தனி மனிதர்களானாலும் சரி, தத்துவம் தந்த தலைவர்களானாலும் சரி தொடக்க நிலை, இடை நிலை, கடைநிலை ஆகிய வளர்ச்சிப் பாதையிலே தான் கடந்து வந்திருப்பார்கள். இது பரிணாம வளர்ச்சி. இதுதான் இயற்கை. நேற்றிலிருந்து இன்று வந்தது. இன்றையிலிருந்துதான் நாளை வரும். சிந்தனை, பண்பாடு, அறிவியல், மெய்யியல் ஆகியவைகளைக் கூட இந்த வகையிலேதான் நோக்கவேண்டும். சமூக விடுதலைக்கு உழைத்திட்ட தலைவர்கள் தம் வாழ் வின் கடைசிக் கட்டத்தில் இருந்தபோது எப்படிப் களத் தில் நின்றார்கள்? இன்றைய சூழ்நிலையில் இருந் திருந்தால் அவர்களின் சிந்தனை, செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கும்? என்று சிந்திப்பதும் பகுத் தறிவுக்குட்பட்ட அறிவியல் பார்வைதான்.

ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகத் தன் வாழ் நாளைக் கரைத்துக் கொண்டவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவரைப் படித்தவர்கள், அவரின் சிந்தனை களைத் தாங்கியவர்கள், அவரின் கொள்கைகளை வென்றெடுப்பதற்காகக் கட்சி நடத்திக் கொண்டிருப்பவர் கள் என எல்லோருமே அவரது சிந்தனைகளில் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தில் மட்டுமே பயணித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அரசுக்கு ஒத்திசைவாக நடந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் கலையைக் கற்று வைத்திருக்கிறார்கள். தங்களின் பதவிக்கோ, கட்சிக்கோ ஏதாவது ஆபத்து வந்துவிட்டால், ஏதோ ஒரு கட்டத்தில் எங்கோ அவர் பேசிய, எழுதியவைகளை முன்னி றுத்துகிறார்கள். அவரின் பன்முகத்தன்மை மறைக்கப் படுகிறது. பல்வேறு பரிமாணங்களில் ஒளிவீசிக்கொண் டிருக்கும் வைரக்கல் அவர். ஆனால் அவரை யானை யைப் பார்த்த குருடனைப் போல் கதைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

அம்பேத்கரின் பிறந்தநாளில் கூட அவர் இறப் பதற்கு முன் அவருக்கிருந்த சிந்தனைகளை அசை போட வேண்டும். அவரின் கடைசி கட்டத்தில் அவரது எண்ண ஓட்டங்களில் நாம் சஞ்சரிக்க வேண்டும். அவரது சிந்தனைகளை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு போவதற்கு அதுமட்டுமே துருப்பாக அமையும். அவர் பிறந்தது இயற்கைபோலவே அவர் இறந்ததும் இயற் கைதான். அவரின் தத்துவம் அவருடன் பிறக்கவில்லை. அதை அவர் சமூகத்திலிருந்து எடுத்தார். ஆனால் அவரைப் போலவே அவரது தத்துவமும் சாகக்கூடாது. அது தூக்கிப்பிடிக்கப்பட வேண்டியது. முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது.

அறிவுலக ஆசான் மார்க்சைக் கொண்டாடுவது போல் மேதை அம்பேத்கரையும் கொண்டாட வேண்டும். வர்க்க பேதங்களை ஒழித்து உலக மானுட குல விடுதலைக்கு வழி சொன்னவர் மார்க்சு என்றால், வருண பேதங்களை ஒழித்து ஒடுக்கப்பட்ட இந்திய மக்கள் விடுதலைக்கு வழிகாட்டியவர் அம்பேத்கர். மார்க்சியத்தைப் படித்து புரட்சித்தலைவர்களான சோவியத் இரஷ்யாவில் லெனின், செஞ்சீனத்தில் மாசேதுங், வியட்நாமில் ஹோசிமின், கியூபாவில் சேகுவேரா, ஃபிடல் கேஸ்ட்ராவைப் போல் இந்தியா வில் ஒரு அம்பேத்கரைக் குறிப்பிட்டால் அது தவறா காது. மார்க்சிய நூல்களை ஏராளமாக தாம் படித்திருப் பதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார். குறைவான தன் வாழ்நாளில் எல்லா சிக்கல்களுக்கும் அவரால் போராட முடியவில்லை.

கல்வியாளராக, கல்லூரிப் பேராசிரியராக, ஆராய்ச்சி அறிஞராக, வழக்குரைஞராக, சுதந்தரத் தொழிலாளர் கட்சித் தலைவராக, பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த் தையில் ஈடுபடுபவராக, பத்திரிகை ஆசிரியராக, எழுத் தாளராக, பேச்சாளராக, வைசிராய் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக, அமைச்சராக, அரசியல் சட்டத்தை வரைபவராக, போராளியாக, புத்தரின் சீடராக, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவ ராக பல்வேறு பரிமாணங்களில் பரிணமித்தவர் அம்பேத்கர். அவர் தன் வாழ்நாளின் கடைசி பத்தாண் டையும் அதற்கு முன் பத்தாண்டையும் கவனித்தோ மானால், பொதுவுடைமைப் போராளி அம்பேத்கரை யும் தொழிலாளர் தலைவர் அம்பேத்கரையும் காண லாம். மார்க்சியத்தையும், அம்பேத்கரியத்தையும் இணைக்க வேண்டிய தேவை புரியும்.

அம்பேத்கர், 1936இல் நிலமற்றவர்கள், ஏழை நிலக்குத்தகையாளர்கள், விவசாயிகள், தொழிலாளர் கள் ஆகியோரின் உடனடித் தேவைகள், துயரங்கள், துன்பங்கள் ஆகியவற்றிற்குத் தீர்வு கூறுகின்ற வேலைத் திட்டத்தை முன்வந்தார். தொழிற்சாலை களை அரசுடைமையாக்க வேண்டும். விவசாயக் குத்தகையாளரிடம் நிலக்கிழார்கள் அதிகக் குத்தகை வசூலிப்பதையும் குத்தகை செய்யும் நிலங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றுவதையும் தடுத்து அவர்களைப் பாதுகாப்பதற்குச் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். தொழிலாளர் - வேலை செய்யும் நேரத்தின் அளவை நிர்ணயித்தல், நியாயமான கூலி பெறுதல், ஊதியத் துடன் கூடிய விடுமுறை அளித்தல், மலிவான, சுகாதா ரமான குடியிருப்புகள் அமைத்தல் போன்ற பொது வுடைமைச் சிந்தனைகளைக் கொள்கைகளாகக் கொண்ட சுதந்தரத் தொழிற்கட்சி ((Independent Labour Party) என்கிற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

தீண்டாமையின் அடித்தளமே தலித்துகள் நிலமற்றவர்களாக இருப்பதுதான். எனவே இது ஒரு பொருளாதாரப் பிரச்சனையாகத்தான் பார்க்க வேண் டும் என்றார். தொழிலாளர்களின், ஏழைகளின் நலன் களைப் பற்றிக் கவலைப்படாமல், உற்பத்திச் சாதனங் கள் எல்லாம் சுயநலவாதிகளின் ஆதிக்கத்தில் இருப்ப தைப் பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரசையும், காந்தியையும் தன் எதிரியாக நினைத்தார்.

பொருளாதாரச் சுதந்தரம் பற்றி தம் மக்களிடம் பேசுகையில், “மக்களைச் சுரண்டுகிற முதலாளிகளுக்கு எதிரான சக்திகளை ஒன்றுதிரட்டி ஒரு முன்னணியை அமைக்க வேண்டும். சுயமரியாதையோடு முயற்சி யுங்கள். அதனால் கிடைக்கப் போவது ஒவ்வொன்றும் ஆதாயமே! நீங்கள் விட்டொழிக்க வேண்டியது சாவைப் பற்றிய அச்சத்தை மட்டுமே!” என்று அம்பேத்கர் சொன்னதும், “நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை; அடிமைச்சங்கிலியைத் தவிர. அடைவதற்கோ ஓர் பொன்னுலகம் காத்திருக்கிறது” என்று மார்க்சு ஏற் கெனவே குறிப்பிட்டதும் வர்க்கப் போராட்டத்தில் அம்பேத்கரின் மார்க்சியப் பார்வை பளிச்சிடுகிறது.

அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் அறிவாளி யாக மட்டுமே வாழாமல் உழைக்கும் மக்களான விவசாயிகள், தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி விவ சாயிகளின் கூலி உயர்வு, நிலவரி, குத்தகை பாக்கி யைத் தள்ளிவைத்தல், நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப் படுதல், சிறு நில உடைமையாளர்களுக்கு நீர்ப்பாச னத் தீர்வையைப் பாதியாகக் குறைத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மிகப்பெரிய பேரணியை நடத்தினார். “உங்களைச் சுரண்டுவோரின் செல்வச் செழிப்பில்தான் உங்களின் உழைப்பு குவிந்திருக் கிறது. சாதி, இன, வேறுபாடு கருதாமல் தொழிலாளர் களை ஒன்றுதிரட்டி ஓரணியில் நின்று போராடுவதே வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்” என்று அந்தப் பாட்டாளி வர்க்கத்தினரிடம் உரையாற்றி, அவர்களை வர்க்கப் போருக்கு அணிதிரட்டியதில் அம்பேத் கரின், உழைப்பாளர்மேல் அவர்கொண்ட பற்று தெரிகிறது.

பின்னொரு முறை இரயில்வே தொழிலாளர்களை யும், விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி உரையாற்றும் போது, “நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று பார்ப்பனியம்; மற்றது முதலாளித்துவம்” என்று குறிப்பிட்டது இந்தியச் சூழலுக்கான சிறப்புப் பொதுவுடைமை அறிஞர் அம்பேத் கர்தான் என்பது மெய்ப்பிக்கிறது. “தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வதைத் தடுப்பது, உங்களுக்குள் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் பார்ப்பனி யத்தை அடியோடு கிள்ளி எறியுங்கள்.” என்று அறை கூவல் விடுத்தார்.

அம்பேத்கர் 1938இல் பம்பாய் மாகாண சட்ட மன்ற உறுப்பினராக இருந்த வேளை “தொழில் தக ராறுகள் மசோதா” விவாதத்திற்கு வரும்போது தொழி லாளர் வேலை நிறுத்தம் செய்வதை தடுக்கும் இம்மசோ தாவைக் “கேடானது; கொடூரமானது; தொழிலாள ரைப் பழிவாங்கும் இரத்தவெறி கொண்டது” என்று கண்டிக்கிறார். மேலும், “இந்தியா சுதந்தரம் பெறு வதற்கான உரிமையை ஒரு புனிதமான உரிமை என்று காங்கிரசுக்காரர்கள் கருதுவதைப் போலவே, வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் புனிதமான தாகும். ‘தொழில் தகராறு மசோதா’ என்பதற்குப் பதிலாக, ‘தொழிலாளர்களின் சிவில் உரிமைகளை முடக்கும் சட்டம்’ என்றே பெயரிட்டிருக்க வேண்டும்” என்று தன் வாதத்திறமையால் அனல் பறந்திட பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்ல; தொழிலாளர் களை ஒன்றுதிரட்டி இம்மசோதாவிற்கு எதிராகத் தொழிற்சாலைகளுக்கு முன்னால் அமைதியான முறையில் மறியலில் ஈடுபட வைத்தார். இக்காலக் கட்டத்தில் கம்யூனிஸ்டு தலைவர்களான பி.டி. ரணதிவே, பிரதான், நிம்கர், எஸ்.ஏ. டாங்கே, மிராஜ்கர் போன் றோருடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டி ருக்கிறார்.

தொழிலாளர் வாழ்க்கை மேம்பட உழைத்துக் கொண்டிருந்த அம்பேத்கருக்கு ஒரு நெருக்கடி ஏற் படுகிறது. அதாவது, இந்திய அரசியலில் ஏற்பட்ட நெருக்கடியை தீர்ப்பதற்காக சர். ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையில் குழு ஒன்று இந்தியா வருகிறது. அக் குழு பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறது. அம்பேத்கர், எம்.சி. ராஜாவுடன் கிரிப்சை சந்திக்கிறார். தொழிலாளர் கட்சித் தலைவரான அம்பேத்கர், தீண்டப் படாதோரின் பிரதிநிதியாக செயல்பட முடியாததினால் தன் தோழர்களுடன் கலந்துரையாடி அனைத்திந்திய தீண்டப்படாதோர் பேரவையை ஏற்படுத்தி, கிரிப்சை, சந்தித்து, கோரிக்கை வைக்கிறார். இதை வைத்து இந்தியத் தலைவர்கள் இன்றளவும் அம்பேத்கர் ஒரு தீண்டப்படாதோர் தலைவர் என்று திட்டமிட்டு தள்ளி வைக்கின்றனர்; கம்யூனிஸ்டுகள் உட்பட.

இந்திய வரலாற்றில் அம்பேத்கருக்கு ஒரு முக்கிய இடம் இருப்பதற்கு 1942-இல் வைஸ்ராய் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றதும் ஒரு காரணமாகும். இந்திய வரலாற்றில் முதன்முறையாக தீண்டப்படாதவர் ஒருவர் இந்திய அரசின் நிர்வாகக் கவுன்சிலில் உறுப்பின ரானது அம்பேத்கர் ஒருவர்தான். அமைச்சராகப் பொறுப்பேற்ற அம்பேத்கர் தொழிலாளர் வாழ்வில் நலம் சேர்க்க எண்ணி, தொழிலாளர் நலத்துறை யையே கேட்டுப் பெற்றார். “நசுக்கப்பட்ட மக்களான தீண்டப்படாதவர்களின் குறைகளைக் களைந்திடத் தன் வாழ்நாளெல்லாம் முழு மூச்சுடன் களம் பல கண்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கருக்குத் தொழிலாளர் நலத்துறை மிகவும் பொருத்தமானதுதான்” எனப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின.

இந்தியப் பாராளுமன்ற ஜனநாயக அரசியல் தொடங்கிய காலத்திலிருந்து பதவி கிடைப்பதற்கு முன் ஒரு பேச்சும், பதவி கிடைத்தபிறகு வேறுமாதிரி பேசும் தலைவர்களைத்தான் இந்திய சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அம்பேத்கர் பதவியேற்ற வுடன் தம் மக்களிடம், “நான் ஏழையாகப் பிறந்து, ஏழைகளின் மத்தியில் வளர்ந்து வாழ்ந்தவன். ஏழை களைப் போலவே ஈரமான தரைமேல் சாக்குப் பை யைப் போட்டு அதன்மீது படுத்துறங்கியவன். அவர் களுடைய துன்பங்களில் பங்கேற்றவன். ஆகவே என்னுடைய போக்குகளிலிருந்து என்றும் நான் மாறமாட்டேன் என்று உங்களுக்கும் மற்றவர்க்கும் உறுதி கூறுகின்றேன். தில்லியிலுள்ள என் வீட்டின் கதவுகள் என் நண்பர்களுக்காக என்றும் திறந்தேயி ருக்கும்” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தி யாவிலுள்ள உழைப்பாளி மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் உயர்த்தவும் பாடுபடுவேன் என்று உத்திரவாதம் வழங்கியிருக்கிறார்-தொழிலாளர் தலை வர், அமைச்சர், மேதை அம்பேத்கர்.

மிக உயர்ந்த பதவியிலிருக்கும் அம்பேத்கர் புரட்சிகர மனநிலையில்தான் எப்போதும் இருந்திருக் கிறார். தொழிலாளர் கூட்டமைப்புக் கூட்டத்தில் அமைச்சர் அம்பேத்கர், “தொழிலாளர்கள், இந்தியாவில் தொழிலாளர்களின் அரசை ஏற்படுத்துவதற்காகப் பாடுபட வேண்டும். அதுதான் தனது நோக்கமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். நாடு சுதந்தரம் அடைந்துவிட்டால் மட்டும் போதாது; அது யார் கையில் இருக்கவேண்டும் என்பது முக்கியம்” என பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டைச் சுட்டிக்காட்டித், தொழிலாளர்கள் சாதி யாக பிளவுபட்டுக் கிடப்பது கண்டு வருந்தியிருக்கிறார். தொழிற்சங்கங்கள் அமைப்பதைவிட, அரசியலதிகாரத் தைக் கைப்பற்றுவதில் முன்னுரிமை தாருங்கள் என தொழிலாளர்களிடம் கோரியிருக்கிறார்.

தொழிலாளர் அமைச்சர் அம்பேத்கர், உலக நாடுகளில் இரத்தம் தோய்ந்த வரலாறு கொண்ட எட்டு மணிநேர வேலை உரிமையை இந்தியாவில் ஒரே ஒரு கையொழுத்திலேயே கொண்டு வந்தார். சுரங்கத் தில் வேலை பார்த்த பெண்களுக்குப் பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறைத் திட்டம், தொழி லாளர்களுக்கும் குறைந்தபட்சக் கூலி நிர்ணயம், விடுமுறையுடன் கூடிய சம்பளம் போன்ற எண்ணற் றத் திட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்.

வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் போராட் டத்திலேயே கழித்திட்ட அம்பேத்கர், விளிம்பு நிலை மக்களாகவும் கூலித்தொழிலாளர்களாகவும் இருக்கும் தீண்டப்படாத மக்களுக்கு விடுதலை ஏற்படுத்தாமல் மறைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், இந்து மதத் திலிருந்து அவர்களை விடுவிக்க எண்ணி, பொதுவு டைமைக் கண்ணோட்டத்தில் அவர் தேர்ந்தெடுத்த மதம் பவுத்தம். இருப்பதெல்லாம் பொதுவில் வை. சமமாகப் பங்கிட்டுக்கொள். அதற்காகப் போராடு என் கிறது மார்க்சியம். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாதே. அடுத்தவரிடம் அன்பாக இரு. வாழ்க்கை என்பது நம் கையில் என்கிறது பவுத்தம். மேற் சொன்ன இரண்டில் மூத்தது பவுத்தம்; மண்ணுக் கேற்றது. அதனால் அம்பேத்கர் தனது கடைசிக் காலத்தில் பவுத்தத்தைத் தழுவினார்.

ஆன்மிகத் தேடலுக்காகத் தன் மக்களுடன் பவுத் தத்தைத் தழுவினார் என்று அம்பேத்கரை குறுக்கிப் பார்க்கும் பார்வை தவறானது. பவுத்தம் மார்க்சியத் திற்கு நெருக்கமானது என்று உணர்ந்ததினால்தான் பவுத்தத்தைத் தீர்வாக பார்த்திருக்கிறார். அதனால் தான் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் இருக்கும் போது, “எதிர்வரும் காலத்தில் எந்தத் தத்துவம் உலகை ஆளும்?” என்ற மாணவர்களின் கேள்விக்கு, “பவுத்தம் அல்லது மார்க்சியம்தான் உலகை ஆளும்” என விடையளித்திருக்கிறார். அதேபோல் தன் வாழ் நாளில் கடைசியாக எழுதிய மூன்று நூல்களுள் முக்கிய மான நூல் “புத்தரும் காரல்மார்க்சும்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அம்பேத்கருக்குள் வருணப்போராட்ட, வர்க்கப்போராட்ட குணங் களை ஒருங்கே பெற்ற ஒரு போராளி வாழ்ந்து கொண்டேயிருந்தான். அதனால்தான் பார்ப் பனியமும், முதலாளித்துவமும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் என்று ஓங்கிச் சொல்லி யிருக்கிறார்.

அம்பேத்கர் யார்? அவரது நோக்கம் என்ன? அது நிறைவேறியதா? இல்லையா? அதற்குச் செய்ய வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்வி களினூடே நேற்றைய அம்பேத்கரைத் தெரிந்து கொள்ளலாம். அதிலிருந்து இன்றைய அம்பேத்கரைக் கண்டெடுக்கலாம். அப்போதுதான் நாளைய அம்பேத் கருடன் பயணிக்கலாம். என்றுமே ஏகாதிபத்தியத்தின் எதிரிதான் அவர். இன்றைக்கும் அவர் பார்ப் பனியத்தின் முதலாளித்துவத்தின் எதிரியாகவே இருந்திருப்பார். நோய்க்கிருமிகளின் தன்மைக்கேற்ற வாறு கிருமிக்கொல்லியைப் பரிந்துரைப்பவன்தான் மருத்துவன். அந்த வகையில் இன்று விண்ணை முட்டி வளர்ந்திருக்கும் உலகெங்கும் பரவியிருக்கும் பெரிய கிருமியான முதலாளித்துவம் ஒழிக்கப்பட சமூக மருத்துவரான மேதை அம்பேத்கர் மார்க்சியத்தைப் பரிந்துரைத்திருக்கக் கூடும்.

உறுதியாக நாளை அவர் போலித்தனமற்ற, அவரால் முன்னிறுத்தப்பட்ட பாராளுமன்ற ஜனநாய கத்தை வெறுத்த உண்மையான கம்யூனிஸ்டாக இருந்திருப்பார். ஏனென்றால் அவர் ஒரு புரட்சியாளர்.

Pin It