான் தீவில் வாழுமாறு நீதிபதி பின் வேறு தீர்ப்பளித்தார்.

முப்பத்தைந்தே வயதுடைய வாலிபப் பருவத் தினரான வ.உ.சி. அவர்கள், தாய் தந்தையரையும், இளம் மனைவியையும் இரு பச்சிளங்குழந்தை களையும் பிரிய நேரிட்டது. சிதம்பரனாருக்கு விதிக்கப்பட்ட கொடுமையான தண்டனையைக் கேட்டு வ.உ.சி.யின் தம்பியான மீனாட்சிசுந்தரம் பைத்தியமானார். அவர் இறக்கும் வரை பித்தனாகவே இருந்து மாண்டார்.

சிதம்பரனார் தமது தண்டனைக் காலத்தை கோயமுத்தூர், கண்ணனூர் சிறைகளில் கழித்தார். மாடு போல் அல்ல மாடாகவே செக்கிழுத்தார். சிறையில் கல்லுடைத்தார். சிதம்பரனாரின் நண்பரான பாரதி இதைக் கேட்டுக் கண்ணீர் வடித்தார். இதோ அவருடைய கண்ணீர்க் கவிதை:

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப் பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண் கிலையோ
மாதரையும் மக்களையும் வன்கண்மையாற் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ!

தீவிரவாதிகளின் தலைவரான திலகரே வ.உ.சி.யின் அரசியல் குரு. வ.உ.சி. தன்னுடைய கடைசிக் காலத்தில் வறுமையில் வாழ்ந்தார். சென்னையில் இருந்தபோது அரிசி வியாபாரம் செய்து பிழைப்பை ஓட்டினார்.

ஆத்திகரான வ.உ.சிதம்பரனார் உயிர்விடுந் தருவாயில் தேவாரத்தையோ, திருவாசகத்தையோ பாடச்சொல்லிக் கேட்கவில்லை. மாறாக, பாரதியின் நாட்டுப் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டே உயிர்நீத்தார்.

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது மிந் நாடே” என்று தொடங்கும் பாடலும்” “என்று தணியுமெங்கள் சுதந்திர தாகம்” என்ற முதலடி கொண்ட பாடலும்தான் வ.உ.சிதம்பரனார் கேட்ட கடைசிக் கவிதைகள்.

“சாவதற்கு முன்னர் சுதந்திரத்தைக்
காணக் கொடுத்து வைக்காமற் போனேனே!”

என்று கண்களில் கண்ணீர் மல்கக் கூறிய சொற் களே அவர் மொழிந்த கடைசிச் சொற்கள்.

(உங்கள் நூலகம் செப்டம்பர் 2012 இதழில் வெளியானது)

Pin It

தமிழகத்தில், எழுதப்பட்ட வரலாறாலாக இருந்தாலும், வாய்மொழி வரலாறாக இருந்தாலும், கலைகளின் வாயிலாக காட்டப்பட்ட வரலாறாக இருந்தாலும் அனைத்துமே ஆண்ட பரம்பரையின் வரலாறுகளாக, அரசர்களின் வரலாறுகளாக, ஆண்டைகளின் வரலாறுகளாக, ஆதிக்க ஜாதிகளின் வரலாறுகளாகத்தான் இருந்து வருகின்றன.

muthuramalinga_thevar_400அப்படிப் புனையப்பட்ட வரலாறுகளில் ஒன்றுதான் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் (தேவர்) என்பவரின் வரலாறு ஆகும்.தென் மாவட்டங்களில் மாத்திரம் அல்ல, முக்குலத்தோர் என்று சொல்லப்படுகிறவர்கள் குழுவாக அல்லது கூட்டமாக வாழ்கிற இடங்களில் மாத்திரம் அல்ல, தமிழகத்தின் தலைநகராய் விளங்கும் சென்னைப் பெருநகரின் மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத்தின் சிலை உட்பட அவரது நினைவாக நிறுவப்பட்ட அனைத்து சிலைகளின் பீடங்களிலும் பொன்மொழி போல் ஒரு வாசகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். அது இதுதான்:   ''தேசமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்''

மேற்காணும் வாசகத்தில் உள்ள இரண்டு சொற்களுக்குமே சொல்விற்பன்னர்கள் பல படப் பொருள் கூறுவர். அப்படிக் கூறுபவர்களில் பெரும்பாலோர் இவ்விரு சொற்களுமே பெருமையும், பெரும் பொருள் பொதிந்தவை என்றுமே கூறுவர்.

'தேசம்' என்கிறபோது, அது வெற்று வரைபடமோ அல்லது அவ்வரைபடம் விரிக்கும் நிலத்தின் வரையறையோ அல்ல! மாறாக, அவ்வரைபடம் வரையறுக்கும் நிலத்தில் வாழும் பல்வேறு இனக்குழு சார்ந்த மக்களையே அது குறிக்கும். இந்த இந்தியா என்கிற தேசம் விசித்திரமானது. இதில் பல்வேறு மொழி பேசுகிற, வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த வேறுபாடுகளை கடந்தவர்கள்தான் இதனை ஒரு தேசமாகக் கருத முடியும்-கண்ணைப்போல் காத்திடவும் முடியும். 120 கோடிக்கும் மேலான மக்கள் தொகைக்கொண்ட இத்தேசத்தில் அப்படி ஒருவரை கண்டறிவதென்பது கடற்கரை மணலில் விழுந்த கடுகைத் தேடுவது போல் தான் இருக்க முடியும்.

'தேசமும் , தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று கூறிய திரு முத்துராமலிங்கம் அதனை அப்படியே கடைபிடித்தவர் தானா என்றால், அச்சொற்களின் உண்மைப் பொருளையும் - அதனை கூறிய திரு.உ.மு.தேவரின் நடவடிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒற்றுமை என்பதை சிறிதளவேனும் காண இயலாது. அதிலும் குறிப்பாக இவர் தான் வசிக்கும் பகுதியில் வாழ்ந்த மக்களையே, சமமான மனிதர்களாகக் கருதும் மன இயல்பில்லாதவர்.

'அரிஜனங்கள் எனப்படுவோர் ஆண்டவனின் குழந்தைகள்' என்றார் மகாத்மா(!) காந்தி. 'ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்' என்றனர் ஆன்மிகத் துறையினர். இதனை அறவே வெறுத்தவர் திரு முத்துராமலிங்கம். எனவே, தேசம் என்கிற சொல்லும், தெய்வீகம் என்கிற சொல்லும் இவரது அகராதியில் வெவ்வேறு பொருள் பொதிந்தவை ஆகின்றன. இதனை இவர் 'கண்ணாக'க் கருதினார் என்பதை இயற்கை அறிவு கொண்டோர் எவரும் ஏற்க இயலாது.

இவையன்றி இவரைக் குறித்துக் கட்டமைக்கப்பட்ட கதைகளும் அப்படித்தான்.

1. திரு.உ.மு.தேவர் பாண்டிய மன்னர் பரம்பரையில் வந்தவர்.
2. திரு.உ.மு.தேவர் தனது நிலங்களை தலித்துகளுக்கு பகிர்ந்தளித்தார்.
3. திரு.உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்.

இப்படியெல்லாம் இவரைக் குறித்தான பிரம்மிப்பூட்டும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டது. இவர் தன்னலமற்ற தியாகியாகவும், சுயசாதி விருப்பமற்ற சமத்துவ விரும்பியாகவும், நாட்டுப்பற்றில் ஈடு இணையற்ற வீரராகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராகவும், நினைத்தால் எதையும் ஆக்கவும், அழிக்கவும் வல்ல சர்வ சக்தி படைத்தவராகவும் அவரை நம்பியக் கூட்டத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

எனினும், நடுவுநிலை பிறழாமல் சிந்திக்கக் கூடியவர்கள் எவருமே திரு.உ.முத்துராமலிங்கம் குறித்தான இத்தகைய புனைவுகளை ஏற்க மறுக்கின்றனர். அத்துடன் இவை அத்தனையும் புனைவுகள் தாம் என்பதை தரவுகளோடு நிறுவியும் உள்ளனர். அவற்றை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

புனைவு ஒன்று: உ.மு.தேவர் பாண்டிய மன்னர் வழிமுறையில் வந்தவர்

திரு.முத்துராமலிங்கம் 30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 'பசும்பொன்' கிராமத்தில் பிறந்து, 1938ல் சப்-மாஜிஸ்திரேட்டாக இருந்த பிரதம நாயகம் என்பவரை இவரது ஆட்கள் கொலை செய்து விட, அச்சூழலில் மதுரைக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 29.10.1962ல் மதுரை திருமங்கலம் பகுதியில் இறந்து விடுகிறார். 'பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி' எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும், 'முக்குலத்தோர்' பிரிவில் பிறந்தவருமான பத்திரிக்கையாளர் திரு.தினகரன் பின்வருமாறு மறுக்கிறார்:

'தெலுங்கு தேசமான ஹைதராபாத் நகரத்துக்கு அருகில் நெல்லிமாரலா, நௌபதாதுசி என்னும் கிராமங்களையொட்டி 'கிழுவநாடு' என்று ஒன்று இருந்தது. அங்கிருப்பவர்கள் 'தேவ' என்னும் பட்டம் உடையவர்கள். அய்யனார் தெய்வத்தை வணங்குகிறவர்கள். அய்யனை (குல தெய்வமாக) கொண்ட கூட்டத்தினர். (கூட்டத்திற்கு கோட்டை என்றும் பொருள் உண்டு) இவர்களே 'கொண்டையன் கோட்டை' மறவர்களின் முன்னோர்களாய் இருக்க வேண்டும் எனவும், ஆந்திரப் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து ஆப்பநாட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும் கூறுகின்றார்.'

(தமிழகத்தின் தலைவர்களை வந்தேறிகள் என வாய்க்கூசாமல் பேசிவரும் பெங்களூர் குணாவின் புதிய மாணாக்கர் 'தம்பி' சீமான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

புனைவு இரண்டு : உ.மு.தேவர் தனது நிலங்களை தலித் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.

'உ.முத்துராமலிங்கத்தை பரம்பரைப் பணக்காரர் எனச் சொல்லும் அவரது பற்றாளர்கள் உ.முத்துராமலிங்கம் தனது நிலங்களை தலித்துகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் என்பதைச் சற்று உரக்கவே கூவுகின்றார்கள். உ.முத்துராமலிங்கம் தனது இறப்புக்கு முன்னர் 1960ல் தனது பங்களா இருக்கும் புளிச்சிகுளம் கிராமத்தில் 32 1/2 கிராம நிலங்களை 17 பாகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துவிட்டு, 16 பாகங்களை தனக்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்த 16 பேருக்கு எழுதி வைத்தார். அவர்களுள் பசும்பொன்னைச் சேர்ந்த இரண்டு தலித்துகளும் அடங்குவர்.

உ.முத்துராமலிங்கத்தின் இறப்புக்குப் பின்னர், ''திரு.உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு தர்மபரி பால ஸ்தாபனம்'' என்னும் பெயரில் நிறுவப்பட்ட அறக்கட்டளைக்கு, வடிவேலம்மாள், ஜானகி அம்மாள், ராமச்சந்திரன், அட்டெண்டர் முத்துசெல்வம் ஆகியோர் தவிர்த்த 12 பேர் தமது பங்குகள் அனைத்தையும் அப்படியே தந்து விட்டதாக ஏ.ஆர்.பெருமாள் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

நிலங்களைத் திரும்பத் தர மறுத்த நால்வரும் மறவர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புறமிருக்க வடிவேலம்மாள், ஜானகியம்மாள் இருவரும் உ.முத்துராமலிங்கத்தின் உறவுக்காரர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டது போன்று மீண்டும் அம்மக்கள் உ.முத்துராமலிங்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கே திருப்பி கொடுத்து விட, அவரது சொத்துகளை இன்று வரை 'கோல்மால்' மூலமாக அபகரித்து, அனுபவித்து வரும் மறவர்களின் சதிச்செயல்கள் வெளித் தெரியாமல் இருப்பதற்காகவே தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதான பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது.

ஆக, அவரது சொத்துகள் 17 பாகங்களாகப் பிரிக்கப்பட்டதும், அதில் இரண்டு பாகங்கள் அவரிடம் நெடுங்காலம் உழைத்த காரணத்தினாலோ அல்லது அவருக்கு உண்மையாக இருந்த காரணத்தினாலோ இரண்டு தலித்துகளுக்குக் கொடுக்கப்பட்டதும் உண்மை. ஆனால், சிறிது காலத்திலேயே அந்த நிலங்கள் திரும்பப் பறிக்கப்பட்டு விட்டது. கொடுத்ததையே பெருமையாகச் சொல்பவர்கள், அவரது அறக்கட்டளைக்கு திரும்ப வாங்கிக் கொண்டதை சொல்வதில்லை.

புனைவு மூன்று : உ.மு.தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்

1. 'உ.முத்துராமலிங்கத்தின் அரசியல் நுழைவு 1933 ஜூன் 23ல் இருந்து துவங்குகிறது. 'சாயல் குடி'யில் 'விவேகானந்தா வாசக சாலை'யின் முதலாவது ஆண்டு விழாவில் உ.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதுதான் அவரது அரசியல் பிரவேசத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது. விவேகானந்தா வாசக சாலையில் பேசும்போது உ.முத்துராமலிங்கம் அபிராமபுரத்தின் இந்து மகா சபைத் தலைவர். அபிராமம் முஸ்லிம்களுக்கு எதிராக 1932, 1935, 1938 ஆகிய ஆண்டுகளில் கலவரம் புரிந்ததை அவரே ஒப்புக் கொண்டதாக பத்திரிக்கையாளர் தினகரன் எழுதுகிறார்.

2. தமிழகத்தில் ஜாதி சண்டையை மூட்டி விடுவதற்கு முன்பே மதச் சண்டையை மூட்டி விட்டு முன்னோட்டம் பார்த்த மதவாதியாக உ.முத்துராமலிங்கம் அரசியலுக்குள் நுழைகிறார். முத்துராமலிங்கத்தின் ஜாதி அடிப்படைவாதத்திற்கு 1937முதல் 1957 வரையிலான செயல்பாடுகள் தரவுகளாக இருப்பதைப் போன்று, மத அடிப்படை வாதத்திற்கு 1932ல் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து 1957 செப்டம்பர் 16 வடக்கன் குளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைவரை நீண்டு கிடக்கிறது.

3. சட்டமன்ற விவாதத்தின்போது முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.மதுரை ஆர்.சிதம்பர பாரதி என்கின்ற உறுப்பினர் ஒரு செய்தியினை பதிவு செய்கிறார். ''சென்ற வருஷம் ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஸ்ரீ கோல்வால்கரை (இவர் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் கோஷ்டி) மதுரைக்கு அழைத்து வந்து அவருக்கு ஸ்ரீ மு.தேவர் ஒரு பணப்பையை பரிசளிக்க ஏற்பாடு செய்தார். அச்சமயம் அவர் பேசியபோது, 'மகாத்மா காந்தி ஹரிஜனங்களை ஆதரிப்பதனால் இந்து மதத்திற்கே அவர் எதிரி என்றும், இதனால்தான் ஸ்ரீகோல்வால்கருக்கு பணமுடிப்பை அளிப்பதாகவும்'' கூறினாராம்.

(இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம்தான் 1925ல் இருந்து இன்று வரை சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக பல்வேறு கலவரங்கள் உருவாகக் காரணமாக இருந்து வருகிறது.)

4.1937 தேர்தலில் போட்டியிட காங்கிரசு கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது. இராமாநாதபுரம் சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்ட தேவர் வெற்றி பெறுகிறார். 1937 தேர்தல் வெற்றி உ.முத்துராமலிங்கம் அவர்களை தலைகால் தெரியாமல் ஆக்கியதால், தேர்தலில் தனக்கு ஓட்டளிக்காத தலித்துகள், இசுலாமியர்கள், நாடார்கள் மீது பலாத்காரத்தை தூண்டிவிட்டார்... 1939ல் அபிராமத்தில் உள்ள முஸ்லிம் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில் இருக்கும்போது கண்மாயை வெட்டி தண்ணீரை வெளியேற்றியும் இருக்கிறார்.

5. 1957ல் தேர்தல் தினமாகிய ஜூலை 1ஆம் தேதியன்று தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக முஸ்லிம் கோஷா பெண்கள் வண்டிகளில் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வண்டிகளை நடுத்தெருவில் மறித்து நிறுத்தி, ஓட்டுப்போடும் இடங்களுக்கு போகக்கூடாது என்று தடுத்தார்கள். அச்சமயத்தில் காங்கிரஸ் ஊழியர்களான தலைமலைச்சாமி என்பவரும், சோணமுத்து என்பவரும் வேறு கிராமத்திலிருந்து அங்கே வந்தார்கள். ஓட்டர்களை மறித்து நிறுத்தி வைத்திருப்பதை அவர்கள் கண்டதும், அதை ஆட்சேபித்தார்கள். அதனால் அங்கிருந்த மறவர் கூட்டம் அவர்களை படுகாயம் அடையும்படி அடித்தார்கள். அதன் பிறகு கடைசிவரையில் அபிராமத்திலும், நத்தத்திலும் இருந்த கோஷா பெண்கள் ஓட்டு கொடுக்க முடியாமலேயே போக நேரிட்டது.

6. 'உ.முத்துராமலிங்கத்தின் பிறப்புச் செய்தியை குழப்பச் செய்தியுடன் வெளிஉலகுக்கு தெரியப்படுத்திய அவரது வரலாற்றாசிரியர்கள் உ.முத்துராமலிங்கம் 'இஸ்லாமியத் தாயின் மார்பில் பால் குடித்து வளர்ந்தார்' என்பதையும் கூறி வருகின்றனர். 1960ல் முத்துராமலிங்கத்தின் வரலாற்றை சுருக்கமாக எழுதிய சசிவர்ணம் ''இவர் பிறந்த ஆறாம் மாதம், வணக்கத்திற்குரிய இவரது தாயார் இந்திராணி அம்மையார் காலமாகி விட்டார்கள். அதுமுதல் இவரது பாட்டியார் இராணி அம்மையார்தான் இவரை வளர்த்து வந்தார்கள் (தேவர் ஜெயந்தி விஷேட சுவடி/11) என்பதாக பதிவு செய்கிறார்.

இவரை ஒட்டியே 1993ல் முத்துராமலிங்கத்தின் முழு வரலாற்றையும் எழுதிய ஏ.ஆர்.பெருமாளும் 'இஸ்லாமியப் பால் குடியை' வன்மையாக மறுத்து எழுதுவார். ஆனாலும் உ.முத்துராமலிங்கத்தின் 'இசுலாமிய பால் குடியை' வலிந்து பரப்பி வருகின்றனர்.

மேற்காணும் செய்திகளே திரு.உ.முத்துராமலிங்கத்தின் இந்து வெறி உணர்ச்சிக்கு சான்றாகும். இதனை மறைத்து அவரை ஒரு தேசியத் தலைவராக்கும் முயற்சியாகத்தான் 'இஸ்லாமியப் பால் குடி'' என்கிற கதை கட்டமைக்கப்பட்டது. இதனை அவரது வரலாற்றை எழுதியவர்களே மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- அறிவுக்குயில்

Pin It