காஷ்மீரைப் பாருங்கள் நம்மால் அறியப்பட்ட காஷ்மீர்!

நாம் அறிய வேண்டிய காஷ்மீர்!

2016 சூலை இதழில் ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்திலுள்ள, “The Constitution of JAMMU AND KASHMIR”“ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்” என்ற தனிச்சட்டம் போன்று, இந்தியாவிலுள்ள  வேறு எந்த ஒரு மாநிலத்துக்கும், அந்த மாநிலத்துக்கான அரச மைப்புச் சட்டம் என்று ஒன்று இல்லை என்பதை, இறுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

அக்கட்டுரையில் ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் “புகுமுகம் = PRELIMINARY” என்பதன் தமிழ்மொழி பெயர்ப்பையும், அதன் கீழேயே அதன் ஆங்கில வடிவத்தையும் வெளியிட்டிருந்தோம்.

இனி, அச்சட்டத்தில் உள்ள சிறப்புக் கூறுகளைப் பற்றி எழுதுவோம்.

அப்படிப்பட்ட சட்டத்தின் அட்டை முகப்பை அப் படியே ஒன்றாம் பத்தியில் வெளியிட்டுள்ளோம்.

மேலே கண்ட அரசமைப்புச் சட்டம் எத்தனைப் பகுதிகளையும் (Parts)), விதிகளையும் (Articles), அட்டவணைகளையும் (Schedules) கொண்டுள்ளது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

Part I      -              Preliminary = முகப்புரை

Part II     -              The State= மாநிலத்தின் தன்மை

Part III    -              Permanent Residents = மாநிலத்தின் நிரந்தரக் குடிகள்

Part IV   -              Directive Principles of State Policy = மாநில அரசின் வழிகாட்டு நெறிகள்

Part V    -              Executive = நிருவாக உறுப்புகள்

Part VI   -              The State Legislature = மாநிலச் சட்டமன்றம்

Part VII -               The High Court = உயர்நீதிமன்றம்

Part VIII -              Finance, Property, Contracts = நிதி, சொத்து, ஒப்பந்தங்கள்

Part IX   -              Public Services = பொது நிருவாகப் பணியாளர்கள்

Part X    -              Elections = தேர்தல்கள்

Part XI   -              Miscellaneous Provisions = பல் பொருள் வகையான துறைகள்

Part XII  -              Amendment of the Constitution = அரசமைப்புச் சட்டத்திருத்தம்

Part XII  -              Transitional Provisions = இடைமாறு பாட்டுக்கான துறைகள்

மேலே கண்ட 13 பகுதிகளின் கீழ், 1 முதல் 158 விதிகள் (Articles) அடங்கியுள்ளன.

இவற்றை அடுத்து ஆறு அட்டவணைகள் (Schedules) உள்ளன.

இந்த 6 அட்டவணைகளுள், முதலாவது அட்ட வணை (First Schedule) என்பது, ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் 1965 ஆண்டையத் திருத்தச் சட்டத்தின் பிரிவு 16 (Section 16)இன்படி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது (Omitted).

அதனால், மேலே கண்ட முதலாவது அட்டவ ணையில் என்ன விவரங்கள் அடங்கியிருந்தன என் பதை, நான் பெற்றுள்ள “ஜம்மு-காஷ்மீர் அரசமைப் புச் சட்டத்தின்” 1970ஆம் ஆண்டைய ஜம்மு-காஷ்மீர் அரசுப் பதிப்பிலிருந்து அறிய வழிவகை இல்லை. (இப்பதிப்பை, ஜம்முவிலிருந்து 1993 செப்டம்பரில் ஒரு நண்பரால் விடுவிக்கப்பட்டு, நான் பெற்றேன்). நிற்க.

மேலே கண்ட ஜம்மு-காஷ்மீர் அரசமைப்பின் கீழ், ஜம்மு-காஷ்மீர் பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான (Backward Classes) இடஒதுக்கீடு பற்றிய நடைமுறை விதிகள் (Reservation Rules), 28-4-1970ஆம் நாளிட்ட அறிவிக்கையின் படி (Notification Dated 28th April 1970), அட்டவணைகள் பகுதியை அடுத்து வெளியிடப் பட்டுள்ளன.

13 உள்சாதிகளை உள்ளடக்கிய பட்டியல் வகுப் பினருக்கு, ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் 22-12-1956 ஆணையின்படி, அந்த நாள் முதல் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோ ருக்கான 1969ஆம் ஆண்டைய ஆய்வுக்குழு (Backward Classes Committee of 1969) அறிக்கையின்படி, 61 + 23 = 84 உள்சாதிகளை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட் டோருக்கு 01.5.1970 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு இடஒதுக்கீடு வழங்குகிறது. இவை இருக்க. அரசமைப்புச் சட்டம் பற்றிய விதிகளை நாம் ஏன் படிக்க வேண்டும் என்று கருதாமலும், இவற் றைப் புரிந்துகொள்ளுவது கடினமாக உள்ளது என்று நினைத்துப் புறக்கணிக்காமலும் ஒவ்வொரு வரும் துன்பப்பட்டாவது படியுங்கள். ஏன்?

அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி நாம் அறிந் திருந்தாலும், அறியாமல் இருந்தாலும், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவிலுள்ள 130 கோடி குடிமக்களுக்கும் உரிமைகளை வழங்கவும், அவர் களின் உரிமைகளைப் பறிக்கவும் முற்றதிகாரம் பெற்ற ஒரே கருவி அரசமைப்புச் சட்டம் தான்.

எனவே, படியுங்கள்! ஜம்மு-காஷ்மீர் மக்கள் பெற்றிருந்த சிறப்பு உரிமைகள் பலவும் பறிக்கப் பட்ட வரலாற்றையும், அதன் பின்னரும் வேறு எந்த இந்திய மாநிலத்துக்கும் இல்லாத சில சிறப்பு உரிமைகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெற்றிருப் பதையும் பற்றிப், படிக்கத் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் அறிந்துகொள்ள ஆவல் கொள்ளுங்கள்.

(தொடரும்)