சங்கராபுரம் அருகே உள்ளது பூட்டை கிராமம். இங்குள்ள மாரி யம்மன் கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. ஆனாலும் இந்தக் கோயிலின் தேர் ஊர்வலத்தில் தீண் டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. பூட்டையில் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு தேர் ஊர்வலம் வருவதில்லை. சாதி ஆதிக்கவாதிகள் இப்படி தடை போட்டு, தலித் மக்கள் மீது தீண்டாமையை திணித்து வந்தனர்.

இந்தத் தீண்டாமைக்கு எதிராக கடவுள் மத நம்பிக்கையற்ற பெரியார் திராவிர் கழகம் களத்தில் இறங்கியது. மாரியம்மனை தலித் பகுதிக்கு அழைத்து வரவேண்டும் என்று சங்கராபுரத்தில் கடந்த ஆகஸ்டு 12 மணியளவில் விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தோழர் ச.கா. இளையராசா தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள் கி.சாமி துரை, அமிர்த லட்சம், கண்ணன், ஆசைத் தம்பி தமிழ்த் தாசதுரை, சாக்ரடீசு, செம்பகவல்லி, அய்யனார் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பூட்டை கிராம மக்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். தீண்டாமையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தேர்த் திருவிழா நடத்தலுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்று கழகத் தோழர் அய்யனார் தெரிவிக்கிறார்.

கரூரில் கழகம் நடத்திய ‘விழிப்புணர்வு’ பேரணி

முள்வேலிக்குள் முடக்கப்பட்ட 3 லட்சம் ஈழத் தமிழர்களையும் விடுவித்து அவர்களின் வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்பக் கோரி, கரூரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய முறையில் நடத்தப்பட்டது. மக்களை பிரச்சினையின் பக்கம் ஈர்க்க மோட்டார் சைக்கிளில் தோழர்கள் அணிவகுத்து கோரிக்கைகளை எழுப்பிச் சென்றனர். தூத்துக்குடி பால் அறிவழகன், கண்களை கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் கு. ராசா, கு.கி. தனபால், க. முரு கேசன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் பங்கேற்றனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

20.8.09 அன்று மாலை 4 மணிக்கு கோவை தமிழ்நாடு உணவகம் அருகில் கோவையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் தண்டனை சிறைவாசிகளை அண்ணா நூற்றாண்டில் விடுதலை செய்யக் கோரி கழக சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ப.பா. மோகன், எம்.ஒய். அப்பாஸ் (மாவட்ட செயலாளர், பாப்புலர் ப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா), ஆர்.எம். மற்றும் த.மு.மு.க. பொறுப் பாளர்கள் சாகுல் அமீது , பல் நாசர் (மாவட்ட தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாத்), பொன் சந்திரன் (பி.யு.சி.எல்.), நீலவேந்தன் (ஆதித் தமிழர் பேரவை), கோவை இரவிக்குமார் (ஆதித் தமிழர் விடுதலை முன்னணி), வழக்கறிஞர் நிக்கோலசு ஆகியோர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழர் மோகனாம்பாள் நினைவேந்தல்

சீரிய கழகச் செயல்வீரர் சேத்துப்பட்டு சிகாமணியின் துணைவியார் மறைந்த மோகனாம்பாள் நினைவேந்தல் நிகழ்ச்சி 7.8.2009 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை-101, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் சேத்துப்பட்டு ச. தனசேகர் தலைமையில் நடைபெற்றது.

தோழர் மோகனாம்பாள் படத்தை திறந்து வைத்துப் பேசிய இரா. கிருத்துதாசு காந்தி, இ.ஆ.ப. அவர்கள், ‘சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதால் துன்பம் தான் விளையும்’ என்று விளக்கிப் பேசினார்.

வழக்கறிஞர் சு. குமாரதேவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த இரா. பச்சைமலை, எழுத்தாளர் அ. மார்க்ஸ், கழக துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் இரங்கல் உரையில் பகுத்தறிவு கருத்துகளை விளக்கிப் பேசினர்.

கூட்டுறவு அமைச்சரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் செயலாளர் மு. சுந்தரராசன், தலைமைச் செயலகம் எரிசக்தித் துறை உதவிப் பிரிவுஅலுவலர் ராஜேஸ்வரி, உள்துறை உதவிப் பிரிவு அலுவலர் கு. செல்வகணபதி, தலைமைச் செயலகம், சிறுதொழில் துறை உதவிப் பிரிவு அலுவலர் செய காமராஜ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர். மோகனாம் பாள் மகள் சி.தமிழரசி தனது நன்றியுரையில், ‘நானும் என் தாய் தந்தை வழியில் பெரியார் கொள்கை வழிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவேன்’ என்று உறுதி கூறினார்.

கணியூரில் கழகப் பொதுக் கூட்டம்

உடுமலை அருகே உள்ள கணியூரில் பெரியார் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கு.மயில்சாமி, மா. மோகன் முன்னிலையில் செ.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கா. கருமலை யப்பன், ஆட்சிக்குழு உறுப்பினர் இரா. மனோகரன் உரைக்குப் பின் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ம.தி.மு.க. மாநில வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மடத்துக்குளம் ஒன்றிய பொருளாளர் நா.ப. கதிரவன், காரத் தொழுவு மயில்சாமி, ஜோத்தம்பட்டி மோகன், கணியூர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Pin It